Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய ஆதரவு ஊடகங்களின் நடத்தை

Featured Replies

  • தொடங்கியவர்

அவங்கள் திரிக்கிறாங்கள் எண்டு நீங்களும் திரிச்சா பிறகு உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? அரசாங்கம் திரிபுபடுத்தும் இராணுவம் சார்ந்த வெற்றி தோல்விகளை இட்டு கவலை கொள்ள வேண்டிய பலவீனமான நிலையில் தமிழர் தரப்பு இன்று இல்லை. தாராளமாக அரசாங்கம் தனது பிரச்சாரம் மூலம் என்ன சொன்னாலும் காலம் வரும் பொழுது கள யதார்த்தம் எல்லாத்தையும் தெளிவுபடுத்தும் . அரசாங்கம் மறைக்கும் திரிபுபடுத்தும் மனிதாபிமான விடையங்கள் பற்றி தமிழர் தரப்பு ஊடகங்கள் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும். அடுத்ததாக அரசியல் விடையங்கள், மத்தியஸ்த்தர்களின் கருத்துக்கள் ஏனைய ஊடகங்களின் நடத்தை போன்றவை.

அரசாங்கத்தின் சோடிகைளிற்கு போட்டியாக அதைவிட கேவலமாக சோடிப்பது அல்ல எமது ஊடகங்களில் இன்றைய கடமை.

  • Replies 97
  • Views 15.1k
  • Created
  • Last Reply

அதுசரி, புதினத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேணுமெண்டா என்னெண்டு அனுப்பிறது? ஆருக்காவது மின்னஞ்சல் முகவரி தெரியுமா?

இணையத்தளத்தில "தொடர்புகளுக்கு", "உங்கள் கருத்துகள்" எண்டு சும்மா தலைப்புத்தான் வைச்சிருக்கினமேயொழிய அங்க ஒண்டுமில்லை. உது மாசக்கணக்கா இருக்கிற பிரச்சினை.

புதினத்தின் குறிப்பிட்ட செய்தியை கடைசிவரை படித்தபின் அதுக்கும் கீழ உங்கள்கருத்து, மின்னஞ்சல் எண்டு ஒரு ஆழி இருக்கு அதை அழுத்தும் கதவு திறந்து உமது கருத்தை பதியலாம்....

(தமிழ் சரியா...???? :roll: )

அவங்கள் திரிக்கிறாங்கள் எண்டு நீங்களும் திரிச்சா பிறகு உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? அரசாங்கம் திரிபுபடுத்தும் இராணுவம் சார்ந்த வெற்றி தோல்விகளை இட்டு கவலை கொள்ள வேண்டிய பலவீனமான நிலையில் தமிழர் தரப்பு இன்று இல்லை. தாராளமாக அரசாங்கம் தனது பிரச்சாரம் மூலம் என்ன சொன்னாலும் காலம் வரும் பொழுது கள யதார்த்தம் எல்லாத்தையும் தெளிவுபடுத்தும் . அரசாங்கம் மறைக்கும் திரிபுபடுத்தும் மனிதாபிமான விடையங்கள் பற்றி தமிழர் தரப்பு ஊடகங்கள் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும். அடுத்ததாக அரசியல் விடையங்கள், மத்தியஸ்த்தர்களின் கருத்துக்கள் ஏனைய ஊடகங்களின் நடத்தை போன்றவை..

உங்களுக்கு தெரியும் ஹிட்லர் காலத்தில் செஞ்சேனைகள் "பேளினுக்குள்" நுளைந்த போதும் அதன் அரைப்பகுதியை கைப்பற்றிய போதும் ஜேர்மனிய வானொலி நாங்கள் ரஸ்யாவுக்குள் ஊடுருவிக்கொண்டு இருக்கிறோம் எண்றுதான் அறிவித்தது.... அப்படியானால் எந்த வித பலனும் இல்லாமல்த்தான் அறிவித்தா...???

அரசியல் இராணுவ நலன்கள் பேணப்படுவதற்கால இல்லையா..??

  • கருத்துக்கள உறவுகள்

செல்வதில் ஒரு கஸ்டமும் இருப்பதில்லை குறுக்ஸ். செயல்பாட்டில் இறங்கும்போது தான் அதன் கஸ்டம் புரியும். சிறிலங்கா அரசு தன் தோல்வியை மறைப்பதற்குக் காரணம், மக்களின் மனவலிமையைக் குறைக்க மூடாது என்பதற்காக. ஆனால் தமிழ் ஊடகங்கள் அவ்வாறு கூடச் செய்யவில்லை. கிட்டத்தட்ட ஊகம் ஆன அளவை வைத்துத் தான் தகவல் விடுகின்றன.

டாங்கி அழிப்பு பற்றி, புலிகளின் தொலைக்காட்சி, மற்றும் வானொலிகளில் வந்த செய்திகள் தாம். அதைக் கூட வெளியிடக் கூடாது என்றால், இணையத்தளத்தை மூடிப் போட்டு போகலாம். வெறுமனே ஒரு செய்தி தான் அவர்கள் தருவது போலவும், அது ஆமியின் பின்வாங்கலைப் பற்றியது மட்டும் தான் என்று கதையடிப்பது வேடிக்கையானது!

