Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணப் பொருளாதாரச் சவால்கள்

Featured Replies

வடமாகாணப் பொருளாதாரச் சவால்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 அக்டோபர், 2013 - 15:31 ஜிஎம்டி

120302112504_amirthalingam_colombo_unive

விரிவுரையாளர் அமிர்தலிங்கம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பெருமளவில் கொண்ட வடக்கு மாகாண நிர்வாகம், அங்கு தேவையான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதித் தேட்டங்களுக்கு சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கூறியுள்ளார்.

வரிகளை விதிக்கவோ, வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை நேரடியாகப் பெறவோ அதிகாரங்கள் இலங்கையின் மாகாண சபைகளுக்கு இல்லாத நிலையில், முத்திரைகளை வரிகளை மாத்திரமே அவை வசூலிக்க முடியும் என்றும், ஆனாலும் வடக்குக்கு மாகாணத்துக்கு இறைவரித்திணைக்களம் கிடையாததால், அதற்கும் தாமதமாகலாம் என்றும் அமிர்தலிங்கம் கூறுகிறார்.

ஆகவே மத்திய அரசுடன் இணக்கமாக போய் நிதியைப் பெற வேண்டிய நிலையே வடக்கு மாகாணத்துக்கு இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131005_northeco.shtml

 

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/10/amirthalingam_131005_northeco_au_bb.mp3

Edited by தயா

இந்தத் தேர்தலில் அபிவிருத்தியில் ஈடுபட்டிருந்த அரசு தோற்கடிக்கப்பட்டு உரிமைகளை முன்னெடுத்த கூட்டமைப்பு வெற்றி பெற்றது. இதில் நிதி பிரச்சனையை சமாளிப்பதற்கான முறைகள் சூசகமாகவும், வெளிப்படையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

வெளையர்கள் நாட்டைக்கையளித்த போது 2ம் நிலையில் இருந்த யாழ்ப்பாணத்தை, மற்றய நகரங்களுக்கு இணையாக இங்கே ஒரு வைத்தியசாலை கட்டப்பட்டமை பெருமைக்குரிய வெற்றிகரமான நிகழ்வாக மகிந்தாவால் சொல்லப்படும் அளவுக்கு தமிழ் மக்களிடமிருந்து நிதியை மட்டும் சேகரித்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களை எவ்வளவு விரைவாக பின்னால் தள்ளினார்கள் என்றதை சொல்கிறது.

 

எனவே கூட்டமைப்பு "வரி விதிக்கும், வெளி நாடுகளின் உதவி பெறும்" சலுகைகளை பெறுவதைத்தான் முதல் கடமையக எடுக்க வேண்டும். சிங்கள் அரசு போட்டுக் கொடுக்கும் திட்டங்களை கூட்டமைப்பு செய்வதற்கு சமாதானம் பேசக்கூடாது. தேவானாந்த்தா அதை செய்ததால்த்தான் இன்று அவர் அங்கயன் கீழ் செயல் பட வேண்டிய நிலைக்கு வந்தார். எனவே கூட்டமைப்பும் இந்த பாதையில் போய் அங்கஜன் சொல்வதை கேட்டு செய்யும் நிலைக்கு தன்னைத் தாழ்த்திவிடக்கூடாது.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சரியான கூற்று மல்லை. வரிவிதிப்பு உரிமை என்பது அரைச்சுதந்திரத்துக்கு சமன். இனவாதிகளுடன் பிடுங்குப்பட்டு பறிக்க வேண்டிய முதல் விடயமாக இதுதான் இருக்கப் போகிறது. குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் தனியார் முதலீடுகளை நேரடியாக மாகாண சபை மூலம் வடக்கில் முதலிடும் படியான ஒரு பொறிமுறை தேவை. புதிய அரசு இதுக்காக கடுமையாக அரசுடன் பிடுங்குப்பட வேண்டி வரும்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சரியான கூற்று மல்லை. வரிவிதிப்பு உரிமை என்பது அரைச்சுதந்திரத்துக்கு சமன். இனவாதிகளுடன் பிடுங்குப்பட்டு பறிக்க வேண்டிய முதல் விடயமாக இதுதான் இருக்கப் போகிறது. குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் தனியார் முதலீடுகளை நேரடியாக மாகாண சபை மூலம் வடக்கில் முதலிடும் படியான ஒரு பொறிமுறை தேவை. புதிய அரசு இதுக்காக கடுமையாக அரசுடன் பிடுங்குப்பட வேண்டி வரும்

 

அப்படி ஒரு முறை  வர  சிங்களவன் ஒன்றும் மோட்டுக்கூட்டம் அல்ல........

நாம்  தான் அப்படிச்சொல்லி  திருத்திப்படுகின்றோம்... :(

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை, லேசில் ஒத்துவரப்போவதில்லை. ஆனால் முயற்சிக்க வேண்டும். எல்லா வித அழுத்தங்களையும் கொடுத்து. இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்புகள் நல்ல அழுத்தத்தை கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை, லேசில் ஒத்துவரப்போவதில்லை. ஆனால் முயற்சிக்க வேண்டும். எல்லா வித அழுத்தங்களையும் கொடுத்து. இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்புகள் நல்ல அழுத்தத்தை கொடுக்கலாம்.

