Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குத் தேர்தல் - சில நிதர்சனங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்குத் தேர்தல் - சில நிதர்சனங்கள் 
 
சி வி விக்னேஸ்வரன் முதலமைச்சராகவும் மேலும் 29 பேரை உறுப்பினராகக் கொண்ட மாகாணசபை அமைய வகைப் படுத்திய தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
 
பல அபிப்பிராயங்கள். பல அவதானிப்புகள். பல எதிர்பார்ப்புக்கள்.
 
ஆயினும் சில நிதர்சனங்கள் உள்ளன.
 
வரதராஜப் பெருமாள் முதல்வராக அமைந்த முதல் தேர்தல். இந்திய தில்லு முல்லுகளுடன் நடந்ததாலும், இலங்கை அரசும், புலிகளும் எதிர்த்ததால், எவ்வித எதிர்பார்ப்பும் இருக்க வில்லை.
 
புலிகள் இல்லா நிலையில் நடந்த இந்த தேர்தல், சர்வதேச நாடுகளுக்கு சில விடயங்களை தெளிவாக்கி உள்ளது. 
 
'மனிதாபிமானப் போர்', 'சமாதானத்துக்கான யுத்தம்' என சிங்களம்,  முழங்கிய போது, சரிதான் என பேராதரவு அளித்த சர்வதேச நாடுகள், சிங்கள மக்கள், மகிந்த ராஜபக்சவிற்கு தருவது போல், தமிழ் மக்களும், புலிப் பயங்கரவாதிகள் இடம் இருந்து மீன்ற நன்றியுடன், பெருமளவில்  மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிப்பார்கள் என எதிர் பார்த்திருக்கக் கூடும்.
 
ஆயினும், இந்த தேர்தல் முடிவு, சர்வதேச நாடுகள், தங்களை, இனவாத சிங்கள அரசு முட்டாள் ஆக்கி, புலிகள் மீது கடும் வெறுப்பில் இருந்த இந்திய நிலைப்பாடினையும் பயன்படுத்தி,  தனது விடயத்தினை கட்சிதமாக முடித்து விட்டது என புரிய வைத்து உள்ளது.
 
இந்த தீர்ப்பின் தாற்பரியம் ஆழமானது.
 
இதனால் தான் சிங்கள இனவாதிகள், பிரபாகரனிலும் பார்க்க, விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என்கின்றனர். 
 
ஏனெனில், உலகநாடுகள், சிங்களத்துக்கு 'கொடு அல்லது இழ' என்ற நிலைப் பாடுக்கு வரவேண்டிய நிலைமையை இது உருவாக்கப்  போகின்றது. 
 
சீனாவின் பிரசன்னம், இந்தியாவினை, 1987 ம் ஆண்டு போல், இலகுவாக ராணுவத்தினை அனுப்பி வைக்கும் நிலையில், வைக்கவில்லை.
 
ஆகவே இந்திய, மேற்குலக வல்லரசுகள், தேர்ந்து எடுத்த பாதை தான், இந்த ஜனநாயக வழி. சரியான, பொருத்தமான நபராக விக்னேஸ்வரன் தெரிவு செய்யப் பட்ட முடிவு, இலங்கையில், கொழும்பில் எடுக்கப் பட்ட ஒன்று இல்லை  என்பது உண்மையானது போல் தெரிகின்றது.
 
அவர்களும், சொல்லி வைத்து போல், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று சொல்கின்றனர். இதைக் கேட்டு, புலத்திலும், தமிழகத்திலும் சிலர் கோபமுறுகின்றனர்.
 
உண்மையில், 60 வருட சிங்களவர் பற்றிய வரலாறு புரிந்தவர்கள் எவராவது, சிங்களவர்கள் எமக்கு, சந்தோசமாக, உரிமைகளை தருவார்கள் என நம்பவே மாட்டார்கள். 
 
உண்மையில், சிங்களவர்கள் மீதான 'நம்பிக்கையில்' தான், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எதிர் பார்க்கிறோம் என சொல்கின்றார்கள் போல படுகின்றது. இறுதியில், சரி நீங்களே பார்த்தீர்கள் தானே, இப்ப என்ன சொல்கிறீர்கள் என சர்வதேசத்தினை நோக்கி கேட்கும் நிலை வரும் போது, எமக்கான விடிவும் வரும்.
 