போராட்டத்தின் தன்மை கருதி, மிகைப்படுத்திய செய்திகள் வெளியிடுவது தேவையில்லை. ஆனால் அது குறித்து நீங்கள் அவ்வவ் நிர்வாகளுக்கு தனியே அறிவிக்க வேண்டும். எந்தச் செய்தியையும் பறை போட்டுத் தான் சொல்வேன் என அடம் பிடிப்பதும், அதைப் பற்றி சந்தி சிரிக்கவும், சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது நக்கல் நளினமும் போட்டுக் கொள்வேன் என்ற கணக்கில், கதைப்பதும் மிகையானது.

மக்களின் கஸ்டம் உண்மையானது. அதை பல தடவை எழுதிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் அதைத் தமிழில் பிரச்சாரப்படுத்துவதில் மட்டும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. அதை வெளிப்படுத்த ஒட்டுமொத்த தமிழ்மக்களின் ஆதரவு என்பது அவசியம்!

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தனியே இணையத்தளம் வைத்திருக்கின்றது. ஆனால் அதன் தேவைகளை அங்கே பதியப்படலாம்.

ஒட்டுமொத்தமாக இணையத்தளங்கள் சரியானவை என்று சொல்லவரவில்லை. ஆனால் அதை எப்ப பார்த்தாலும் வைய்து கொண்டிருப்பது தான் பிடிக்கவில்லை. ஏனென்றால் கூட்டத்தில் நின்று கல்லெறியவது ஒன்றும் கஸ்டமான வேலையல்ல!

மற்றும்படி நண்பர் குறுக்ஸ்சின் தேசம் தொடர்பான நிலையில் எனக்கு முழுத் திருப்தி உண்டு. அவரின் அந்த ஆதங்கங்களை எவ்விதத்திலும் மறுக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரலும் இச்செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறது.

அதாவது இந்த இழப்பு விவரக் கணக்கு புலிகளின் குரலும் தெரிவித்திருக்கிறது.

புலிகளின் இழப்புக்களுடன் இந்த செய்திகள் வெளிவந்திருப்பதனால் இது புலிகளின் அனுமதியோடு வெளியிடப்பட்ட செய்தி என்றே எண்ணத் தோன்றுகிறது.

  • தொடங்கியவர்

தூயவன் பலரும் சொல்லி களைச்சு போட்டினம் அய்யா. கேட்டா விளக்கம் சொல்லுவாங்கள் ஊரிலை அனுமதி எடுத்து தான் செய்யிறம் எண்டு. இனி என்ன ஊருக்கு தொடர் பெடுத்து உறுதி செய்யிறதா இதுகளுக்கு எல்லாம்? சனமும் செய்யமாட்டினம் எண்ட துணிவிலான் அவங்கள் அப்படி மறுமொழிதாறது. இப்படி பலரும் அறிய விமர்சிச்சாத்தான் சில வேளைகளின் ஏதாவது நடந்திருக்கு.

தலா, நீங்கள் சொல்லிற பாசிச யேர்மனியின் பரப்புரை 2ஆம் உலகயுத்தத்தில் நடந்தது. இப்ப ஈழப்போர்4 நடக்குது எண்டு இக்பால் அத்தாஸ் தான் மூக்காலை அழுறார் ஆனால் யார் பிரகடனப்படுத்தப்படத்தினது? பிரகடனப்படுத்தப்படாத ஒன்றில் இராணுவ வெற்றி தோல்விகள் பற்றி பரந்த அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை இருக்கா? மேற்கத்தேய இராஜதந்திரி வேறை கவலைப்படுறார் முன்னரங்க நிலை மாறவில்லை இருந்த இடத்திலேயே இருந்து சுடுபடுகினம் 1ஆவது உலகயுத்தம் மாதிரிர எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

பிபிஸியில் இளந்திரையன் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த்யுள்ளார். நாங்கள் ஸ்கோர் பார்ப்பதை விட்டுவிட்டு அல்லலுறும் மக்களுக்கு எப்படி உதவ முடியும் என்று யோசிக்கவேண்டும். தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யலாம், அல்லது அவர்களுடன் சேர்ந்து பணியாற்றலாம். அதுவும் செய்ய முடியாவிட்டால் சர்வதேச நிறுவனங்களுக்கு நிலைமைகளை விளக்கி ஒரு தொலைநகல், மின்னஞ்சல் அனுப்பலாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலா,

தகவலுக்கு நன்றி. இது குறிப்பிட்ட செய்திக்குரிய கருத்து அனுப்பும் வசதி. நான் தெரிவிக்கப்போகும் கருத்து குறிப்பிட்ட ஒரு செய்தி தொடர்பானதன்று. பொதுவாக இணையத்தளத்துக்கென்று தொடர்புகொள்ள ஒரு வசதி இருந்தால் நல்லது. அதற்குரிய தலையங்கங்களை வைத்துக்கொண்டு ஒன்றுமில்லாமல் இருக்கிறது அந்த இணையப்பக்கம்.

பரவாயில்லை. எனக்கு இப்போதைக்கு இந்த வசதியே போதும்.

______________________________________

தூயவன், நான் பதிவு இணையத்தளத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மூன்று நாட்களாகப் பதிலில்லை. இன்னும் எத்தனைநாள் பொறுத்துப்பார்த்து முடிவெடுக்கலாம்?

அஞ்சல் கிடைத்ததாகக்கூடப் பதில்போடாத தன்மை பலருக்குண்டு. ஒருவருடத்தின்முன் தேசிய நாளிதழான தினக்குரலுக்கு 3 மடல் அடுத்தடுத்து அனுப்பியதிலிருந்து எனக்கு இந்த அனுவமுண்டு.

