Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வட மாகாண சபை ஆவண செய்யவேண்டும் - சந்திரநேரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு தலைமையில் ..இது சென்ற வருடன் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது...

தம்பி சிறிலிங்கம்,

அம்பாறை மாவட்ட முன்னாள் பாரர்ளுமன்ற உறுப்பினர் திரு.சந்திரகாந்தன் எப்ப நீங்கள் சொல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் ? ஒருக்கா விளக்கம் சொல்லுவியளோ ?

ஏற்கனவே ஒருமுறை 6வது பக்கத்தில கேட்டிருந்தேன். நீங்கள் முதலீட்டு முயற்சிகளை ஒருங்கிணைக்கிறதில மறந்திட்டியள் போல ?

சந்திரகாந்தனுக்கு நல்லது செய்வீங்களெண்டுதான் இன்னும் நம்புகிறோம்.

ஏற்கனவே றிஷி என்றொரு இளைஞர் சில வருடம் முதல் உங்களது ஆர்வம் போன்று புலம்பெயர் தமிழர்களிடம் வந்தார் சந்தித்தார் பேசினார் அதையெல்லாம் நம்பி நமது மக்களும் முதலிட்டார்கள். பிறகு றிஷியை வலைபோட்டு இணையமெல்லாம் தேடி ரெலிபோனிலயும் தேடினது வரலாறு. ஆனால் வடை போச்சு.

வரும் நவம்பர்1-2 தேதி ஜேர்மனி - வூப்பர்டால் வர அங்குள்ள தமிழர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...சந்திக்க விரும்புவர்கள் நேரடியாக என்னைச் சந்திக்கலாம்... மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும்...

விபரத்தை தாங்கோ நானும் உங்களை சந்திக்க வருகிறேன்.

  • Replies 132
  • Views 15k
  • Created
  • Last Reply

ஏற்கனவே றிஷி என்றொரு இளைஞர் சில வருடம் முதல் உங்களது ஆர்வம் போன்று புலம்பெயர் தமிழர்களிடம் வந்தார் சந்தித்தார் பேசினார் அதையெல்லாம் நம்பி நமது மக்களும் முதலிட்டார்கள். பிறகு றிஷியை வலைபோட்டு இணையமெல்லாம் தேடி ரெலிபோனிலயும் தேடினது வரலாறு. ஆனால் வடை போச்சு.

ரிசி புலம்பெயர் நாடுகளில் உள்ள கள்ளப் புலிகளுக்கு ஒத்துளைக்க மறந்ததால்...அவரைப் பற்றி அதிர்வு உட்பட அத்தனை கள்ளப் புலிகளும் சந்தேகம் கொண்டு காட்டிக் கொடுத்து..அனைத்துத் திட்டங்கலையும் நாசமாக்கினயல் எண்டு தெரியாதோ ???? - புலிக்கு கூசா தூக்காத யாரும் மக்களுக்கு வழிகாட்டக் கூடாதா???  புலிப் பெண்டன்ல மாலை போட்டவனெல்லாம் புலியா ??? போடாங் கொய்யாலே...

புலியைச்சாட்டி வாழும் நீங்கள் தலைவரா வந்து தமிழரைக் காத்தருள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களையே புலியாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களா  சிறிலிங்கம் ? அல்லது புலியைக்காட்டி இங்கு புரட்சி செய்யும்  உங்கள் பின்னே தமிழர்படை அணிதிரளச் சொல்கிறீர்களா  ?

ரிஷியால் நொந்து போன ஏமாந்தவர்கள் இந்தக்களத்தில் உங்கள் அபிசேகத்தை பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

சரி வூப்பெற்றால் வந்து தலைமை தாங்கும் உங்கள் தரிசன நிகழ்வுக்கு நானும் இன்னும் பல யாழ்கள உறவுகளும் வர விரும்புகிறோம். உங்கள் தரிசனத்தை எங்களுக்கும் தந்தருளுமாறு இத்தால் தயவோடும் பணிவோடும் வேண்டுகிறோம்.அருள்கூருமாறு அடியவர்கள் வேண்டுகிறோம்.

சிறிலிங்கத்தை யாழில் கேட்கத்தக்கவர்கள் யாழில் கேட்பதும் யாழில் உறுபினர்கள் அல்லாதவர்கள் சென்று சந்திப்பதும் நேரங்களை சேமிக்க உதவும்.

