Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கைக்கு உதவியது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கைக்கு உதவியது?

15 அக்டோபர் 2013

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு உதவியதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வடஅயர்லாந்து காவல்துறை சேவையைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச படையினருக்கு பிரித்தானியா இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

இரும்புப் பெண் என அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதமர் அமரர் மார்கிரட் தச்சர் காலம் முதலே பிரித்தானிய காவல்துறையினர் இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் இலங்கைப் படையினருக்கு பிரித்தனிய அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 2007ம் ஆண்டு முதல் சுமார் 3500 இலங்கை காவல்துறையினருக்கு பிரித்தானியா பயிற்சி வழங்கியுள்ளது. வடஅயர்லாந்து காவல்துறைச் சேவை உத்தியோகத்தர்களினால் வெளியிடப்பட்ட இரகசிய தகவல்களின் மூலம் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக குறித்த பிரித்தானிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97675/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மேல் நாடுகள்தான் அதே யுத்தத்தை விசாரணை செய்து நமக்கு விடிவும் வேண்டித்தருமாம். நல்ல ஜோக்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மேல் நாடுகள்தான் அதே யுத்தத்தை விசாரணை செய்து நமக்கு விடிவும் வேண்டித்தருமாம். நல்ல ஜோக்.

மகிந்த எங்களுக்கு உரிமைகளை தருவார் என்பது அதை விட பெரிய நகைச்சுவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டுச் சேர்ந்து எங்களை அழித்த அனைத்து நாடுகளையும் புறக்கணிப்போம். எங்கள் வீர உணர்வை, தன்மான உணர்வை அவர்களுக்கு காட்டுவோம்.

டேய் அடிக்காதே..

அண்ணை அடிக்காதைங்கோ..

ஐயா பிளீஸ் காப்பாற்றுங்கோ..

டேய் அடிச்சுப் போட்டியே... 

ஐயா, அவன் அடிச்சுப் போட்டான்.. ஒருக்கா விசாரியுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த எங்களுக்கு உரிமைகளை தருவார் என்பது அதை விட பெரிய நகைச்சுவை.

மகிந்த ஒரு மண்ணும் தானாய் தரார்.

அவர் தரக்கூடியது என்று இந்தியா எதை நினைக்கிதோ, அதை இந்தியா மூலம் பிரெசர் பண்ணி அவரை தர வைக்கோணும். இதுதான் சாத்தியமானதை கேட்பது.

மகிந்த தரக்கூடியது என இந்தியா நினைப்பது -13 பிளஸ்

இப்போதைக்கு அதை எடுத்து, பின் நாம் நகரவேண்டிய தூர இலக்கு - சமஸ்டி

ஒருநாளும் யாரும் ஆதரிக்க மாட்டாதது, நடைமுறை சாத்தியமில்லாதது - தனிநாடு

இதைத்தான்  சிங்களம் 100  வருடமாகச்சொல்லி  சொல்லி தமிழனை அடிக்குது.

இவனுக்கு ஏதாவது கொடுத்தால்

எம்மை கடலுக்குள் இறக்கிவிடுவான் என்று.......

கொஞ்சம் தலை கீழாக  யோசியுங்கோ

எல்லாம் புரியும்.........

மகிந்த ஒரு மண்ணும் தானாய் தரார்.

அவர் தரக்கூடியது என்று இந்தியா எதை நினைக்கிதோ, அதை இந்தியா மூலம் பிரெசர் பண்ணி அவரை தர வைக்கோணும். இதுதான் சாத்தியமானதை கேட்பது.

மகிந்த தரக்கூடியது என இந்தியா நினைப்பது -13 பிளஸ்

இப்போதைக்கு அதை எடுத்து, பின் நாம் நகரவேண்டிய தூர இலக்கு - சமஸ்டி

ஒருநாளும் யாரும் ஆதரிக்க மாட்டாதது, நடைமுறை சாத்தியமில்லாதது - தனிநாடு

இந்தியா தமிழர்களுக்கு - 13 + எதையும் தரபோவதுக்கான சாத்தியமே கிடையாது... தவிரவும் இலங்கையில் தமிழர்கள் சுயமாக வாழ்வது கூட இந்தியாவுக்கு எந்த நன்மையையும் தரப்போவதில்லை...

