Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹரி ஆனந்தசங்கரி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு!

Featured Replies

போராட்டம் முடியும்வரை தேசியத்திற்காகக் குரல் கொடுத்து வந்த கொங்கிரஸ் இன்று ஒருசில சுயநலத்தமிழருக்காக மட்டுமே செயற்பட்டு வருகிறது.  2009 வரை தங்களின் சுயலாபத்திற்காகத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் காட்டிவிட்டு 2009 இற்குப் பின்னர் முழுக்க முழுக்கக் கனேடியத் தமிழருக்காக மட்டுமே செயற்பட்டு வருகிறது.  கப்பல் விடயத்தில்கூட மற்றவர்களை ஒதுக்கிவிட்டுப் பெயரெடுப்பதற்காகத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே அனைத்தையும் வைத்திருந்தனர்.  அதனால் சில தனிப்பட்ட நபர்கள் அடைந்த இலாபம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

 

கனேடியத் தமிழ்க் கொங்கிரசைப் பொறுத்தவரை தம்மைத் தவிரை வேறு யாரும் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருக்கக்கூடாது என்பதில் மிகவும் அவதானமாக இருக்கிறார்கள்.   சரி,அப்படியே இருப்பதாக இருந்தாலும் அதனை உரிய முறையில் தமிழ் மக்களின் ஆதரவோடு செய்திருக்கலாமே?  ஏன் தமிழ் மக்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்திப் பிரித்து வைத்திருக்கிறார்கள்? 

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக Global Tamil Forumஇனை முடுக்கிவிட்டு புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் பிரிவினையை ஏற்படுத்தினார்கள்.  பின்னர் அது சரிவரவில்லையென்றவுடன் நாடுகடந்த தமிழீழ அரசிற்குள் தங்கள் ஆதரவாளர்களை வைத்துப் பிளவுகளை ஏற்படுத்தினார்கள்.   நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிதைந்து போனதற்கு முழுப் பொறுப்பும் கனேடியத் தமிழ்க் கொங்கிரசையே சாரும்.   அதற்கு நேரடிச் சாட்சியாக என்னால் பலரைக் கொண்டுவரமுடியும்.   

 

கனேடியத் தமிழ் கொங்கிரஸ் நினைத்திருந்தால் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன்  சிறிலங்கா அரசாங்கத்தை எப்போதோ குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க முடியும்.  ஆனால்,இவர்கள் ஏன் இன்னும் அதனைச் செய்ய முயற்சிக்கவில்லை?    ஹரி ஆனந்தசங்கரி ஐ.நா. மனித உரிமைகள் சபையில்  எமது பிரச்சனைகளைப் பற்றி அறிக்கைகள் வாசிப்பதால் மட்டும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிட்டிவிடுமா?   ஐ.நா. சென்று பேசும் ஹரி ஆனந்தசங்கரி ஏன் இதனை மக்கள் மயப்படுத்தவில்லை?  இவ்விடயத்தை ஹரி ஏன் தானும் தன் குழுவும் சார்ந்ததாகவே கையாள்கிறார்?   

 

முடிந்தால் திறந்தவெளிக் கலந்துரையாடலுக்கு கனேடியத் தமிழ் கொங்கிரசை வரச் சொல்லுங்கள்.

 

கனேடியத் தமிழ் கொங்கிரசில் இருக்கும் சில முக்கிய பிரமுகர்களை நான் நன்கு அறிவேன்.  அவர்களும் என்னை நன்கு அறிவர்.  15 - 20 வருடங்களுக்கு முன்னரே எமக்கு ஒருவரையொருவர் நன்கு தெரியும். அதற்காக அவர்கள் செய்யும் அநியாயங்களுக்குத் துணைபோக வேண்டுமென்பதில்லை.   அவர்களின் நோக்கம் விளங்கியதினாலேயே நான் அவர்களிடமிருந்து விலகியிருக்கிறேன்.  எனது இலக்கு கிளியின் நரம்பிலேயே உள்ளது.  மரத்திலல்ல.  

 

  • கருத்துக்கள உறவுகள்

விவாதம்  நல்லதொரு தேவையான  பாதையூடு பயணிக்கத்தொடங்குகிறது..

தொடருங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம், தேசியம் என்றால் யார் தேசியம்??? உதா? கனேடியத் தமிழ் காங்கிரஸ் ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட இயக்கம். ஆரம்ப காலம் தொடக்கம், அது கனேடிய அரசியல்வாதிகளோடு, நெருக்கமாக உள்ள இயக்கம். அப்படி இருக்கின்றபோது சில விடயங்களை அதனால் வெளிப்படுத்த முடியாது. பலருக்குள்ள பிரச்சனை. அவர்கள் கொடி பிடிப்பதில்லை என்பது.

2009க்குப் பிறகு நாடு கடந்த அரசு - உ+த பிரச்சனை தொடங்கிய காலப்பகுதி. அதன் பிற்பாடு பங்குபிரிப்புக்கள் நடந்தன. இந்தச் சண்டையில் யார் பக்கமும் சாராமல் காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. கப்பல் விவகாரத்தில் மற்றய அமைப்புக்களோடு ஏன் தகவல்கள் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரியாது. ஆனால் அப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையை, நம்பிக்கையை அப்போது அந்த அமைப்புக்கள் தரவில்லை. தங்களோடு சேராத மற்றய அமைப்புக்களை உ+த ஒரு வித எதிரி மனப்பான்மையோடு தான் பார்த்துக் கொண்டனர். இன்று வரை அவர்கள் நாட்டுப்பிரச்சனையை விட, மற்றய அமைப்பினரைத் தான் பெரிய பிரச்சனையாகப் பார்ப்பது வேதனையான ஒன்று. கப்பல் விடயத்தில் இலாபம் அடைந்த ஒரு சிலரைப் பற்றிச் சொல்ல வேண்டாம்... ஆனால் என்ன இலாபம் என்றாவது சொல்லுங்கள்.

நாடு கடந்த அரசை காங்கிரஸ் உடைக்கச் சதி செய்தது என்பது உச்சக்கட்ட நகைச்சுவை. ஏன் எனில் அதை உடைக்கச் சதி செய்தவர்கள் யார் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. இன்று வரைக்கும் அந்த அமைப்போடு இணைந்து செயற்படுவது காங்கிரஸ் தான். நா.கா.அ க்குள் இணைந்து, பிரிந்து போனவர்கள் யார்?

என்ன.... கனேடியத் தமிழ் காங்கிரஸ் சிறிலங்கா அரசினைக் குற்றவாளிக் கூண்டி;ல நிறுத்தியிருக்க முடியுமா? அதுவும் புலம்பெயர் தமிழர் உதவியோடு... அப்படி ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். அதற்குப் பதில் கேட்டபோது ஒன்றுமே சொல்லவில்லை. அந்த இராச தந்திரத்தைப் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.வெளிப்படையாகச் சொல்லப் போனால், கனடாவிலாகட்டும், எங்காவது ஆகட்டும் எந்த ஒரு அமைப்போடும் தொடர்பில் உள்ளவர்கள் 10 ஆயிரத்துக்கும் குறைவு. அதிலும் இணைந்து செயற்படுபவர்கள் ஒரு ஆயிரம் பேர். இதை வைத்துக் கிழி.. கிழி..?? ஏதோ எழுதுகின்றோம் என்று எழுதிக் கொண்டிருக்காதீர்கள்.. நீங்கள் எந்தவொடு விடயத்தையும் செய்ய முடியும் என்று மொட்டையாக எழுதாமல், எப்படிச் செய்வது என்பதை விளக்கமாக எழுதினால் பெரு உதவியாக இருக்கும்...

ஹரி ஆனந்தசங்உரி ஐநாவில் சென்று அறிக்கை வாசிக்கின்றார் என்றீர்கள் உண்மை தான். நீங்கள் ஒரு காலத்தில் மூடிய அறைக்குள் உண்ணாவிரம், வீதிச் சந்திகளில் ஆர்ப்பாட்டம் என்று செய்திருந்ழதீர்கள். அதில் என்ன இலாபத்தைப் பெற்றீர்கள்?? ஒன்றுமே கிடையாது. அதை நீங்கள் செய்திருக்க வேண்டிய காலம் கடந்த 30 வருடங்களாக.. கடைசி நிமிடம் அன்று... அதுவும் தமிழர் அரசியலில் 20 வருடங்களாக இருப்பதாகச் சொல்லிக் கொள்கின்ற நீங்கள் செய்தது என்ன என்பதன் விளைவு 0 என்றே சொல்லலாம். அப்படியிருக்கும்போது ஹரி அறிக்கை வாசித்தார் என்றால் அதைத் தான் அங்குள்ள அனைத்து நாடுகளும் செய்கின்றன. ஆக, அறிக்கை வாசிப்பது தான் அங்கு முடியக்கூடியது. அங்கே போய்த் வாள், கோடாரி எடுத்தா சுத்த முடியும்...

தவிர, அங்கே ஹரி போய் அறிக்கை வாசிப்பதால் மக்களுக்கு ஒன்றுமே கிழிக்க முடியாது.. தீர்வு கிடைக்காது என்றீர்கள்( அதுவும் மற்றவர்கள் தீர்வு பெற்றுக் கொடுத்துக் கிழித்தது போல) ஆனால் அப்படி ஒரு தீர்வும் பெற முடியாத அந்த அறிக்கை வாசிக்கும் நிகழ்வுக்கு மற்றவர்களை ஹரி அழைப்பதில்லை என்றீர்கள்.. சொல்லுங்கள் உண்மையில் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை... ஹரி ஐநாவுக்குச் செல்வது, ஒரு கனடாவின் சட்டபூர்வ அமைப்பின் ஊடாக. அந்த அமைப்பில் வாறவன், போறவன், கொடி பிடிக்கின்றது தான் விடுதலைப் போராட்டம் என்பவன், ..... என்று எல்லாப் பயல்களையும் இழுத்துக் கெர்ணடு அறிக்கை வாசிக்கப் போக முடியாது. ஹரி போகின்றார் இருக்க்டடும். மற்றும்படி எல்லா அமைப்பினரும் பிக்னிக் போகின்றார்களே.. அங்கே வாசலில் நின்று படம் எடுத்து வேறு போடுகின்றார்களே... பிறகென்ன தேவை..

நீங்கள் எந்த அமைப்பினரோடும் சேர்ந்து இருங்கள் பிரிந்து இருங்கள். அது எங்களுக்கு அவசியமே இல்லை. அது உங்களின் பிரச்சனை.. ஆனால் சேர்ந்து இயங்கினால் மட்டும் ஏதாவது கிழித்திருக்கலாம் என்றால் அது நிச்சயமாக இல்லை என்பேன்.

------------

இதில் எழுதப்பட்ட பதில்கள், தமிழச்சிக்காக எழுதப்பட்ட மறுமொழியே தவிர, எந்த அமைப்பினரினதும் உத்தியோகபூர்வ பதில் அன்று. நான் எந்த அமைப்பினரின் பிரதிநிதியும் அல்ல.

இப்போதுதான் இந்தத் திரியைப் பார்த்தேன்.  Dr. இலகுப்பிள்ளையையும் ஹரியையும் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள்.   Dr. இலகுப்பிள்ளையின் தகுதிகளுக்கு முன்னால் இவர் வெறும் தூசு.  Dr. இலகுப்பிள்ளை தேசியத் தலைவரின் ஒப்புதலோடு தேர்தலில் நின்றவர்.  தலைவரின் கோரிக்கையையும் மறுத்துத்தான் உலகத்தமிழர் அவருக்கெதிராகச் செயற்பட்டது.   Dr. இலகுப்பிள்ளை அவர்கள் பல்லாண்டுகாலமாக தேசியத்தோடு தோளோடு தோள் கொடுத்தவர்.  தேசியத்திற்கு அவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது.  

