Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் மாவீரன் என்பது மகிந்தவுக்கும் தெரியும்! - TNAஇன் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் உரை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மாவீரன் என்பது மகிந்தவுக்கும் தெரியும்! - TNAஇன் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் உரை!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரன் என்பதை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட ஏற்றுக் கொண்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்..

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூயுள்ளார். இது தொடர்பில் விக்னேஸ்வரன் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'வல்வெட்டித்துறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த மண். அந்த மண்ணில் நின்றுகொண்டு நான் சொல்கிறேன், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மாவீரன். இதனை நான் மட்டும் கூறவில்லை. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட பிரபாகரன் ஒரு மாவீரன் என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனெனில் பிரபாகரன் இருந்த போது 13 பிளஸ் என்றும், அதற்கும் மேலாகவும் தமிழ் மக்களுக்கு சில அதிகாரங்களை வழங்க சிறிலங்கா ஜனாதிபதி முன்வந்திருந்தார்.

ஆனால் பிரபாகரன் இல்லாதபோது 13 மைனஸ் என்றும், பின்னர் 13வது திருத்தச் சட்டம் என ஒன்றுமே இல்லை என்றும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறத் தொடங்கிவிட்டார். பிரபாகரனை மாவீரனாக ஏற்றுக் கொண்டதால் தான் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய முன்வந்திருந்தார். ஆனால் இப்போது அதற்கு அவர் தயாரில்லை. பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய ஒரு வீரன்.

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்று என்னை செவ்வி கண்டபோது, பிரபாகரன் ஒரு பயங்கரவாதி தானே என்று கேட்டார்கள். அதற்கு நான் இல்லை...இல்லை அவர் ஒரு மாவீரன். ஒவ்வொருவரையும் நாங்கள் பார்க்கும் கோணமே அவர்கள் பற்றிய மதிப்பீட்டை ஏற்படுத்துகிறது. எனது கோணத்தில் அவர் பயங்கரவாதி அல்ல.

கண்டியில் வெள்ளையரை எதிர்த்துப் போராடிய வீரயஹப்பிற்றிப்பொல திஸ்ஸ என்பவரை ஆங்கிலேயர்கள் பயங்கரவாதி என்று பிரகடனம் செய்து தண்டித்தார்கள். ஆனால் இப்போது அவரை தேசிய வீரன் என்று பிரகடனப்படுத்தி சிலை வைத்து சிங்கள மக்கள் கொண்டாடுகிறார்கள்.

வெள்ளையரின் பார்வையில் பயங்கரவாதியாகத் தெரிந்த வீரயஹப்பிற்றிப்பொல திஸ்ஸ இப்போது சிங்கள மக்களின் பார்வையில் இலங்கையின் விடுதலைக்காகப் போராடிய தேசிய வீரனாகத் தெரிகின்றான்.

அதேபோலத்தான் பிரபாகரனும் எனக்கு விடுதலை வீரனாகத் தெரிகின்றான் என்று பதில் கூறியிருந்தேன். இந்த செவ்வியில் நான் கூறிய விடயங்கள் பல சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரமாகின. இதனைப் பார்த்த சிறிலங்கா அமைச்சர் டிலான் பெரேரா 'பதுளையில் மேல் நீதிமன்ற நீதிபதியாக விக்னேஸ்வரன் இருந்த போது அங்கே சட்டத்தரணியாகப் பணியாற்றி இருக்கிறேன்.

அப்போது அவர் வழங்கிய தீர்ப்புகளை தலை சாய்த்து ஏற்றுக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அவர் பிரபாகரனை வீரன் என்று கூறுவதால், அவர் முன்னர் வழங்கிய தீர்ப்புகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்' என்று கருத்து வெளியிட்டிருந்தார்.

அவருக்கு நான் ஒன்றைக் கூறுகிறேன். என்னுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் எதுவுமில்லை. பிரபாகரன் மாவீரன் என்று முதலில் ஏற்றுக்கொண்டவர் உங்களின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான். எனவே நீங்கள் தான் (டிலான் பெரேரா போன்றோர்) உங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=0869b311-615a-4b57-b020-f5dd9879ccdf

யாருக்குத்தான் தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மட்டுமில்லை எப்போதும் ஞாபகம் இருக்கட்டும் விக்கி அவர்களுக்கு ...

