Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த தேர்தலில் பங்கெடுங்கள்: பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  UK_tgte_election-seithy-20131008150.jpg

இந்து சமுத்திர பூகோள அரசியலில் தமிழ்த்தேசியம் இன்று ஒரு காரணியாக அமைந்துள்ள நிலையில், தமிழீழக் கோரிக்கையினை முன்னெடுத்துச் செல்லவும், நாடுகடந்த தமிழர் அரசியல் பலத்தினை வலுப்படுத்தவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் உங்கள் அனைவரதும் மாபெரும் பங்கெடுப்பினை உரிமையுடன் கோருகின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல்விடுத்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான தேர்தல் எதிர்வரும் (ஒக்ரோபர்) 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறுவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகின்றன. தற்போது வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தத்தம் நாடுகளில் தாக்கல் செய்து வரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரன் இந்த அறைகூவலை விடுத்துள்ளதோடு தமிழீழத் தனியரசு என்ற கோட்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உயிர்புடன் பேணிவருவதாக குறித்துரைத்துள்ளார்.

  

 

SWISS_election%20tgte.-seithy-20131008.j

 

 

SWISS_election%20tgte2-seithy-20131008-8

 

 

TGTE_election_Liste-seithy-20131008-847.

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=94504&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இம்முறை எமது தமிழீழ தேசப் பிரநிதிகளை சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்தும் நோக்கில்..தேர்வு செய்யும் இந்தத் தேர்தலில் மக்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கொசு மருந்தடிக்கும் அதிகாரமில்லா மாகாண சபைக்கு நிலத்து மக்கள் வாக்களித்தது போல

கொசு அடிக்கும் அதிகாரம் கூட இல்லா நட்டு கழண்டோர் அரசுக்கு புலத்து மக்கள் வாக்களிக்கோணும்.

உருத்திரகுமார் எப்படி இருந்த மனிசன், இப்படியாயிற்றுது.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு என்று பிரதிநிகள் உள்ளனர். அவர்கள் சர்வதேச அமைப்புக்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். மாநாடுகளை நடத்தி இருக்கிறார்கள். தாயக.. தமிழக மக்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழீழத் தாயகத்தின் அடையாளமாக இருக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்தை வேண்டி இருக்கின்ற ஒரு அமைப்பு அல்ல. ஒரு இனத்தின் தேசத்தின் அடையாளமாக இருக்கின்ற அமைப்பினர்.

 

இந்த அடிப்படையை கூட விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்.. கொசுவுக்கு மருந்தடிக்கிறது பற்றி தான் சிந்திப்பார்கள். சிறீலங்காவிற்கு ஐநாவே கொசுவுக்கு மருந்தடிக்கிற அமைப்பு என்றால் உங்கள் போன்ற அதிபுத்திசாலிகளுக்கு செவ்வாய்க்கிரகம் தான்.. உலகம்..! :D:icon_idea:

மகிந்தவின் தாளத்துக்கு ஆடி கொண்டு நுளம்புக்கு மருந்தே அடிக்காத கூட்டமைப்பையும் சர்வதேச அரசியல் தலைமைகளோடு தொடர்ந்தும்  சந்திப்புக்களை மேற்கொள்ளும் நாடுகடந்த அரசையும்  ஒப்பிடும் அளவிலை இருக்கு எங்கட  அறிவு...  :D

 

இப்பிடியே போனால் நிச்சயமாய்  கூட்டாட்சி கிடைக்கும்....  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தலிவர்கள், அமைச்சர் வேண்டாம், அமைச்சு செயலளாலர் மட்டத்திலாவது ஒரு சந்த்ஹிப்பை காட்டு க்களேன்.

நீங்கள் அரசுன்னு பெயர் வேனா வைக்கலாம், for western governments you are just another pressure group. A comical one at that.