 

ஆனால், ஹரியின் விடயம் அப்படியல்ல.  அவர் தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார்தான்.  மறுப்பதற்கில்லை.  ஆனால், தேசியம் என்று வரும்போது அவர் ஒரு சூதாட்டக்காரர்.  முதலில் கனேடியத் தமிழ்க் கொங்கிரசிற்குள் புகுந்து அதனை தேசியத்திலிருந்து திசை திருப்பினார்.  மூன்று வருடங்களுக்கு முன்னர் வர்த்தக சம்மேளனத்திற்குள் நுழைந்து அதனையும் இன்னும் பாழாக்கிவிட்டு நட்டாற்றில் விட்டுவிட்டுச் சென்றார்.  இப்போது கனேடிய அரசியலுக்குள் புகவுள்ளார்.  அங்கும் அதே கதைதான் நடக்கப் போகிறது.  அர்ஜுன் குறிப்பிட்டதுபோல் இவர் அவரது தந்தைக்குத் தப்பாமல் பிறந்த தனயன்தான்.  கனேடியத் தமிழ் கொங்கிரசைத் தேசியத்திலிருந்து விலத்தியதே இவர்தான்.  இப்படிப்பட்டவர் Canadian Tamilsஇற்கு வேண்டுமானால் ஏதாவது செய்வார்.  ஆனால், தாயகத்தில் வாடும் தமிழ்மக்களுக்கு இவரால் ஆகப் போவது ஒன்றுமில்லை.

 

நீலக்கலராக இருந்த இவரது வியாபார விளம்பரங்களை லிபரலின் சிவப்புக் கலருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாற்றினார்.  அவரது விளம்பரங்களில் தனது ரையைக்கூட சிவப்பு நிறத்தில்தான் கட்டியிருக்கிறார்.  இப்போது இவர் அநேகமாக சிவப்பு நிறங்களையே அணிந்து வருகிறார்.  ஏன் Youtube இல்கூட சிவப்பு வர்ணம் வரும்படி பார்த்துக் கொள்கிறார்.

 

இப்போதைக்கு எனக்குத் தெரிந்தவரையில் போட்டியிடவிருக்கும் எந்தத் தமிழரும் கனேடியப் பாராளுமன்றத்திற்குச் செல்வதற்குக் தகுதியானவர்கள் அல்ல.  எனக்குத் தெரிந்தவரையில் போட்டியிட விரும்புபவர்களும் கனேடியத் தமிழ் கொங்கிரஸ் மற்றும் உ.த.வின்  இழிநடவடிக்கைகளால் தேர்தலிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறார்கள்.   2019இல் தகுதியானவர் சிலர் போட்டியிடலாம்.

வணக்கம் தமிழிச்சி !

சில விடயங்களுக்கு தவறான புரிதலுடன் கருத்துப் பகிர்ந்துள்ளீர்கள் .நான் ஹரியையும் ,Dr .இலகுப்பிள்ளையையும் ஒப்பிடவில்லை .

ஹரி தன்னுடைய முயற்சியினால் அரசியலில் ஈடுபடுகின்றார் .எவருக்கும் விருப்பம் இல்லாவிட்டால் ஓத்துழைப்பு வழங்காமல் ஒதுங்கியிருக்கலாம் ,ஆனால் கெடுக்ககூடாது .தமிழர்களின் இந்த நிலையால் பலரும் உதவி செய்ய பின்னிக்கின்றனர் .

நாங்கள் கனேடிய தமிழ்க் காங்கிரசுடனும் ,நாடுகடந்த அரசை சார்ந்தவர்களுடனும் தாயக மக்கள் சார்ந்த பணிகளுக்காக ஒன்றிணைந்து வேலை செய்கின்றோம் .

ஹரி தாயக மக்களுக்கு பலவகைகளில் உதவி செய்திருக்கின்றார் ,சிலவற்றை சொல்லமுடியும் ,சிலவற்றை சொல்லமுடியாது.

ஹரி எல்லா அமைப்புக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி திசை திருப்பினாரென்றால் மற்றவர்களெல்லாம் முட்டள்களா ?

தேசியம், தேசியம் என்றால் யார் தேசியம்??? உதா? கனேடியத் தமிழ் காங்கிரஸ் ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட இயக்கம். ஆரம்ப காலம் தொடக்கம், அது கனேடிய அரசியல்வாதிகளோடு, நெருக்கமாக உள்ள இயக்கம். அப்படி இருக்கின்றபோது சில விடயங்களை அதனால் வெளிப்படுத்த முடியாது. பலருக்குள்ள பிரச்சனை. அவர்கள் கொடி பிடிப்பதில்லை என்பது.

 

 

நான் எனது பதிலில் கொடியைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லையே.  அவர்களின் நெருக்கத்தைத்தான் இந்த ஐந்து வருடங்களில் பார்த்துவிட்டோமே.  இவர்கள் நெருக்கமாக இருந்து சாதித்த சில விடயங்களையாவது இங்கு குறிப்பிடுங்கள்.   விடுதலைப் புலிகளை இங்கு தடை  செய்த போதோ அல்லது அழிவு நடந்தபோதோ அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இவர்கள் செய்த சில விடயங்களையாவது குறிப்பிட முடியுமா?  அதைவிட, ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது இவர்களுடைய நெருக்கமான எந்த அரசியல்வாதி வந்து மக்களோடு உரையாடினார்கள் அல்லது உரையாற்றினார்கள்?  ஜக் லேய்ற்றனைத் தவிர அன்று யாருமே அங்கு வரவில்லை.   சில விடயங்களைத்தான் வெளிப்படுத்த முடியாது - இந்த ஒன்றை வைத்துக் கொண்டு எத்தனை நாளைக்குத்தான் மக்களை ஏமாற்றுவார்கள்.  அந்தசில விடயங்களைத் தவிர்த்து மற்றைய விடயங்களையேனும் வெளிப்படுத்தட்டுமே.  சில விடயங்களிலேனும் மக்களையும் உள்வாங்கிச் செய்யட்டுமே?  மக்களை உள்வாங்கிச் செய்வதற்கு அவர்களிடம் எதுவுமே இல்லை.  

2009க்குப் பிறகு நாடு கடந்த அரசு - உ+த பிரச்சனை தொடங்கிய காலப்பகுதி. அதன் பிற்பாடு பங்குபிரிப்புக்கள் நடந்தன. இந்தச் சண்டையில் யார் பக்கமும் சாராமல் காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. கப்பல் விவகாரத்தில் மற்றய அமைப்புக்களோடு ஏன் தகவல்கள் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரியாது. ஆனால் அப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையை, நம்பிக்கையை அப்போது அந்த அமைப்புக்கள் தரவில்லை. தங்களோடு சேராத மற்றய அமைப்புக்களை உ+த ஒரு வித எதிரி மனப்பான்மையோடு தான் பார்த்துக் கொண்டனர். இன்று வரை அவர்கள் நாட்டுப்பிரச்சனையை விட, மற்றய அமைப்பினரைத் தான் பெரிய பிரச்சனையாகப் பார்ப்பது வேதனையான ஒன்று. கப்பல் விடயத்தில் இலாபம் அடைந்த ஒரு சிலரைப் பற்றிச் சொல்ல வேண்டாம்... ஆனால் என்ன இலாபம் என்றாவது சொல்லுங்கள்.

 

நாடு கடந்த அரசை காங்கிரஸ் உடைக்கச் சதி செய்தது என்பது உச்சக்கட்ட நகைச்சுவை. ஏன் எனில் அதை உடைக்கச் சதி செய்தவர்கள் யார் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. இன்று வரைக்கும் அந்த அமைப்போடு இணைந்து செயற்படுவது காங்கிரஸ் தான். நா.கா.அ க்குள் இணைந்து, பிரிந்து போனவர்கள் யார்?

 

 
2009 கடைசிப் பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவ முற்பட்டபோது, உருத்திரா அண்ணா கனடாவில் முக்கியமாகத் தொடர்பு கொண்டு பேசியது கனேடியத் தமிழ் கொங்கிரசிடம்.  அப்போது அவருக்கு கொங்கிரசின் முக்கிய புள்ளியினால் அளிக்கப்பட்ட பதில், "நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.  நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வோம்" என்று.   அதோடு அதே நபர் மற்றவர்களையும் கொங்கிரசோடு சேர்ந்து வேலை செய்யுமாறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு உதவி செய்யவேண்டாம் எனவும்  கூறி வந்தார்.  அதைவிட, ஹரி தனக்குத் தெரிந்தவர்களிடம் "நாடு கடந்த அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் அதன் மூலம் பிரச்சனைகள் வரும்.  அப்படி வந்தால் உருத்திரா அண்ணா ஒரு வழக்கறிஞர் என்பதால் தப்பித்துக் கொள்வார்.  மற்றவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள் " எனக் கூறி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாவதையும் அதற்கு உதவபவர்களையும் தடுக்க முயற்சித்தார்.  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கம் பெற்றபின்பும் உருத்திரா அண்ணா கொங்கிரசின் முக்கிய புள்ளிகளுடன் பல தடவைகள் தொடர்பெடுத்து பல உதவிகள் கேட்டிருந்தார்.  ஆனால், கொங்கிரஸ் அவரை எந்தக் காலத்திலும் ஒரு பொருட்டாக எடுத்ததில்லை.   இந்தக் கொங்கிரசோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எத்தனை பேச்சுவார்த்தைகள் நடத்த முற்பட்டன என்பது அந்த அமைப்புகளுக்குள் இருந்தவர்களுக்குத்தான் தெரியும்.   2012இல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குயின்ஸ் பார்க்கில் நடத்துவதற்கு இவர்களோடு நடந்த பேச்சுவார்த்தை தமிழ் ஊடகங்களில்கூடப் பெரிதாக வந்தது.  அதைக்கூட நீங்கள் மறந்து விட்டீர்கள்.  நீங்கள் சொல்வதுபோல இன்றும் கொங்கிரசாரின் ஆட்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அதனைத் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்கள்.  போன வருடத்தோடு சிலர் ஒதுங்கிவிட்டார்கள்.  ஆனால், அது மீண்டும் பலம் பெற்று விடக்கூடாது என்பதற்காக இன்னும் சிலர் அதற்குள் இருக்கிறார்கள்.  

என்ன.... கனேடியத் தமிழ் காங்கிரஸ் சிறிலங்கா அரசினைக் குற்றவாளிக் கூண்டி;ல நிறுத்தியிருக்க முடியுமா? அதுவும் புலம்பெயர் தமிழர் உதவியோடு... அப்படி ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். அதற்குப் பதில் கேட்டபோது ஒன்றுமே சொல்லவில்லை. அந்த இராச தந்திரத்தைப் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.வெளிப்படையாகச் சொல்லப் போனால், கனடாவிலாகட்டும், எங்காவது ஆகட்டும் எந்த ஒரு அமைப்போடும் தொடர்பில் உள்ளவர்கள் 10 ஆயிரத்துக்கும் குறைவு. அதிலும் இணைந்து செயற்படுபவர்கள் ஒரு ஆயிரம் பேர். இதை வைத்துக் கிழி.. கிழி..?? ஏதோ எழுதுகின்றோம் என்று எழுதிக் கொண்டிருக்காதீர்கள்.. நீங்கள் எந்தவொடு விடயத்தையும் செய்ய முடியும் என்று மொட்டையாக எழுதாமல், எப்படிச் செய்வது என்பதை விளக்கமாக எழுதினால் பெரு உதவியாக இருக்கும்...  -  உங்களுக்குத்தான் மெத்தப் படித்த வழக்கறிஞர் இருக்கிறாரே?  அவரிடம் சென்று கேளுங்கள்.  சொல்லித் தருவார்.

