Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும்” ---எழுத்தாளர் சுஜாதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும்” ---எழுத்தாளர் சுஜாதா!!!

 
“இன்னும் முப்பத்தேழு ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு சுதந்திரப் பிரதேசம் ஆகும்” என்று 1993 இல் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. அவர் தீர்க்கதரிசியல்ல; ஆனாலும் சிறந்த சிந்தனையாளர்; மகா புத்திசாலியும்கூட!

கட்டுரையின் தலைப்பு:              ‘வருங்காலத் தொழிலாளர்கள்’

கட்டுரை இடம்பெற்ற நூல்:      ‘கடவுள்’

முதல் பதிப்பு:                                டிசம்பர், 2006. உயிர்மை பதிப்பகம்.

மூன்றாம் பதிப்பு:                         ஆகஸ்டு, 2012.

கட்டுரையை ஐந்தில் ஒரு பங்காகச் சுருக்கியிருக்கிறேன்.

மகிழ்ச்சியுடன் படியுங்கள். அல்லது, படித்து மகிழுங்கள்.

ன்றைய தினம் லட்சக்கணக்கானவர்கள் டைப் அடித்தும், கயிறு சுற்றியும், மூடி போட்டும், லேபிள் ஒட்டியும் அற்பத்தனமான வேலைகளில் சிறைப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள், டெக்னாலஜி மூலம்.

இப்போது பல வேலைகள் புதிதாகத் தோன்றிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

ஆஸ்பத்திரிகளில் ஸிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் எடுப்பது; ஃபேக்ஸ் எந்திரம், டெலிபிரிண்டர் ரிப்பேர் செய்வது. கிராமங்களில், சூரிய ஒளி பானல்கள் அமைப்பது; டி.வி க்கு இணைப்புத் தருவது; வீடு வீடாகப் போய் டெலிஃபோனுக்கு செண்ட் அடிப்பது என்று நிறையப் புதுப் புது வேலைகள்.

எல்லாமே சுவாரஸ்யமானவை.

இனி, சுவாரஸ்யமற்ற வேலைகளைக் கணிப்பொறிகள் மட்டுமே செய்யும்.

புதிய வேலைகளுக்குப் புதிய புதிய திறமை கொண்ட மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.

இம்மாதிரி தொழில் தெரிந்தவர்களுக்கு மதிப்பு அதிகம்; வருமானமும் அதிகம். ஒரு நாள் டெக்னீஷியன் வரவில்லையென்றால், சில டாக்டர்கள் ஆயிரக் கணக்கில் வருமானம் இழப்பார்கள்.

இனி வருங்காலத்தில், தவிர்க்க இயலாத இந்த டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியால், சில அடிப்படைகள் கலைக்கப்பட்டுவிடும்.

அறுபது, எழுபது வயது முதியவர், டெலிஃபோன் மூலம் ஒரு சிக்கலான சாதனத்தைப் பழுது பார்த்துத் திருத்த முடியும்; தூரத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவார், தன் ஞானத்தை...அனுபவத்தைப் பயன்படுத்தி.

ஒரு தாய் தொட்டிலை ஆட்டிக்கொண்டே அவ்வப்போது ஒரு கணிப்பொறித் திரையில் சில தனிப்பட்ட செய்திகளை விரும்பினவர்களுக்குத் தர முடியும்.

பன்னிரண்டு வயதுச் சிறுமி தன் பன்னிரண்டு வயதுத் திறமைகளை மட்டும் பயன்படுத்தி மாதம் ஐயாயிரம் சம்பாதிக்க முடியும்.

மற்றபடி, வீடு பெருக்குதல், சாணி தெளித்தல், அலம்புதல், கூட்டுதல், இணைத்தல் போன்ற ‘போர்’ அடிக்கும் வேலைகளை இயந்திரங்கள் செய்யும்.

வேலை என்பது விரும்பினபோது எல்லோருக்கும் கிடைக்கும்

எந்தத் திறமையாக இருந்தாலும் அதற்கேற்ப வேலை கிடைக்கும்

வேலை எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்

இந்தியாவில் இந்த நிலை எப்போது வரும் என்று கேட்பின் இந்த நாடு முதலில் சில சௌகரியமான அம்சங்களாகப் பிரிய வேண்டும்.