மற்ற இணையங்கள்கூட கருத்து என்று எதைக்கருதுகிறார்கள் என்றால் முதுகு சொறிதலைத்தான். எனக்கு இந்த அனுபவம் இருக்கிறது.

தவறைச் சுட்டி விமர்சனம் செய்தால் எரிச்சலோடு பதில் வந்த அனுபவமுண்டு. எழுத்துப்பிழை, கருத்துப்பிழைகளைச் சுட்டினால் மூக்கின்மேல் கோபம் வருகிறது.

______________________________________

ஊடகங்களின் தவறுகளை "உளவியல் யுத்தம்", "கருத்துப் போர்" என்று சொற்களுள் அடக்கி வக்காலத்து வாங்குவது கயமைத்தனம் என்றே சொல்வேன். அப்படி வக்காலத்து வாங்கும் யாருக்கும் சிங்கள ஊடக உலகை, அரசை நக்கலடிக்க எந்த அருகதையுமில்லை. குறைந்தபட்சம் அதையாவது செய்யாமலிருக்க உங்களால் முடியுமா?

வெற்றிச் செய்திகள்கூட இன்னொரு வளத்தால் பெரிய பாதிப்பைத்தருமென்பதை நான் அறிந்துகொண்ட சம்பவமுண்டு. தீவகத்தில் மக்கள் கொல்லப்பட்டது பற்றி ஒருவரோடு வாதிடும்போது அம்மக்களின் கொலைக்குப் புலிகளே காரணம் என்ற கருத்து வந்தது. "அல்லைப்பிட்டியை புலிகள் தாக்கி இராணுவத்தை விரட்டியபின் இராணுவம் அல்லைப்பிட்டி மீது தாக்குதல் நடத்தியது. அதில் மக்கள் கொல்லப்பட்டார்கள்" என்று சொன்னார். கொலையை ஏற்றுக்கொள்ளவில்லையாயினும

  • தொடங்கியவர்

எங்கடை ஊடகங்கள் கன்றுக்குட்டித்தனமாக நடந்தா பிபிசிகாரர் அதைவைச்சு இழந்திரியனை குறுக்குவிசாரணை செய்வங்கள் தானே. தற்காப்பு முறையடிப்பு சமர்மாதிரி எங்கடை ஊடகங்கள் நிலமையை விவரிப்பதாக தெரியவில்லை. அவர்களுடைய வசன நடைகள் தீட்டும் தலையங்கங்கள் தவறான அபிப்பிராயத்தை தான் உருவாக்கிறது. இழந்திரயனையும் இக்கட்டில் மாட்டி விடுகிறது.

மவிலாற்று விவகாரத்தில் பிரச்சாரரீதியில் சிறீலங்கா அரசாங்கம் படுமோசமான நிலையில் இருந்தது. எல்லா சர்வதேச ஊடகங்களிலும் "they are not after water, they want something else, we will blame this on the government" என்ற கண்காணிப்புக்குழுவின் கருத்து எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அரசாங்கம் யாழ்பாண களமுனையை தொடங்கியவுடன் எமது ஊடகங்கள் நடந்து கொண்ட முறை அதை புலிகளே தொடக்கியதாக குற்றம் சாட்டும் அளவிற்கு மாற்றியிருந்தது. றொயிற்றேஸ் மிகவும் சந்தேகத்துக்கு இடமான முறையில் யாழ்களமுனை சண்டைகள் ஆரம்பித்த பொழுது ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதாவது இனங்காண விரும்பாத புலிகளின் குரல் வானொலியில் வேலைசெய்யும் ஒருவர் தாம் தொடர்பு கொண்ட பொழுது சில செய்திகள் கூறியதாக. இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

http://today.reuters.com/news/articlenews....NKA.xml&src=rss

இன்று எமது ஊடகங்கள் செய்ய வேண்டியது இப்படியான விடையங்களை வெளிக் கொண்டுவருவது.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=19300

பதிவின் பலாலி கட்டளைப்பீடம் காரைநகருக்கு மாற்றப்பட்டுவிட்டது போன்ற கோமாளி செய்திகள் அல்ல.

ஓமந்தையினூடாக நேற்று எவரும் வவுனியா செல்லவில்லை ஆனால் 1000 பேர் புலிகளின் பகுதிகளிற்கு சென்றார்கள் என்று தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. அதாவது இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்கு தமிழர் செல்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என்ற மறைமுக செய்தி அதில் இருந்தது.

ஆனால் இன்று தமிழ் தொலைக்காட்சி இணைய கோமாளிகள் என்ன சொல்லீனம் தெரியுமோ? ஓமந்தையில் புலிகளின் பகுதிகளில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்கு செல்ல எவரையும் அனுமதிக்கவில்லை என்று. இப்படியான முரண்பாடுகளால் நன்மை பெறுவது இறுதியில் யார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவான்,

அந்த பெயர் குறிப்பிட விரும்பாத புலிகளின்குரல் 'தளபதி' ஆரெண்டு பலருக்குத் தெரியும். இச்செய்தியைச் சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தார்களா தெரியாது. வன்னியில் இணையத் தொடர்பிருப்பவர்கள், வசதியிருப்பவர்கள் வெகுசிலர். அதற்குள் ஓரிருவர் ஆடும் கூத்து பெரியகதை. இன்று வெளியில் இயங்கும் இணையத்தளங்களின் தவறுகளுக்கு இவர்கள் முக்கிய பொறுப்பாளிகள். ஒவ்வொரு தளமும் ஒவ்வொருவரை வன்னியில் வைத்திருக்கிறார்கள். ஏட்டிக்குப் போட்டியாக அங்கிருந்து ஆட்டிப்படைக்கிறார்கள். இங்கு தட்டிக்கேட்டால், 'ஆவரே ஓ.கே பண்ணீட்டார்" என்று ஒருவரின் பெயரைச்சொல்லி வைக்கிறார்கள். முதலில் இந்த இணையங்களின் அதிகாரமற்ற 'போஷகர்களை'ததான் ஏதாவது செய்ய வேணும்.

