Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தோழர் தியாகு ஜயாவின் போராட்ட செய்தி உடனுக்குடன்

Featured Replies

தமிழ்த்தேசிய போராளி தோழர் தியாகுவின் உண்ணாவிரத போராட்டத்தின் அடுத்த கட்டம் பற்றி நடக்கும் அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் கூட்டு ஆலோசனைக் கூட்டத்திலிருந்து...

 

1384163_1440531529506484_289431958_n.jpg

 

1385979_647576431948636_304714028_n.jpg

 

1385099_1440531859506451_610707229_n.jpg

 

1374313_1440539676172336_853585163_n.jpg

 

1394180_1440539836172320_1292633011_n.jp

 

(facebook)

  • Replies 111
  • Views 10.5k
  • Created
  • Last Reply
1377368_656988284333926_541630380_n.jpg
 
தோழர் தியாகுவின் உண்ணாநோன்பு போராட்டத்திற்கு முன்பு இருந்ததை விட மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது.. சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர், பண்ருட்டி வேல்முருகன் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர், திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர், அதியமான் உள்ளிட்ட தமிழர் முன்னேற்ற கழகத்தினர், பிரபா செம்பியன் பிரிட்டோ தமிழ் உள்ளிட்ட மாணவர் இயக்கத்தினர், மற்றும் பல இயக்கத்தினரும் சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் அதிகமாக புரசைவாக்க்கதில் குவிந்ததை காண முடிந்தது

கலந்து கொண்ட அனைவரும் வேறுவடிவதில் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் உண்ணா நோன்பை கைவிடுமாறும் கேட்டு கொண்டனர், ஆனால் கோரிக்கையில் உறுதியுடன் இருக்கும் தியாகு "சரி பார்க்கலாம்" என்று சொல்லி இருக்கிறார், இன்னும் சில நாட்களில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் செய்யும் வலுவான போராட்டத்தை (வெளிப்படையாக இங்கே அறிவிக்க முடியாது) எதிர்பார்க்கலாம்

# இந்தியாவிற்கு தெரியாத மொழி "அகிம்சை" - மேதகு வே.பிரபாகரன்
 
(facebook)

1380532_10200305641197315_769844386_n.jp

 

சாகும் வரை உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு மறுப்பு. இன்றுக்கு மேல் உண்ணா நிலைத் தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் ஒவ்வொன்றாக இழந்துவிட வேண்டியதுதான். இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர் கவலை.

 

அடைந்தால் வெற்றி இல்லையேல் வீர சாவு என்ற முழுக்கத்துடன் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக்கூடாது, நடந்தாலும் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையுடன் இன்று பதிமூன்றாம் நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் தியாகு அவர்கள் தமிழ் அமைப்புகள் திரு.சீமான், திரு.வேல்முருகன் மற்றும் பலர் நேரில் வேண்டியும் சாகும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.

 

உங்கள் உடல் மோசமாகிவிடும் உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்ற கோரிக்கைக்கு ”என் உடல்தானே மோசமாகிவிடும் தமிழ் இயக்கங்கள் வலுப்பட்டுவிடும்” என்று உறுதியாக புன்னகையுடன் பதிலளிக்கிறார்.

 

மாணவர்கள் போராட்டத்தைக் கையிலெடுக்கவும். 15/10/2013 செவ்வாய்க்கிழைமை பிற்பகல் மூன்று மணிக்கும் திரு.வேல்முருகன் தலைமையிலும் 17/10/2013 திரு.சீமான் தலைமையிலும் தியாகுவின் கோரிக்கையை ஒட்டி பெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் பெரும் அளவில் இரண்டு போராட்டங்களிலும் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

 

(facebook)

வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை புரசைவாக்கம் உழைக்கும் மக்கள் மாமன்றத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் தோழர் தியாகுவை மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் டாக்டர் கப்ரிலே, பாலகிருஷ்ணன், அருள், பிராங்க்ளின், கலைராஜ், அந்தோணிசாமி , ஜெயபால் , மற்றும் பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்த காட்சி.