  • கருத்துக்கள உறவுகள்

Sudan Peoples' Liberation Movement (SPLM) has invited Transnational Government of Tamil Eelam (TGTE) to visit Southern Sudan in the immediate aftermath of the vote for an independent state. TGTE is sending a delegation to participate in the celebrations and to discuss possibilities of assisting Southern Sudan in their development efforts through Tamil Diaspora expertise in selected fields. TGTE delegation will be received by the SPLM officials and will stay as guests of SPLM. They will also meet other foreign government leaders.

 

http://www.prweb.com/releases/2011/01/prweb4967874.htm

 

Transnational Government of Tamil Eelam Gets its FIRST OFFICIAL recognition.

 

Sudan Peoples` Liberation Movement (SPLM) has invited Transnational Government of Tamil Eelam (TGTE) to visit Southern Sudan in the immediate aftermath of the vote for an independent state. TGTE is sending a delegation to participate in the celebrations and to discuss possibilities of assisting Southern Sudan in their development efforts through Tamil Diaspora expertise in selected fields. TGTE delegation will be received by the SPLM officials and will stay as guests of SPLM. They will also meet other foreign government leaders.

 

http://www.lankanewspapers.com/news/2011/1/63838_space.html

 

TGTE meets Canadian Foriegn minister in UK

420034_310758385637665_1540088255_n.jpg

 

https://www.facebook.com/media/set/?set=a.310757132304457.71447.196882153691956&type=1

 

இன்னும் இன்னும் ஆதாரம் கொண்டுவான்னு சின்னப் பிள்ளை கணக்கா கேட்கிறதில்லை. உலகத்தை பெட்டிக்கு வெளில வந்து பாருங்க. புரியும்..!

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஆதாரம், சூடான் அதுவும் நாடு அமைய முன் உங்களை கூப்பிட்டிருக்கு.

யாழ்ப்பாணம் அண்ணா கோப்பிக்கு இத விட பெரிய சர்வதேச அங்கீகாரம் இருக்கும் போல. :)

சத்தியமா சொல்லுரன் நெடுக்கு நீங்கெல்லம் இப்படி ஆதாரம் கொடுத்தா உருத்திரனுக்கு தாங்காது.

என்னதான் சொன்னாலும் மனுசனுக்கு கொஞ்சம் மேல விசயம் இருக்கு. பாவம் சேர்க்கை ஆரியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த உகண்டாவுக்கு போனால்.. கூவுறீங்க. தென் சூடான்.. எங்களுக்கு தேடி வந்து ஆதரவு தருவது தான் குடைச்சலா இருக்கோ...! நாடு அமைந்த பின்னும்.. அவர்கள் விசேட விருந்தினராகச் சென்றிருந்தார்கள்..!

 

என்ன.. உங்களுக்கு சிலதைக் காணும் சகிக்கும் மனப்பான்மை இல்லை. எல்லாத்தையும்..  சிங்கள மேலாதிக்க வெறிக்குள் இருந்தே பார்த்துப் பழகி.. வாழ்ந்து விட்டீர்கள்.

 

நீங்கள் விரும்பாவிட்டாலும்.. விரும்பினாலும்.. நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு நாள் தனது இலக்கை அடைந்தே தீரும்..! நாய்கள் குரைக்குதென்று சந்திரன் ஓடி ஒளிவதில்லை..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்னாயிடிச்சு"

உலகத்திலை என்ன நடக்குது எண்டு சொல்லிப்போட்டு பொது கருத்துக்களங்களுக்கு வாங்கப்பா...

இது அண்மையில் நடந்தது...

http://www.youtube.com/watch?v=0xzDQVEajhQ

தென் சூடான் பிரதிநிதி...

அமெரிக்க செனட்டர்... றம்சே

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தல நீங்க ஒரு pressure group. அதால உங்களை ஜெனிவாவில பேசக்கூப்பிட்டாங்க. ப்ர்கீத் எனும் தனிமனிதனின் மனைவியையும் கூடத்தான் கூப்பிட்டாங்க.