மறுபடியும்: இதனால் தான் சிங்கள இனவாதிகள், பிரபாகரனிலும் பார்க்க, விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என்கின்றனர். படிக்காத பிரபாகரன் ஆயுதப் போர் புரிந்தார், படித்த விக்னேஸ்வரன், ராஜ தந்திரப் போர் செய்யப் போகின்றார். இது ஆபத்து என அலறுகின்றனர்.
 
மறுபுறத்தே இந்தியாவில் நரேந்திர மோடி, பிரதமராகவும், அவரது நெருங்கிய அரசியல் நண்பர் ஜெயலலிதா பெரும் எண்ணிக்கையில் பாராளுமன்ற தொகுதிகளை வென்றால், நிலைமை தமிழருக்கு சாதகமாகலாம்.
 
தை பிறந்தால், தமிழர் வாழ்வின் இருளுக்குப் பின்னே, சிறு வெளிச்சம் வரும் என நம்புவோம். 

Edited by Nathamuni

இந்திய ஆமியை அனுமதிக்க வேண்டும் என்று மேற்குநாடுகளும் கூறப்போகின்றனவா தெரியாது. 

 

இதுதான் நடக்கும் என்று யாரும் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் இரண்டு கூட்டம் எதிர்வுகளை அள்ளி வீசுகிறது. ஒன்று சம்பிக்க, விமல், கெகெலிய - அரசின் வழமையான கோவில் மேளங்கள். மற்றயது சம்பந்தரில், விக்கினேஸ்வரனில், சுமந்திரனில் காய்ச்சல் உள்ளவர்கள். இரண்டு கூட்டமும் என்ன சொல்கிறார்கள் என்பதை எவரும் கணக்கில் எடுக்க முடியாது. ஆனால் அதிகாரம் இதுவரையில் இல்லாமல் எட்டு மாகாணங்களில் செயல்ப்படும் இந்த சபைக்கு இந்தியா அதிகாரம் பெற்றுக்கொடுக்குமா? அப்படியாயின் போர் முடிந்து 5 வருடங்கள் வரையும் இந்தியா ஏன் இந்த மாகாணங்ககுக்கு அந்த அதிகாரத்தை வழங்கும் படி கேட்கவில்லை. சரத் என் சில்வா வடக்கு-கிழக்கு மாகாணங்களை பிரித்த போது ஏன் இந்தியா மௌனம் காத்தது. எதற்கு கிழக்கில் தனியாக தேர்தல் நடக்க அனுமதித்தது?

 

விக்கினேஸ்வரனால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் மாகாணத்திற்கான அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதில் இந்தியா எவ்வளவுக்கு தோற்கிறது அவ்வளவுக்கு ஐ.நா மனித உரிமைகள் சபை தலையிடும். அது இந்தியாவுக்கு தெரியும். இனியும் இந்தியா இதில் ஒழிவு மறைவாக நடந்து கொள்ள முடியுமா?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

வடக்குத் தேர்தல் - சில நிதர்சனங்கள் 
 
 
மறுபடியும்: இதனால் தான் சிங்கள இனவாதிகள், பிரபாகரனிலும் பார்க்க, விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என்கின்றனர். படிக்காத பிரபாகரன் ஆயுதப் போர் புரிந்தார், படித்த விக்னேஸ்வரன், ராஜ தந்திரப் போர் செய்யப் போகின்றார். இது ஆபத்து என அலறுகின்றனர்.
 
 
 
இந்தப்பதிவு நம்பிக்கைக்கு ஒரு படிக்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை. இதில் சிங்களர் தங்களுடைய படிப்புப்பற்றி அறிந்து வைத்திருக்கும் அளவுகோலின் அளவும் வெளிப்படுகிறது. பிரபாகரனுக்குக் கிடைத்திருந்த ஆயுதபலம் இன்று ஒட்டுமொத்த சிங்களத்துக்குமே கருமாதி நடாத்தி முடித்திருக்கும். ஏன் அவர் அதனைச் செய்யவில்லை?. இதனை உணரவோ, ஊகிக்கவோ அவர்களால் முடிகிறதா?. முடிந்திருந்தால் அவர்களுடைய படிப்பின் அளவுகோல், கோணலின்றி நிமிர்ந்து நின்றிருக்கும். இன்று சிறீலங்காவின் கோமணத்தையும் உலகம் உருவும் நிலை வந்திருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.