Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிரியா மீதான நடவடிக்கையை US தனியாகவே மேற்கொள்ளும்" UK சிரியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபlடாது

Featured Replies

UK நாடாளுமன்றில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக 272 வாக்குகளும் எதிராக 285 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

us%20syria_CI.jpg

 சிரியாவில் கடந்த வாரம் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை தனியாகவே கூட எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை குறிப்புணர்த்தும் விதமாக மற்ற நாடுகளின் அயலுறவுக்கொள்கைக்கு அமெரிக்கா பொறுப்பாக முடியாது என்று அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது இவர் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.
 
சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் வியாழனன்று இரவு தோற்றுப்போன பின்னணியில், சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசும்போது ஜான் கெர்ரி இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
 
இது தொடர்பாக அமெரிக்கா இறுதியில் என்ன முடிவை எடுத்தாலும் அதை நிறைவேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு இருக்கவேண்டும் என்பதே ஒபாமாவின் கொள்கையாக இருப்பதாக ராணுவச் செயலர் சக் ஹேகல் தெரிவித்திருக்கிறார்.
 
சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் தோற்றுப்போன செயலானது, உலக அரங்கில் தொடர்ந்தும் பிரிட்டன் முக்கிய பங்களிப்பை ஆற்ற விரும்புகிறதா என்கிற விவாதத்தை தோற்றுவித்திருப்பதாக பிரிட்டனின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஓஸ்போர்ன் தெரிவித்திருக்கிறார்.
 
அதேசமயம், இதனால் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சிறப்பு உறவு பாதிக்கப்படாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு என்பது பழமையானது, ஆழமானது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
 
13 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
 
சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் வியாழனன்று இரவு நடந்த வாக்கெடுப்பில் 13 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
 
ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக 272 வாக்குகளும் எதிராக 285 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் இந்த முடிவை தாம் மதிப்பதாகவும் ஏற்பதாகவும் தெரிவித்திருக்கும் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன், இதன் மூலம், சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை பிரிட்டனின் நாடாளுமன்றமும் பிரிட்டிஷ் குடிமக்களும் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரியவந்திருப்பதாக கூறியிருக்கிறார்.
 
நாடாளுமன்றத்தின் இந்த வாக்கெடுப்பின் முடிவு காரணமாக, சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் பிரிட்டனின் பங்களிப்பு இருக்காது. கேமரன் தலைமையிலான தற்போதைய அரசு வாக்கெடுப்பில் தோற்றிருந்தாலும் பிரிட்டனின் நாடாளுமன்ற ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது என்று ஒருசாரார் வாதாடுகிறார்கள்.
 
அதேசமயம், பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையை அரசுக்கு பதிலாக எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியின் அதிருப்தியாளர்களும் வடிவமைப்பதை இந்த வாக்கெடுப்பு காட்டியிருப்பதாக கூறும் மறுசாரார், இது சர்வதேச அரங்கில் பிரிட்டனின் ஆளுமையையும் செல்வாக்கையும் குறைக்கவும் குலைக்கவும் செய்யும் என கவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
 
BBC

 

  • கருத்துக்கள உறவுகள்

13 வாக்குகள் என்பது சிறு வித்தியாசம்.. இந்திய வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தியிருந்தால் கரைச்சல் இருந்திராது.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

//"சிரியா மீதான நடவடிக்கையை US தனியாகவே மேற்கொள்ளும்" UK சிரியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடாது.//

 

நீங்க‌... சொன்னால், நாங்க‌ ந‌ம்பிடுவ‌மில்ல‌.
உல‌க‌மே... இழிச்ச‌வாய்க் கூட்ட‌மாய் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

சைப்பிரசில் பிரித்தானியாவின் போர் விமானங்கள் ஏன் வந்து குவிகின்றன?