அடுத்து செய்தி மூலங்களைத் தெரிவிக்காமல் சொல்வது. இவர்களும் சும்மா ஒவ்வொரு புனைபெயரில் எழுதிக்கொண்டிருப்பார்கள். ஒருசெய்திக்கு தான்தான் பொறுப்பு என்ற உணர்வில்லாத தன்மை வெளிப்படையாகத் தெரிகிறது. ஒருவர் ஒரே பெயரில் எழுதினால் நன்று. நிறையச் செய்தியாளர்கள் இருக்கிறார்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென்றாலும் பரவாயில்லை. ஆனால் பொறுப்புணர்வு வேண்டும்.

நேற்று வெளியிட்ட இராணுவ இழப்பு விவரத்தைக்கூட புலிகளை மேற்கோள்காட்டி வெளியிடத் தோன்றவில்லை இவர்களுக்கு.

இதற்குமுன் புதினம் வெளியிட்ட சிறிலங்கா அரசின் ஆயுதப் பட்டியல் விவரத்தில் செய்தி மூலத்தைக் குறிப்பிட்டிருந்தால் அப்பட்டியலிலுள்ள தவறுகளுக்குப் புதினம் பொறுப்பாகாமல் இருந்திருக்கலாம். (எங்களிட்டயும் பேச்சு வாங்கியிருக்கத் தேவையில்லை) நேற்றுத்தான் அந்தப் பட்டியல் வந்த மூலக்கட்டுரையைப் படித்தேன். அங்கேதான் பிரச்சினை.

அதைவிட இன்று ஒரு தவறான செய்தி வந்தால் அதற்குரிய பொறுப்பாளியைத் தேடிக்கண்டுபிடிப்பது மிகக்கடினம். சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லைக்க எண்டமாதிரி எங்கட தமிழ் இணையங்களுக்குள்ள ஒவ்வொருவரைச் சாட்டிச்சாட்டி சுத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான். வெளியிடப்பட்ட நேரத்தைக் கணக்கிட்டு, இந்த இணையம்தான் உந்தச் செய்தியைப் பெற்றது, மிச்சவையெல்லாம் கொப்பி பண்ணியிருக்கினம் எண்டு நாங்களாக அனுமானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

__________________________________________

குறுக்கால போவானின் கருத்தில் தலைமையகம் இடம்மாறியது, இராணுவ இழப்புக்கள், போரிடும் படையணிகள் என்பன பற்றிய செய்திகள் முற்றாகவே தவிர்க்கப்பட வேண்டியவை என்ற தொனி தெரிகிறது.

ஆனால் என்னைப்பொறுத்தவரை "இவையும்" முக்கியமே.

ஜெயசிக்குறு தொடங்கி, ஓயாத அலைகளின் அனைத்துத் தொடர்களின்போதும் வன்னியில் இருந்தவன் என்ற அடிப்படையில் இத்தகவல்கள் முக்கியமானவையாகக் கருதுகிறேன். யுத்தமுனையில் என்ன நடக்கிறது என்ற சரியான தோற்றம் அங்கிருந்த மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. படையணிகளின் பெயர்கள், வலு என்பன மட்டில் தெளிவிருந்தது. எந்த அணி எங்கு நிற்கிறது என்பதன் மூலம் தெளிவான தோற்றப்பாடு கிடைக்கும். இராணுவத் தளபதிகளின் பெயர்கள்கூட முக்கியமானவை. யாரை எங்கு மாற்றுகிறார்கள், யார் இந்தச் சண்டைக்குத் தலைமை தாங்குகிறார் என்பனவும் நடக்கும் சண்டைபற்றிய தெளிவான விளக்கத்தை மக்களிடத்தில் சேர்க்கும். புலிகளும் இயன்றவரை முழுமையான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தக்கால கட்டத்தில் வந்த விடுதலைப்புலிகள் ஏடு, ஈழநாதம் பத்திரிகைகளைப் பார்த்தால் இத்தகவல்கள் எவ்வளவு முக்கியத்துவத்தோடு மக்களுக்குச் சொல்லப்பட்டன என்று தெரியும்.

இவற்றை யாருக்குச் சொல்ல வேண்டும் என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம்.

எனக்கு முக்கியமானவையாகப் படுகின்றன.

___________________________________________

மற்றும்படி உங்கள் மற்றக் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன்.

தமிழ் தொலைக்காட்சியை யார் நடத்துகிறார்கள். மந்துவில் குண்டுவீச்சு பற்றி இவர்களும் செய்தி சொன்னதாக அறிந்தபோது யாரை நோவது என்று தெரியவில்லை.