  • கருத்துக்கள உறவுகள்

உலகறிந்த விடையம், யாரும் மறுக்க முடியாது.

இதை இலங்கை அடக்கி ஆளும் ஈழத்தில் நின்று கூறுகிறார். அதுதான் அரசியல்வாதியின் வீரம். ஆயுதம் ஏய்ந்த வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தடிசாக்கில் வெள்ளையரையும் வாரிவிட்டுள்ளார்.. பலே.. :D

இது தான் சுதந்திரம்...ஜனநாயகம்....தான் நினைத்ததை கூறுவது....

1970 இலும் செய்தார்கள் .. 1990-2009க்குள் இதெல்லாம் முடிந்ததா?

பின் இரண்டு பக்கத்து பயங்கரவாதிகளாளும்..தமிழ்மக்கள் அழிந்தது தான் மிச்சம்
(அப்போதும் சிங்கள காடையர்கள் இருந்தார்கள்...இப்போதும் இருக்கிறார்கள்..எப்போதும் இருப்பார்கள்)  :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நான்தான் சார்..

1990-2009 காலத்தில் சொல்லியிருநதார் என்றால் சிங்களத் துப்பாக்கி அல்லது கிளேமோர் வெடித்திருக்கும்.. பழி புலிகளின் மேல் போடப்பட்டிருக்கும்.. தங்கள் அழிவுமூலம் ஓரளவு பேச்சு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள் புலிகள்.. ஆனால் பரிபூரண சுதந்திரத்தை எட்டுவதற்கு இன்னும் சில படிகள் தாண்ட வேண்டியுள்ளது..

புலிகளுக்கு பயந்து சிங்களவன் இதை தந்திருந்தான் என்றால் நீங்கள் சொல்வது சரி...

அவன் புலியை அழித்து விட்டு தந்திருக்கிறான் (அவனாலும் தரப்படவில்லை...இது உலக ஒழுங்கு :) )

இது தான் சுதந்திரம்...ஜனநாயகம்....தான் நினைத்ததை கூறுவது....

1970 இலும் செய்தார்கள் .. 1990-2009க்குள் இதெல்லாம் முடிந்ததா?

பின் இரண்டு பக்கத்து பயங்கரவாதிகளாளும்..தமிழ்மக்கள் அழிந்தது தான் மிச்சம்

(அப்போதும் சிங்கள காடையர்கள் இருந்தார்கள்...இப்போதும் இருக்கிறார்கள்..எப்போதும் இருப்பார்கள்)  :)

உங்களுக்கு சரித்திரம் தெரிவதில்லை. 1970 களில் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று யார் யாரை கூரினார்கள். அப்போ ஏன் நம்பிக்கை இல்லா பிரேரணை எதிர்கட்சித்தலைவர் மீது கொண்டுவந்தார்கள். 1970 களில் பயங்கர பத்திரிகை தணிக்கைகளை சிறிமா வைத்திருந்தார். அதை JVP யை அடக்க வேண்டிய அவசரகாலம் என்றார். இதனால் Lakehouse  Death of Democracy என்று ஒரு மரண அறிவிதல் கொடுத்தது. அதன் பின்னர் சிறிமா அதை SLFP  பத்திரிகையாக தேசியமயமாகினார். பின்னர் JR அதை UNPக்கு வாங்கினார். பின்னர் தேசியமயம்.....    

எப்போ, எதற்காக, யார், ஏன் 6ம் திருத்தம் கொண்டுவந்தார்கள். 

தேரர்கள் கூட வெலவேரியாவில் பேசப் பயந்து இரண்டாம் உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டார்கள். தேரர்கள் மாதிரி கோளை அல்லத்தான் என்று காட்டியிருக்கிறார். விக்கினேஸ்வரன். அவ்வளவுதான்.