 

1375207_338966356249267_1066763265_n.jpg

 

(facebook)

தோழர். தியாகுவின் உயிரைக்காக்க அவரது கோரிக்கையை அனைத்து தமிழ் அமைப்புகளும் , கட்சிகளும் முன்னெடுப்பதாக வாக்குறுதி அளித்து, அதனடிப்படையில் அவர் பட்டினிப் போராட்டத்தினை கைவிடக் கோரிக்கை வைத்து இருக்கிறோம். தோழமை அமைப்புகள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் மே17 இயக்கம் முழுமையாக கலந்து கொண்டு பங்காற்றும் என்கிற முடிவுகளோடு, அனைத்து தோழர்களும் பின்வரும் போராட்டங்களில் கட்சி, இயக்க வேறுபாடு இல்லாமல் கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

வரும் 15 அக்டோபர் , செவ்வாய், மாலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர். வேல்முருகன் அவர்கள் முன்னெடுக்கும் பெரும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளாய் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

இதே போல 17 அக்டோபரில் , வியாழன், அன்று நாம் தமிழர் தோழர் சீமான் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திலும் அனைவரும் பெரும் திரளாய் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போராட்டத் தேதிகளை அறிவிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். விவரங்கள் கிடைத்தவுடன் பகிர்கிறோம். இதிலும் தோழர்கள் கலந்து கொள்வதும் அவசியம்.

அக்டோபர் 25இல் அனைத்து கட்சி, இயக்கத் தோழர்களை இணைத்து மே17 இயக்கம் சாஸ்திரிபவன் - இங்கிலாந்து தூதரகத்தினை முற்றுகை இடுகிறோம். இதிலும் கலந்து கொள்ள அழைக்கிறோம்

அனைத்து தமிழர் போராட்டங்களையும், கோரிக்கைகளையும் வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயம். கைகோர்ப்போம். இந்தியா-இலங்கை-அமெரிக்க-இங்கிலாந்து சதிகளை முறியடிப்போம்.

மே பதினேழு இயக்கம்.

 

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில தினங்களில் தோழர் தியாகு உயிரிழந்து விடுவார் என்றே அஞ்சுகிறோம். மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு கூட அவர் மறுத்து வருகிறார். தன் உயிரைக்கோடுத்தாவது தமிழ்ச் சமூகத்திற்கு உரைக்க வைக்க வேண்டும் என்று அவர் கருதினாலும், தியாகுவின் உயிர் நிச்சயம் விலை மதிப்பற்றது தான். தன் பிணத்தை கடந்து தான் இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அன்னா ஹ‌சாரேவின் கார்ப‌ரேட் ஸ்பான்ச‌ர் உண்ணாவிர‌த‌ நாட‌க‌ங்க‌ளுக்கு அடிவ‌ருடிய‌ த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள், தியாகுவின் போராட்ட‌த்தை திட்ட‌மிட்டு இருட்ட‌டிப்பு செய்து வ‌ருகின்ற‌ன‌.

1376635_10200305733239616_207294467_n.jp

 

1393634_10200305734799655_1455153958_n.j

 

1381170_10200305733199615_693837507_n.jp

 

995531_10200305733559624_1215850537_n.jp

 

1379414_10200305735999685_1983770703_n.j

 

1383704_10200305725439421_2104290239_n.j

 

1383962_10200305724999410_743900886_n.jp

 

1374067_10200305736839706_906061499_n.jp

 

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

996013_375017749298534_1845090862_n.jpg

 

(facebook)

தமிழ் நாட்டு அரசியலை எழுதி, கதைச்சு சிரிக்கிறார்கள், தங்களின் இந்த கீழ்த்தர அரசியலால்த்தான் தமிழீழம் இன்னமும்  பாதாழத்தில் என்பதை உணர்ந்துகொள்ள மறுக்கும் குசுகுசுவாதிகள். 

 

சட்டி பனையைப் பார்த்து கறுப்பு என்றதாம். அது பரவாயில்லை. சட்டியும் இன்னும் சட்டியாக இருக்கிறது. ஆனால் சில சிரி-லங்கங்கள் பானையைப்பார்த்து சிரிக்கும் போது தாங்கள் சட்டியாகத்தன்னும் இல்லை கல்வானோடுக்களாக சுக்கு சுக்காக உடைக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை உணருகிறார்கள் இல்லை.  :(

 

வாழ்க பல்லாண்டு தோழர் தியாகு. 

 

பையனுக்கும், துளசிக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தியாகு அவர்களின் உண்ணாவிரதச் செய்திகளை.... யாழில் இணைத்துக் கொண்டிருக்கும்.... துளசிக்கும், பையனுக்கும் நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

தியாகு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டாலும் பரவாயில்லை.. உண்ணாவிரதத்தை அவர் முடித்துக்கொள்ள வேண்டும்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

தியாகு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டாலும் பரவாயில்லை.. உண்ணாவிரதத்தை அவர் முடித்துக்கொள்ள வேண்டும்..! :(

 

எனது வேண்டுகோளும்... இதுவே...