 

அப்படி அவர்களால் கிழிக்க முடியாவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டியதுதானே?  ஏன் அவர்கள் நந்தி மாதிரி குறுக்கே நிற்கிறார்கள்?  கொங்கிரசாரின் நீண்டகால உறுப்பினர், நாடு கடந்த தமிழீழஅரசாங்கத்தின் முக்கிய புள்ளிதானே ஐ.நா. முன்றலிலுள்ள கோப்பிக்கடையில் கோப்பி குடித்து விட்டு வந்து ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார்?   

ஹரி ஆனந்தசங்உரி ஐநாவில் சென்று அறிக்கை வாசிக்கின்றார் என்றீர்கள் உண்மை தான். நீங்கள் ஒரு காலத்தில் மூடிய அறைக்குள் உண்ணாவிரம், வீதிச் சந்திகளில் ஆர்ப்பாட்டம் என்று செய்திருந்ழதீர்கள். அதில் என்ன இலாபத்தைப் பெற்றீர்கள்?? ஒன்றுமே கிடையாது. அதை நீங்கள் செய்திருக்க வேண்டிய காலம் கடந்த 30 வருடங்களாக.. கடைசி நிமிடம் அன்று... அதுவும் தமிழர் அரசியலில் 20 வருடங்களாக இருப்பதாகச் சொல்லிக் கொள்கின்ற நீங்கள் செய்தது என்ன என்பதன் விளைவு 0 என்றே சொல்லலாம். அப்படியிருக்கும்போது ஹரி அறிக்கை வாசித்தார் என்றால் அதைத் தான் அங்குள்ள அனைத்து நாடுகளும் செய்கின்றன. ஆக, அறிக்கை வாசிப்பது தான் அங்கு முடியக்கூடியது. அங்கே போய்த் வாள், கோடாரி எடுத்தா சுத்த முடியும்...

 

இவை அனைத்தையும் முன்னின்று செயற்படுத்தியவர்களுள் நீங்களும் ஒருவர்.   அந்த நேரத்தில் நாம் சொன்னபோது நீங்கள் கேட்டீர்களா?  நான் செய்ததன் விளைவு என்ன என்பது காலம் கனிந்து வரும்போது தெரிய வரும்.  உங்களைப் போல் நான் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரவில்லை.  இளையோர் இளையோர் எனப் பீற்றித் தெருக்களில் கொடி பிடித்துக் கொண்டு திரிந்தது நீங்களேயன்றி நானில்லை.  காலம் கடந்துதான் அன்றைய உங்கள் தவறை உணர்ந்தீர்கள்.  அதேபோல் இதன் காலம் கடந்த பின்புதான் இப்போது விடும் தவறையும் உணர்வீர்கள்.   

தவிர, அங்கே ஹரி போய் அறிக்கை வாசிப்பதால் மக்களுக்கு ஒன்றுமே கிழிக்க முடியாது.. தீர்வு கிடைக்காது என்றீர்கள்( அதுவும் மற்றவர்கள் தீர்வு பெற்றுக் கொடுத்துக் கிழித்தது போல) ஆனால் அப்படி ஒரு தீர்வும் பெற முடியாத அந்த அறிக்கை வாசிக்கும் நிகழ்வுக்கு மற்றவர்களை ஹரி அழைப்பதில்லை என்றீர்கள்.. சொல்லுங்கள் உண்மையில் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை... ஹரி ஐநாவுக்குச் செல்வது, ஒரு கனடாவின் சட்டபூர்வ அமைப்பின் ஊடாக. அந்த அமைப்பில் வாறவன், போறவன், கொடி பிடிக்கின்றது தான் விடுதலைப் போராட்டம் என்பவன், ..... என்று எல்லாப் பயல்களையும் இழுத்துக் கெர்ணடு அறிக்கை வாசிக்கப் போக முடியாது. ஹரி போகின்றார் இருக்க்டடும். மற்றும்படி எல்லா அமைப்பினரும் பிக்னிக் போகின்றார்களே.. அங்கே வாசலில் நின்று படம் எடுத்து வேறு போடுகின்றார்களே... பிறகென்ன தேவை..

 

நீங்கள் எந்த அமைப்பினரோடும் சேர்ந்து இருங்கள் பிரிந்து இருங்கள். அது எங்களுக்கு அவசியமே இல்லை. அது உங்களின் பிரச்சனை.. ஆனால் சேர்ந்து இயங்கினால் மட்டும் ஏதாவது கிழித்திருக்கலாம் என்றால் அது நிச்சயமாக இல்லை என்பேன்.

 

நீங்கள் சொல்வது மிகவும் உண்மைதான்.  கொங்கிரசிற்கும் மற்ற அமைப்பினருக்கும் வித்தியாசம் இல்லை என்பதையே நீங்கள் சுட்டிக்காட்டிய எடுத்துக்காட்டுகள் காட்டி நிற்கின்றன.  நான் மேலே குறிப்பிட்டிருந்தது கொங்கிரசையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினையும்தான்.  அவர்கள் இணைந்திருக்கமாட்டார்கள் என்பதை நீங்களே ஒத்துக் கொண்டு விட்டீர்கள்.  நான் யாரையும் செய்யவேண்டாம் எனக் குறிப்பிடவில்லை.  யாராக இருந்தாலும் நேர்மையாகவும் தாயகத்தில் வாழும் மக்களுக்கு உதவுவதாகவும் அமைய வேண்டுமென்பதே எனது விருப்பம்.  கொங்கிரஸ் அதிலிருந்து தவறிவிட்டதோடு நாடு கடந்த தமிழீிழ அரசாங்கம் போன்ற அமைப்புகளையும் செயற்படவிடாமல் தடுத்தது என்பதைத்தான் குறிப்பிட்டேன். 

------------

இதில் எழுதப்பட்ட பதில்கள், தமிழச்சிக்காக எழுதப்பட்ட மறுமொழியே தவிர, எந்த அமைப்பினரினதும் உத்தியோகபூர்வ பதில் அன்று. நான் எந்த அமைப்பினரின் பிரதிநிதியும் அல்ல.

 

அன்று. நான் எந்த அமைப்பினரின் பிரதிநிதியும் அல்ல.

 

 

  

 

 

வணக்கம் தமிழிச்சி !

சில விடயங்களுக்கு தவறான புரிதலுடன் கருத்துப் பகிர்ந்துள்ளீர்கள் .நான் ஹரியையும் ,Dr .இலகுப்பிள்ளையையும் ஒப்பிடவில்லை .

ஹரி தன்னுடைய முயற்சியினால் அரசியலில் ஈடுபடுகின்றார் .எவருக்கும் விருப்பம் இல்லாவிட்டால் ஓத்துழைப்பு வழங்காமல் ஒதுங்கியிருக்கலாம் ,ஆனால் கெடுக்ககூடாது .தமிழர்களின் இந்த நிலையால் பலரும் உதவி செய்ய பின்னிக்கின்றனர் .

நாங்கள் கனேடிய தமிழ்க் காங்கிரசுடனும் ,நாடுகடந்த அரசை சார்ந்தவர்களுடனும் தாயக மக்கள் சார்ந்த பணிகளுக்காக ஒன்றிணைந்து வேலை செய்கின்றோம் .

ஹரி தாயக மக்களுக்கு பலவகைகளில் உதவி செய்திருக்கின்றார் ,சிலவற்றை சொல்லமுடியும் ,சிலவற்றை சொல்லமுடியாது.

ஹரி எல்லா அமைப்புக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி திசை திருப்பினாரென்றால் மற்றவர்களெல்லாம் முட்டள்களா ?

 

ஹரி ஆனந்தசங்கரி தனது அரசியல் லாபத்திற்காகத் தன்னைப் பிரபலப்படுத்துவதற்காகத்தான் அவர் இந்த அமைப்புகளுக்குள் புகுந்து முக்கிய பதவிகளை வகித்து வந்தார்.  நான் மேலே குறிப்பிட்டது போல அவர் சில நன்மைகளை செய்திருக்கிறார்தான்.  அதற்காக அவர் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.  அதற்கான முழுத்தகுதியும் அவருக்கு இல்லை.  தனது அரசியல் லாபத்திற்காக எமது தேசியப் பிரச்சனையைப் பயன்படுத்தத் தொடங்கினார்.  அவர் அவரைப் பிரபலப்படுத்தக்கூடிய பொறுப்புகளையோ அல்லது செயற்பாடுகளையோ தேர்ந்தெடுத்துத்தான் பொறுப்பு வகிப்பார்.  இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக பல அமைப்புகளின் ஊடக விடயங்களில் அவர் முன்னிலை வகித்து வந்திருக்கிறார்.    தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறதுதானே?   இவருடைய கடந்தகாலச் செயற்பாடுகளின் விளைவுகள் பின்னர் தெரிய வரும்.   இவர்  திரைமறைவில் செய்த அரசியல் சம்பந்தப்பட்ட  தவறுகள் இவரை வந்து தாக்கும்.  

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழச்சி... சில வார்த்தைகள் உங்களுடைய மனதைப் புண்படுத்துமாயின் முதலே வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுடைய பிரச்சனை தான் என்ன? அடிக்கடி நீங்கள் 20 வருடமாக தமிழர் சேவைக்குள் இருப்பதாகவும், இப்போது ஒன்றிலும் இல்லை என்று புலம்புவதன் நோக்கம் என்ன? உங்களை ஒரு அமைப்பிலும் மதிப்பதில்லை போலுள்ளது. அதனால் தான் இப்படிப் புலம்பல்கள்....

கனேடியன் தமிழ் காங்கிரஸ் அரசியல்மயப்பட்டது என்று சொன்னதற்காக, அவர்கள் கண் அசைத்தால் உடனே கையைக் கட்டிக் கொண்டு வந்து எம்பிமார்கள் நிற்பார்கள் என்பத்றகும் நிறைய வேறுபாடு உண்டு. ஒட்டாவாவில் நடந்த போராட்டத்தில் ஐக் லேய்றன் மட்டும் வந்தார் என்பதற்கு தமிழ் காங்கிரஸ் தான் காரணமா? அங்கு நடந்த குழப்பங்கள் என்ன என்னபதை நீங்கள் அறியமாட்டீர்கள் தானே... அதற்கு உங்களுக்கு எப்படி நேரம் இருந்திருக்கும்.. நீங்கள் வன்னியில் மக்களின் கஸ்டத்துக்காகப் போராடவா வந்தீர்கள்... யார், யார் ரூம் போட்டிருக்கின்றார்கள் என்று பார்க்கத் தானே வந்தீர்கள்... நீங்கள் உங்களின் 20 வருடத் தமிழர் போராட்டத்தில் ஒன்றுமே கிழிக்காதபோது வெறும் 15 வருடமே ஆகின்ற சிரிசி ஏதாவது செய்யும் என்று எப்படி எதிர்பார்க்கினறீர்கள். இலகுப்பிள்ளை பற்றிக் கதைக்கினறீர்கள். ஏன் அவர் அன்று போட்டியிட எதிராக அமைப்பு இருந்தபோது, அப்போது நீங்களும் எதிராக நின்றவர்களோடு நல்லுவாகத் தானே இருந்தீர்கள். ஏன் வாய்திறக்கவில்லை....