கர்னாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் யாவும் ஜப்பானையும் விட அதிகப் பரப்பளவும் ஜனத்தொகையும் கொண்டவை.

இவை அனைத்தும் தனிப்பட்ட சுதந்திரப் பிரதேசங்களாக நிச்சயம் பிரிந்துவிடும். இந்தப் பிரிவைப் பற்றி நாம் பயப்படத் தேவையில்லை. இப்போது, முன்னாள் சோவியத் யூனியன் போல, ஐரோப்பியக் கண்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இதற்கு முகமன் கூறுகின்றன.

ஒவ்வொரு மாநிலமும் பிரிந்த பின் அவை கலாச்சாரத்திலும் இனத்திலும் ஒன்றுபட்டு செங்குந்தர், நாடார், ஐயங்கார், கானாடுகாத்தான் செட்டியார் போன்ற பிரிவினைகள் இல்லாமல், ‘ஜப்பானியன்’ என்பது போல, ‘தமிழன்’ என்ற ஒருமை கிடைப்பது இந்த மாறுதல்களுக்கு முதன் முதல் தேவை.

என் கணிப்பில் இது நிகழ இன்னும் முப்பத்தேழு வருஷங்கள் ஆகும்.

              *                                *                               *

          சுஜாதாவின் [மறைவு: ஃபிப்ரவரி 27, 2008] இந்தக் கணிப்பு வெளியாகி [கட்டுரை 1993 எழுதப்பட்டது] 19 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

இன்னும் 18 ஆண்டுகளில் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டும். இது சாத்தியமா?

“சாத்தியமே” என்று நான் சொல்ல மாட்டேன். சொன்னால்.....

அடுத்த என் பதிவு வெளிவருவதற்கான சாத்தியமே இல்லாமல் போய்விடும்!!!

நீங்கள் சொல்லலாம்..........

 உங்கள் மனதுக்குள்! எத்தனை முறை வேண்டுமானாலும்!!

******************************************************

 

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான, தொழில் நுட்ப, அறிவியல் வளர்ச்சி மூலம் தனிநாடு அடையலாம் என்பதை 1976இல் தெரிந்திருந்தால் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்காமல் விட்டிருப்பார்கள். சுஜாதாவின் கணக்குப்படி 37 வருடங்கள் தாண்டிய 2013இல் தமிழீழம் கிடைத்திருக்கும். அறிவியல் நகர் பெங்களூருக்குப் போட்டியாக இருந்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் யாரும் தனிநாடு கோரியதாக தெரியவில்லை. அறிஞர் அண்ணாவே  தனிநாடு வேண்டாம் என கைவிட்டார்.தேவை இல்லையோ தெரியாது. கோச்சடையான் எப்போ வரும் என எதிர் பார்க்கும் சாமானிய மக்களுக்கு தனிநாடு பற்றி சிந்திக்க ஒரு வேளை நேரம் இல்லாமல் இருக்கலாம் அல்லது சுதந்திரம் என்பது அம்புட்டு தான் என எண்ணினார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அபரிமிதமான உலக அல்லது உள்நாட்டு நிகழ்வு ஏதாவது ஏற்பட்டால் தனிநாட்டுக்கோரிக்கை மீண்டும் எழலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான, தொழில் நுட்ப, அறிவியல் வளர்ச்சி மூலம் தனிநாடு அடையலாம் என்பதை 1976இல் தெரிந்திருந்தால் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்காமல் விட்டிருப்பார்கள். சுஜாதாவின் கணக்குப்படி 37 வருடங்கள் தாண்டிய 2013இல் தமிழீழம் கிடைத்திருக்கும். அறிவியல் நகர் பெங்களூருக்குப் போட்டியாக இருந்திருக்கும்!

