Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்வாழ் இளம்பெண்ணின் புத்தகம் - வன்னி இனப்படுகொலையின் சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்வாழ் இளம்பெண்ணின் புத்தகம் - வன்னி இனப்படுகொலையின் சாட்சியம்

"was I a stranger in my Homeland? has one two lives?" என்ற புத்தகத்தை எழுதியவர் 17 வயதே நிரம்பிய நோர்வே வாழ் ஈழத்து இளம்பெண் மாலவி சிவகனேசன். இந்த புத்தகத்தில் அவர் தனது மழலை பருவத்தில் தாயகமான வன்னி மண்ணில் ஏற்பட்ட அனுபவங்களையும் பாதிப்புகளையும் ஏக்கங்களையும் பதிவு செய்துள்ளார்.

மேலும் 2009ல் தான் விளையாடி மகிழ்ந்த வன்னி கடற்கரையில் குழந்தைகள் உட்பட ஆயிரமாயிரம் தமிழர்களை கொன்று குவித்தப்போதும் கூட உலக அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்னும் வினாவின் வெளிப்பாடாக தான் இப்புத்தகம் என்கிறார் மாலவி சிவகனேசன். இந்த புத்தகம் விரைவில் வெளிவரயிருப்பதை தொடர்ந்து மாலவி சிவகனேசன் தமிழ்நெட் இணையதளத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார்.
 
அந்த நேர்காணலில் அவர் கூறுகையில், நோர்வே ஈழ போரில் ஒரு முக்கிய பங்கு வகித்தும்கூட தமிழர்களுக்கு நீதி கிடைக்க நோர்வே பெரிதாக முற்படவில்லை. நோர்வே நாட்டின் அரசியல்வாதிகள் இனிமேலாவது தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் தேவைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இந்த புத்தகத்தை எழுதும் இடைப்பட்ட காலத்தில் அவர் முன்னாள் நோர்வே மாகாண செயலாளர் விடார் ஹெல்கெசன்,முன்னாள் சிறப்பு தூதர் மற்றும் தோல்வியுற்ற நோர்வே அமைதி தூதர் எரிக் சோல்ஹீம் உட்பட பலரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவித்தார். அந்த  சந்திப்பில் விடார் ஹெல்கெசன்னுடன் பேசியது சிறப்பாக அமைந்ததாகவும் அவர் மாலவி சொல்ல விரும்பிய கருத்துக்களை தெளிவாக புரிந்துகொண்டதாகவும் கூறினார்.
 
ஆனால் திரு. எரிக் சோல்ஹீம் மட்டும் விடுதலை புலிகளிடம் மிகுந்த குறைபாடுகள் இருப்பதாகவும், பிரபாகரன் அவர்கள் சிக்கலான நபர் என்றும் கூறியதால் அந்த உரையாடல் மாலவிக்கு திருப்தியை அளிக்கவில்லையென்றும், அதனால் தன்னுடைய புத்தகத்தில் அவரின் பதிவுகளை இணைக்கவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர்ந்து வாழும் தன்னை போன்ற பலருக்கும் தங்கள் தாயகம் மீது மிகுந்த ஈடுபாடும் அக்கரையும் இருந்தாலும் அங்கு நடக்கும் போரைக் குறித்து ஓர் ஆழ்ந்த தெளிவுயில்லை.
 
எனவே தாயகத்தின் வரலாறுமற்றும் விடுதலை போரின் வரலாறு பற்றியும் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்கு விவாதம்,கலந்துரையாடல் உட்பட பல பயிற்சிகளும் தேவைப் படுவதாக கூறினார். இதனால் இளைய தலைமுறையின் தலைமை பண்பும் சிறக்கும் என்றார்.
 
இதனைப்போன்று நித்யா நரேஷ்குமார்,ஒஸ்லோ பல்கலைக் கழக மருத்துவ மாணவியுடனான நேர்காணலில் மாலவி சிவகனேசன்,தான் தாயகம் சென்ற அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். 2003 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இருமுறை மாலவி தனது தாய்நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அப்பொழுது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களுடனான தங்கள் குடும்பச் சந்திப்பின் அனுபவத்தை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் இந்த புத்தகத்தில் தமிழர்களின் ஆட்சியின் போது ஒரு புலம்பெயர் தமிழ் சிறுமிக்கு ஏற்பட்ட தாயக அனுபவம் மற்றும் அப்பொழுது விடுதலை புலிகளோடு நிகந்த உரையாடல்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மாலவியின் நண்பர்களின் வாழ்வியல்கள், நோர்வேவேலிருந்து சென்று புலிகளோடு இனைந்து வன்னி இனப்படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்து வாழும் இளைஞனின் கதை, அவர் நண்பர்களின் காதல் கதைகள் மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே உள்ள கலாச்சார வேறுபாடுகள் பற்றியும் தனது புத்தகத்தில் மாலவி கூறியுள்ளார்.
 