------------

மற்றது நாடுகடந்த அரசு பற்றிய உங்களின் கருத்து. அந்த அமைப்பு தொடங்கப்பட்ட காலம் முதல் தான் புலம்பெயர் தமிழருக்குள் பிரச்சனைகள் உருவாகின. அவர்களைத் தங்கள் வசப்படுத்த உலகத்தமிழர் அமைப்பு அதற்குள் தங்களின் உறுப்பினர்களை அனுப்பி, பெரும்பான்மையை உருவாக்கித் தங்களின் சார்பு இயக்கமாக்க முனைந்தது. அதனால் நிறையக் குழப்பங்கள், குத்துவெட்டுக்கள்... இவற்றினுள் மாட்டுப்படாமல் காங்கிரஸ் நின்று கொண்டது. நீங்களும் கொஞ்சக்காலம் நாடுகடந்த அரசோடு ஒட்டிக் கொண்டீர்கள் போலும். அங்கேயும் யாரும் மதிக்கவில்லை என நினைக்கின்றேன்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குயின்பார்க்கில் நாடுகடந்த அரசு நடத்த முனைந்தததாகச் சொன்னீர்கள் அல்லவா. அது கூட உலகத்தமிழர் அமைப்போடு வேண்டும் என்றே செய்த பிரச்சனைகள். அவ்வாறு தான் மாவீரர் தினம் பற்றிய ஏட்டிக்குப் போட்டி செயற்பாடுகள். பொதுவாக தமிழர் நினைவெழுச்சிகளை உலகத்தமிழரே பல் ஆண்டுகளாகச் செய்து வந்ததுண்டு. தவிர, 2010, 2011களில் அவர்களே குயின்ஸ்பார்க்கிலும் நினைவெழுச்சியைச் செய்தார்கள். ஆனால் வேண்டுமென்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அவர்களின் இடத்தைத் தட்டிப் பறித்து, அதே இடத்தில் ஒழுங்கு செய்வது என்பது எப்படிப்பட்ட குள்ளநரித்தனமாக இருக்கக் கூடும். இப்படியான சிறுப்பிள்ளைத்தனமாக விளையாட்டுக்களுக்குப் பங்குதாரர்களாக தமிழ்க் காங்கிரஸ் இணைந்து கொள்ள வேண்டுமாம்.... இது போலத்தான் மாவீரர்தினத்தையும் போட்டிக்கு ஒழுங்குபடுத்தும் அயோக்கியத்தனம்... மற்றும்படி நாடுகடந்த அரசும் தமிழ்மக்களுக்காக செயற்படுமாயின் அது வரவேற்கப்பட வேண்டியதே.... உங்களின் கருத்துப்படி தமிழ்க் காங்கிரஸ் துரோகம் செய்கின்றது என்றால் என்னமும் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். நான் அறிந்து, இந்த நிமிடம் வரை செயற்பாட்டில் உள்ளவர்கள் நட்புறவோடு தான் தொடர்ந்து செயற்படுகின்றார்கள்.

---------------------------

மற்றது இளையோரைப் பற்றிச் சொன்னீர்கள்... 2008ம் ஆண்டு இளையோர் அமைப்பு திலீபன் அண்ணாவின் நினைவுநாள் அன்று வன்னியில் உள்ள மக்களின் அவலத்தை முன்நிறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்கள்... அதன் பிற்பாடு கனேடியன் இதயம் என்ற பெயரில் மற்றய இனத்தவர்களுக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி போராட்டத்தை ஆரம்பித்தனர். இதன்பிற்பாடு தலைவரின் கடைசியாக வந்த மாவீரர் தினத்தில் புலம்பெயர் இளையோரிடம் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பினைத் தேசியத்தலைவர் அறிவிக்கின்றார்..அதுவரை நீங்கள் வெற்றிக் களிப்பினைக் கொண்டாடே நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தீர்கள். ஆனால் புலம்பெயர் மக்களிடம் இப்படியான போராட்டங்களையே தலைவர் எதிர்பார்க்கின்றார் என்பதைத் தலைவர் வெளிப்படுத்தி நின்றார். ஆனால் மறுபக்கம் இளையோரின் போராட்டங்களுக்கு வந்தவர்கள் 500 பேர் அளவில் தான். முதலில் எம்மக்களுக்கிடையே ஒரு தெளிவை ஏற்படுத்த இளையோர்கள் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. பிற்பாடு கிடைத்த கடைசி நாட்களில் தெரிந்த முறைகளில் யாரோ ஒரு இளையோர் ஆரம்பித்து வைக்க அனையே போராட்டமாகவும், துணை நிற்பதையுமே இளையோர்கள் செய்தார்கள். இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இளையோரைப் பற்றிக் கதைப்பதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. தமிழ் தெரியாத நேற்று வந்தவர்கள் எல்லாம் எமக்கு போராட்டம் பற்றிப் பாடம் எடுக்கின்றார்கள் என்று இளையோர் பற்றிச் சொன்னீர்கள் அல்லவா... இதே மனநிலையில் தான் நீங்கள் இளையோரை அணுகுனீர்கள். எப்படி 20 வருடமாக் கிழித்த எமக்கு இவர்கள் புத்திமதி சொல்லலாம் என்ற எண்ணமே இருந்தது. அதையும் மீறி இளையோர்கள் போராட்டம் நடத்தியது எவ்வளவு பெரிய செயல்... மூடிய அறைக்குள்ளும், வீதிச் சந்திகளிலும் உங்களின் போராட்டம் என்றது நீங்கள் கிழித்தது பற்றி... நான் சில ஆண்டுகள் இளையோர் அமைப்பில் இருந்தேன் என்பதற்காக அதில் எல்லா விடயங்களிலும் நான் முன்னுக்கு நிற்கவில்லைத் தான். செயற்பாட்டில் இருந்தவர்களுக்கான கௌரவத்தைப் பங்குபோடும் அளவு தகுதியனவன் அல்ல..

----------------------

நாடு கடந்த அரசாங்கள் மாவீர்ர தினத்தை உலகத்தமிழரோடு போட்டி போட்டு நடத்துவதற்குமாகத் தான் சிரிசியின் உதவியை எதிர்பார்க்கின்றார்கள் என்றால் அதைச் சிரிசி செய்யக்கூடாது என்பது தான் என் அவா...

எமது கால்களை பற்றி எம்மை கீழே இழுக்க முயற்ச்சித்தாலும் பயணம் முன்னோக்கி நகருமேயன்றி எப்போதும் பின்னோக்கிச் செல்லாது – ஹரி ஆனந்தசங்கரி

July 19, 2014 - கனடா, பிந்திய செய்திகள் - 1 comment

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் “ரூஜ்பார்க் தொகுதியில் உண்மையில் நடந்தது என்ன ? : ஹரி ஆனந்தசங்கரியும் அஸ்வானி பரத்வாஜ்யும் :குருவியாரின் பார்வை” எனும் தலைப்பில் வெளியான செய்தி குறிப்பொன்று கனேடியத் தமிழ் சமூகத்திடையே மிகுந்த வரவேற்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது .அது தொடர்பாக ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் இந்த வாரம் ஊடக அறிக்கையொன்றை வெளியிடிருந்தார் . அதன் முழுவிபரம் வருமாறு

gary-tamil-=nவருகின்ற கனேடிய மத்திய அரசுத் தேர்தலிலே ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரைத் தெரிவு செய்ய இடம் பெறுகின்ற நியமனத் தெரிவுக்குப் போட்டியிட எனது மனுவைத் தாக்கல் செய்யும் போது இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுத் தெரிவாகுவது என்பது இலகுவான காரியமல்ல என்பது எனக்குத் தெரியும், ஆனாலும் கடந்த சில வாரங்கள் நான் நினைத்ததையும் விட மிகவும் கடுமையானவை.

மனைவியையும், மூன்று வயதும், ஐந்து வயதும் நிரம்பிய இரண்டு பெண் குழந்தைகளையும் கொண்ட இளைய குடும்பஸ்தன் நான் என்றாலும் இந்த நாட்டினுடைய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் என்னாலான பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற சிந்தனையே என்னைப் பொது வாழ்விற்கு இட்டுச் சென்றது. நான் கனேடிய சமூக சம்பந்தமான விடயங்களிற் கடினமாக உழைத்திருந்தாலும் எனது தமிழ்ச் சமூகத்துடனான உறவே என் பொதுவாழ்வை வரையறுத்தது என்றால் மிகையாகாது. எனது கடந்த கால நிகழ்வுகளையும், எதிர்காலத் திட்டங்களையும் எமது தமிழ்ச் சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ளவே இவ்வூடக அறிக்கையை வெளியிடுகின்றேன்.

1980ம் ஆண்டு எனது பெற்றோருக்குள் ஏற்பட்ட பிரிவு காரணமாக நானும் எனது தாயாரும் தற்காலிகமாக அயர்லாந்திற்குக் குடிபெயர்ந்தோம். 1983ம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு திரும்ப இருந்த வேளையில் இலங்கையில் 1983 கறுப்பு ஜூலைக் கலவரம் வெடித்தது. அப்பொழுது டப்ளின் நகரில் இருந்த ஒரு சிறுதொகைத் தமிழ் மக்களும், மாணவர்களும் இணைந்து நடாத்திய ஆர்பாட்டத்தில் ஒரு சிறு பங்காளியானேன். 1983 கறுப்பு ஜூலைக் கலவரம் காரணமாகக் கொழும்பு திரும்ப முடியாத நிலையில் நானும் எனது தாயாரும் ஆகஸ்ட் 31, 1983 இல் கனடா வந்து அகதி அந்தஸ்துக் கோரினோம்.

1980இல் எனது பெற்றோருக்கிடையிற் பிரிவு ஏற்பட்டது என்பதில் எந்த இரகசியமும் கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்தில் இருந்து எனக்கும் எனது தந்தையாருக்கும் இடையில் எந்த உறவும் இல்லை என்பதிலும் எந்தச் சந்தேகமும் கிடையாது. உண்மையைக் கூறுவதானால் 1983ம் ஆண்டிற்குப் பிறகு அவரை இருமுறை மட்டுமே சந்தித்துள்ளேன். கடந்த பல வருடங்களாக அவரது அரசியற் செயற்பாடுகளுடன் அடிப்படையிலேயே முரண்பட்டு வருபவன் நான்.

உண்மை இவ்வாறு இருக்க எம் கனேடியத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள அடிப்படைவாத, ஆண்மேலாதிக்க சிந்தனையுள்ள பழமைவாதிகள் சிலர் எனக்கும் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கும் இடையில் தொடர்பு பேணப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனக்கெதிராக வேறெந்த குற்றசாட்டையும் நிரூபிக்க முடியாத இவர்கள் எனது இரத்தத்தில் ஓடுவது ஆனந்தசங்கரியின் இரத்தம் என்று முறையிடுகின்றனர். இது போன்ற அபத்தமான கேள்விக்கு எப்படி என்னால் எதிர்த்துப் பதில் கூற முடியும்? என்னால் முடியவில்லை, ஏதோ எனது மனதை இறுக்கமாக்கி இந்த கல்மனதுக்காரர்களிடமிருந்து விலகிச் செல்வதே என்னால் முடியும் . என் தந்தையார் எப்படி உள்ளார்? என்று கேட்பவர்களிடம் அவர் நலமாக உள்ளார் என்று புன்முறுவலுடன் கூறி விலகிச்செல்வதே என் வழக்கம். எமது “குடும்பத்தலைவன்” என்ற குறியீடு கொண்ட ஆண் ஆதிக்க சமுதாயத்திலே “எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லையென” உண்மையைச் சொல்ல முடியாது, ஆனால் எனது கொள்கைகளையும் வீரசிங்கம் அனந்தசங்கரியின் கொள்கைகளையும் ஒன்று என்று கூறுபவர்களின் கூற்றுக்கும் உண்மைக்கும் வெகுதூரம்.

