Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண பிரபல புற்றுநோய் வைத்திய நிபுணரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

Featured Replies

வட மாகாணத்திலன் பிரபல புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ந.ஜெயக்குமாரனிடம் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற பயங்கரவாதத் தடுப்பு காவல்துறையினர் அங்கு வைத்தியர் இன்மையால் நேரே சத்திர சிகிச்சை கூடத்திற்கு சென்று அவரது மனைவியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

இச் சம்பவம் மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

யாழ்.போதானா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்திய நிபுணராக கடமையாற்றிய வைத்தியர் ஜெயக்குமாரன் தற்போது மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

இந் நிலையில் மேற்படி வைத்தியரிடம் விசாரணை நடத்தவேண்டுமென்று கூறி நேற்று போதனா வைத்தியசாலைக்கு பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் சென்றுள்ளனர். குறித்த வைத்தியர் இங்கு இல்லை என்றும் அவரது மனைவி இங்கு பணியாற்றுகின்றார் என்றும் கூறிய வைத்தியசாலைப் பணிப்பாளர் இது தொடர்பில் வைத்தியராகிய அவரது மனைவிக்கு அறிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பொலிஸார் வந்துள்ளதாகவும் இதனால் தனது அறைக்கு வருமாறும் பணிப்பாளர் வைத்தியர் ஜெயக்குமாரனின் மனைவியை அழைத்துள்ளார்.தான் சத்திர சிகிச்சைக் கூடத்தில் நிற்பதால் உடனடியாக வரமுடியாது என்று அவர் பதிலளித்ததைத் தொடர்ந்து பணிப்பாளர் பயங்கர வாதத் தடுப்பு காவல்துறையினர் நேரே சத்திரசிகிச்சை கூடத்திற்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு சென்ற பயங்கரவாதத் தடுப்பு காவல்துறையினர் மனைவியின் தொலைபேசியினூடாக வைத்தியர் ஜெயகுமாரனுடன் உரையாற்றியுள்ளனர்.வைத்தியர் ஜெயக்குமாரன் மகரகமவில் பணியாற்றுவதால் அவரை விசாரிக்கும் பொறுப்பை கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் பிரிவிடம் கையளித்ததாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் வைத்தியர் ஜெயக்குமாரன் அம்பலப்படுத்தியதால் அவரது வீடு தாக்கப்பட்டமையும் அதனைத் தொடர்ந்து அவர் சுய விருப்பின் பேரில் மகரகம வைத்தியசாலைக்கு இடமாறிச் சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi24.com/news/33585/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புலி இல்லாவிட்டால் எப்படியெல்லாம் இருப்போம் என்று ஒரு கூட்டம் முன்பு ஒரு பட்டியலே விடும். இப்போது அவர்களை காண கிடைப்பதில்லை.

அவர்கள்தான் நாலுசனம் கூடும் சாமத்தியவீடு, கல்யாணவீடு,பிறந்தநாள் விழாக்களில் ஓசி தண்ணியை வாத்திட்டு அந்தகால கனவுபீப்பா அன்டிகளை கடைகண்னாலை சைட் அடிச்சபடி ஏரோப்பிளேன் ஓட்டுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள்தான் நாலுசனம் கூடும் சாமத்தியவீடு, கல்யாணவீடு,பிறந்தநாள் விழாக்களில் ஓசி தண்ணியை வாத்திட்டு அந்தகால கனவுபீப்பா அன்டிகளை கடைகண்னாலை சைட் அடிச்சபடி ஏரோப்பிளேன் ஓட்டுவினம்.

 

 

சரியான  வார்த்தைகள்

 

தற்பொழுதைய  அரசியல்களம்  இங்குதான் இப்படித்தான்  நடக்கிறது.

தண்ணியும்

barbaque ம் இருந்தால்தான் அரசியல் வரும்.

அதுவும் தண்ணியின்  மார்க்கைப்பொறுத்து

தீவிர அதிதீவிர  பேச்சாளர்கள்  தரம் பிரிக்கப்படுவார்கள்

இதுவும் கடந்து போகும். :(

  • கருத்துக்கள உறவுகள்

புலி இல்லாவிட்டால் எப்படியெல்லாம் இருப்போம் என்று ஒரு கூட்டம் முன்பு ஒரு பட்டியலே விடும். இப்போது அவர்களை காண கிடைப்பதில்லை.

இல்லை வி.விக் அவர்கள் இந்த தன்னிப்பாம்புகளை விட  நல்லபாம்புகள் மிக மோசமானவை அவர்கள்  சமூக ஊடகங்களில் கருத்துகளத்தில் விஷத்தை மிகுந்த திட்டமிடலுடன் இலங்கை இந்திய அரசுகளின் தமிழர்க்கு எதிராண நுன்அரசியலை  விஷக்கருத்துகளாக பல சமயங்களில் தமிழர்க்கு சார்பானவை போன்று இருந்தாலும் நீண்டகால நோக்கில் ஈழ அரசியலில் பாதகங்களை ஏற்படுத்தக்கூடியது உதாரணமாய் புலிக்கொடி பிடித்தல் சம்மந்தமான திரிகளில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் ஈழத்துக்கும் சின்டுமுடிதல் திரிகளில் தலையின் சில முடிவுகளில் முரண்பாடாண விசயங்களை சொல்லி தொடங்கும் திரிகளில் கூட்டமாகவே வந்து கருத்து தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஏன் இப்படி ஒரு தலையங்கத்தை போடுங்கோ "லண்டனில் 1000பேர் புலிக்கொடியுடன் நடைபயணம்" அவ்வளவுதான் புத்துக்குள்ள இருந்த அவ்வளவு பாம்பும் அந்த திரிக்குள் நஞ்சை கக்கியபடி வட்டமிடும். 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பெருமாள்.

கிரிகெட்டுக்குள் ஈழ கொடி ஆட்டினால் இன்னும் துடிப்பினம். ஸ்கொட்லண்ட் யார்ட்டை துப்பறிய கூப்பிடுவினம், ஒபாமா ட்றோனை அனுப்பி மலிங்காவை காப்பாற்று என்று கூக்கிரலிடுவினம்.

இதில் இந்த தண்ணிப்பாம்புகள் இவை 1975 தொடக்கம் 1992 மட்டும் அரசியல் பிச்சு உதறுங்கள் அவைக்கு அங்காலை பெரிசா வராது இதிலையும் சிலது இடையிலை ஊர் பார்க்க போறன் என்டு அங்கு போய் சும்மா இருக்கபடாமல் பழைய குணத்தை காட்ட பங்கருக்குள் போய் வந்திட்டு தொடர் நாடகங்களின் எபிசேட் தோத்திடும் அளவுக்கு விசை பலகையை உடைச்சு உடைச்சு எழுதி நெற்றில் செர்வர் கஸ்டபடும் அளவுக்கு எழுதி குவிப்பினம் .ஆனால் பிரச்சினை இரண்டாம் வகை நல்ல பாம்புகள்தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.