'கீரை வாங்கலையோ கீரை...’ என கீரைக் கட்டுகளைத் தலையில் சுமந்து தெருத்தெருவாக கீரை விற்பனை செய்யும் பெண்களை இப்போதும் பார்க்கலாம். சாதாரணமாகச் செய்யக்கூடிய இந்தத் தொழிலையே கொஞ்சம் வித்தியாசமாக ஃபேஸ்புக் மார்க்கெட்டிங் மூலம் செய்து மதுரை மாநகரத்தையே கலக்கி வருகிறார் செல்வம். தனது அம்மா தலையில் சுமந்து செய்துவந்த கீரை வியாபாரத்தைக் கீரை அட்டை என்கிற பெயரில் நவீனமாக செய்து வருகிறார்.

பால் அட்டை கேள்விப்பட்டிருக் கிறோம். அது என்ன கீரை அட்டை..? செல்வத்திடமே கேட்டோம்.

''இந்தத் தொழிலை தொடங்குவதற்கு முன்பு மூன்று மாதம் வரை கீரை குறித்து ஓர் ஆய்வு நடத்தினோம். எங்கெங்கு, என்னென்ன வகையான கீரைகள் இருக்கு, அதனுடைய அடக்க விலை என்ன, ஒவ்வொரு கீரையின் பயன்கள் என்ன என்பது போன்ற அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.

nav31a.jpg

அடுத்து, எங்கிருந்தெல்லாம் கீரையை வாங்குகிறோம், எந்தளவுக்கு சுத்தமானது என்றும் மக்களிடம் தெளிவுபடுத்துகிறோம். சோழவந்தான், கீழக்குடி, வாடிப்பட்டி, அழகர்கோவில், திண்டுக்கல் பகுதிகளில் இருந்துதான் கீரைகளைக் கொள்முதல் செய்கிறோம். தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, சிறு கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை, முடக்கத்தான் கீரை, வல்லாரை கீரை, பாலக் கீரை, சக்கரவர்த்தி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பிரண்டை, அகத்தி கீரை, நீராரை, முள்முருங்கை, லட்சக் கொட்டை, பருப்பு கீரை, பசலைக் கீரை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை மதுரை மக்களுக்கு தினமும் தந்து வருகிறோம்.

கீரை எங்கள் கைக்கு வந்ததும் அப்படியே கட்டுகளைக் கட்டி விற்பனைக்கு அனுப்புவதில்லை. அதைச் சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறோம். சகதி, மண், பூச்சிகள், கொசு முட்டைகளையெல்லாம்  அகற்றி முறைப்படி சுத்தம் செய்தபிறகே, வீடுகளுக்கு சப்ளை செய்கிறோம்.

nav31c.jpg

சுத்தமான கீரை வீடு தேடி வருவதால் மக்கள் ஆர்வமாக வாங்குகிறார்கள்.  காலை 6.30 மணிக்குள் பால் பாக்கெட் போடுவதுபோல கீரையையும் சப்ளை செய்கிறோம். ஒரு வீட்டிற்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் போடுகிறோம். அப்படியென்றால் ஒரு மாதம் 12 நாட்கள், ஒரு நாளைக்கு இரண்டு கட்டு என்றால் 24 கட்டு வரை ஒரு வீட்டுக்கு விற்பனை செய்கிறோம்.

வாரத்தில் எந்தெந்த கிழமைகளில் என்னென்ன கீரைகள் வேண்டுமென்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கிற மாதிரி அவர்களிடம் எழுதி வாங்கிக்கொள்கிறோம். இரண்டு கட்டு கீரை வாங்கினால் தள்ளுபடியும் தருகிறோம்.  இப்போதைக்கு 125 வீடுகளுக்கு கீரை சப்ளை செய்கிறோம்.

டோர் டெலிவரி போக, மதுரை அரசரடி மைதானத்தில் கடை போட்டும் கீரை விற்பனை செய்கிறோம். முதலீடு என்பது பெரிதாக இல்லை. ஒரு நாளில் தோராயமாக 750 ரூபாய் வரை முதலீடு செய்கிறோம். லாபம் 1,500 ரூபாய் வரை கிடைக்கிறது.

nav31b.jpg'உண்போம் கீரையை’ (UNBOM - Unit for Nurturing and Bridging organic merchandise) என்ற பெயரில் ஒரு விழிப்பு உணர்வு இயக்கமாகவும் ஆரம்பித்துள்ளோம்.

பாரம்பரிய விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம்; விவசாயிகளுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்கிறோம்; இயற்கையில் விளையக்கூடிய பொருட்களை சந்தைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

ஃபேஸ்புக் மூலம் கீரை பற்றிய தகவல்களைக் கொடுத்து அதன் பயன்கள் என்ன, எப்படி சமைக்கலாம் என்பது போன்ற விஷயங்களைச் சொல்லி சந்தைப்படுத்தி வருகிறோம். இந்த வியாபாரத்தைக் கீரை வியாபாரம்தானே என்றில்லாமல் புரொஃபஷனலாகச் செய்வதால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் பதிவு செய்தும் உள்ளோம். கீரை பிசினஸில் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை உழைத்தாலே போதும், நல்ல வருமானம் ஈட்டலாம்.''