மற்றது நீங்களே ஒழுங்கு செய்த கூட்டத்தில மற்ற நாட்டு கொடிகளை வைச்சு நீங்களே செய்த டிராமா. எனது கேள்வி இப்பவும் இது தான்

சர்வதேச தலிவர்கள், அமைச்சர் வேண்டாம், அமைச்சு செயலளாலர் மட்டத்திலாவது ஒரு சந்த்ஹிப்பை காட்டு க்களேன்

சர்வதேச தலிவர்கள், அமைச்சர் வேண்டாம், அமைச்சு செயலளாலர் மட்டத்திலாவது ஒரு சந்த்ஹிப்பை காட்டு க்களேன்

மேலை இருக்கு திரும்பி பாருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்னாயிடிச்சு"

 

சிரிச்சு புண்ணாகி இராது. உங்களால் முடியாததை மற்றவன் சாதிக்கிறானே என்ற எரிச்சலில் ஆகி இருக்கும். அது அப்படியே அப்பட்டமாகத் தெரிகிறது இங்கு. நீங்கள் எல்லாம் தமிழர்கள...???! :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் உங்கள் 5 வருட சாதனை என்றால் - நான் தமிழன்னாக இல்லை என்றே ஆகட்டும். :)

தல இதில யாரு ஒரு நாட்டின் அமைச்சர், அல்லது அமைச்சு செயலாளர்.

இதுதான் உங்கள் 5 வருட சாதனை என்றால் - நான் தமிழன்னாக இல்லை என்றே ஆகட்டும். :)

தல இதில யாரு ஒரு நாட்டின் அமைச்சர், அல்லது அமைச்சு செயலாளர்.

பாராளுமண்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதி நிதிகள் ,கொள்கைகளையும் சட்டங்களை இயற்றும் பாராளுமண்றில் அங்கத்துவர்... இதில் அரசு அதிகாரிகள் மக்களுக்காக வேலை செய்பவர்கள் அவர்களால் என்னங்க பிரியோசனம்...??

சரி உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கு பிடிச்சு காட்டினால் தான் நம்புவியளோ...??

தென் சுடானில் அதிகாரிகள் சம்பந்தமாய்

https://www.facebook.com/video/video.php?v=1496007218994

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயாண்ணா.. உதுகள் எங்கினையோ.. பொந்துக்குள்ள இருந்திட்டு இப்பதான் வெளில எட்டிப்பார்க்குதுகள். அதுகள் நினைக்குதுங்க.. வெளிலும் பொந்து தான் இருக்கென்று. உதுகளுக்கு விளங்கப்படுத்தி விளங்கிற மாதிரித் தெரியல்ல..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டது அமைச்சு செயலாலர்கள் அல்லது அமைச்சர்கள் அல்லது நாட்டுதலைவர்கள். எல்லா நாட்டிலயும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருப்பார், சு சாமியை போல், சிவாஜிலிங்கத்தை போல், யாராவது கூப்பிட மாட்ங்காளா என்று. அவுங்க ரெண்டு ரோல்ச கொடுத்தா வந்த்ஹு பேசுவாங்க. நான் கேட்டது கொள்கை வகுக்கும் அதிகாரிகளை அல்லது முடிவெடுக்கும் தகுதியுள்லா அரசியல் தலைவர்களை.

தென் சூடான் - அவுங்களே உலக வரிசையில் கடைசியில் இருக்கும் ஒரு ஏழை நாடு. அவுங்க உங்களுக்கு அங்கீகாரம் தாரது நினைச்சு பூரிக்கிரீங்க, அதுவும் அரசு- அரசு அங்கீகாரம் இல்லை. சும்மா வந்த்ஹு பராக்கு பகிர அங்கீகாரம்.

குர்ஷித் வேணாம் ஒருக்கா பீரிஸ் போய்கதச்சாலே போதும் பிச்சைக்கார தென் சூடானும் உங்களை கைவிட.

