Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி அதிகாரம் மாகாண சபைக்கு இல்லை! மகிந்தவின் ஊதூகுலான பிரதம நீதியரசர் தீர்ப்பு

Featured Replies

Mahinda_Mohan.jpgஇலங்கையின் 13ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் எவையும் இல்லை என்றும், மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருப்பதாகவும் இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையின் உயர் நீதிமன்ற நீதியரசர் மொஹான் பீரிஸ் உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

மத்திய மாகாண சபைக்குட்பட்ட காணி ஒன்று தொடர்பான வழக்கை விசாரித்த கண்டி மேல் நீதிமன்றம், அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின்கீழ் மாகாணசபைகளுக்கு காணிகள் சம்பந்தமான எந்தவிதமான அதிகாரம் இல்லை என்று 2000 ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம், 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி காணி தொடர்பான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தீர்ப்பளித்திருந்தது.

மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கிலேயே மேற்படித் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு இலங்கை அரசுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கோமின் தயாஃ பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எவரும் எளிதாக நிராகரிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதை பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் கட்டுப்பாட்டிலுள்ள சட்டமா அதிபர் திணைக்கத்தின் உயர் பதவியை (சட்டமா அதிபர்) வகித்திருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதிக்கு சாதகமான தீர்ப்புக்களை வழங்க மறுத்த முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டரநாயக்கவை பலவந்தமாக நீக்கிவிட்டு நீதியரசராக மொஹான் பீரிஸ் ஜனாதிபதி நியமித்திருந்தார்.

சட்டமா அதிபராக பதவி வகித்த காலத்தில், ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்டிருந்த மொஹான் பீரிஸ் சர்வதேசத்திற்கு பல பொய்யான தகவல்களை வழங்கியிருந்தார் என்பதும் நினைவூட்டத்தக்கது. கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்ஹெகலியகொட குறித்தே ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் பொய்யான தகவல்களை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள நிலையில், காணி அதிகாரம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு சார்பாக மொஹான் பீரிஸ் தீர்ப்பு வழங்கியுள்ளமையும் இங்கு கவனத்திற்கொள்ளவேண்டிய விடயமாகும்.

http://tamilworldtoday.com/archives/35098

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் நீதித்துறை தான் சிங்களப் பேரினவாதத்தின் ஊற்றே. அதனிடம் இருந்து இப்படியான விடயங்களில்.. எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்..! :icon_idea:


மேலும்.. இந்தத் தீர்ப்புகள் எல்லாம் ராஜீவும் ஜே ஆரும் எப்படி எல்லாம் பொய் சொல்லி தமிழ் மக்களை ஏமாற்ற நினைத்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகின்றன.

 

இன்றும்.. இந்தியாவில் காங்கிரஸ்காரர்கள் கூவுகிறார்கள்.. ராஜீவ் தமிழ் மக்களின் விடிவுக்காக பாடபட்டவராம். இதுதான் அவர் பட்ட பாட்டின் விளைவுகள்.

 

பிரிக்க முடியாத வடக்குக் கிழக்கு இணைப்பு என்றார்கள். அது பிரிந்து போய் இவ்வளவு வருடங்கள் ஆகியும் அதற்கு முடிவில்லை. மாகாண சபைகளூடு அதிகாரப் பகிர்வு என்றார்கள்.. அப்படி எதுவும் நடந்ததாகவும் இல்லை. இப்ப காணி அதிகாரமும் இல்லை.

 

அப்ப எதற்கு மாகாண சபை. அதற்கு எதுக்கு மக்கள் வரிப்பணத்தில் தேர்தல்..???! முதலமைச்சரை விட மத்திய அரசின் எடுபிடியான ஆளுனருக்கு அதிகாரம் கூட. அவருக்கு மாளிகை கட்டவா.. மாகாண சபை..??!

 

நிறைவேற்று ஜனாதிபதியை ஒழிக்கிறன் என்று வந்த சந்திரிக்கா.. அதனை பலப்படுத்தினார். மகிந்த அந்தப் பதவிக் காலத்தை சாவு வரை நீட்டித்திருக்கிறார்.

 

சிங்களவர்கள்.. வெற்றி மோகத்தில்.. தலைகால் புரியாமல் இருக்க.. தமிழர்கள் தான்.. எல்லாத்தையும் இழந்து வருகிறார்கள்.

 

இதுக்குள்ள.. மாகாண சபைகளின் ஊடு.. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுன்னும் சில பேர்... எங்க போய் முடியுதுன்னு பார்ப்பம்..??! :icon_idea::o

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.