இந்த புத்தகத்தை வருகின்ற 19ஆம் தேதி ”லிபிரிஸ்”(xlibris) என்னும் அமெரிக்கா சார் சுய வெளியீட்டு நிறுவனம் ஒன்றின் வாயிலாக மாலவி சிவகனேசன் வெளியிடயுள்ளார். இந்த புத்தகம் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி :தமிழ்நெட்

http://www.pathivu.com/news/27435/57//d,article_full.aspx

நன்றி - பதிவு

Edited by nochchi

ஆனால் திரு. எரிக் சோல்ஹீம் மட்டும் விடுதலை புலிகளிடம் மிகுந்த குறைபாடுகள் இருப்பதாகவும், பிரபாகரன் அவர்கள் சிக்கலான நபர் என்றும் கூறியதால் அந்த உரையாடல் மாலவிக்கு திருப்தியை அளிக்கவில்லையென்றும், அதனால் தன்னுடைய புத்தகத்தில் அவரின் பதிவுகளை இணைக்கவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர்ந்து வாழும் தன்னை போன்ற பலருக்கும் தங்கள் தாயகம் மீது மிகுந்த ஈடுபாடும் அக்கரையும் இருந்தாலும் அங்கு நடக்கும் போரைக் குறித்து ஓர் ஆழ்ந்த தெளிவுயில்லை.
 
நன்றி :தமிழ்நெட்

http://www.pathivu.com/news/27435/57//d,article_full.aspx

நன்றி - பதிவு

இவ்வாறான மனப்பான்மையினால்தான் எமக்கு இன்னும் தமிழீழம் கிடைக்கவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

மாலவி சிவகனேசன் அவர்கட்க்கு வாழ்த்துகள் இப்படியாண வெளியீடுகள் மிகவும் வரவேற்க்க வேண்டிய ஒன்று .

இந்த புத்தகத்தை எழுதும் இடைப்பட்ட காலத்தில் அவர் முன்னாள் நோர்வே மாகாண செயலாளர் விடார் ஹெல்கெசன்,முன்னாள் சிறப்பு தூதர் மற்றும் தோல்வியுற்ற நோர்வே அமைதி தூதர் எரிக் சோல்ஹீம் உட்பட பலரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவித்தார். அந்த  சந்திப்பில் விடார் ஹெல்கெசன்னுடன் பேசியது சிறப்பாக அமைந்ததாகவும் அவர் மாலவி சொல்ல விரும்பிய கருத்துக்களை தெளிவாக புரிந்துகொண்டதாகவும் கூறினார்.
 
ஆனால் திரு. எரிக் சோல்ஹீம் மட்டும் விடுதலை புலிகளிடம் மிகுந்த குறைபாடுகள் இருப்பதாகவும், பிரபாகரன் அவர்கள் சிக்கலான நபர் என்றும் கூறியதால் அந்த உரையாடல் மாலவிக்கு திருப்தியை அளிக்கவில்லையென்றும், அதனால் தன்னுடைய புத்தகத்தில் அவரின் பதிவுகளை இணைக்கவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர்ந்து வாழும் தன்னை போன்ற பலருக்கும் தங்கள் தாயகம் மீது மிகுந்த ஈடுபாடும் அக்கரையும் இருந்தாலும் அங்கு நடக்கும் போரைக் குறித்து ஓர் ஆழ்ந்த தெளிவுயில்லை.

 செல்வி மாலவி சிவகணேசனுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் அதேவேளை வன்னி இனப்படுகொலையின் சாட்சியம் என்ற ஆவணமாக இப்புத்தகம் வெளியிடப்பட்டிருப்பதால்  சமாதான காலத்தில் முக்கிய பங்கு வகித்த திரு. எரிக் சோல்கைம் பற்றிய பதிவுகளும் அவரின் கருத்துகளும் இதில் இடம்பெற்றிருக்கவேண்டும். அதை தவிர்த்தது மிக முக்கிய தவறு.   பொதுவாக போராட்ட தலைவர்கள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். அனைத்தையும் பதிவு செய்வதே ஆவணம். அதையே உலகம் ஏற்றுகொள்ளும். மேற்கு நாடுகளில் தனது கல்வியை மேற்கொண்ட  17 வயதான சிறுமி மாலவிக்கு இது தெரியாத ஒன்றல்ல. நிச்சயமாக அவரின் சொந்த முடிவாக இது இருக்காது என்பது எனது கருத்து. அவரை வழிநடத்திய குறுகிய மனப்பாங்கு கொண்டோரின் பங்கு இதில் உள்ளது.  எம்மவரின் இப்படிப்பட்ட குறுகிய மனப்பாங்கே எமது  நேர்மையான போராட்டம் தோற்கடிக்கபட்டதற்கான காரணம் என்பதில் ஐயமில்லை. புத்தகத்தில் எரிக் சோல்கைம் குறித்த பதிவுகள் தவிர்க்கபட்டது மட்டுமல்ல அதை ஏன் தவிர்த்தோம்  என்பது பகிரங்கபடுத்தபட்டது என்பதானது வடிகட்டின முட்டாள்தனம் என்பது எனது கருத்து.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் தங்களோடு ஒத்து வராத ஆட்களை துரோகி என்று ஒதுக்கின மாதிரித் தான்.மூன்றாம் தலைமுறையினர் கூட அப்படிச் சொல்லப்பட்டு வளர்க்கப்படுகின்றனர்.இன்னும் நூறு தலைமுறை போனாலும் விடுதலை சாத்தியமில்லை :(
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.