தயாண்ணா.. உதுகள் எங்கினையோ.. பொந்துக்குள்ள இருந்திட்டு இப்பதான் வெளில எட்டிப்பார்க்குதுகள். அதுகள் நினைக்குதுங்க.. வெளிலும் பொந்து தான் இருக்கென்று. உதுகளுக்கு விளங்கப்படுத்தி விளங்கிற மாதிரித் தெரியல்ல..! :D:lol:

 

நானும் இதைத்தான் நினைத்தேன்... நீங்கள் சொல்கிறீர்கள்... :huh:

 

நான் தொண்டனாக இருக்கிற குறூப்பை விட மற்றவை செய்கிறார்கள் எண்டால் கிண்டல் குணம் வாறது சகஜம் தானே...??  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் பிச்சைகார தென் சூடான் என்னை கூப்பிட்டு தொங்குமான் கறி தரேல்ல எண்டு எனக்கு ஒரே கடுப்பு. :)

குர்ஷித் வேணாம் ஒருக்கா பீரிஸ் போய்கதச்சாலே போதும் பிச்சைக்கார தென் சூடானும் உங்களை கைவிட.

 

சும்மா சந்திச்சா போலை பிரச்சினையை மாத்த ஏலாது அதுக்காக எதையாவது கொடுக்க முன் வரவேண்டும்... 

 

கூட்டங்களிலை வந்து பேசும் பாராளுமண்ற உறுப்பினர்கள் தான் தேவையான அழுத்தங்களை பாராளு மண்றிற்குள்ளும் வைக்கிறார்கள்...   தேவையான  வகையில் குடுக்கப்படும் அழுத்தங்கள் தான் இண்டைக்கு  இலங்கைக்கு கொமன்வெல்த் கூட்டத்துக்கு போவதா விடுவதா எண்டு மன்மோகனையே சொல்ல முடியாமல் வைத்து இருக்கிறது...   ஐநா கூட்டத்துக்கு அமெரிக்கா போன மகிந்த  ஒபாமாவுடன் பணம் கொடுத்து படம் எடுக்கும் நிலை....    அதே கூட்டத்துக்கு போன மன்மோகனை கூட மகிந்தவால்  சந்திக்க முடியாமைக்கு  காரணம் நிலையானது ...

 

சனல் 4 க்கு படம் கொடுத்தாலும் ஆதாரங்களை சேகரித்தாலும் எல்லாத்திலையும் புலம்பெயர்ந்தவனின் வியர்வை...    அந்த வியர்வையை தான்   மாகானசபை தேர்தல் ஆக்கி குளிர் காயுது  கூட்டமைப்பு... 

ஓமோம் பிச்சைகார தென் சூடான் என்னை கூப்பிட்டு தொங்குமான் கறி தரேல்ல எண்டு எனக்கு ஒரே கடுப்பு. :)

சூடான் பிச்சைக்காறன் நாடு இல்லை... 

 

சூடான் போராலை பாதிக்க பட்டதாலை வளராமல் இருக்கலாம்....   இருக்கும் வளங்களின் படி பார்த்தால்  அது ஒரு பணக்காற நாடு... 

 

உலகுக்கு தேவையான அரபிக்பசை  சூடானில் இருந்து 80%  வளங்குகிறது... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தல,

நீங்கள் கூப்பிட்ட ரோல்சுக்கு அலயுற கூட்டம் சொன்னதால சிங்கு பின்னடிக்கேல்ல. மற்றது எந்த தமிழரல்லாத இந்த்ஹியரும் நட்டு கழண்ட்டொர் அரசை திரும்பியும் பார்க்கேல்ல.