அந்த பெயர் குறிப்பிட விரும்பாத புலிகளின்குரல் 'தளபதி' ஆரெண்டு பலருக்குத் தெரியும். இச்செய்தியைச் சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தார்களா தெரியாது. வன்னியில் இணையத்

நல்லவனுக்கு தமிழ் உடகம் மீது நல்ல காஞ்சல் போல :lol: :P :lol:

ஆன இவருக்கு தெரியுமாம் :?: :?:

எங்கையோ இருந்த கறளை இப்போ கொட்டுறார் இவர் :P

  • தொடங்கியவர்

நிச்சையமாக களத்தில் உள்ள மக்களுக்கு தேவையான செய்திகளை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகங்கள் வெளியிடுகின்றன பொறுப்புணர்வோடு. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பலாலி கட்டளைப்பீடம் காரநகருக்கு மாறியதா, எதிரி தரப்பில் எந்த படையணி எந்த தளபதியின் வழிநடத்தலில் எந்த கள முனையில் என்ற செய்திகள் தேவை ஏற்படும்போது அறிய வேண்டியவர்கள் களத்தில் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் மக்கள். வெளிநாடுகளில் கொழுக்க திண்டுபோட்டு ஏப்பம் விடும் கூட்டம் அல்ல (நான் உட்பட). களத்தில் உள்ள மக்களிற்கு விளக்கத்தை கொடுக்க பாதுகாக்க புலிகள் பொறுப்புணர்வோடு வெளியிடும் தகவல் காலம் தழ்த்தி பின்னர் வெளிநாட்டு ஊடகங்களினால் வெளியிடப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்று நடப்பது என்ன? புலிகள் அதிகாரபூர்வமாக வெளியிடாத தகவல்களை வெளிநாடுகளில் உள்ள ஊடகங்கள் என்ற பெயரில் வே... ஆடும் நாதாரி கூட்டம் தமது தாயக தொடர்புகளை வைத்து முதலில் வெளியிடுகிறது. அதாவது புலிகள் களத்தில் உள்ள மக்களின் நலன் கருதி வெளியிடாத களமுனை தகவல்கள் என்று கொஞ்சத்தையும் மிச்சத்திற்கு மிதமிஞ்சிய கற்பனையை புலம்பெயர்ந்த ஊடகங்கள் முண்டியடித்துக் கொண்டு யாருக்காக வெளியிடுகிறார்கள்? புதினத்தையும், தமிழ்நாதத்தையும் பதிவையும் IBC, TTN யுமா நம்பி களத்தில் மக்கள் இருக்கிறார்கள்? வெளிநாட்டில் தொன்னிலங்கையில் உள்ளவர்கள் இதை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? அதை புலி எதிர்ப்புக்கு மற்றவர்கள் பயன்படுத்தப் போகிறார்கள் பயன் படுத்த தொடங்கிவிட்டார்கள். இது முளையில் கிள்ளப்பட வேண்டிய ஆபத்தான பழக்கம்.

IBC இல் TTN இற்கு விளம்பரம் எப்படி போகிறது என்று கவனித்தீர்களா? "அடிடா அடிடா ஓடுறான்கள்" என்ற விடியோ பதிவின் ஒலியை போட்டு. தாயகத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய. இதில் இருந்து இவர்களுடைய மனோநிலையை புரிந்து கொள்ளுங்கள். என்ன மாதரியான தகவல்களை தாயகத்தில் அறிந்து இங்கு அறிவிக்க துடிக்கிறார்கள் என்றதை.

ஆங்கிலத்தை விடுவம் தமிழிலாவது இப்படிப்பட்ட தகவல்களோடு ஏன் புலத்திலுள்ள ஊடகத்தில் ஒரு செய்திக்கட்டுரை கூட வரவில்லை?

http://www.transcurrents.com/Aerial_terror...sacre_0820.html

இவர்களிற்கு எதிரியின் எந்த படையணி எங்கு நிக்கிறது புலிகளின் எறிகணைகள் துல்லியாமாக பலாலி கட்டளை கோபுரத்தை தாக்கியது, ஓடுபாதையை தாக்கியது என்ற அளவிற்கு அங்கு தொடர்புகள் உள்ளவர்களினால் ஏன் இவ்வாறான மனித அவலம் பற்றிய விபரங்களை தொகுத்து செய்திக்கட்டுரையாக வெளியிட முடியாது உள்ளது. வெளிநாட்டில் உள்ள ஒரு புலிஎதிர்ப்பு பேனாவிபச்சாரி குடுத்த முக்கியத்தை அவரால் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவில் நடந்த அரச விமானப்படையின் கோரத்தாண்டவம் பற்றிய விபரங்களை ஏன் தேசிய ஆதரவு ஊடகங்களில் 1வரால் கூட செய்ய முடியவில்லை. இந்த நிலையில் பிபிசி சிபிசி போன்ற சர்வதேச ஊடகங்கள் டிபிஎஸ் அய் இலங்கை ஆய்வாளார் என்று கருத்துக் கேக்கும் நிலைமாறி ஒரு புலி எதிர்ப்பு அற்ற தமிழ்தேச ஊடகத்தவரை கருத்துக் கேக்கும் நிலை எப்பொழுது வரப்போகிறது?