இலங்கையில் தமிழர் பிரச்சினை தீரும் போது இந்தியாவின் மேலான்மை இலங்கையில் சாத்தியம் இல்லாதும் தேவை அற்றும் போகும்... ஆதலால் இந்தியா பிரச்சினையை தீர்க்க மாட்டாது...

நல்ல உதாரணம் கிடப்பில் போடப்பட்ட சேது கால்வாய் திட்டம்... ! இலங்கையை கேந்திர முக்கிய மாக்கிய எண்ணை உலக அரசியலில் சிக்கிய ஈழத்தவனை மீட்க்க இந்தியாவால் செய்ய முடியும்... ஆனால் அது இந்தியாவுக்கே கெடுதல்... சீனா இலங்கயில் காலூண்றும் என்பதினால் என்பது ஒரு காரணம் ...

ஆகவே இந்தியா இலங்கையில் 13 + தரும் எண்டு பூச்சாண்டி காட்டாதீர்...

  • கருத்துக்கள உறவுகள்

வாயால நாம் அணைகட்டவில்லை, பாகிஸ்தான், இந்தியா, வங்கம் உருவாக ஏதுவாகக் புறக்காரணிகள் இருந்தன.

இந்தியா -1) 2ம் உலகப்போரில் யூகேக்கு உதவ, மார்ஷல் பிளான் மூலம் நாட்டை கட்டியெழுப்ப அமெரிக்கா யூகேக்கு விதித்த நிபந்தனை -படிபடியான சாம்ராஜ்யச் சுருக்கம். இந்தியா, ஆபிரிக்கா மேற்கிந்திய நாடுகள் எங்கினும்.

2) காலனிகளை பராமரிப்பது போரின் பின் பொருளாதார நலிவுற்றிருந்த யூகேயால் முடியாதிருந்தது.

3) யூகேயில் லேபர் கட்சியின் உருவாக்கமும், சுதந்த்ஹிர இந்த்ஹியாவுக்கு யூகே மக்கள் மத்தியில் குறிப்பாக அரச கொள்கையில் அழுத்தம் செலுத்த கூடியவர்கள் மத்தியில் ஏற்பட்ட ஆதரவும்.

4) காந்தியின் சாதுரிய அரசியல் நகர்வுகள்.

5) இன்னும் பல காரணிகள்.

பாகிஸ்தான் - மேலே சொன்ன காரணங்கள், இந்தியா வை உடைக்க வேண்டிய மேற்க்கின் தேவை, நேருவின் சுயநலம், ஜின்னாவின் தூர நோக்கு மற்றும் தன்னல்மில்லா தலைமை.

வங்கம்- எப்படியாவது காஸ்மீரிற்க்கான பாடத்தை பாகிஸ்தானுக்கு படிப்பிக்கும் இந்திராவின் மூர்க்கம். மற்றும் பனிபோர்.

இவை எவையுமே உங்களுக்கு பொருந்த்ஹாது.

கனடா புறக்கணிப்பது மனித உரிமை உள்நாட்டு விசாரணை மற்றும் ரூல் ஒப் லோ வை மதிக்க கூறியே அன்றி, தனிநாடு கொடுக்க சொல்லியில்லை.

தயவு செய்து தென் சூடானின் சுதந்த்ஹிரத்துக்கு முந்திய பிரதினிதியின் மச்சான் சப்போர்ட் பண்றார், போயில் ஆதரிக்கிறார் எனறு சொல்லாதீர்கள்

இப்படி எந்த புறக்காரணியும் அநுகூலமாயில்லாதவிடத்து , குறைந்தது இன்னும் 100 வருடங்களுக்கு உங்கள் தனிநாட்டு கோரிக்கை சாத்தியமில்லை. இதை சொன்னா தத்தி தனமா இதுக்கு என்ன வாய்பாடு பாவிச்சீங்க எண்டு கேக்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

தல 13+ ஐ தர மாட்டாத இந்தியாவை சீமானும் தியாகுவும் பிரெசர் பண்ணி தனிநாடு வரைக்கும் இறக்குவார்களா?