 

1383481_527265170693402_1290827454_n.jpg

 

(facebook)


நேற்று தோழர் தியாகுவின் 13 ஆம் நாள் உண்ணாநிலை போராட்டத்தில், சீமான் அண்ணாவுடனான நேர்காணல்...

 

http://www.youtube.com/watch?v=j9K3-GqpLAU

 

(facebook)


நேற்று தோழர் தியாகுவின் 13 ஆம் நாள் உண்ணாநிலை போராட்டத்தில் தோழர் வேல்முருகனான நேர்காணல்.

 

http://www.youtube.com/watch?v=qKCpJ5mW0tg


நேற்று தோழர் தியாகுவின் 13 ஆம் நாள் உண்ணாநிலை போராட்டத்தில், போராட்ட குழுவுடனான ஊடக நேர்காணல்..

 

http://www.youtube.com/watch?v=8CzLRpP7x0M

 

(facebook)

தியாகு அய்யாவின் வெற்றி அல்லது வீரச்சாவு போராட்டம் 14வது நாளாக தொடர்கிறது. அவர் எப்பொழுது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சர்க்கரை அளவு மிகவும் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

தியாகு அவர்களின் உண்ணாவிரதச் செய்திகளை.... யாழில் இணைத்துக் கொண்டிருக்கும்.... துளசிக்கும், பையனுக்கும் நன்றி. 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாகு அய்யா தனது போராட்டத்தை உடல் நிலை கருதி முடித்துக்கொள்ள வேண்டும் என தமிழ் அமைப்புகள் நேற்று இரவும் இன்று காலையும் வைத்த கோரிக்கையை அய்யா நிராகரித்துவிட்டார். இந்நிலையில் அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அய்யா பேசுவதற்கே மிகவும் தடுமாறுகிறார். மாணவர்களும் மக்களும் இணைந்து போராட்டத்தை துவங்க வேண்டும் உடனடியாக

போராட்டப் பந்தல் அருகில் போலீஸ் குவிப்பு. பதட்ட சூழல்..

 