இலங்கையில் 2009 இல் இருந்து 2013 ல் நவநீதம் பிள்ளை பயணம் செய்யும் வரை யார், என்ன பேசினார்கள்.  தனிய இலனகை மந்திர்கள் நவநீதம் பிள்ளை இலங்கை வருவது எமது உடங்கள் மீதும், தேர்தல் ந்டத்துவது நான்கள் வெளீயேறிய பின்னரும் என்றுதான் பேசினார்கள். (தேர்தலும், நவநீதம் பிள்ளையும் வந்தது மட்டுமல்ல தமிழீழமும் கூட வர போகுது.)

மல்லை உங்களிட்டை ஒரு கெட்டகுணம்...யாரும் நுனிப்புல் மேய்ந்தால்...நீங்கள் அடியோடு புடுங்கி...கிழங்கையே காட்டுவீங்கள்.....நீங்கள் என்ன சொல்லுறீங்கள் என்று விளங்குற அற்வு எனக்கு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு பயந்து சிங்களவன் இதை தந்திருந்தான் என்றால் நீங்கள் சொல்வது சரி...

அவன் புலியை அழித்து விட்டு தந்திருக்கிறான் (அவனாலும் தரப்படவில்லை...இது உலக ஒழுங்கு :) )

அந்த உலகம் ஏன் இன்று இலங்கைக்குள் வந்தது என்று ஆராய்ந்தால் விடை தெரிந்துவிடும்.. :rolleyes:

1977 இல்கூட எமது அரசியல்வாதிகள் பேசினார்கள்.. சிங்களவன் அடிபோட்டான்.. ஆனால் உலக ஒழுங்கு வேலை செய்யவில்லை..

பல்லாயிரக்கணக்கில் கரைந்த உயிர்கள் இலங்கையும் உலக ஒழுங்கை கடைப்பிடிக்கவேண்டிய நிலையைக் கொண்டு வந்துள்ளன..

நிச்சயமாக.. அறிவுள்ள..உலக ஒழுங்கை முறையாக கையாள கூடியவர்கள் யாராவது இந்த அழிவை தடுத்திருக்கலாம்...அது தான் எங்களின் தோல்வி....

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக.. அறிவுள்ள..உலக ஒழுங்கை முறையாக கையாள கூடியவர்கள் யாராவது இந்த அழிவை தடுத்திருக்கலாம்...அது தான் எங்களின் தோல்வி....

மக்களுக்காக

ஒருவன் அதிகம்  செய்யக்கூடியது

தன்னை  முழுமையாக  அர்ப்பணிப்பது

அதன் மூலம்  தான்   விரும்பும்  மக்களுக்கு

அதிக  நன்மை கிடைக்கச்செய்வது

அதைச்செய்தவனையே  அறிவற்ற முட்டாள் என்கின்றோம்

வெளியில் நின்று   கொண்டு...........

நடக்கட்டும்

நடக்கட்டும்

உன் ஒரு விரல்  மற்றவனை  நோக்கி  நீளும்   போது

மீதி  நாலு விரல்களும் உன்னை பார்த்து கூனி  நிற்கின்றன  என்பதை  ஒரு முறையாவது கவனியுங்கள்

மனச்சாட்சி  என்று ஒன்று  இருந்தால்...........................?????????????

உன் ஒரு விரல்  மற்றவனை  நோக்கி  நீளும்   போது

மீதி  நாலு விரல்களும் உன்னை பார்த்து கூனி  நிற்கின்றன  என்பதை  ஒரு முறையாவது கவனியுங்கள்

மனச்சாட்சி  என்று ஒன்று  இருந்தால்...........................?????????????

அண்ணா வடிவா பாருங்கோ...ஒரு விரலும் உங்களை சுட்டாது....

பெரு விரலும் சுட்டு விரலின் பக்கம் சுட்டும்..மற்றைய மூன்று விரலும் மடங்கிவிடும்......

கொஞ்சமாவது யோசிக்கோனும்... :)

புலிகளுக்கு பயந்து சிங்களவன் இதை தந்திருந்தான் என்றால் நீங்கள் சொல்வது சரி...

