Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளில் கருணாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளில் கருணாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு –விக்கிலீக்ஸ்

15 செப்டம்பர் 2013

"EPDPயின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி கே. விக்னேஸ்வரன் தெரிவித்தார்" விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்-

Karuna%20Daki%20mahi_CI.jpg

முதற் பதிவேற்றம்

14-09-2013 - 18:11

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுடன் , பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்காவை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கருணாவுக்கும், ஈ.பி.டி.பி. பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் EPDPயின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்,  கலாநிதி கே. விக்னேஸ்வரன் தெரிவித்ததாக அமெரிக்கத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசாங்கம் கருணாவை பயன்படுத்தி தங்களை கொலை செய்யும் என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளது.

2005ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை ஈ.பி.டி.பி.யின் ஒத்துழைப்புடன் கருணா கொலை செய்ததாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

2006ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணாவின் படையினரே பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

2007ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இந்த குறிப்பு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் இந்தக் குறிப்பை அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு கிழக்கில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்கத் தூதரகம் குற்றம் சுமத்தியிருந்தது.

கடத்தல்கள் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் கருணாவிற்கு தொடர்பு இருப்பதாக யாழ்ப்பாண அருட்தந்தை வணக்கத்திற்குரிய பேர்னாட் அடிகள் குற்றம் சுமத்தியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

 

 

நன்றி: விக்கிலீக்ஸ், colombotelegraphtp விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96538/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உவை இரண்டு பேரையும் இயக்கினது... இயக்கிறது... சிங்களவன்.  எனவே அந்த இரண்டு மக்கள் பிரதிநிதிகளின் கொலைக்கும் வேறு பல கொலைகளுக்கும்.. இந்த ஒட்டுக்குழு ஆட்களே முக்கிய காரணம். அவர்களை இயக்கி அந்தக் கொலைகளைச் செய்வித்தது மகிந்த மற்றும் சந்திரிக்கா அரசுகள். ஆனால் அவர்களை பாதுகாக்க உலகில் எத்தனையோ பேர் சிவப்புக் கம்பளத்தோட தயாராக இருக்கினம்..! :(:icon_idea:

Edited by nedukkalapoovan

644240_633522373354429_63889396_n.jpg


1185978_421345744641190_891504779_n.jpg

1240233_233118616842172_1340330976_n.jpg

thankx FB

 

  • கருத்துக்கள உறவுகள்

2008 அவுஸ்திரெலியாவில் அவுஸ்திரெலியா பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டவல்லுனர்கள், ஊடகவியகாளார்களுக்கு, சிங்களத்தின் அமைச்சர் ரோகித போகலகாமாவினால் வழங்கப்பட்ட புத்தகத்தில் "புலிகளினால் கொல்லப்பட்டவர்கள்" குமார் பொன்னம்பலம், ஜோசப் பராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்களின் பெயர்களும் படங்களும் இருந்தவை. சிங்களம் ஒரே கல்லில் பல வேலைகளைச் செய்துவந்தது. அதாவது தங்களுக்கு பிடிக்காதவர்களைக் கொலை செய்வது, பலியைப் புலிகளின் மேல் போடுவது, இதைப்பார்த்து புலிகளைப் பிடிக்காத தமிழர்கள் தங்களது ஊடகங்களிலும், கருத்துக்களிலும் "இவர்களைக் கொன்றது புலிகள் தான் " என்று செய்திகளை வெளியிடுவது. இப்படி புலிகள் செய்யாத பலவிடயங்கள் புலிகள் செய்ததாக உலகத்தினை நம்பவைத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் கந்தப்பு.. அமிர்தலிங்கத்தை கொண்டதுகூட சிங்கள கயவர்கள்தான். பழி பாவத்தை புலிகள் மீது போட்டார்கள். ராஜிவ் காந்தி, கதிர்காமர், யோகேஸ்வரனின மனைவி, என்று செய்யாத கொலைகளுக்காக எத்தனை பழி சுமந்தார்கள் புலிகள்? எல்லாமே சிங்களத்தின் திட்டமிட்ட சதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் கந்தப்பு.. அமிர்தலிங்கத்தை கொண்டதுகூட சிங்கள கயவர்கள்தான். பழி பாவத்தை புலிகள் மீது போட்டார்கள். ராஜிவ் காந்தி, கதிர்காமர், யோகேஸ்வரனின மனைவி, என்று செய்யாத கொலைகளுக்காக எத்தனை பழி சுமந்தார்கள் புலிகள்? எல்லாமே சிங்களத்தின் திட்டமிட்ட சதிகள்.