பெரிய பிசினஸ் முதல் சின்ன பிசினஸ் வரை காலத்துக்கு ஏற்ப புதுமையாக யோசித்தால் நிச்சயம் வெற்றிதான் என்பதற்கு ஓர் உதாரணம், இந்த கீரை அட்டை!

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=71316

நன்றி நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...இணைப்பிற்கு நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

தயா அண்ணா,

உங்களின் கருத்துடன் உடன்படுகிறேன் ஆனால் கோழி பண்ணைகள் தொடங்ககூடாது என்ற கருத்தை தவற.

அதில்

டொரோண்டோவில் உள்ளூர் இயற்கை முட்டைகள் $9! ஒரு பவுண்ட் இயற்கை இறைச்சி $8! அடுத்த வருடம் நாங்களும் 300 வித விதமான உள்ளூர் குஞ்சுகளை வளர்க்க திட்டம். :) சோளம், கோதுமை போன்ற தானியங்களை நாங்களே வளர்த்து தீனி வேண்டும் செலவை குறைக்க திட்டம்.

எங்கை ஊரிலா அல்லது கனடாவிலா

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் அண்ணா. 300 கோழிக்கு மேல் வளர்க்க வேண்டும் என்றால் குவோட்டா வாங்கவேண்டும். குவொட்டா வாங்க $2 மில்லியன் டொலர் தேவை. பின் வியாபாரம் தொடங்க இன்னொரு $2 மில்லியன் தேவை.

கனடாவில் சிறு விவசாயிகள் இப்போதும் அரிதான பல வகை கோழிகளை வளர்க்கிறார்கள். அவைகளை வாங்கி இனத்தை பெருக்கி அந்த இனங்கள் அழியாமல் பாதுகாப்பதும் எமது நோக்கம்.

உலகம் பூரா பல சிறிய விவசாயிகள் இப்படி செய்கிறார்கள். பெரிய ஒரு சில நிறுவனங்களில் தங்கி இருப்பதையும் குறைக்கும் திட்டம்.

மற்றும் இயற்கை உணவை "REAL FOOD" என்று அழைப்போம்.

$2 டசின் முட்டைகளில் REAL முட்டைகளில் இருக்கும் சத்து இல்லை. காரணம், $2 டசின் முட்டை தயாரிக்கும் விதம் அப்படி.

ஒரு பெரிய வெளிச்சம் புகாத கூண்டுக்குள் பல்லாயிரகணக்கான கோழிகளை அடைத்து வைத்திருப்பார்கள். இவை தம் ஒரு வருட வாழ் நாளில் சில அடிகள் தான் உலாவி இருக்கும்.

அவைகளுக்கு முன் ஒரு நகரும் நாடாவில் ஜி.எம்.ஒ சோள தீனி 24 மணி நேரமும் ஓடும், அதே நேரம் கோழிகளுக்கு அடியில் அவைகளின் கழிவுகளை அகற்றும் நாடா ஓடும். பின் கழிவு நாடா சென்று தீனி நாடாவுடன் சேர்ந்து திரும்ப தீனியாக உண்ண வரும்.

இந்த கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த படியால் நீரில் எப்போதும் அன்டிபயோடிக் கலந்திருக்கும்.

இந்த கூண்டுக்குள் இருக்கும் மின் விளக்குகள் ஒரு நாளைக்கு இரண்டு இரவுகளை உருவாக்கி இந்த கோழிகளை நாளைக்கு இரண்டு முட்டைகள் போட வைக்கும்.

ஒரு வருடம் முடிந்த பின் இந்த கோழிகள் கழிவுகள் ஆகிவிடும். பின் அது இறைச்சிக்கு அனுப்பபடும்.

FOOD INC விவரண படத்தில் இதை விரிவாக காட்டுகிறார்கள்.

எமது வாடிக்கையாளர்கள் இதனால் தான் காசு கூட கொடுத்து இயற்கை உணவுகளை உண்டு நோய் நொடிகளில் இருந்து தம்மை காப்பாற்றுகிறார்கள்.

தமிழீழத்திலும் தன்சார் ஊர்கோழி வளர்ப்புகள் ஊக்குவிக்க படவேண்டும்.

உங்கள் விரிவான விழக்கத்துக்கு மிக்க நன்றி.இங்கும் இயற்கை கோழிகளுக்காக கிழைமை கணக்ல் காவல் இருந்து 4 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.எனக்கும் ஊரில சிறிய அனுபவம் இருக்கு.ஆனால் நவீன முறையில் ஏதாவது செய்தால் வெற்றி அடையலாம்.தேவைப்படும் போது உங்களை தொடர்பு கொள்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.