சிலர் சொல்கிறார்கள் தமிழ் ஊடகங்கள் நம்பகமாக இல்லாட்டி ஏன் அவற்றை பார்க்கிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கையானதை பாத்துட்டு போங்கோ என்று. தமிழ் ஊடகங்கள் சர்வதேச அளவில் ஒரு நம்பிக்கையான தரமான ஊடகமாக வழர்ச்சி பெறவேண்டும். அது எமது தேசியத்திற்கு மிகமுக்கியமானது. இதற்கு என்று புதிது புதிதாக ஊடகங்கள் என்று எமது குறுகிய வளத்தை சிதறிக்க முடியாது. ஏலவே களத்தில் ஊடகங்களாக இருப்பவர்கள் தமது தரத்தை அடுத்த நிலை உயர்த்த முயற்சிக்க வேண்டும். எரிக்சொல்கைம் தென்னிலங்கை ஊடகங்கள் ஊடக தர்மத்தை கடைப்பிடிப்பது இல்லை பொறுப்புணர்வு அற்றவர்கள் என்று ஒரு முறை விமர்சித்து இருந்தார். அதன் அர்த்தம் எமது ஊடகங்கள் தரமாக இருக்கிறது என்று அர்த்தம் அல்லம். எரிக்சொல்கைமிற்கும் எமது ஊடகங்களின் நிலைப்பாட்டில் இன்னமும் ஒரு முரண்பாடு வரவில்லை. எரிக்சொல்கைமின் நடவடிக்கைகளிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் எமது ஊடகங்கள் இல்லை என்பதுமே. அதைவிட கேவலமான நிலையில் தான் எமது புலம்பெயர்ந்த ஊடகங்கள் இருக்கிறது.

http://www.tamillinks.net/archive/2006/new..._20082006_a.htm

குறூக்ஸ், எவ்விடயமானாலும் முதலில் அவ்விணையத்தளநிவாகத்துக்கு முதலில் சுட்டிக்காட்டுங்க. அவர்கள் அதற்கு பதில் அளிக்காமலோ அல்லது கவனத்தில் எடுக்காமலோ விட்டால், அதன்பிறகு இவ்வாறான இடங்களில் விவாதிக்கலாம்.

மற்றும் ஊடகங்கள் செய்வதெல்லாம் சரியென்று நான் கூறவரவில்லை. வீணான ஊகச்செய்திகளை தவிர்ப்பது நல்லது.

ம்.. சுபித்திரதலரகுவரனுக்கே தடுமாற்றம் வரும் வகையில் குறுக்காலைபோறநல்லவர் குடுக்கிறார் வேம்பு.. :P :lol::lol:

ம்.. சுபித்திரதலரகுவரனுக்கே தடுமாற்றம் வரும் வகையில் குறுக்காலைபோறநல்லவர் குடுக்கிறார் வேம்பு.. :P :lol::lol:

என்ன நரிக்கு என்ன விளங்கிச்சு இப்போ :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சசி,

கருத்துக்கு நன்றி.

எங்கயடா இன்னும் ஒருத்தரும் சொல்லேல எண்டு பாத்தன்.

சரி, ஆரோட கறள் எண்டுறியள்?

நான் சொன்னதில ஏதாவது ஒண்டு தவறான தகவலெண்டு சொல்ல முடியுமா?

இப்ப பாருங்கோ, ஆமியின்ர இழப்பு விவரத்தைச் சொல்ல வந்த இடத்தில 1250 எண்டுதான் புலியள் சொன்னவை. அதைத்தான் பெரும்பாலான ஊடகங்கள் எழுதினவை. பதிவு எண்ட தளம் தாங்கள் வித்தியாசமா இருக்க வேணுமண்டு நினைச்சு வித்தியாசமான கணக்கைச் சொல்லுகினம். காயப்பட்ட ஆமியின்ர கணக்கை 1500 எண்டு மாத்தி செய்தி போடுகினம். எண்டபடியா உவை தனியாக்கணக்கெடுத்திருக்கின

ம்.. திமிர் பற்றி சொல்லத்தான் நினைப்பு வருகின்றது.. கிழக்கில் மாவிலாறு..மூதூர் யுத்தத்தின்போது புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துபோன (பொது)மக்கள் 40.000 பேருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க முடியாமல் அரசாங்கத்திடம் கோரியயதும்.. அதே போல பளை..கிளாலி..முகமாலை பகுதிகளிலிருந்து வெளியேறியவர்களக்கு விடுதலைப்புலிகளினால் உணவு..அத்தியாவசிய பொருட்கள் உட்பட சகல வசதிகளும் செய்த கொடுக்கப்பட்டதும் பிபிஸி நேர்காணல் ஊடாக அறிந்தேன்.. இது எதை காட்டுகின்றது??????????????

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19300

அந்த அந்த இடங்களில் அப்போது இருந்த பொருட்களின் கையிருப்பு நிலையைக் காட்டுகிறது.

ம்.. சுபித்திரதலரகுவரனுக்கே தடுமாற்றம் வரும் வகையில் குறுக்காலைபோறநல்லவர் குடுக்கிறார் வேம்பு.. :P :lol::lol:

அட கோமாளி சந்துல சிந்து பாடமா உம்முடைய வேலையைப்பாரும். இது எமது ஊடகங்கள் எமக்கான ஊடகங்கள். அவற்றை பற்றி நாம் எமது ஆரோக்கியமான விமர்சனங்களை வைக்கவேணும். அப்பதான் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

ஏன் இன்றைக்கு உங்கடை கருணாகுழு கடை ஒன்றும் கொழுத்தேல்லையோ. அங்க அவை கடையைக் கொழுத்த இஞ்சை உங்கட ஓட்டைக்குழு ஊடகங்கள் கருணாகுழு விடுதலைப்புலிகளின் முகாமை கொழுத்தினதாய் பீலா விடுவினம் உங்களைப் போன்ற கோமாளிகளுக்கு.

அப்படியான உங்கடை ஊடகங்களை விட எமது மேலானவை.