 

நான் புலிகள் செய்ததினைச் சொல்லவில்லை. புலிகள் செய்யாததினை புலிகள் செய்ததாகச் சொல்வதைக் குறிப்பிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கோதபாய, என்னைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை மேற்கொள்கின்றார்" எனக் கூறினார் கருணா – விக்கிலீக்ஸ்

16 செப்டம்பர் 2013

விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ் செய்திகள்

GotaKaruna_CI.jpg

 

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தம்மைப் பயன்படுத்தி அச்சுத்தல்களை மேற்கொண்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் குறிப்பிட்டதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாவுடனான தொடர்புகளை அரசாங்கம் மறுத்து வந்த போதிலும், கருணா அம்மானின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பயன்களையும் அவரது நடவடிக்கைகளையும் கோதபாய ராஜபக்ஷ புகழ்ந்து பாராட்டியுள்ளதாக அசோசியடட் பிரஸ் ஊடக நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பொறுப்பாளர் மெத்தீயூ ரோசன்பெர்க் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கோதபாய ராஜபக்ஷவுடனான தொலைபேசி குறித்த குரல் பதிவு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2007ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கினால், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி கோதபாய ராஜபக்ஷ, நேரடியாக டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியைக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, பிரசூரமான செய்தி குறித்து கருணா அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியை சம்பிக்கா லியனாரச்சிக்கு பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு அழைப்பு எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் தொடர்பில் பிரசூரமான கட்டுரை தொடர்பில் கருணா கடும் கோபமடைந்துள்ளதாக கோதபாய தெரிவித்துள்ளார்.

கட்டுரையின் ஆசிரிரையும், பத்திரிகை ஆசிரியையும் கருணா கொலை செய்யக் கூடுமென பாதுகாப்புச் செயலாளர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பத்திரிகை ஆசிரியை லியனாரச்சியை பரத்தை என இழிவாகப் பேசியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், பத்திரியை ஆசிரியை கருணா அம்மானுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து செய்தி குறித்து விளக்கிய போது, தாம் எவரையும கொல்லப் போவதில்லை எனவும், கோதபாய ராஜபக்ஷ தம்மைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் கருணா குறிப்பிட்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் பிளக் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

நன்றி: colombotelegraph விக்கிலீக்ஸ்

விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ் செய்திகள்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96599/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் கந்தப்பு.. அமிர்தலிங்கத்தை கொண்டதுகூட சிங்கள கயவர்கள்தான். பழி பாவத்தை புலிகள் மீது போட்டார்கள். ராஜிவ் காந்தி, கதிர்காமர், யோகேஸ்வரனின மனைவி, என்று செய்யாத கொலைகளுக்காக எத்தனை பழி சுமந்தார்கள் புலிகள்? எல்லாமே சிங்களத்தின் திட்டமிட்ட சதிகள்.

 

 

 

உவ்வளவு தகவல்கள் தெரியும் நீங்கள் பாலகுமார், யோகி,எளிலன் போன்றோர் எங்கே என சொல்லலாமே??

உவ்வளவு தகவல்கள் தெரியும் நீங்கள் பாலகுமார், யோகி,எளிலன் போன்றோர் எங்கே என சொல்லலாமே??

அதெப்படி சொல்வது அவர்கள் தான் புலிகள் ஆச்சே அவர்களுக்கு என்ன ஆனால் என்ன? காடக் கொடுப்பவர்களுக்கும் இனத் துரோகிகளுக்கும் எம் இனத்தை அளித்தவர்களுக்கும் ஒன்றும் நடக்க கூடாது . குறிப்பா புலிகளால் ஒன்றும் ஆகக் கூடாது பாவம் அவர்கள் . புலிகளும் தமிழர்களும் எக்கேடு போனாலும் பறவாய் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவு தகவல்கள் தெரியும் நீங்கள் பாலகுமார், யோகி,எளிலன் போன்றோர் எங்கே என சொல்லலாமே??

 

2008ல் தமிழக காங்கிரசின் சிதம்பரம், விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டவர்கள் என்று குமார் பொன்னம்பலம், ஈரோஸ் பாலகுமார், உமாமகேஸ்வரன் என்று ஒரு நிகழ்வில் உரையாற்றினார். உயிரோடு இருந்த பாலகுமாரை இறந்ததாக சிங்களத்தின் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் துணைபோனது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.