Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனிற்கு பயந்த தெற்கு ஆட்சியாளர்கள் அவரது வதிவிடங்களிற்கும் அஞ்சும் பரிதாபம் தொடர்கின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Prabakaran_CI.JPG

 

பிரபாகரனிற்கு பயந்த தெற்கு ஆட்சியாளர்கள் இப்போதும் அவரது வதிவிடங்களிற்கும் அஞ்சும் பரிதாபம் தொடர்கின்றது. முன்னதாக வல்வெட்டித்துறையிலுள்ள அவரது பிறந்த வீடு குடாநாட்டிற்கு செல்பவர்களது சுற்றுலா மையங்களுள் ஒன்றாகியிருந்த நிலையில் அது இரவோடிரவாக இடித்து தள்ளப்பட்டது. கனரக வாகனங்கள் சகிதம் வீட்டின் இடிபாடுகளை கூட படையினர் தடையமில்லாத வகையில் அகற்றியிருந்தனர். ஏற்கனவே விமானக்குண்டு வீச்சிலும் பின்னர் படையினராலும் சேதமாக்கப்பட்டிருந்த வீடே பின்னர் சூறையாடப்பட்டு தடையமேயின்றி இடித்தழிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் முல்லைத்தீவின் புதிக்குடியிருப்பு பகுதியில் பிரபாகரன் இறுதியாக வசித்து வந்த வதிவிடத்தை இன்று இலங்கைப்படையினர் குண்டுவைத்து தகர்த்துள்ளனர். முன்னதாக சுற்றாடலில் குடியமர்ந்திருந்த மக்களை வெளியேற்றிய படையினர் பின்னர் மூன்றடுக்கு பதுங்கு குழியுடன் கூடிய வதிவிடத்தை குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இறுதி யுத்தத்தின் பின்னர் சுற்றுலாப்பயணிகளது முக்கிய பார்வையிடமாக இது இருந்து வந்திருந்தது. எனினும் அதனை பார்வையிடுவதற்கும் புகைப்படமெடுத்து பேணி பாதுகாக்கவும் பலரும் ஆர்வம் கொண்டிருந்தனர்.ஒரு கட்டத்தில் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாத படையினர் அண்மைக்காலமாக அதனை பார்வையிட தடை விதித்து இழுத்து மூடியுமிருந்தனர். இவ்வதிவிடமே இன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக படை அதிகாரிகள் சிலர் குறித்த வதிவிடத்தை குண்டு வைத்து தகர்க்கவுள்ளதாக அப்பகுதி மக்களிடையே தெரிவித்துள்ளனர். தகவல் வெளியானதையடுத்து மக்களிடையே பெரும் பரபரப்பு எழுந்திருந்தது.அந்நிலையில் பெரும் சத்ததுடன் இன்றிரவு குண்டு வெடிக்க வைக்கப்பட்டு அது அழிக்கப்பட்டுள்ளது.எனினும் குறித்த பகுதிக்கு இதுவரை பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97290/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வாழ்ந்த வீட்டினை அழிக்கலாம். அவர் மீது பற்றுள்ள ஈழத்தவர்கள், தமிழகத்தமிழர்கள், மலேசியா, மொரிசியஸ் தமிழர்கள், உலகத்தமிழர்களின் இதயங்களில் இருந்து அவரை அழிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கத்துக்கு 'ஊடகமாக' அமையக்கூடிய சகலதும் படிப்படியாக அழிக்கப்படுகின்றன!

 

கண்டகாரில், பழம்பெரும் புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டதால், புத்த மதம் அழிந்துவிடும் என்று எதிர்பார்ப்பது போன்றதே, இந்தச்செயலாகும்! :o

 

வெளிநாடுகளுக்குக் காட்டப்படும், 'நல்லிணக்க' சமிக்ஞை' ஆகவும் இது நோக்கப்படலாம்!

 

வீரபாண்டிய கட்டப்பொம்மனின், சகல நினைவுச்சின்னங்களையும் அழித்து முடித்தது, அப்போதைய ஆங்கிலேய அரசு!

 

இன்றும் அவனது நினைவு, தமிழக மக்களின் நினைவுகளிருந்து அழிந்து விடவில்லை! அவனது சிலை, அவன் தூக்கிலிடப்பட்ட இடத்தில், நிமிர்ந்து நிற்கிறது!

 

இத்தகைய செயல்களால், வரப்போகும் இழப்புகள், எம்மை விடச் சிங்களத்துக்கே, அதிகமாக இருக்கும்!

 

P1060064.JPG

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.