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ykmf.jpg மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தோழர் தியாகுவுக்கு போராட்டம் வெற்றி பெற வாழ்த்து சொல்லும் கீதா , கப்ரிலே. NAPM சார்பில் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 16 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை சென்னை, பாண்டி, கொச்சின், பெங்களூர் , ஹைதராபாத், மும்பை , போபால், பட்னா , ராஞ்சி ,புவனேஸ்வர் போன்ற இடங்களில் பிரச்சாரம் நடைபெறும் என்று தோழர் தியாகுவிடம் கூறப்பட்டது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலித் மக்களின் பாதுகாவலர்- தமிழ்த் தேசியவாதி தோழர் தியாகுவின் உயிர் காக்கப் பட வேண்டும் : --- கு. சௌந்தர ராஜன் வணக்கம். உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோழர் தியாகு உயிரைக் காக்க வேண்டுகின்றேன். நான் திருவாரூரில், தோழர் தியாகுவுடன் ஒரேப் பள்ளியில் படித்தவன். இவர் தந்தை ஒரு ஆசிரியர். இவர் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஏழைகளுக்காக, சமூகப் பொறுப்புடன் இளவயது முதலே பலப் போராட்டங்களை முன்னெடுத்தவர். போராட்டக் குழுவில் ,இவர் தோழர் லெனின் என்பவருடன் நெருங்கிப் பழகியதால் தலித் மக்கள் அனுபவித்த சாதிக்கொடுமைகளை நன்கு அறிந்தவர். "கள்*ர்" சமுதாயம் ஆதிக்கம் செலுத்தும் ஊர்களில் ஒருப் பழக்கம் வழக்கத்தில் இருந்து வந்தது(இன்றும் சில இடங்களில் தொடர்கின்றது). அங்கு "தாழ்த்தப் பட்ட சாதிகளில் திருமணம் நடந்தால் , அந்த தலித் மணமகளுக்கு "முதலிரவு" அந்த ஊர் ஆதிக்க சாதிப் பண்ணையாருடன் தான். அதன் பிறகுதான் அவள் கணவனுடன் குடும்பம் நடத்த முடியும்.இந்த விசயத்தில், தோழர் லெனினின் குடும்பத்தில் ஒருவர் நேரிடையாகப் பாதிக்கப் பட்டதைக் கண்டு வெகுண்டெழுந்த தோழர்கள் ஒன்றிணைந்து அந்தப் பண்ணையாரை தீர்த்துக் கட்டி, இந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கான சாதி வன்மைக்கும் மற்றும் பெண்களுக்கேதிரான வன்கொடுமைக்கும் ஒரு முற்றுபுள்ளி வைத்தனர். இவ் வழக்கில் கைது செய்யப் பட்ட தோழர் தியாகு அவர்கள் , வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தாமாகவே வாதாடினார் என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு அரசு கொடுத்த பரிசு "தூக்குத் தண்டனை". அரசுகள் என்றுமே முதலாளிகளுக்கு காவடி தூக்குவதும் போராளிகளை தண்டிப்பதையும் வாடிக்கையாய் கொண்டுள்ளன. தோழர் லெனின் அவர்களின் மகளையே திருமணம் செய்துக் கொண்டார். தியாகு அவர்கள் , கம்பிக்குள் சிறை என்னும் நூலை எழுதியுள்ளார்,அதில் ஒரு திராவிடர் கழக தோழரின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியுள்ளார். "நெல்சன் மண்டேலாவைப் பற்றி ஒரு நூல் எழுதி உள்ளார். கார்ல் மார்க்ஸ் னுடைய Das Capital எனும் நூலை மூலதனம் என்று மொழிப் பெயர்த்துள்ளார். சிறையில் இருக்கும் போதே சட்டம் பயின்றவர். மிகச் சிறந்த தமிழ் உணர்வாளர் மற்றும் தமிழ்த் தேசிய போராளி. சென்னை சென்ற பிறகு ஒரு பத்திரிகை நடத்தியது வரை எனக்கு தெரியும். ஊடகம் வாயிலாக , அவர் தமிழ் வழிக் கல்விக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பதை அறிந்து கொண்டேன். தற்பொழுது செய்திகளில் தியாகுவின் உண்ணாவிரதம் பற்றி அறிந்து இருந்தாலும், ஊடகங்களின் இருட்டடிப்பால் ,தொடர்ச்சியான செய்தியினைப் பெற முடியவில்லை. எனது மகன் ராஜ்மோகன் மூலம் தியாகு அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதை அறிந்து என் மனம் மிகுந்த வேதனை அடைந்தது. தியாகு போன்ற தமிழ் அறிஞர்கள் நமது பொக்கிஷம். அவரைப் போன்ற தலைவர்கள் இளைஞர்களை வழிநடத்திச் செல்ல உயிருடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே போராட்ட வடிவத்தை மாற்றி , கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாய் கேட்டுக் கொண்டு தோழர் தியாகுவை உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழர்களின் சார்பாகவும், தமிழ் உணர்வாளர்களின் சார்பாகவும், நான் சார்ந்திருக்கும் ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன். -கு சௌந்தர ராஜன் ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி தஞ்சாவூர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
zxp2.jpg
 
இந்த முக்கியமான செய்தியை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் தமிழீழத்து சொந்தங்களே.

இன்று 14 வது நாள் உண்ணாவிரதம். சாகும் வரை உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு மறுப்பு. இன்றுக்கு மேல் உண்ணா நிலைத் தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் இனியும் பொருமையுடன் இருந்தால் ஒவ்வொன்றாக இழந்துவிட வேண்டியதுதான். இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர் கவலை. அடைந்தால் வெற்றி இல்லையேல் வீர சாவு என்ற முழுக்கத்துடன் காமன்வெ மாநாடு இலங்கையில் நடக்கக்கூடாது, நடந்தாலும் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையுடன் நேற்று பதிமூன்றாம் நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் தியாகு அவர்கள் தமிழ் அமைப்புகள் திரு.சீமான், திரு.வேல்முருகன் மற்றும் பலர் நேரில் வேண்டியும் சாகும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார். உங்கள் உடல் மோசமாகிவிடும் உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்ற கோரிக்கைக்கு ”என் உடல்தானே மோசமாகிவிடும் தமிழ் இயக்கங்கள் வலுப்பட்டுவிடும்” என்று உறுதியாக புன்னகையுடன் பதிலளிக்கிறார். மாணவர்கள் பெரும் போராட்ட்த்தைக் கையிலெடுக்கவும் முடிவு செய்துள்ளார்கள். 15/10/2013 செவ்வாய்க்கிழைமை பிற்பகல் மூன்று மணிக்கும் திரு.வேல்முருகன் தலைமையிலும் 17/10/2013 திரு.சீமான் தலைமையிலும் தியாகுவின் கோரிக்கையை ஒட்டி பெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் பெரும் அளவில் இரண்டு போராட்டங்களிலும் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. நாம் இனியும் போராடவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது... தமிழக முழுவதும் போராட்டம் பரவட்டும்.