2009 முதலே தேர்தல் நடத்துவம், 13 பிளஸ் கொடுப்பம் என்று அரசு சிங்குக்கு சொல்லீட்டுது. இத சிங்கே பலதடவை சொன்னது. இப்ப அரசு அதை செய்யாமல் இழுத்தடிப்பதால் சிங்கு இப்படி மக்கர் பன்னூது.

அத்தோடு லோக்சபா எலக்சனும் தமிழகத்தின் சீட்டுகளும் இன்னொரு காரணம்.

ஆனா நீங்கள் தென்சூடானை போய்பார்ததால தான் இது நடந்தது என்பது சுவையான கற்பனை, நகைச்சுவையும் கூட.

அரபிக் பணியை வச்சு தென்சூடான் ஒன்றையும் ஒட்ட முடியாது. ஆனா சிலசமயம் அங்கே எண்னை இருக்கெண்டீனம்.

அப்படி இருந்தா ஒரு காலம் அவை பணக்கார நாட வரக்கூடும்.

ஆனா அதுக்கு பிறது நாகாஅ வோ அப்பிடி என்றால் எண்டு கேப்பினம்.

ஏற்கனவே ஐநா அங்கத்துவம் கிடைத்த பின் தென் சூடான் உங்களை முன்பு போல சேர்க்கிறதில்லையாம் என்று கேள்வி.

தன் சூடானும் உங்களை காட்டி விடும் நாள் தொலைவில் இல்லை.

இண்டைக்கும் முயற்சியே செய்யாமல் இருக்கும் உங்களை  பலர் இருக்கிறது எனக்கு ஆச்சரியமாக இல்லை...    அதிலை  எதையுமே இதுவரை செய்யாத கூட்டமைப்பை  தூக்கி பிடிக்கும் ஆக்கள் சொல்வதுதான்  ஆச்சரியம்... 

 

டயஸ்போராவை சாடும் மகிந்தவுக்கும்  சிங்கள இனவாதிகளுக்கும் விளங்கினது  கூட்டமைப்பின் வால்பிடிகளுக்கு விளங்காதது அவர்களின் இயல்பு எண்டு போட்டு விட வேண்டியது தான்...

புலம்பெயர்ந்தவர்கள் செய்வது போதாது எண்டதை வேண்டுமானல் ஒத்துக்கொள்ளலாம் , ஆனால் செய்யவில்லை எண்டதோ செய்தவைகள் வேலைக்காவாது எண்டதோ அரை வேக்காட்டு தனம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
TGTE பல ஆயிரம் பண மோசடி

 