சொந்த சகோதர சகோதரிகள் விமான தாக்குதலில் கொல்லப்பட்டபோதும் அவர்களை விடுதலைப்புலிகளாக கதைகட்டுதவதில் தான் குறியாயிருந்தனீங்கள். கடல்கடந்த மொழியால் ஒன்றுபட்ட எமது உறவுகளே தமது வருத்தத்தையும் சிறீலங்கா மீதான தமது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். தடையிருக்கென்று தெரிந்தும் எமக்கு ஆதரவு தெரிவித்து சிறைக்கும் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் நீங்கள்? என்னதான் உங்களுக்கு படியளக்கிறவனாய் இருந்தாலும், சொந்த இனம் சாகேக்க சிறுது வருத்தமாவது தெரிவித்தீர்களா? சிறீலங்காவை விடஒருபடிமேல போய் அவங்களுக்கு வக்காலத்து வாங்குறீங்க. நீக்கள் எல்லாம் மனிதர்கள்தானா அல்லது மனித தோல் போர்த்தின ஒநா..களா?

(பேர் மட்டும் சனநாயக வாதிகள்.)

என்ன ஒரு நச்சுக் கருத்துக்கள் :P :P

என்ன கரிநாகம் கருணாக்கு தான் இப்படியான புத்திசாலி கருத்துக்கள் வரும்( 25 மில்லியோன் கிழக்கு மாகானத்தில் கொள்ளை அடிச்சதை வெளியில் சொல்ல மாட்டோம் :P )

சரி யாரோ செய்ய வேண்டிய பிரச்சாரம் யாரோ செய்யினம் நோக்கம் நிறைவேறினா சரி இல்லாட்டி போட்ட எலும்புக்கு பலன் இல்லை :P :lol::lol:

ம்.. திமிர் பற்றி சொல்லத்தான் நினைப்பு வருகின்றது.. கிழக்கில் மாவிலாறு..மூதூர் யுத்தத்தின்போது புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துபோன (பொது)மக்கள் 40.000 பேருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க முடியாமல் அரசாங்கத்திடம் கோரியயதும்.. அதே போல பளை..கிளாலி..முகமாலை பகுதிகளிலிருந்து வெளியேறியவர்களக்கு விடுதலைப்புலிகளினால் உணவு..அத்தியாவசிய பொருட்கள் உட்பட சகல வசதிகளும் செய்த கொடுக்கப்பட்டதும் பிபிஸி நேர்காணல் ஊடாக அறிந்தேன்.. இது எதை காட்டுகின்றது??????????????

http://www.tamilnet.com/art.html?ca.tid=13&artid=19300

களமுனைப் போராளிகளிற்கு மக்கள் உலர் உணவுகளை வழங்கி வருகின்றனர்.

களமுனையில் போராடும் போராளிகளிற்கு மக்கள் உலர்உணவுகளையும்,குளிர் பானங்களையும் வழங்கி வருகின்றனர்.

வன்னியில் பல பகுதிகளில் இருந்தும் ஆர்வத்துடன் மக்கள் இப்பொருட்களை களமுனைக்கு அனுப்பி வருகின்றனர். கள முனையில் ஏற்கனவே பல உதவிகளை மக்கள் ஆற்றிவருவது குறிப்பிடத்தக்காது

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. திமிர் பற்றி சொல்லத்தான் நினைப்பு வருகின்றது.. கிழக்கில் மாவிலாறு..மூதூர் யுத்தத்தின்போது புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துபோன (பொது)மக்கள் 40.000 பேருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க முடியாமல் அரசாங்கத்திடம் கோரியயதும்.. அதே போல பளை..கிளாலி..முகமாலை பகுதிகளிலிருந்து வெளியேறியவர்களக்கு விடுதலைப்புலிகளினால் உணவு..அத்தியாவசிய பொருட்கள் உட்பட சகல வசதிகளும் செய்த கொடுக்கப்பட்டதும் பிபிஸி நேர்காணல் ஊடாக அறிந்தேன்.. இது எதை காட்டுகின்றது??????????????

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19300

அண்ணே, நீங்கள் சந்தில சிந்து பாடாதையுங்கோ.

பொருள் இருக்கோ இல்லையோ கோரிக்கை விடுபடும்.

அதைவிட இடம்பெயர்ந்த மக்களின்ர தொகையைப் பாருங்கோ.

வன்னி ஏற்கனவே நிர்வாக ரீதியாக வலுப்பெற்ற பூமி. ஜெயசிக்குறு காலத்தில தனிய அரசு வழியாக வரும் பொருட்களை மட்டும் நம்பி வன்னி இருக்கேல. சாப்பாட்டுச் சாமான்கூட வேற வழியால கொண்டுவந்த சம்பவங்கள் இருக்கு. அரசு தந்த மண்ணெண்ணெய், டீசல், பெற்றோலிலமட்டும்தான் வன்னி இயங்கினதெண்டு சொல்ல முடியாது.

வன்னியை விட மற்றப் பகுதிகளுக்கு இந்த வசதி சரியாக இல்லை.

இண்டைக்கும் அரசு முழுமையாக பொருளாதாரத் தடை விதிச்சா வன்னியில சனம் தாக்குப்பிடிக்கும். ஆனா யாழ்ப்பாணத்தில ஏலாது.

இது பாரபட்சம் எண்டதுகளைத்தாண்டி கட்டுப்பாட்டுப் பிரதேசம், அதன் தரையமைப்பு, முக்கியத்துவம் என்பனவற்றில் தங்கியுள்ளது.