ஆழும் கட்சி பிரேரணையை வேறுவிதமாக திரும்ப போட முயலலாம். எனவே படைக்குவிப்பை தொடர்கிறதாக்கும். லிபியாவை பிரான்சு பொறுப்பு எடுத்திருந்ததால் பிருத்தானியா சிரியாவை பொறுப்பு எடுக்கும் என்று ஒபாமா நினைத்திருந்திருக்கலாம். இதில் பிருத்தானியாவை பாராமல் சண்டையில் பிரான்சு பங்கு ஏற்கும். துருக்கியும் வந்து இணையலாம். ஆனால் முழு மூச்சான போர் இல்லை என்பதுதான் சிலரின் எதிர்ப்பும். இப்படி மட்டுபடுத்த்ப்பட்ட தாக்குதலால் என்ன பலன் என்று கேட்கிறார்கள். க்டாபியின் நேரம் புரட்சியாளர்கள் வென்றும் கூட அமெரிக்காவும் பிரான்சும் கடைசி வரை நின்றிருந்தார்கள். அசாத்தின் கேசில் புரட்சியாளர்கள் இது வரையில் தீர்க்கமான வெற்றிகள் எதையும் பெறவில்லை. இதனால் மட்டுப்படுத்தப்ப்ட்ட உதவி அதிகம் பலன் தர இடம் இல்லை.

சிலவேளை ஒரு British கப்பலுக்கு பக்கத்தில் ஒரு சின்ன வள்ளம் தற்கொலை தாக்குதல் நடாத்தலாம்...கப்பலுக்கு சிறு கீறல் விழலாம்...திருப்பியும் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கலாம் :)
அப்போது முழு ஆணையும் கிடைக்கலாம்.. :)

 

இல்லை என்றால் இன்னொரு chemical attack க்கு இடமிருக்கு

Edited by naanthaan

இங்கிலாந்து இருக்கும் கடனுக்கும் பொருளாதார நெருக்கடியை குறைக்கை இந்த போர் எந்தவகையிலையும் உதவ போவதில்லை...   

 

பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவர்  "எட் மிலிபான்ட்"  தடை செய்ய பட்ட ஆயுதபாவனை உண்மையில்  நிகழ்ந்ததா எண்றும்  அது அரச படைகளால் நிகழ்த்தப்பட்டதை உறுதி செய்யப்பட்டதா என்பதையும்  ஆதாரங்களோடு நிரூபித்த பின்னரே பிரித்தானியா போருக்கு போக வேண்டும் எண்று அறிவுறுத்தி இருந்தார்...   

 

ஈராக்கில் நடந்த போரின் தாக்கமும் அடைந்த அவமானத்தில் இருந்து பிரித்தானியா பாடம் கற்ற வேண்டும் என்பது தான் இங்குள்ள அனேக பத்தியாளர்களின் கரிசனையாக உள்ளது... 

இது திட்டமிட்ட நழுவலாமே!

1429 பேர் இரசாயன ஆயுதங்களால் சென்ற கிழமை இறந்தார்கள். காயபட்டவர்களின் கணக்கு வேறு. அமெரிக்கா தான் கட்டயம் அடிப்பன் என்றதன் பின்னர் சீன, ரூசிய தலையீடுகளை கவர ஐ.நா அதிகாரிகளை உள்ளே விட்டது சிரியா. ஆனாலும்  இன்றைய காலகட்டத்தில் இராணுவம் அசாத்தின் ஒவ்வொரு சொல்லையும் கேட்பதாகவும் இருக்க வேண்டியதில்லை. அசாத் குண்டுக்கு தான் பொறுபில்லை என்றால் இனி வேட்டை நாய்களை பிடித்து கட்ட வேண்டும். இல்லையேல் தண்டணையை தான் ஏற்க வேண்டும்.

 

ஐ.நா வின் விசாரணையை குப்பையில் போட வேண்டும். 5 வருடங்களுக்கு முன்னர் 3 வேறு வேறு நபர்களால் உறுதிப் படுத்தி தான் 15,000 பேர் வன்னி போரில் இறந்தார்கள் என்று போட்ட கணக்கை இன்னும் அதிகார பூர்வமாக வெளிவிடவோ அல்லது தமிழ் மக்களுக்கு அதுக்கு நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கவோ ஐ.நா முன வரவில்லை. அமெரிக்கா, ஒபாமா வரும்வரை உவர்களின் அங்கத்துவம் தனக்கு தேவையில்லை என்று தள்ளி வைத்திருந்தது. பாதுகாப்பு சபை உலகின் மிகப்பெரிய திருடர்களான நம்பியார், மூன் கூட்டால் ஆளப்படுவது.நேற்று அமெரிக்க நியூசில் மூன் விசாரணையை வேண்டுமென்றே காலம் தாழ்த்துவத்தாகவும் குற்றம் சாட்டினார்கள். 