நான் எப்போதுமே ஒரு தமிழ்த் தேசியவாதி, இதனை நான் சொல்லிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை, நான் வாழ்ந்து காட்டியிருக்கின்றேன். எனது பத்து வயதிலிருந்து தமிழர்களின் உரிமை வேண்டி உழைத்து வருகின்றேன். சிறு வயதிற் துண்டுப் பிரசுரம் விநியோகம், 1980களின் இறுதியில் ஒட்டாவாவில் நான் முன்னின்று நடாத்திய போராட்டம் தொடங்கி எமது தமிழ்ச் சமுதாயத்திற்கு முக்கியமான, தேவையான விடயங்களைப் பற்றிக் கனேடிய மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள் என்பதுடன், எம் தமிழ் மக்கள் பயங்கரவாதி, குழுச் சண்டைக்காரர், பொருளாதார அகதிகள் எனக் கனேடிய ஊடகங்களினால் முத்திரை இடப்பட்ட காலம் முதற் கவனயீர்ப்பு போராட்டங்கள் வரை எம் சார்பு நீதியைக் கனேடிய ஊடகங்களிலும், அரசு அதிகாரிகளுக்கும், கனேடிய மக்களிற்கும் எம் தமிழ் மக்கள் சார்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறேன்.

வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழர்களுக்கு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு ஒன்று தேவையானது என்பது எனது அசைக்கமுடியாத அடிப்படையான நம்பிக்கை, இந்த கட்டமைப்பு எப்படியானதாக இருக்கவேண்டும் என்பது வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழர்களினால் மட்டுமே தீர்மானிக்கப்படவேண்டும். அது ஒரு சமஷ்டி அரசாக இருக்கலாம், இணைந்த இரண்டு அரசுகளாக இருக்கலாம் அல்லது சுதந்திரமான தனி நாடாக இருக்கலாம். இந்த கட்டமைப்பு ஒரு ஜனநாயக அரசியற் கட்டமைப்பின் மூலம் பெறப்பட வேண்டுமேயன்றி எமது தாயக மக்களை மீண்டும் ஒரு முறை வன்முறைக்கு இந்த கட்டமைப்பு அழைத்து செல்ல கூடாது என்பது எனது விருப்பம். எனது உறவினர்கள், நண்பர்கள் பலர் எம் தாயக மக்களிற்கு ஒரு நியமான தீர்வு வேண்டி தம் உயிரை இழந்துள்ளனர், இவர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்க நான் என்றும் தவறியதில்லை. எம் தாயக மக்களிற்கான ஒரு சிறந்த தீர்வைப் பெற்றுகொடுக்க உழைப்பதே நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.

தமிழர் என்ற ஒரே காரணத்திற்க்காக 2009ஆம் ஆண்டு எம் உறவுகள் கொல்லப்பட்ட போது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானது. இந்த இன அழிப்பை உலகமே பொறுப்பற்ற முறையில் வேடிக்கை பார்த்ததை நாம் கண்டோம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கபட்டனர். ஆனால் ஏன் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர்? இழைக்கப்பட்ட குற்றங்கள் என்னாவது? தமிழ் மக்களுக்கு என்ன நடக்கும்? அவர்களுக்கு நாம் எப்படி நியாயத்தை பெற்றுக்கொடுப்பது?

பல வாரங்களாக இதுபற்றிச் சிந்தித்த என் மனைவி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் என் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்தது. இதன் விளைவாக மார்ச் 2009 நாம் ஜெனிவா சென்றோம். உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழர்களை இந்தச் சந்திப்புக்கு அழைத்திருந்தோம். ஐ.நா. உரிமைகள் ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளை அவர்களிடம் எங்கள் நிலையை எடுத்துரைத்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் முப்பது தடவைக்கும் மேல் ஜெனிவா சென்றிருக்கிறேன், சில பயணங்களில் என் மனைவியும் கைக்குழந்தையும் கூட என்னோடு வந்திருக்கின்றார்கள். ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் நான் ஜெனிவா சென்றேன். எம் ஆற்றல்களோடு வேறெங்கு செல்வதைக் காட்டிலும் ஜெனிவா செல்வதன் மூலம் மிக அதிகமான பயனைப் பெறமுடியும்.

ஆம் நாம் போராட்டம் செய்யலாம், செய்தும் இருக்கிறேன், இணைய தளங்களில் எழுதலாம், ஆயிரக்கணக்கான தமிழர்களோடு மேடையில் ஏறி உணர்ச்சிவசப்பட்டு உரத்துப் பேசி நாம் சரியான வழியில் பயணிப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். , ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவில் கருத்தரங்குகள் ,மாநாடுகள் நடத்தலாம், தொலைக்காட்சி, வானொலி நிகழ்சிகள் நடத்தலாம் . இவற்றின் மூலம் எமது சிக்கல்களை எமக்குள் மட்டுமே பேசிக் கொள்ளலாமே அன்றி வேறெதுவும் செய்துவிட முடியாது.

gary-1இவற்றையே நாமும் இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம், ஆனால் நாம் அதைச் செய்யவில்லை, மாற்றாகச் சர்வதேசத்தின் பொறப்பு கூறலில் நாம் இடையறாது கவனம் செலுத்தினோம். ஜெனிவாத் தீர்மானத்திற்கு எந்த ஒரு தனிப்பட்ட மனிதரும் உரிமை கோர முடியாது. நான் ஜெனிவா அமர்வுகளிற் பங்கேற்காவிட்டாலும் இத்தீர்மானம் நிறைவேறியிருக்கும் எனச் சிலர் சொன்னார்கள். அவர்களின் கூற்று ஏற்புடையதுதான். எது எப்படியாயினும் அடிப்படை இதுதான். முப்பது தடவைக்கும் மேலான ஜெனிவாவிற்கான பயணத்தில் எது சரியான பாதை என நாம் நம்பினோமோ அதிலேயே பயணித்தோம். இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணை, மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழர் மீதான இன அழிப்புப் போன்றவையே அவையாகும். இன அழிப்பு என்ற வார்த்தை தொடர்பாக நான் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றேன்.

நான் “இன அழிப்பு” என்கிற சொற்றொடரை அடிக்கடி பயன்படுத்தவில்லை என்பது உண்மையே, மாறாக அதைப் புத்திசாதுரியத்தோடு பயன்படுத்தினேன், இருப்பினும் தற்போதைய விசாரணையானது இன அழிப்புக்கான விசாரணையையும் உள்ளடக்கியது என்பதே இதற்க்குச் சாட்சி . இது தானாகவே நடந்துவிடவில்லை. நான் எழுத்து மூலமும் வாய் மூலமும் சிறிலங்காவில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என விபரித்திருக்கின்றேன். இதைச் சட்டரீதியாக நிருபிப்பதிற் சிரமங்கள் இருப்பதையும் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். நாம் அதை நிரூபிக்க முயற்சிக்க கூடாது என்பது அதன் பொருளில்லை, தனிப்பட்ட முறையில் நான் இன அழிப்பு நடக்கவில்லை எனக் கூறியதாகச் சொல்லி வருபவர்கள் ஒன்றிற் பொய் சொல்லி ஏமாற்றப்பட்டிருக்கவேண்டும் அல்லது தமது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகத் தாங்களாகவே இந்தப் பொய்யை உங்களுக்குச் சொல்லவேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக நான் கனேடியத் தமிழர் பேரவையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன், சட்ட ஆலோசகராகச் சில காலம் பணியாற்றிய நான் தொடர்ந்தும் அதன் உறுப்பினராயிருக்கிறேன். கனேடிய தமிழர் பேரவையின் இயக்குனர்கள் , அங்கத்துவர்களினால் தெரிவு செய்யபடுகின்றவர்கள். இந்த அமைப்பு இயக்குனர் சபையால் நிர்வாகிக்கப்படுகிறது, இருப்பினும் நான் இந்த அமைப்பை என் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் வதந்திகள் பரப்பி விடப்பட்டுள்ளன. இதைவிட முட்டாள்த்தனம் வேறொன்றும் இல்லை. என்னை நன்கு அறிந்த அனைவரும் அறிந்த உண்மை இது. உறுப்பினர் பலரின் நடுநிலையான நியாயமான செயற்பாட்டை அறிந்து நான் இவ்வமைப்போடு இனைந்து செயற்பட விரும்பினேன். எனினும் தேவையேற்படும் போது விமர்சிக்க தவறியதில்லை. இது தொடர்பாக என் உணர்வு எதுவாயினும் நிச்சயமாய்க் கனேடியத் தமிழர் பேரவை என் கட்டுப்பாட்டில் இல்லை. கனடியத் தமிழர் பேரவையோடு தங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் கேள்விகள் இருப்பின் நேரடியாக அவர்களிடமே கேட்கலாம்.

கடந்த மே 21ம் திகதி முதல் இன்று வரை சில நபர்கள் நான் போட்டியிடும் ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் அங்கத்துவர் பட்டியலுடன் வீடு வீடாகச் சென்று என்னை ஒரு சிறிலங்கா அரசின் முகவர் என்றும் இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதை நான் மறுப்பதாகவும் கூறி என்னைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகக் கடந்த ஜூன் 28ம் திகதி Morningside Finch இற்கு அருகாமையில் உள்ள எனது ஆதரவாளர்கள் வீட்டிற்குச் சென்று என்னைப்பற்றிய தவறான தகவல்களைச் சிலர் கூறுவதாக எனது ஆதரவாளர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் எனது பிரச்சார குழுவை சேர்ந்த நால்வர் அந்த இடத்திற்கு சென்று இவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இவர்களை படம் எடுத்தனர். (இந்த படங்கள் எதுவும் இதுவரை எம்மால் வெளியிடப்படவும்மில்லை, அத்துடன் இப்படியாக ஒருவரை அடையாளம் காண்பதற்காகப் படம் பிடிப்பது என்பது கனடிய சட்ட வரையறைக்குள் உட்பட்டது). கனடிய தேர்தற் சட்ட முறைகளின் படி எவரும் எவருக்காகவும் பிரசாரம் செய்யமுடியும். தான் ஆதரிக்கும் ஒரு வேட்பாளரின் கொள்கையை விளக்கமுடியும் ஆனால் எதிர்த் தரப்பு வேட்பாளரைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை கூறமுடியாது. அவர்கள் குறிப்பிட்டது போல அங்கு இரண்டு மாணவியர் மட்டும் பிரசாரம் செய்யவில்லை. அவர்களுடன் ஒரு பெரிய குழுவே அங்கு இருந்தது. இதற்கான சகல வீடியோ, போட்டோ ஆதாரங்களும் எம்மிடம் கைவசம் உள்ளது.