சரி, கிழக்கில கேட்ட உடன அரசாங்கம் சாமான் அனுப்பினதோ? இவ்வளவு நாளும் ஆராம் பாத்தவை?

பத்தாததுக்கு புனர்வாழ்வுக்கழகத்தாரின்ர களஞ்சியங்களை எரிக்கிறதுக்கும் ஊழியர்களைக் கொல்லிறதுக்கும் கடத்துறதுக்கும் வன்னியல ஆக்களில்லை, மாறாக கிழக்கில கனபேர் இருக்கினமெல்லோ?

உங்க கொஞ்சப்பேர் சொறிக்கதை கதைச்சுக்கொண்டிருக்கினம். கருணா இருந்தா இந்த நிலையை திறம்படச் சமாளிச்சிருப்பார், திருமலையில பதுமன் இருந்தா சிங்களப்படைய ஓடஓட விரட்டியிருப்பார் எண்டு. ஆராயிருந்தாலும் சண்டைபிடிக்கிறதெண்டோ, இடத்தைக் கைப்பற்றிறதெண்டோ தலைமை முடிவெடுத்தாத்தான் சாத்தியம்.

வன்னியில இருந்தும் நிவாரணத்துக்குக் கோரிக்கை விடுபடும். தாறானோ இல்லையோ கேக்க வேணும். உவையள் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன கிழிக்கிறதுக்கு குந்தியிருக்கினம்?

இன்னும் ஒரேநாடு, தாங்கள் தாம் ஆட்சியாளர்கள் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிற அரசு மக்களுக்கு கட்டாயம் நிவாரணம் குடுக்கத்தானே வேணும்?

இது எதை காட்டுகின்றது? I.V.Sasi,

ஆகா.. ஆகா.. என்னே கணக்கு.. என்னே கணக்கு..

:P :lol::lol:

இந்த துரோக நாயை வெளியேற்றமுடியாதா மோகன் அண்ணா இவன் எல்லாம் ஒரு எலும்புத்துண்டுக்கும் தன் தாயை விற்கும் வே.... மகன்

யாழ் உறவுகளே என் வார்த்தைகளுக்கு என்னை மன்னியுங்கள்

அண்ணே, நீங்கள் சந்தில சிந்து பாடாதையுங்கோ.

பொருள் இருக்கோ இல்லையோ கோரிக்கை விடுபடும்.

அதைவிட இடம்பெயர்ந்த மக்களின்ர தொகையைப் பாருங்கோ.

வன்னி ஏற்கனவே நிர்வாக ரீதியாக வலுப்பெற்ற பூமி. ஜெயசிக்குறு காலத்தில தனிய அரசு வழியாக வரும் பொருட்களை மட்டும் நம்பி வன்னி இருக்கேல. சாப்பாட்டுச் சாமான்கூட வேற வழியால கொண்டுவந்த சம்பவங்கள் இருக்கு. அரசு தந்த மண்ணெண்ணெய், டீசல், பெற்றோலிலமட்டும்தான் வன்னி இயங்கினதெண்டு சொல்ல முடியாது.

வன்னியை விட மற்றப் பகுதிகளுக்கு இந்த வசதி சரியாக இல்லை.

இண்டைக்கும் அரசு முழுமையாக பொருளாதாரத் தடை விதிச்சா வன்னியில சனம் தாக்குப்பிடிக்கும். ஆனா யாழ்ப்பாணத்தில ஏலாது.

இது பாரபட்சம் எண்டதுகளைத்தாண்டி கட்டுப்பாட்டுப் பிரதேசம், அதன் தரையமைப்பு, முக்கியத்துவம் என்பனவற்றில் தங்கியுள்ளது.

சரி, கிழக்கில கேட்ட உடன அரசாங்கம் சாமான் அனுப்பினதோ? இவ்வளவு நாளும் ஆராம் பாத்தவை?

பத்தாததுக்கு புனர்வாழ்வுக்கழகத்தாரின்ர களஞ்சியங்களை எரிக்கிறதுக்கும் ஊழியர்களைக் கொல்லிறதுக்கும் கடத்துறதுக்கும் வன்னியல ஆக்களில்லை, மாறாக கிழக்கில கனபேர் இருக்கினமெல்லோ?

உங்க கொஞ்சப்பேர் சொறிக்கதை கதைச்சுக்கொண்டிருக்கினம். கருணா இருந்தா இந்த நிலையை திறம்படச் சமாளிச்சிருப்பார், திருமலையில பதுமன் இருந்தா சிங்களப்படைய ஓடஓட விரட்டியிருப்பார் எண்டு. ஆராயிருந்தாலும் சண்டைபிடிக்கிறதெண்டோ, இடத்தைக் கைப்பற்றிறதெண்டோ தலைமை முடிவெடுத்தாத்தான் சாத்தியம்.

வன்னியில இருந்தும் நிவாரணத்துக்குக் கோரிக்கை விடுபடும். தாறானோ இல்லையோ கேக்க வேணும். உவையள் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன கிழிக்கிறதுக்கு குந்தியிருக்கினம்?

இன்னும் ஒரேநாடு, தாங்கள் தாம் ஆட்சியாளர்கள் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிற அரசு மக்களுக்கு கட்டாயம் நிவாரணம் குடுக்கத்தானே வேணும்?

இவனுடன் எல்லாம் கதைத்து உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள் :evil: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.