Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 நாட்கள் தொடர் வேலை: லண்டனில் வங்கி ஊழியர் பரிதாப சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

 

22-bankofamerica-300.jpg
 
 
லண்டன்: லண்டனில் தொடர்ந்து 3 நாட்கள் வேலை செய்த வங்கி ஊழியர் ஒருவர் மரணத்தை தழுவிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார். சில தினங்களுக்கு முன்பு இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்து கிடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்புதான் கடைசியாக அவரது அறை நண்பர்கள் அவரை பார்த்துள்ளதாக கூறினர். அதன்பின் அவரை இறந்து கிடந்த நிலையில் தான் கண்டனர்.

வங்கியில் நடத்திய விசாரணையில் விடாமல் இரவு பகலாக 72 மணிநேரம் மோரிட்ச் எர்ஹார்ட் பணிபுரிந்து விட்டு நள்ளிரவு அறைக்கு திரும்பியது தெரியவந்துள்ளது.

மோரிட்ச் எர்ஹார்ட்டின் வங்கிக்கு அனுப்பிய இமெயிலில், எனது குடும்பத்தினர் என்னிடம் மிகவும் எதிர்பார்க்கின்றனர். எனவே விடாமல் கடுமையாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், சாவுக்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து வேலை செய்ததால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மோரிட்ச் எர்ஹார்ட் உள்பட சுமார் 300 பேர் இதே போல் அப்பகுதியில் உள்ள பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்தனர். படிப்பை முடித்து விட்டு புதிதாக பணியில் சேர்ந்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் விடுதலையின் போது ஒரு முறை 36 மணி நேரம் தூக்கமின்றி சிறிய இடைவேளைகளோடு.. தொடர்ச்சியாக வேலை செய்திருந்தேன். வேலை முடித்து வீடு திரும்பிய போது.. எங்கோ அந்தரித்த உலகில் உலாவுவது போன்ற உணர்வே மிஞ்சியது. பூமி பூலோகம் எதுவுமே உணர்வில் இருக்கவில்லை. அந்தளவுக்கு மூளை களைப்படைந்திருந்தது. நித்திரைக்குப் போனால் நித்திரையும் வரமாட்டன் என்றிட்டுது. கடைசில்.. இளையராஜாவின் இடைக்காலப் பாடல்கள் அடங்கிய இசையை கணணியில் ஒலிக்கவிட்ட படி படுத்ததுதான். தூக்கி எழுந்த பின் தான் மீண்டும் பூலோக நினைப்பே வந்தது.

 

அதன் பின் இப்படியான வேலைகளுக்கு போறதில்லை..! தொடர்ச்சியாக வேலை செய்வது (பெளதீக வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும்) மூளைக்கு களைப்பைத் தரும். மூளை அதன் அன்றாட அலுவலை செய்வதில் பாதிப்பு நேரும். அது உடல் இயக்கங்களை பாதிக்கலாம்..! இதனை சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்திருக்கிறேன்.

 

பாவம் அந்த இளைஞனின் உழைக்கும் ஆர்வமே அவனுக்கு அழிவாகவும் ஆகிவிட்டது. எதுவும் அளவோடு இருப்பதே நன்று. குறிப்பாக ஆசை..! :(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Shift work link to 'increased risk of heart problems'

 

http://www.bbc.co.uk/news/health-18996082

Are night shifts bad for you?

The Danish government has just begun compensating women who have developed breast cancer after years of working nights.

 

http://www.theguardian.com/lifeandstyle/2009/mar/17/night-shifts-health

 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நாள் வேலை ஒன்றும் பெரிய விடயம் இல்லை.

 

நம்மவர்கள் தும்பு அடிக்க கிளம்பினால் மூன்று என்ன அதற்குக் கூடவும் செய்வார்கள்.

 

இந்த வங்கி ஊழியருக்கு, உயர் அதிகாரிகளின் அழுத்தம் இருந்திருக்க வேண்டும். அது தான் அவரை கொன்றிருக்கின்றது.

மரணவிசாரணையில் இது வெளி வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார். சில தினங்களுக்கு முன்பு இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்து கிடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்புதான் கடைசியாக அவரது அறை நண்பர்கள் அவரை பார்த்துள்ளதாக கூறினர். அதன்பின் அவரை இறந்து கிடந்த நிலையில் தான் கண்டனர்.

வங்கியில் நடத்திய விசாரணையில் விடாமல் இரவு பகலாக 72 மணிநேரம் மோரிட்ச் எர்ஹார்ட் பணிபுரிந்து விட்டு நள்ளிரவு அறைக்கு திரும்பியது தெரியவந்துள்ளது.

 

மோரிட்ச் எர்ஹார்ட்டின் வங்கிக்கு அனுப்பிய இமெயிலில்,எனது குடும்பத்தினர் என்னிடம் மிகவும் எதிர்பார்க்கின்றனர். எனவே விடாமல் கடுமையாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

 

இச் செய்தியில் பல குழப்பமான தகவல்கள் அடங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

 

ஜேர்மனியில்  சட்டப்படி... ஒருவர் 10 மணித்தியாலத்துக்கு மேல்... தொடர்ந்து வேலை செய்யப்படாது. இறந்தவர் சிறு வயதை உடையவர் என்ற‌ படியால்... அவருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும்... வங்கி நிர்வாகம் அவரை, எப்படி 72 மணித்தியாலம் வேலை செய்ய அனுமதித்தது?

மற்றது... ஐரோப்பிய பெற்றோர், தமது பிள்ளைகளிடமிருந்து... அதிகம் எதிர்பார்பதில்லை. அதுகும்... ஜேர்மன் பெற்றோர் எதிர்பார்த்தது என்பது கட்டுக்கதை என்றே.. நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.