எனது எதிர்த்தரப்பு இந்த சம்பவத்தைப் புனைகதையாக்கி எமது புகைப்படங்களை அடையாளம் அற்ற இணையதளங்களிலும், முகம் மறைத்த முகநூற் பக்கங்களிலும் தினமும் புதுப்புதுப் பொய்களைப் புதுக் கதைகளாக வெளியிட்ட வண்ணமேயுள்ளனர். தம்மை எமது சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளாக வெளிக்காட்டிகொள்ளும் பொறுப்புணர்ச்சியற்ற சிலர் தொகுக்கப்பட்ட சில வீடியோக்களையும் படங்களையும் தமது இணையத் தளங்களிலே வெளியிடுகின்றனர். சிலர் நானும் எனது பிரச்சாரக் குழுவின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும், எம் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவம் பொறுப்புணர்ச்சி அற்றமுறையில் தன்னை ஒரு மூத்த பத்திரிகை என்று அழைக்கும் ஒரு பத்திரிக்கையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

என்னை எதிர்ப்பவர்கள் பொய்யிற்கு மேற் பொய் சொல்வதன் மூலம் வாக்காளர்களை வாக்களிக்காமல் தடுக்கலாம் என நினைக்கிறார்கள், மிகவும் சாதரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டதாகவோ, அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டதாகவோ, ஆதாரம் ஏதுமின்றி ஒரு செய்தியாக வெளியிட முடியாது. அதனாற் கனடாவிலே உள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாக நான் என்னையும் எனது பிரச்சாரக் குழுவினரையும், எமது நற்பெயரையும் தீவிரமாகவும் விரைவாகவும் காப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். எமது கால்களை பற்றி எம்மை கீழே இழுக்க இவர்கள் முயற்ச்சித்தாலும் எமது பிரச்சாரம் முன்னோக்கி நகருமேயன்றி எப்போதும் பின்னோக்கிச் செல்லாது.

என்னை அவமானபடுத்தும் முயற்சியாய் மேற்கொள்ளப்படும் இத்தகைய இடையூறுகள் எதற்கு என என்னை நானே கேட்கிறேன். இவ் வினாவுக்கான பதில் மிக எளிதானது. இதற்கான காரணம் எம்மை அடக்கி வைத்தல், எம் தமிழ்ச் சமூகத்தை அனைத்து வழிகளிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே இதன் முக்கிய நோக்கம். எம் சிந்தனை, ஊடகங்கள், வணிகம் மற்றும் எதிர்காலத்தைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணுவதே இதன் நோக்கம். இங்கு சிலர் நம் சமூகத்தின் வளர்ச்சியைக் கட்டுபடுத்தித் தாம் விரும்பும் குறுகிய பாதையில் இட்டுச்செல்ல முனைகின்றனர். என் தமிழ் மக்களின் எதிர்காலத்திற்க்காகவும் என் இரண்டு குழந்தைகளுக்காகவும் நான் இப்பாதையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றேன்.

gary-rtyryrtஇதை விடுத்து நாம் ஒரு பலமான, சக்திமிக்க, உறுதியான தமிழ் சமூகத்தை உருவாக்கவேண்டும். அடுத்தவருக்கு மரியாதை செய்யத்தக்கதும் சமூக மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்கேற்பதும், உலகெங்கும் வாழும் குறிப்பாய்த் தாயகத்தில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழரின் நீதிக்காக உண்மையாய்க் குரல் கொடுப்பதுமான சமூகமே இச்சமூகம். உறுதியும் ஆற்றலும் அறிவும் கொண்ட தலைவர்களை உருவாக்கினால் மட்டுமே அவர்கள் மீதான நம் எதிபார்ப்புகள் நிறைவேறும். எம்மைப் போலத் துன்புறும் ஏனைய சமூகத்தவரோடு சாத்வீகமான முறையில் இணைந்து செயற்பட வேண்டும், பெண்ணடிமைத்தனம், இனவாதம், சாதிவெறி, வர்க்கபேதங்கள், இணைத் தேர்வு குறித்த வெறுப்பு ஆகிய மூட எண்ணங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராய்க் குரல் கொடுக்க வேண்டும். வெளியில் இருந்து கோசம் போடுவதும், வேடிக்கை பார்ப்பதையும் நிறுத்தி முடிவுகள் எட்டப்படும் இடங்களில் முக்கியம் பெறவேண்டும். நாம் அனைவரும் இதிற் பங்காளராய் இருக்கவேண்டும். தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை ஆதரிப்பதை விடுத்து அவர் தகுதியானவரா என்பதை அறிந்து ஆதரவு வழங்க வேண்டும்.

இதிலிருந்து மாறுபட்டு நம்மை நாமே அழித்து, எமது சமுதாயத்தையும் அழிவுக்கு இட்டுச் செல்வோருடனான எமது பயணம் இத்தோடு முடிவுக்கு வருகிறது. ஆதாரங்கள் அற்ற செய்திகளை, அடையாளமற்ற பெயர்களில் இணையதளங்களில் நீங்கள் வெளியிடலாம், தொடர்ந்தும் சம்பவங்களை உருவாக்கி சேறு பூசும் பணியில் ஈடுபடலாம். என்னை அவமானபடுத்திக் காயபடுத்தி இழிவுபடுத்துவதை தொடரலாம், ஆனால் சுயநலமான, பொது அறிவற்ற, ஏற்றுக் கொள்ள முடியாத அவர்களின் செயல்கள் கனடியத் தமிழ்ச் சமூகத்திற்கும், தாயக உறவுகளிற்கும் நாம் செய்ய வேண்டிய தார்மீகக் கடமைகளில் இருந்து நம்மைஅன்னியப்படுத்துவதாய் அமைந்து விடக்கூடாது.

கனடியர் என்ற பெருமையோடு தமிழ்க் கனடியராய் விளங்கும் அனைவரையும் லிபரல் கட்சியிற் Scarborough – Rouge Park தொகுதி வேட்பாளராகத் தெரிவாக நான் எடுக்கும் முயற்சியில் பங்கேற்குமாறு அன்போடு வேண்டுகிறேன். எமது சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஒரு புதிய பாதையை உருவாக்குவோம்.

உங்களின் ஆதரவை அன்புடன் வேண்டும்

ஹரி ஆனந்தசங்கரி

http://ekuruvi.com/

Edited by Gari

வணக்கம் தமிழச்சி... சில வார்த்தைகள் உங்களுடைய மனதைப் புண்படுத்துமாயின் முதலே வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுடைய பிரச்சனை தான் என்ன? அடிக்கடி நீங்கள் 20 வருடமாக தமிழர் சேவைக்குள் இருப்பதாகவும், இப்போது ஒன்றிலும் இல்லை என்று புலம்புவதன் நோக்கம் என்ன? உங்களை ஒரு அமைப்பிலும் மதிப்பதில்லை போலுள்ளது. அதனால் தான் இப்படிப் புலம்பல்கள்....

 

வணக்கம் தூயவன்,

என்னுடைய பிரச்சனை ஒன்றுதான்.  உங்களின் சுயநலத்திற்காகத் தேசியத்தைப் பயன்படுத்தாதீர்கள் என்பதுதான்.  என்னுடைய மதிப்பு எங்கே இருந்தது, இருக்கிறது என்பது தெரிய வேண்டியவர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்.  நான் என்றைக்குமே என்னைப் பற்றிப் பறை சாற்றியதில்லை.  எனக்கு இத்தனை வருட அனுபவம் இருக்கிறது என்பதை மட்டுமே நான் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.  நான் என்ன செய்தேன் எப்படிச் செய்தேன் என்பது தெரிய வேண்டியவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.  அதனால்தான் என்னால் இன்றுவரை நான் நினைத்ததைச் செய்ய முடிகிறது.  எமது பிரச்சனைக்குத் தெளிவான பாதையை வகுத்துக் கொள்வதிலோ அல்லது வகுத்துக் கொள்பவர்களோடு ஒத்துழைப்பதிலோ எனக்கு எதுவிதப் பிரச்சனையும் இல்லை.  நீங்கள் ஓரிருவர் கூவுகிறீர்கள் என்பதற்காக அவசர அவசரமாகத் தாழி உடைப்பவள் நானுமல்ல.  சுயநலத்திற்காகத் தேசியத்தை விற்பவளும் நானல்ல.

கனேடியன் தமிழ் காங்கிரஸ் அரசியல்மயப்பட்டது என்று சொன்னதற்காக, அவர்கள் கண் அசைத்தால் உடனே கையைக் கட்டிக் கொண்டு வந்து எம்பிமார்கள் நிற்பார்கள் என்பத்றகும் நிறைய வேறுபாடு உண்டு. ஒட்டாவாவில் நடந்த போராட்டத்தில் ஐக் லேய்றன் மட்டும் வந்தார் என்பதற்கு தமிழ் காங்கிரஸ் தான் காரணமா? அங்கு நடந்த குழப்பங்கள் என்ன என்னபதை நீங்கள் அறியமாட்டீர்கள் தானே... அதற்கு உங்களுக்கு எப்படி நேரம் இருந்திருக்கும்.. நீங்கள் வன்னியில் மக்களின் கஸ்டத்துக்காகப் போராடவா வந்தீர்கள்... யார், யார் ரூம் போட்டிருக்கின்றார்கள் என்று பார்க்கத் தானே வந்தீர்கள்... நீங்கள் உங்களின் 20 வருடத் தமிழர் போராட்டத்தில் ஒன்றுமே கிழிக்காதபோது வெறும் 15 வருடமே ஆகின்ற சிரிசி ஏதாவது செய்யும் என்று எப்படி எதிர்பார்க்கினறீர்கள். இலகுப்பிள்ளை பற்றிக் கதைக்கினறீர்கள். ஏன் அவர் அன்று போட்டியிட எதிராக அமைப்பு இருந்தபோது, அப்போது நீங்களும் எதிராக நின்றவர்களோடு நல்லுவாகத் தானே இருந்தீர்கள். ஏன் வாய்திறக்கவில்லை....

 

தனிநபரான நான் என்ன கிழித்தேன் என்பது இருக்கட்டும்.  உங்களைப் பொறுத்தவரை நான் ஒன்றுமே கிழிக்காதவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.  ஆனால், ஒரு அமைப்பாக கனேடியத் தமிழ் கொங்கிரசால் ஒன்றுமே கிழிக்க முடியாவிட்டால் மூடிவிட்டுப் போகவேண்டியதுதானே?  ஏன் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?   தனிநபரான என்னுடைய சேவைக்கும் பலரைக் கொண்டியங்கும் கனேடியத் தமிழ் கொங்கிரசின் சேவைக்கும் வெறும் ஐந்தாண்டுகள்தான் வித்தியாசம்.  அந்த அமைப்பில் குறைந்து 300 பேராவது இருப்பார்கள்.  அதைவிட அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பு வேறு.  அப்படியானால் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டியவர்கள்.  இதுவரை எமது மக்களின் விடிவு சார்ந்து அவர்கள் செய்த விடயங்களை இங்கு பகிருங்கள்.    

 

கலாநிதி இலகுப்பிள்ளை அவர்கள் தலைவரின் அனுமதியோடுதான் தேர்தலில் நின்றார் என்பதும் தெரிந்துதான் உலகத்தமிழர் அவருக்கெதிராகச் செயற்பட்டது என்பதை எல்லோரும் அறிந்திருந்தோம்.  அதில் தலைவரால்கூட ஒன்றும் செய்ய முடியாதநிலைதான் அன்று இருந்தது என்பதுகூட உங்களுக்குத் தெரியவில்லை.  அப்படியிருக்கும்போது இதைப் பற்றி மேலதிகமாக உங்களோடு பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.

 

 எமக்குத் தரப்பட்ட வேலையை மட்டும்தான் நாம் செய்ய முடியும்.  மற்ற விடயங்களில் தலையிட எமக்கு அனுமதியில்லை.  இது அவர்களின் மிகமுக்கியமான விதி. 