http://www.youtube.com/watch?v=wtqKWwUoh18

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் நிராகரிக்கும் நிலையே காணப்படுகிறது.
ஓரு அரசாங்ம் என்றால் அதற்குரிய அரச இயந்திரம் இருக்க வேண்டும்..கடந்த 3 வருடகாலத்தில் இதை நான் பல தடவை உருத்திராவிடம் நேரடியாக கூட எடுத்துச் சொல்லிலும் அதை அவர் ஒத்துக்கொண்டும் எதுவும் செயலில் நடக்கவில்லை.நாங்களே மந்திரிகள் நாங்களே சர்வ வல்லமை படைத்தவர்கள் என்று தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டிக்கொண்ட நாடுகடந்த அரசாங்கத்தின் மந்திரிகள் அடித்த கூத்துக்கள் சொல்லி மாளாது.
இது பற்றி இந்த திரியில் இன்று இரவு விரிவாக எழுதுகிறேன்.அதாவது இந்த அமைப்பை வலுப்படுத்த  நான் எடுத்த முயற்சிகள் அதற்கு எதிராக மந்தி(ரி)களால் செய்யப்பட்ட வெட்டி ஓடல்கள் பரிதி லண்டனில் வைத்து என்னை சந்தித்தித்த போது ஒரு மந்தி(ரி) அவரை சந்தித்து பேசியதின் ஒலிப்பதிவை காண்பித்தார்.அதில் அந்த மந்திரி கூறிய போட்டுக்கொடுப்புகள் பின்னர் அதே மந்திரி இந்தப்பக்கம் வந்து ரிசிசியின் கொட்டத்தை அடக்க வேண்டும் ரிசிசிக்கு எதிராக எப்படி செயற்படலம் என்று தமிழர் நடுவதற்கு  வழங்கிய ஆலோசனைகள் இதெல்லாம் அசிங்கமான பக்கங்கள்.இப்படிப்பட்டவர்களை தான் உருத்திரா நல்ல திறமையான செயற்பாட்டாளர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.
வழக்கமாக ஜிரிவிக்கு செய்தி அனுப்பும் நாடுகடந்த அரசாங்கம் என்மூலமாக அனுப்புவது வழக்கம் அல்லது அனுப்பும் செய்தியில் எனக்கு ஒரு பிரிதி அனுப்புவது வக்கம்.அனைத்து செய்திகளும் கடந்த காலத்தில் இவ்வாறுதான் அனுப்பப்பட்டன.ஆனால் கடைசியாக பாரிசில் நடந்த தேர்தல் கூட்டம் பற்றி அறிவிப்பு தொடர்பான செய்தி எனக்கு அனுப்பப்படவில்லை. நான் அதை ஜிரிவியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்.நான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கம் அவர்களுக்கு இருந்தது. கடைசியாக அந்தக் கூட்டத்தில் கலந்த கொண்டவர்களின் எண்ணிக்கை 9 பேர். ஓரு இலட்சம் பேர் இருக்கும் பாரிசு நகரத்தில் ஒரு கூட்டத்துக்கு 9 பேர் மட்டும் வருகிறார்கள் என்றால் அதற்கு யார் கராணம்?
ஏனக்கு விபரம் தெரிந்த காலத்தல் செல்வாநாயகம் ஜீ.ஜீ.பொன்னம்பலம் திருச்செல்வம் என்று பெரிய பெரிய கியூசிகள் சட்ட மேதைகள் எல்லாம் அரசியலில் இருந்தார்கள்.இவர்கள் எல்லாம் நாங்கள் சர்வதேசத்துடன் பேசுகிறோம் பலத்தீனம் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது.கடாபி எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இந்தியா எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. சுர்வதேச சூழுல் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்றெல்லாம் மேடைகளில் முழங்கியதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். கேட்டிரு;கிறேன். ஆனால் நடந்தது என்ன? இப்ப இவர்கள் வரலாறு திரும்புகிறது?
நூனும் கடந்த தேர்தலின் போது இந்த அமைப்பை உருவாக்குவதன் மூலம் புலம்பெர்ந்த தமிழர்களின் பலத்தை சனநாயக முறைப்படி ஒன்றிணைப்பதன் மூலம் எதையாவது உருப்படியாக செய்யலாம் என்று நினைத்து அதற்காக கடுமையான எதிர்ப்புகள் தனிநபர் தாக்குதல்களுக்கு மத்தியில் உழைத்தேன்.
ஆனால் பலந்தான் அதிகாரத்தின் அடிப்படை என்பது பலம் தான் பிழைப்பு வாதத்தின் அடிப்படை எனபதை கண்டது தான் மிச்சமாகியது.அதனால் தான் இந்த தேர்தலில் என்னை நிற்கும்படி பல நண்பர்கள் வற்புறுத்திய போதும் நான் அதற்கு மறுத்துவிட்டேன்.
நான் திரு.உருத்திர குமாரன் அவர்களிடம் பணிவாக கேட்பது இது தான் இந்தத் தேர்தலை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் புறக்கணித்தால் தயவு செய்து இந்த அமைப்பை கலைத்துவிடுங்கள் என்பதேயாகும்.
டக்களஸ் பாணியில் ஐந்து பத்து வாக்குகளால் தெரிவான மக்கள் பிரதநிதி போட்டியின்றி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்று தயவு செய்து பம்மாத்து அரசியல் நடத்த வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.