இனியும் ஒரு தமிழர் சாகக் கூடாது. தோழர் தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். நாம் செயலில் ஈடுபடுவோம்.

ஒவ்வொரு முறையும் தமிழர்கள் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிராக போராடும் போது யாராவது ஒருவரை தமிழ்ச் சமுகம் இழக்க நேரிடுகிறது . முத்துக்குமார், செங்கொடி , விஜயகுமார் போன்ற பல உணர்வாளர்கள் ஆற்றாமையால் தன்னையே தீக்கு இரையாக்கி உள்ளனர். அப்படி உயிர் நீத்தாலும் இந்திய அரசு அதை பற்றியெல்லாம் சட்டை செய்வதில்லை. தமிழர்களின் போராட்டங்களை எல்லாம் தமிழக அரசோ, இந்திய அரசோ மதிப்பதில்லை. இப்படி ஒரு நிலை இருக்க ஏன் தமிழர்கள் உயிர் துறக்க வேண்டும்? நாம் பல வழிகளில் போராடி நம் உரிமைகளை பெற்றுக் கொள்வோம்.

இப்போது 14 வது நாளாக உண்ணா நிலையில் இருக்கும் தோழர் தியாகு ஐயாவின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. தோழர் தியாகு தமிழர்களின் அறிவு சார் சொத்து. அவரை இழப்பது இந்தியாவிற்கு மகிழ்ச்சியை தான் தரும். ஆனால் தமிழர்களுக்கோ அது மாபெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை நாம் நிச்சயம் இழக்க முடியாது. அவரை காப்பாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

அதனால் தோழர் தியாகு தனது போராட்டத்தை முடித்துக் கொள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம். வயதான நிலையில் அவர் உயிர் எந்த நேரத்திலும் பிரிந்து விடும் அபாயம் உள்ளது என்பதை கருத்தில் வைத்து அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நாம் அனைவரும் தோழர் தியாகு ஐயாவிற்கு வேண்டுகோள் வைத்து அவரை உண்ணா நிலைப் போராட்டத்தை கைவிட செய்வோம். தமிழக அரசியல் தலைவர்கள், இயக்கங்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இதை வலியுறுத்துவோம். தமிழக மக்களாகிய நாம் இந்த போராட்டத்தை கையில் எடுப்போம். தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை மக்களாகிய நாம் இணைந்து முன்னெடுப்போம். அடுத்தடுத்து வரும் போராட்டங்களில் கலந்து கொண்டு நம் செயலில் ஈடுபடுவோம். அப்படியான செயலில் நாம் ஈடுபட்டால் தோழரின் உண்ணா நிலையை விரைவில் நாம் முடிவுக்கு கொண்டு வரலாம். உடனே செயல்படுவோம் தோழரின் உண்ணா நிலையை முடிவுக்கு கொண்டு வருவோம் .

 

1391786_729377510410435_1357543732_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
p71y.jpg
 
 

தோழர் தியாகு கைது செய்யப் படும் சூழல் உருவாகியுள்ளது. உண்ணாவிரதம் நடைபெறும் வாசுதேவன் சாலைப் பகுதியில் பெரும் போலீஸ்படை குவிக்கப் பட்டுள்ளது. உணர்வாளர்கள் உடனடியாக திரண்டு வரவும். தங்களுக்கு தெரிந்த ஊடக நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கவும்.

 

1383545_1440885806137723_1022601059_n.jp

 

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவர் கோட்டத்திலிருந்து வெளியேற்றிய அதே போலீஸ் அதிகாரி இன்று மீண்டும் தோழர் தியாகுவை போராட்டப் பந்தலில் இருந்து வெளியேற்ற வந்தார்.

அவரிடம் பேசி, வர முடியாது என்பதை தொழர் தியாகு போராட்டக் குழு மூலம் உறுதியாகத் தெரிவித்தார்.

 

 

k1y4.jpg

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.