அவன் புலியை அழித்து விட்டு தந்திருக்கிறான் (அவனாலும் தரப்படவில்லை...இது உலக ஒழுங்கு :) )

உலக ஒழுங்கை அறிந்தா தேவானந்தா தெரிவுக்கு குழுவுக்கு போக் மறுத்தார்?

ஐயா, அவரின் வீரத்தினால்தானே தமிழ் இனத்தை  உலகமே  வியந்து பார்த்தது

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா வடிவா பாருங்கோ...ஒரு விரலும் உங்களை சுட்டாது....

பெரு விரலும் சுட்டு விரலின் பக்கம் சுட்டும்..மற்றைய மூன்று விரலும் மடங்கிவிடும்......

கொஞ்சமாவது யோசிக்கோனும்... :)

இதைத்தான்  கருத்துக்களத்தில்  தொடர்ந்து செய்கிறீர்கள்

முயலுக்கு மூன்று கால்  என்பது

அல்லது

முட்டையில் மயிர்  பிடுங்குவது..........

தொடருங்கள்

சாகும் போதும் 4 பேர் வேண்டும்

தூக்கிப்போட......... :(  :(  :(

இது தான் சுதந்திரம்...ஜனநாயகம்....தான் நினைத்ததை கூறுவது....

1970 இலும் செய்தார்கள் .. 1990-2009க்குள் இதெல்லாம் முடிந்ததா?

பின் இரண்டு பக்கத்து பயங்கரவாதிகளாளும்..தமிழ்மக்கள் அழிந்தது தான் மிச்சம்

(அப்போதும் சிங்கள காடையர்கள் இருந்தார்கள்...இப்போதும் இருக்கிறார்கள்..எப்போதும் இருப்பார்கள்)  :)

1990 களிலை இருந்து  குமார் பொன்னம்பலம்,   ஜேசப் பரராஜசிங்கம் , ரவிராஜ் , மகேஸவரன், சிவராம், நடேசன், நிமலராஜன்  (இன்னும் பலர்)  எல்லாம் என்ன செய்தவை...?? 

Edited by தயா

சாகும் போதும் 4 பேர் வேண்டும்

தூக்கிப்போட......... :(  :(  

ஏற்றுகொள்ள முடியாத தத்துவம். 4 விலாசங்கள் காவு காட்டை பிடிப்பர்கள் என்பதால் நாதன் தனது கொள்கைகளை விட்டுத் தரட்டும் என்று  மிரட்டப் பார்பது தவறு. அதே கருத்தை பின்பற்றி நீங்கள் யாரராவது விலாசத்தை  மதித்து அவரின் கருத்தை புகழ்ந்து எழுதுவது உங்கள் விருப்பு வெறுப்பு.

மேற்கு நாட்டில் முனிசிபல்டி சவ அடக்கம் செய்யும். இது ஆடம்பரப்பிரியர்கள், மவுசு எழுப்ப விரும்பாதவ்ர்களுக்கான தெரிவு. உங்களுக்கு இறந்த பின்னரும் நாலு பேர் காவுவதை காண ஆசையா?

Edited by மல்லையூரான்

இப்படியாவது

ஈரம் இருக்கா  என்று  பார்த்தேனையா....... :(

இப்படியாவது

ஈரம் இருக்கா  என்று  பார்த்தேனையா....... :(

நீங்கள் கள்ளனில் ஈரம் தேடி, பொலிசில் ஈரம் தேடி என்ன நிரல் தயாரிக்கப் போகிறீர்களா? சட்டம் என்று ஒன்றும் இருக்கு. அது தர்க்க ததுவத்தில் இருந்து பிறக்க வேண்டும். சாகுபடை நடக்கும் போதா மழை கேட்டு வரம் இருப்பவர் நீங்கள்? அதை ஆரம்பத்தில் பயிர் கருகாமல் நாற்று நட்டவுடன் கேட்பதற்கு எங்கு போனீர்கள்?

என்ன ஈரம் இல்லாக் கருத்து முதலில் அதில் இருந்தது? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.