Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேர்வின் சில்வாவின் கருத்திற்கு நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தி - நிமால் மன்னிப்பு கோரியுள்ளார்.

Featured Replies

மேர்வின் சில்வாவின் கருத்திற்கு நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தி - நிமால் மன்னிப்பு கோரியுள்ளார்.
31 ஆகஸ்ட் 2013
 

 

Navaneetham_CI.jpg

 

மேர்வின் சில்வாவின் கருத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். இந்த கருத்து அடங்கிய வீடியோ காட்சி அண்மையில், நவனீதம்பிள்ளைக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
 
இந்த கருத்து தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நவனீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஹில்டன் ஹோட்டலில் வைத்து நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு மன்னிப்பு கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, நாட்டுக்கு விஜயம் செய்துள்ள உயர் ஐக்கிய நாடுகள் அதிகாரிக்கு எதிராக இவ்வாறு அமைச்சர் ஒருவரை கருத்து வெளியிட அனுமதித்தமை கண்டிக்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95938/language/ta-IN/article.aspx

மேர்வின் சில்வா சிங்களவர்களின் சுயரூபத்துக்கு எடுத்துக் காட்டு.
மற்றவர்கள் நடித்து ஏமாற்றுவதில் கில்லாடிகள், மேர்வின் அதிலை வீக்.

மேர்வின் ஒர்  கேடுகெட்ட ரவுடி.

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் ஒர்  கேடுகெட்ட ரவுடி.

 

ராஜபக்சா சகோதர்களைவிடவா :D

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் சில்வா, மற்றவர்கள் உன்னை விமர்ச்சிப்பதைக் கண்டு துவண்டுவிடாதே. உன் பணியைத் தொடர்ந்து செய். சிங்கள அரச பிரதானிகள் எத்தனை கேடுகெட்ட ஈனப்பிறவிகள் என்பதை உலகறியச் செய்வதற்கு நீ ஒருவனே பிரதானசாட்சியாக விளங்குகின்றாய்.

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் சில்வா, மற்றவர்கள் உன்னை விமர்ச்சிப்பதைக் கண்டு துவண்டுவிடாதே. உன் பணியைத் தொடர்ந்து செய். சிங்கள அரச பிரதானிகள் எத்தனை கேடுகெட்ட ஈனப்பிறவிகள் என்பதை உலகறியச் செய்வதற்கு நீ ஒருவனே பிரதானசாட்சியாக விளங்குகின்றாய்.

இருந்தாலும் நவநீதம்பிள்ளை  தமிழ்ப்பரம்பரையாச்சே

அவர் மன்னிப்பை ஏற்று உலக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பார் :)

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் நவநீதம்பிள்ளை  தமிழ்ப்பரம்பரையாச்சே

அவர் மன்னிப்பை ஏற்று உலக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பார் :)

தன்னை வருத்தித் தன் குடும்பத்துக்காக உழைக்கும் வழக்கம் தமிழரிடம் பொதுவாக உள்ளது. அந்தப் பழக்கமே ஊர் உலகத்திற்காக உழைக்கும் தமிழர்களையும் உருவாக்கி உள்ளது என்பதில் ஐயமில்லை. கடவுளை வழிபடும்போதே இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க என்று சொல்பவன் தமிழன். இலங்கை சுதந்திரம் அடையமுன்பும் அடைந்தபின்பும் அரசியலில் கூட உயர்ந்தவர்களாக உலகம் கண்டது தமிழர்களைத்தான். சுதந்திர இலங்கையின் முதல் ஜனாதிபதியே சேர் பொன்னம்பலம் இராமநாதன் என்கின்ற தமிழன்தான். இன்றைய பிரிட்டிஸ் மகாராணியார் கல்விகற்கும்போது அவருக்கு ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்கி உதவியவரும் அடங்கா முன்னணித் தமிழன் சுந்தரலிங்கம் என்ற தமிழன்தான். இவர்களை உலகம் உயர்வாகப் பார்த்தபோது, பூவோடு சேர்ந்த நார்போல் சிங்களவனும் உயர்வாகவே நோக்கப்பட்டான். நாங்கள் பூக்களல்ல நார்கள்தான் என்று இன்று மகிந்தா, கோத்தபாய, மேர்வின் சில்வா போன்றவர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். எந்தத்துன்பத்தையும் தமிழன் எற்றுச் சகித்துக் கொள்வதால் இவர்கள் தமிழர்களை ஏறி மிதிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். துன்பத்தை தருபவனுக்கே அதனைத் திருப்பிக்கொடு என உபதேசித்த தமிழன் 30 வருடங்களாக ஈழத்தை ஆண்டபோது இவர்களெல்லாம் நடுங்கிப், பயந்து, பதுங்கி இருந்ததுதான் வரலாறு. உலகம் இன்று இவர்களை இனம்காணத் தொடங்கியுள்ளது. காண்பதற்கு உதவிபுரிவோரைத் தடுக்காதீர்கள்.

வாத்தியார், உங்கள் மென்மையான இதயத்தை அறிந்து வாழ்த்துகிறேன்! நீங்கள் இதயத்தை சற்றுக் கடினமாகவும் மாற்றாவிட்டால், உங்கள் மாணவ மாணவியர்களே அதனைத் தங்களுக்கு மெத்தையாக்கி உங்கள் கண்முன்னே உருண்டு புரள்வதற்கும் இடமளித்துபோலும் ஆகிவிடும்.

யாரடாப்பா இந்த முட்டாள் பய மேர்வின். நம்மிடம் ஒரு சொல்லு சொல்லியிருக்கப்படாதா. இது என்ன இந்த சோடி. இதை விடக் கஸ்டமான 1000 திருமணங்கள் பேசிப் பொருத்தியவன் நான். காதோடு காது வைச்சால் போல் கப் சிப்பா முடிச்சு இன்றைக்கபிந்த பயலை ஜாம் ஜாம் என்று கனிமூன் அனுப்பி வைத்திருந்திருக்க மாடேனா? கெடுதுப்புட்டானே மோடைய பயல்! :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  

 

இலங்கைப் பாரளுமன்றத்துக்குள் நாலு படுக்கை போட்டு இரண்டு அங்கொடை ஆஸ்பத்திரி வைத்தியர்களுக்கும் குவாட்டேஸ் போட்டு கொடுத்துவிடலாம் போலிருக்கு. ஒருவரா இருவரா?  ரம்புக்க, விமல், கக்கீம், அமரதாச, சம்பிக்க, கருண, பசில், மேர்வின்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.