 

இலங்கையில் நடந்தவற்றால் தான் படித்திருப்பத்தாக அறிக்கை வேளிவிட்டவர் பாங்கிமூன். ஆனால் அசாத் கேஸ் வந்தவுடன் அதே திருகுதாளங்களை ஆடுகிறார். அசாத்தும், கிம் ஜங் உன்ம் தான் இரண்டு பிரதான சர்வாதிகாரிகள் மகிந்தாவை விட இருக்கிறார்கள். இவர்கள் போனால்த்தான் மகிந்தா மீது கவனம் திரும்பும்.

 

இலங்கை மீது கவனம் திரும்பினால் உலகின் மூன்றாம் வல்லரசு என்ற கதை ஒரு வினாடியில் பிசுபிசுத்து போகும். இப்பவே "இலங்கை மூன்றாம் சர்வதேச வல்லரசு" என்ற அந்த கதை எழுதுவோர் அருகிவருகிறார்கள். இப்போது "சிங்களவனின் ராஜதந்திரமெண்டால்" கதை எழுத்துவோர் வெளியே தலை காட்ட வெட்கப்படுகிறார்கள். தமிழ் பெண்மணி நவனீதம் பிள்ளை கதிர்காமர் காட்டி சென்ற ராஜதந்திரத்துக்கு எதிரான திசையில், பாங்கி மூன், நம்பியார் போன்றோர்களால் கூட உள்ளே நுளைய காட்ட முடியாதிருந்த் ராஜதந்திர ஆளுமையைக் காட்டி,  நாட்டுக்குள் உள்ளட்டு, இது வரை தமிழர் நினைக்க கூடாத முடியாத அரண்களை கட்ந்து போய் வந்துவிட்டார்.  இது ராமநாதன் பிரிடிஸ் தேசாதிபதிக்கு விட்ட சவாலை விட பெரிய சவால். அதற்கு பதிலாக மகிந்தா தனது கேவலக்கெட்ட சிங்கள ராஜதந்திரத்தைக் காட்ட மேர்வின் சில்வாவை ஏவிட்டு கலியாணக் கதை கதைப்பித்தார். அந்த மந்தி(ரி) பல கோமாளித்தனங்களை நிகழ்த்திய பின்னரும் பதவி விலகமால், சிங்கள் அதிகாரிகள் நவநீதம் பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அதே கையோடு மகிந்தா நவநீதம் பிள்ளையிடம் "உங்கள் அறிக்கை முதலே திட்டமிட்டது" என்று ஆத்தாசூப்பி கதை கதைத்துமிருக்கிறார். இவ்வளவத்துக்கும், நவநீதம் பிள்ளை நாட்டுக்குள் வர முடியுமா" என்று வீறாப்பு பேசிய மகிந்தா அன் கோ படு தோல்வியை ஏற்றுக்கொள்வது போல "உங்கள் அறிக்கை முதலே திட்டமிட்டது" என்றிருக்கிறது. 

 

உலகம் தொடர்ந்து முன்னெறுகிறது. 2500 வருடங்களுக்கு முந்தைய அரசனுக்கு முருகன் கொடுத்த வாளைத்தேடிப்பிடித்து அதைக்காட்டி அரச கட்டில் ஏற ஆசைப்படும் மகிந்தாவும், நேற்றைய தொழில் நுடபமான இரசாயனக் குண்டுகளை பெரிய அளவில் சேர்த்துவைத்திருக்கும் அசாத்தும் இருக்க வேண்டிய இடங்கள் அரச கட்டில்கள் அல்ல; சிறை கூடங்கள். பாங்கி மூன் இருவரையும் கன நாள் பாதுகாக்க முடியாது. அமெரிக்க இவர் பாதுகாக்கிறார் என்று நினைப்பத்தால் இனி மெல்ல மெல்ல இவருக்கும் ஆப்பு வந்திறங்கலாம்.

 

Edited by மல்லையூரான்

இது திட்டமிட்ட நழுவலாமே!

 

அமெரிக்காவும் Congress க்கு போய் இதே முடிவை எடுக்கலாம்... :)

இல்லை என்றால் ஒன்று இரண்டு tom hawks ஐ அனுப்பிவிட்டு...ஆசாதை ஏதோவழியில் கொன்று விட்டு

கமுக்கமாக இருக்கலாம்

Edited by naanthaan

பிரித்தானியாவின் முடிவு சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவு.. சைப்பிரஸில் குவியும் பிரித்தானிய விமானங்கள் கிரீக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய்வதற்க்காக இருக்கலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.