தெள்ளத்தெளிந்த நீங்களே இப்படியா? சுஜாதா சொல்வது முன்னாள் சோவியத் யூனியன் போல உடைவு எமது கதை வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

தெள்ளத்தெளிந்த நீங்களே இப்படியா? சுஜாதா சொல்வது முன்னாள் சோவியத் யூனியன் போல உடைவு எமது கதை வேறு.

தெளிவாக இருந்தால் தேடல்கள் இருக்காது அல்லவா! ஆகவே தெள்ளத் தெளிந்தது என்பது எல்லாம் அதிகம்!

ரஸ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள உள்ள தேசிய இனங்கள் எல்லாம் கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் பிரிந்தன. ஆயினும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நலன்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து வருகின்றன.

இந்தியா ஏற்கனவே ஜனநாயக நாடாக இருப்பதாலும், ஒவ்வொரு மாநிலமும் பொருளாதாரத்தில் ஓரளவு சுதந்திரமாகச் செயற்படுவதாலும் பிரிவினைக்குத் தேவை வராது. அப்படி ஓர் நிலை வந்தாலும் அதிகாரம் கூடிய சமஷ்டிகளாக மாறுமே தவிர பிரியமாட்டா. முன்னர் பிரிவினைப் போராட்டம் நடந்த வடகிழக்கு மாநிலங்கள், தெலுங்கானா போன்றன எல்லாம் இப்போது பிரிவினைப் போராட்டங்களைக் கைவிட்டுவிட்டனவே. காஷ்மீர் ஒன்றுதான் இந்தியாவிற்குத் தலையிடியாக இருக்கும். ஆனாலும் இந்தியா காஷ்மீரை தனிநாடாக வர அனுமதிக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபரிமிதமான உலக அல்லது உள்நாட்டு நிகழ்வு ஏதாவது ஏற்பட்டால் தனிநாட்டுக்கோரிக்கை மீண்டும் எழலாம்..

1960 களில் ரஸ்யா உடைந்து போகும் என அமெரிக்காவே கனவு கண்டிருக்காது.இதை பார்த்திட்டு உடனே நம்ம பரப்புரை கூட்டம்(indian south asian political action propaganda) எதாவது கெக்கே பிக்கே என்று கத்துங்கள்.அதுசரி தமிழ் நாடு மத்தியஅரசுடன் இருப்பது யாருக்கு கூடுதல் லாபம்? 

Edited by பெருமாள்

ருஷ்சியா உடைந்து போகவில்லை....

சோவியத் யூனியன் தான் உடைந்தது... சோவியத் உருவானது தற்போது பிரிந்து போன நாடுகள் communist களால் ஒன்றாக சேர்க்கப் பட்டதால்...

ருஷ்சியாவுக்கும் முஸ்லிம் நாடுகள் பிரிந்து போனது நல்லதாக இருக்கலாம்...


சுஜாதாவை அவரது பொஞ்சாதி பிள்ளைகளே மதிக்கவில்லை :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சுஜாதாவை அவரது பொஞ்சாதி பிள்ளைகளே மதிக்கவில்லை :)

இது ஒருவகை மனபிறழ்வு நோய் கருத்தை கூறியவரின் கருத்துக்களை தர்க்கித்து சாதக பாதகங்களை ஆராய்வதுதான் கருத்துகளம்.சுஜாதாவின் முதுகின்பின் உள்ள ஊத்தைகளை ஆராய்வது இங்கு சுஜாதாவின் கருத்து   உண்மையாகும் என்ற பயத்தினால் எழுதபட்டது போல் உள்ளது. :D

இது ஒருவகை மனபிறழ்வு நோய் கருத்தை கூறியவரின் கருத்துக்களை தர்க்கித்து சாதக பாதகங்களை ஆராய்வதுதான் கருத்துகளம்.சுஜாதாவின் முதுகின்பின் உள்ள ஊத்தைகளை ஆராய்வது இங்கு சுஜாதாவின் கருத்து   உண்மையாகும் என்ற பயத்தினால் எழுதபட்டது போல் உள்ளது. :D

 

இதை நீங்கள் சொல்வது தான் படு வேடிக்கை :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை நீங்கள் சொல்வது தான் படு வேடிக்கை :lol:

 

அப்படியா நன்றி வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.