------------

மற்றது நாடுகடந்த அரசு பற்றிய உங்களின் கருத்து. அந்த அமைப்பு தொடங்கப்பட்ட காலம் முதல் தான் புலம்பெயர் தமிழருக்குள் பிரச்சனைகள் உருவாகின. அவர்களைத் தங்கள் வசப்படுத்த உலகத்தமிழர் அமைப்பு அதற்குள் தங்களின் உறுப்பினர்களை அனுப்பி, பெரும்பான்மையை உருவாக்கித் தங்களின் சார்பு இயக்கமாக்க முனைந்தது. அதனால் நிறையக் குழப்பங்கள், குத்துவெட்டுக்கள்... இவற்றினுள் மாட்டுப்படாமல் காங்கிரஸ் நின்று கொண்டது. நீங்களும் கொஞ்சக்காலம் நாடுகடந்த அரசோடு ஒட்டிக் கொண்டீர்கள் போலும். அங்கேயும் யாரும் மதிக்கவில்லை என நினைக்கின்றேன்...

 

நீங்கள் சொன்ன உலகத்தமிழருடனான குழப்பங்கள், குத்துவெட்டுக்கள் 2011 ஓக்டோபரோடு முடிந்துவிட்டது.   யாப்பு பற்றிய குழப்பத்தோடு அவர்களின் அத்தியாயம் முடிந்துவிட்டது.  2011 ஒக்டோபர் முதல் 2013 வரையான குழப்பங்களுக்கு கனேடியத் தமிழ் கொங்கிரஸ்தான் காரணம் என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிந்த விடயம்.   

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் குயின்பார்க்கில் நாடுகடந்த அரசு நடத்த முனைந்தததாகச் சொன்னீர்கள் அல்லவா. அது கூட உலகத்தமிழர் அமைப்போடு வேண்டும் என்றே செய்த பிரச்சனைகள். அவ்வாறு தான் மாவீரர் தினம் பற்றிய ஏட்டிக்குப் போட்டி செயற்பாடுகள். பொதுவாக தமிழர் நினைவெழுச்சிகளை உலகத்தமிழரே பல் ஆண்டுகளாகச் செய்து வந்ததுண்டு. தவிர, 2010, 2011களில் அவர்களே குயின்ஸ்பார்க்கிலும் நினைவெழுச்சியைச் செய்தார்கள். ஆனால் வேண்டுமென்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அவர்களின் இடத்தைத் தட்டிப் பறித்து, அதே இடத்தில் ஒழுங்கு செய்வது என்பது எப்படிப்பட்ட குள்ளநரித்தனமாக இருக்கக் கூடும். இப்படியான சிறுப்பிள்ளைத்தனமாக விளையாட்டுக்களுக்குப் பங்குதாரர்களாக தமிழ்க் காங்கிரஸ் இணைந்து கொள்ள வேண்டுமாம்.... இது போலத்தான் மாவீரர்தினத்தையும் போட்டிக்கு ஒழுங்குபடுத்தும் அயோக்கியத்தனம்... மற்றும்படி நாடுகடந்த அரசும் தமிழ்மக்களுக்காக செயற்படுமாயின் அது வரவேற்கப்பட வேண்டியதே.... உங்களின் கருத்துப்படி தமிழ்க் காங்கிரஸ் துரோகம் செய்கின்றது என்றால் என்னமும் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். நான் அறிந்து, இந்த நிமிடம் வரை செயற்பாட்டில் உள்ளவர்கள் நட்புறவோடு தான் தொடர்ந்து செயற்படுகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அன்று குயின்ஸ் பார்க்கை புக் பண்ணி வைத்திருந்தவர்களே கனேடியத் தமிழ் கொங்கிரசார்தான்.   நாடுகடந்த தமிழீழஅரசாங்கமல்ல.  நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கனேடியத் தமிழ் கொங்கிரசோடு சேர்ந்து செய்யவே அனுமதி கேட்டது.  அதற்குத்தான் கொங்கிரசின் முக்கிய புள்ளி நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் பிரதமர் கௌரவத்துற்குரிய உருத்திரகுமாரன் உரை ஆற்றக்கூடாது என்றும் தாங்கள் சொல்பவர்கள் மட்டுமே உரையாற்றவேண்டும் என்பதோடு வேறு பல கட்டுப்பாடுகளும் விதித்தார்கள்.  இதற்காக கெளரவத்துற்குரிய உருத்திரகுமாரன் அவர்களே கொங்கிரசின் பல முக்கிய புள்ளிகளோடு பேசியும் பார்த்தார்.  எதற்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை.   அடுத்தடுத்த வருடங்களில் அவர்களைப் பற்றி மக்களுக்கு இன்னும் நிறையத் தெரிய வரும்.  

மற்றது இளையோரைப் பற்றிச் சொன்னீர்கள்... 2008ம் ஆண்டு இளையோர் அமைப்பு திலீபன் அண்ணாவின் நினைவுநாள் அன்று வன்னியில் உள்ள மக்களின் அவலத்தை முன்நிறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்கள்... அதன் பிற்பாடு கனேடியன் இதயம் என்ற பெயரில் மற்றய இனத்தவர்களுக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி போராட்டத்தை ஆரம்பித்தனர். இதன்பிற்பாடு தலைவரின் கடைசியாக வந்த மாவீரர் தினத்தில் புலம்பெயர் இளையோரிடம் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பினைத் தேசியத்தலைவர் அறிவிக்கின்றார்..அதுவரை நீங்கள் வெற்றிக் களிப்பினைக் கொண்டாடே நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தீர்கள். ஆனால் புலம்பெயர் மக்களிடம் இப்படியான போராட்டங்களையே தலைவர் எதிர்பார்க்கின்றார் என்பதைத் தலைவர் வெளிப்படுத்தி நின்றார். ஆனால் மறுபக்கம் இளையோரின் போராட்டங்களுக்கு வந்தவர்கள் 500 பேர் அளவில் தான். முதலில் எம்மக்களுக்கிடையே ஒரு தெளிவை ஏற்படுத்த இளையோர்கள் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. பிற்பாடு கிடைத்த கடைசி நாட்களில் தெரிந்த முறைகளில் யாரோ ஒரு இளையோர் ஆரம்பித்து வைக்க அனையே போராட்டமாகவும், துணை நிற்பதையுமே இளையோர்கள் செய்தார்கள். இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இளையோரைப் பற்றிக் கதைப்பதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. தமிழ் தெரியாத நேற்று வந்தவர்கள் எல்லாம் எமக்கு போராட்டம் பற்றிப் பாடம் எடுக்கின்றார்கள் என்று இளையோர் பற்றிச் சொன்னீர்கள் அல்லவா... இதே மனநிலையில் தான் நீங்கள் இளையோரை அணுகுனீர்கள். எப்படி 20 வருடமாக் கிழித்த எமக்கு இவர்கள் புத்திமதி சொல்லலாம் என்ற எண்ணமே இருந்தது. அதையும் மீறி இளையோர்கள் போராட்டம் நடத்தியது எவ்வளவு பெரிய செயல்... மூடிய அறைக்குள்ளும், வீதிச் சந்திகளிலும் உங்களின் போராட்டம் என்றது நீங்கள் கிழித்தது பற்றி... நான் சில ஆண்டுகள் இளையோர் அமைப்பில் இருந்தேன் என்பதற்காக அதில் எல்லா விடயங்களிலும் நான் முன்னுக்கு நிற்கவில்லைத் தான். செயற்பாட்டில் இருந்தவர்களுக்கான கௌரவத்தைப் பங்குபோடும் அளவு தகுதியனவன் அல்ல..

இளையோரைப் பற்றிக் கதைப்பதற்குரிய அத்தனை தகுதியும் எனக்குண்டு.  ஏனெனில் நானும் இளையோராக இருந்துதான் இன்று இந்தத் தெளிவை அடைந்திருக்கிறேன்.  மற்றவர்களைப் போல் ஒன்றும் அறிந்து கொள்ளாமல் எனக்கு எல்லாம் தெரியும் என்று நான் பீற்றிக் கொண்டு திரியவில்லை.  நான் தலைவரை மட்டுமல்லாது அவரது கொள்கைகளையும் மதித்தவள்.  அன்றைய இளையோர் எல்லோரும் இன்னும் உயிரோடுதானே இருக்கிறீர்கள்.  தலைவர் உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார் எனில் அன்று போல் இன்றும் பொறுப்பேற்றுச் செய்து கொண்டு போகவேண்டியதுதானே?  உங்களை யார் தடுத்தது?   ஏன் உங்களால் முடியவில்லை?  அத்தனை கெடுபிடிகளுக்குள் போராடிய உங்களால் இன்று ஏன் போராட முடியவில்லை?  

நாடு கடந்த அரசாங்கள் மாவீர்ர தினத்தை உலகத்தமிழரோடு போட்டி போட்டு நடத்துவதற்குமாகத் தான் சிரிசியின் உதவியை எதிர்பார்க்கின்றார்கள் என்றால் அதைச் சிரிசி செய்யக்கூடாது என்பது தான் என் அவா...

 

உலகத்தமிழரோடு போட்டி போடுவது கனேடியத் தமிழ் கொங்கிரஸ் தானேயன்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமல்ல.  இந்தத் திரி கூடக் கனேடியத் தமிழ் கொங்கிரசைச் சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி பற்றியதல்லாமல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பற்றியதல்ல.  

என்னைப் பொறுத்தவரை,  நீங்கள் விடயங்களை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு கருத்தெழுதுபவர்.   நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல விடயங்களிலேயே என்ன நடந்திருந்தது என்பதை அறியாமல் எழுதியிருக்கிறீர்கள்.  நீங்கள் என்றைக்குமே அரசியலை விளங்கிக் கொள்ளப் போவதில்லை என்பதும் நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்பதிலிருந்து விலகப் போவதில்லை என்பதும் உங்களின் பதில்களிலிருந்து தெரிகிறது. அதனால் மேற்கொண்டு நான் உங்களோடு விவாதிக்கப் போவதில்லை.   வணக்கம்.

  • 3 weeks later...

Scarborough Rouge Park தொகுதிக்கான லிபரல் கட்சி வேட்பாளருக்கான உள்ளக தேர்தல் 20ம் திகதி புதன்கிழமை நடைபெற உள்ளது .தற்போதய நிலவரப்படி கரி ஆனந்தசங்கரி வெல்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளது .இது வரை 5300 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளர்கள் .தற்போதைய கள நிலவரப்படி சேர்ந்துள்ள உறுப்பினர்களில் 55வீதமானவர்கள் கரி ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக உள்ளார்கள் .இரு தமிழர் உட்பட நான்கு பேர் போட்டி போடுகின்றனர் .

Edited by Gari

ஹரி ஆனந்தசங்கரிதான் அநேகமாக வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார்.  இதற்காக அவர் நிறையச் செலவழித்திருக்கிறார் என்பது வீடியோக்களிலேயே தெரிகிறது.  வரும் தேர்தலில் அந்தத் தொகுதியில் விபரல் வெல்வதும் உறுதியான விடயம்.    இவர் கனேடிய அரசியலுக்குள் புகுவது எமது தமிழீழ மக்களுக்கு நன்மையையே பயக்கும்.  கனேடியப் பாராளுமன்ற உறுப்பினரான பின்பு அவரால் தமிழீழ விடயங்களில் தலையிட முடியாது.  ஐ.நா.விற்குச் சென்று தமிழீழ மக்கள் சார்பில் உரையாற்றவும் முடியாது.    அதேநேரத்தில்,  இவர் கனேடியப் பாராளுமன்ற உறுப்பினரான பின்பு இவரது சுயநலமும் இவரது ஆதரவாளர்களுக்குத் தெரிய வரும்.  அடுத்த தேர்தலில் இவர் வெற்றி பெறுவது கடினமே.  காலம் பதில் சொல்லும்.  பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் ஒருவரிடம் தினப்புயல் பத்திரிகை தொலைபேசியில் செவ்வி கண்டபோது…

 

 

பதினாறு புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டு அவர்களது பெயர்ப்பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் ஒருவரிடம் தினப்புயல் பத்திரிகை தொலைபேசியில் செவ்வி கண்டபோது…

கேள்வி :- இலங்கை அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் நாட்டின் அமைப்புக்கள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கனே டியத் தமிழர் பேரவையும் ஒன்றாகும். இந்நிலையில் இலங்கையின் இத்தடை அறிவிப்பானது கனடாவில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?