 

என்னாச்சு தங்களுக்கு....

அவர்களை  எதற்கு............

வியாபாரிகளாச்சே...

 

(இந்த தொட்டுக்க  எம்மைப்பாவிப்பதைக்கண்டால் எனக்கு கடும் கோபம் வரும்... :(  :(  :( )

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் தனிநாடு கேட்டு வியாபாரம் செய்பவர்கள் ஒருவகை. களயதார்தத்தை புரிந்து தமது உதவிகளையும் சர்வதேச அழுத்தத்தத்தையும் நிலத்தில் உள்ள தலைமைகள் கேட்ட்கும் வகையில் நல்கவே பெரும்பாலான புலத்தவர்கள் விரும்புகிர்ரர்கல். இது என்கருத்து. நான் இப்படித்தான் நினைக்கிறேன்.

கொடுமை என்னவென்றால் தனிநாட்டு வியாபாரிகள் எங்கே தமக்கும் துரோகி பட்டம் கட்டி விடுவார்களோ என்று பயந்து பல நல்ல புத்தவர் ஒதுங்கியுள்ளனர். வியாபாரிகளுக்கும் இதுவே தேவை. அப்போதுதானே ஏகபோகம் செய்து நல்ல லாபம் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில்

தற்பொழுது எவரும் எந்தவித நிதிப்பங்களிப்பையும் செய்வதில்லை...... :(

  • கருத்துக்கள உறவுகள்

சேர்தகாசுக்கும் சொத்துக்கும் கணக்கு கேட்டால் என்னும் பயம்தான் விசுகு. இபோதும் காஸி சேர்த்தல் நடக்கிறது. வேற்காரணக்களை சொல்லி. அப்பாவிகள் இன்னமும் கொடுக்கிறர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு தங்களுக்கு....

அவர்களை  எதற்கு............

வியாபாரிகளாச்சே...

 

(இந்த தொட்டுக்க  எம்மைப்பாவிப்பதைக்கண்டால் எனக்கு கடும் கோபம் வரும்... :(  :(  :( )

 

அதுதானே எனக்கும் கோபம் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது ஒரு ஆதாரம் இருக்கிறதா? எந்த நாட்டில் காசு சேர்கிறார்கள்?யாரவது காவல்துறையிடம் முறையிட்டார்களா?

சிறி லங்காவின் $60 பில்லியன் வருமானத்தில் 1/6 பங்கு தமிழருடையது.

அந்த 10 பில்லியன் டொலரில் லம்போகினி, நூறு கார் பவனியில் சிறி லங்கா அரசியல்வாதிகள் சுத்தினம்.

அதை தட்டி கேட்க பயமோ?

நியு யோர்கில ராஜபக்சேவின் $200,000 தண்ணி பார்டிக்கு பீரிசா காசு கொடுத்தார்?

நீங்கள் அடிக்கும் பில்லியன் டொலர்களை மறைக்க சும்மா புலம் பெயர் தமிழரை இழுத்துவிடுவது தான் டெக்னிக்.

 

 

இதுக்குத்தான்  நாம் நல்லதொரு தீர்வைச்சொல்கின்றோம்

எம்மை

எமது பாட்டில்  விட்டுவிடுங்கோ என்று.

எந்த நாட்டிடமும்  கையேந்தாமல் எம்மை வளர்த்துக்கொள்ள  எமக்குத்தெரியும்

முடியும்.

விட்டுத்தான்  பாருங்கோவன்

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் உண்மை

பச்சை  முடிந்தவிட்டதப்பா....

(நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.  மக்களுக்கு அவை தெரியும் :icon_idea: )

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிஞ்ச கையோட கிழக்கு விடியப் போகுது என்றார்கள். அப்புறம்.. சந்திரகாந்தன் தனக்கு அதிகாரம் பத்தாது என்று எல்லாத்தையும் கைவிட்டிட்டிட்டார். எனிக் கொஞ்ச நாளைக்கு வடக்கு மாகாண சபை. உவை உதில மிணக்கட சிங்களவன்.. உலகத்தை ஏமாற்றி காவு கொண்ட தமிழர்களுக்கு ஒரு வழி பண்ணிடுவான்.