பதில்:- இலங்கைத் தமிழ்மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதும், ஜெனீவாத் தீர்மானம் தொடர்பில் கனேடியத் தமிழர்பேரவையின் இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தம் மிக்க கருத்துக்களும், செயற்பாடுகளும் காரணமாக கொதிப்படைந்துள்ள இலங்கை, இவற்றுக்கு பதில் சொல்ல விரும்பாத நிலையில் அதற்கு ஆதரவாக செயற்பட்ட எங்களை இப்போது தடைசெய்துள்ளதாகக் கூறியுள்ளது. இத்தடையானது கனடாவைப் பொறுத்தவரையில் எந்தவித விளைவு களையும் ஏற்படுத்தாது என்று கனே டிய அதிகாரிகள் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளனர்.

கேள்வி :- கனேடியத் தமிழர் பேரவை இதுவரையில் ஜனநாயக வழியிலே தமிழ்மக்களுக்காக முன்னெடுத்து வந்துள்ள செயற்பாடுகள் எவை என்று கூறமுடியுமா?

பதில்:- குறிப்பாக ஜெனீவா தீர்மானத்தை பொறுத்த வரை அமெரிக்கா, கனடா போன்ற நாடுக ளுடன் கனேடியத் தமிழர் பேரவை ஆதரவாகச் செயற்பட்டு வருகிறது. அமெரிக்காவின் தீர்மானத்தில் நாம் ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். இதுவரை காலமும் இலங்கையில் பெரும்பான்மை பலத்துடன் தெரிவு செய்யப்பட்டு வருகின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் நாங்கள் நெருங்கிய உறவுகளை பேணி அவர்களுக்குத் தேவையான உதவி களை வழங்கி வருகின்றோம். கனடாவிற்கு வருகை தரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் கனேடிய அரசமட்டத்தினருக்கும் இடையி லான சந்திப்புக்களை மேற்கொள்ள தேவையான ஒழுங்குகளைச் செய்து வந்திருக்கின்றோம். மொத்தத்தில் இலங்கை தமிழ் மக்கள் அரசியல்விடிவு பெற எங்களால் முடிந்த பங்களிப்புக்களைத் தொடர்ந்தும் செய்து வருகின்றோம்.

கேள்வி :- இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் கனடாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு தமிழ்மக்களுக்கு ஆதரவாகச் செயற்படும் செயற்பாட்டாளர்களை கனேடிய அரசுடன் இணைந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது இச்செய்தி உண்மையா?

பதில்:- இச்செய்தியில் எந்தவித உண்மையுமில்லை. கனடா பாதுகாப்புத் துறையுடன் கனே டியத் தமிழர்பேரவை நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றது. இதனால் இலங்கை அரசாங்கத்தின் அப்படியான தேவையில்லாத கனவுகள் எப்போதும் பலிக்காது என்பதை தெட்டத்தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்.

கேள்வி :- முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மனிதாபிமானமற்ற போரின் எதிரொலிப்பு இன்றைய ஜெனீவாத் தீர்மானம் என்று பரவலாகக் கூறப்படும் நிலையில், இத்தீர்மானமானது தமிழ்மக்களுக்கு சாதகமான நிலமையை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?

பதில்:- ஜெனீவா தீர்மானத்தின் மூலம் இப்பொழுது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஒரு விசாரணைக்கான வழி பிறந்திருக்கிறது இலங்கையிலே நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு இது வழி சமைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையிலே தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய குற்றங்களை ஆராய சர்வதேச நிபுணர் குழு ஒன்றின் அவசியமே ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையாகும். ஆகவே அந்த விசாரணைகள் மூலம் பல உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படும். இவை எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய பல விடயங்களை உருவாக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை

கேள்வி :- இலங்கையில் வாழும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதனால் தான் இப்பதினாறு அமைப்புக்ககளும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என்று கருதலாமா?

பதில்:- இந்த 16அமைப்புகளில்; ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்புகளும் உள்ளடங்குகின்றன. ஆகவே பதினாறு அமைப்புக்கள் என்று சொல்லமுடியாது. கனடா விலே சட்டபூர்வமாகவும் ஜனநாயக ரீதியிலும் இயங்கும் அமைப்புகளை உலக நாடுகளில் ஜனநாயக ரீதியி லும் சட்டபூர்வமாகவும் இயங்கும் அமைப்புகள் என்றுதான் நாம் கூற முடியும்.

அந்த வகையிலே நாங்கள் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மட்டுமல்ல எல்லா இன மக்களுக்கும் அவர்களுடைய ஜனநாயக சுதந்திரம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுடைய ஊடக சுதந்திரம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களுடைய அரசியல் சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பாக கனேடிய தமிழர் காங்கிரஸ் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்திருக்கிறது. தவிர தமிழ் மக்களின் அரசியல் விடிவிற்காய் பாடுபடுகின்ற அதே வேளை இலங்கையில் உள்ள மற்றைய இனங்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளையும் நாம் தொடர்ந்து எமது அரசமட்டத்தின் கவனத்திலே கொண்டு வந்திருக்கின்றோம் என்பதை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி :- இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஓர் ஆயுதக்கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் புலம்பெயர் அமைப்புக்கள் செயற்படுவதாக இலங்கை அரசு குற்றம்சாட்டுகிறது. இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்:- கனேடிய தமிழர் பேரவை யைப் பொறுத்த வரையில் இலங்கை அரசாங்கத்தின் இக்கருத்தை அடி யோடு மறுக்கின்றோம். ஜனநா யக வழியில் நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கை அரசு இப்படியாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாயின் முதலில் அவற்றைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சவால் விடுக்கின்றோம்.

நாம் தமிழ்மக்களுக்கு மாத்திரம் குரல் கொடுப்பவாகள் அல்ல. இலங்கையில் அநீதி இழைக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் எமது எதிர்ப்புக்களை வெளியிட்டே வந்திருக்கின்றோம் உதாரண மாக உயர்நீதிமன்ற நீதியரசர் சிரானி பண்டாரநாயக்காவுக்கு எதிராக இலங்கையரசின் செயற்பாடு குறித்து அப்போது நாம் குரலெழுப்பியிருந்தமை யாவ ரும் அறிந்ததே. தவிர ஊடகவியலாளர்கள், சிங்கள மனித உரிமை ஆர்வலர்க்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் எமது கண்டனங்களை வெளியிட்டிருந்தோம்.

கேள்வி :- இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்தப்பட்டியலில் உள்ளவர்களுடன் இலங்கைத் தமிழ்மக்கள் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடாது என்றும் தடைசெய்யப்பட்டுள்ளவர்கள் இலங் கைக்குள் வரக்கூடாது என்றும் இலங்கை கூறியிருக்கிறதே இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

ஆம், இது உலகில் எங்குமே நடைபெ றாத ஒன்று. உறவுக்காரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறுவதும் அவர்கள் தாய்நாட்டுக்கு வரக்கூடாது என்று கூறுவதும் எவ்வகையிலும் நியாயமில்லாத ஒன்று. அந்தப்பட்டியலிலே என்னுடைய பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உண்மையில் நான் கனடாவின் சட்டத்திட்டங்களுக்கோ அல்லது இலங்கையின் சட்டதிட்டங்களுக்கோ அல்லது சர்வதேச சட்டங்களையோ மீறி நடந்தது இல்லை. இதுபோலவே எல்லா அமைப்புக்களும் ஜனநாயக வழியில் செயற்படுவதைத்தான் விரும்புகின்றன. தமிழ்மக்களுக்கும் எமக்கும் இடையிலான நெருக்கமான உறவை விரும்பாத நிலையிலும் சர்வதேச தமிழ்மக்கள் மற்றும் அமைப்புக்களுடன் இலங்கைத் தமிழர்க்கிடையிலான உறவுகளைத் துண்டிப்பதன் ஊடாக இலங்கையில் நடைபெறும் கொடுமைகள் சர்வதேச மட்டத்துக்கு செல்லாது என்று கருதுவதாலேயே இலங்கையரசு இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளது.

கேள்வி :- ஐ.நாவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்த இலங்கையின் நன்னமைதரக்கூடிய பிரதிபலிப்புக்கள் இல்லாதுபோனால் சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவுடன் மீண்டும் ஓர் ஆயுதப்போராட்டத்தை உருவாக்கும் நிலையில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் செயற்படுவதாக தாம் கருதுவதாக இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளமை குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்:- நிச்சயமாக அப்படி ஒரு நிலைப்பாட்டிற்குள் நாம் செல்லமாட்டோம். போர்க்காலத்திலும் சரி போரின் பின்னரான காலத்திலும் சரி நாம் சமாதானம் எனும் கருத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். ஆனால் வடக்கில் பெருந்தொகையான இராணுவத்தை அரசாங்கம் குவித்து வைத்துள்ளது. அதற்கு அரசாங்கம் கூறும் காரணமே மீண்டுமொரு ஈழப்போரை உருவாக்கும் முயற்சியில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் செயற்படுகின்றனர். ஆனால் இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாம் எப்போதும் தமிழ்மக்களின் நன்மைக்காக குரல்கொடுப்பவர்களே.

நன்றி.

நேர்காணல் :- இரணியன்

http://www.thinappuyalnews.com/?p=1232

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை, நீங்கள் விடயங்களை அரைகுறையாகத் தெரிந்து கொண்டு கருத்தெழுதுபவர். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல விடயங்களிலேயே என்ன நடந்திருந்தது என்பதை அறியாமல் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் என்றைக்குமே அரசியலை விளங்கிக் கொள்ளப் போவதில்லை என்பதும் நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்பதிலிருந்து விலகப் போவதில்லை என்பதும் உங்களின் பதில்களிலிருந்து தெரிகிறது. அதனால் மேற்கொண்டு நான் உங்களோடு விவாதிக்கப் போவதில்லை. வணக்கம்.////. நான் அரைகுறையாகத் தான் எழுதுபவன்.. நீங்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று பார்த்து விட்டு வந்து எழுதுபவர்... அப்படிப்பட்ட நீங்கள் பேசாமல் இருப்பது உத்தமம் தான்..

நீங்கள் யாரையும் பற்றி நன்றாகச் சொல்லிப் பழக்கப்படாதவர். புறணி பாடியே பழக்கப்பட்டவர். யாழ்களத்தில் இத்தனை கால உங்களின் எழுத்துக்களில் யாரையாவது பற்றி நன்றாகச் சொல்லி இருக்கின்றீர்களா என்ன... அதுவும் தமிழர் என்றால் உங்களுக்கு வயிற்றெரிச்சல், குமட்டல் வந்துதொலைக்கும்... அவதூறுகளை முழுநேர வேலையாகச் பேசுவது என்பது உங்களின் உயரிய கலை.

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.