 

உந்த அரசியல் முட்டாள்களை நம்பிக்கொண்டிராமல்... இளையோர் தான் தாயகத்திலும்.. புகலிடத்திலும்.. தமிழகத்திலும்.. ஒருநோக்கு அரசியலை முன்னெடுக்கனும். உவங்கள நம்பி எனிப் எந்தப் பிரயோசனமும் இல்லை..! :icon_idea:

,சொல்லும் செயலும் சிலருக்கு எட்டாப்பொருத்தம் . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் பெரிசா வெட்டிக்கிழிச்சு மக்கள் அதில குபேரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...! அரசோடு இணைந்து நின்ற சந்திரகாந்தனே ஒன்றும் வெட்டிப்புடுங்க முடியல்ல. முஸ்லீம் காங்கிரஸே ஒன்றும் செய்ய முடியல்ல... இதில இவை...????! தாங்கள் தாங்கள் என்று கொண்டு. தங்கள் பங்குக்கு மக்களின் பெயரால்.. சுருட்டி அள்ள. :icon_idea:


இந்த இளையோரிட்ட இருக்கிற தெளிவு கூட உதுகளட்ட கிடையாது.

 

இப்படித்தான் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிஞ்ச கையோட கிழக்கு விடியப் போகுது என்றார்கள். அப்புறம்.. சந்திரகாந்தன் தனக்கு அதிகாரம் பத்தாது என்று எல்லாத்தையும் கைவிட்டிட்டிட்டார். எனிக் கொஞ்ச நாளைக்கு வடக்கு மாகாண சபை. உவை உதில மிணக்கட சிங்களவன்.. உலகத்தை ஏமாற்றி காவு கொண்ட தமிழர்களுக்கு ஒரு வழி பண்ணிடுவான்.

 

உந்த அரசியல் முட்டாள்களை நம்பிக்கொண்டிராமல்... இளையோர் தான் தாயகத்திலும்.. புகலிடத்திலும்.. தமிழகத்திலும்.. ஒருநோக்கு அரசியலை முன்னெடுக்கனும். உவங்கள நம்பி எனிப் எந்தப் பிரயோசனமும் இல்லை..! :icon_idea:

நீங்கள் எல்லோருக்கும் ஒரு அடி முந்தி நிற்கிறீர்கள்.

 

இதனால் கட்சி ஒன்று இல்லாமல்(த.ம.வி.பு), கொள்கை ஒன்று இல்லாமல் திரியும் கிழக்கு மாணகான பிள்ளையானையும், கூட்டமைப்பில் இருக்கும் வடமாகாண விக்கினேஸ்வரன், அனந்தி, ........ எல்லோரையும் ஒரே தட்டில் போட்டுக் குழம்புகிறீர்கள். கிழக்கில் பிள்ளையான் ஒன்றும் செய்ய முடியாமல் போனதும் நமக்கு தேவையானது. (அரசாங்கம் தான் மாகாண சபையை அமைத்தால் கூட தமிழ் மக்களுக்கு அரசியல் பொருளாதார நனமைகள் வந்து கிடைக்காது என்பதற்கு பிள்ளையானின் கடந்த கால அரசு சாட்சி - தனது கூட்டணியில் இருக்கும் அவனின் கையில் தன்னும் அரசு எந்த பணமும் கிழக்குமாகாண சபைக்காக செலவிட கொடுக்கவில்லை). வடக்கில் கூட்டமைப்பு ஒன்றும் செய்ய முடியாமல் போனாலும் அதுவும் நன்றாகவே இருக்க சந்தர்ப்பம். 

 

இந்த மாகாண சபையில் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது போய்விட்டால் கட்டயாம் கூட்டமைப்பு தனது பிரந்திதிகளை மனித உரிமைகள் சபைக்கு அனுப்பி இந்த தேர்தல் நாடகத்தை விளங்க வைக்க வேண்டும். அப்போது அவர்கள் LLRC எப்படி செயல்ப்படுத்த படுகிறதென்பதை புரிந்து கொள்வார்கள்.

 

கூட்டமைப்பால் வடமாகாணசபையை வைத்து உரிமைகள் பெறாலாம் என்று தாங்கள் நம்பவில்லை என்றுதானே வடக்கில் வாக்களித்த மக்கள் WSW க்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள். இதன் மொழி பெயர்ப்பு யாழில் எங்கோ பதியப்பட்டிருக்கே. அப்புறம் நாம் ஏன் இதில் புதிதாக அலட்டிகொள்வான்?

 

நமது பாதையை வடமாகாண சபையை கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கு என்ற உண்மை தடுக்காது. தாயக அரசியலில் நாம் தங்க வேண்டியத்தில்லை என்று பலதடவைகள் நா.க.அரசின் பிரதமர் கூறியிருக்கிறார். "தாயகத்தில் கூட்டமைப்பு; அது மாதிரியே வெளியே புலம்பெயர் சமூகம்." என்றுதான் அவர் சொல்லியிருக்கிறார். அரசுடன் உரிமைகள் சம்பந்தமாக ஏதாவது பேச்சுவார்த்தைகள் என்றால் அதை கூட்டமைப்புதான் நடத்தும் என்று சொல்லியிருக்கிறார். அப்போது நாம் எமது கடமைகளை தொடந்து செய்வதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது கேட்க நல்லா இருக்கு. கூட்டமைப்பின் செயற்பாடுகள்.. குறிப்பாக சம்பந்தன் கூட்டணியின் செயற்பாடுகள்.. இதனை நம்பும் படியாக இல்லை..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.