தமிழ்நாட்டின் 7.9 கோடி நமீதாவின் முந்தானையை விட்டு விட்டு இதை செய்யும் என்பது பகல் கனவு.

இதிலை எதுவும் நான் எழுதியதுக்கு பதில் இல்லை... இலங்கையில் இருக்கு கோந்திய முக்கியத்துவம் மேலை சொன்ன எந்த நாட்டுக்கும் கிடையாது...

இலங்கையில் இந்தியா மேலான்மை ( பெரியண்ணன் தனம்) செய்வதாக இருந்தால் தமிழர்களுக்கு பிரச்சினை இருந்து கொண்டே இருக்க வேண்டும்... அதுதான் விதி...

தல 13+ ஐ தர மாட்டாத இந்தியாவை சீமானும் தியாகுவும் பிரெசர் பண்ணி தனிநாடு வரைக்கும் இறக்குவார்களா?

தமிழ்நாட்டின் 7.9 கோடி நமீதாவின் முந்தானையை விட்டு விட்டு இதை செய்யும் என்பது பகல் கனவு.

இது அரவேக்காட்டு தனமானது... பதில் சொல்ல முடியாவிட்டால் கடைசி ஆயுதமான இந்த சொறி தனம் மட்டும் தான் உங்களை போண்றவர்களால் முடியும்...

சீமான் , தியாகு போராட்டங்கள் பற்றி வேறை திரியில் பேசியாச்சு..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே சொன்னது விசாயிக்கான பதில். அதில் போய் உங்கள் கேள்விக்கு நீங்கள் விடை தேடினா என்ன செய்ய முடியும்?

உங்களுக்கான பதில் ரெண்டாவதாய் சொன்னது. தனது கேந்திர நலனுக்காக இந்தியா இலங்கையையும் தமிழர தரப்பையும் எப்பவுமே நெருங்கவிடாது என்பதும், இருதரப்பையும் இரண்டு பொண்டாட்டிகல் போல நடத்துவதும் எல்லார்க்கும் தெரிந்த்ஹதுதான்.

கேள்வி என்னானா, 13 + ஐ யே தர தயங்கும் இந்த்ஹியாவை வைத்து அல்லது மீறி எப்படி தனிநாடு அடையப்போகிறீர்கள்?

ஆயுத பலமிலாத இன்றைய நிலையில்.

கேள்வி என்னானா, 13 + ஐ யே தர தயங்கும் இந்த்ஹியாவை வைத்து அல்லது மீறி எப்படி தனிநாடு அடையப்போகிறீர்கள்?

ஆயுத பலமிலாத இன்றைய நிலையில்.

2009 வரைக்கு இந்தியாவை எதிர்த்து தமிழர்கள் அரசியல் ஏதும் செய்தார்களா...?? இல்லை அறிக்கை தன்னும் விட்டார்களா...?? இந்தியா மாறாமைக்கு காரணம் கூட அதுவே...

சீக்கியன் சொல்கிறான் நாங்கள் தான் இந்திராவை கொண்றோம் எண்று ... பொற்கோயில் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவுத்து எண்டு... இந்திய அரசு அவர்களிடம் மன்னிப்பு கேக்கவில்லை... ???

மாற்றம் ஒண்டு தான் மாறாமல் இருக்கு... ஆனால் ஒரே இரவில் மாறுவதுக்கு இது நமிதா சினிமா இல்லை...

இந்தியாவுக்கு பாதுகாப்பு ஈழத்தமிழரே... அது இந்தியாவுக்கும் தெரியும்.. அதனால் தான் அணு சோதனை மையம் , விண்வெளி ஏவு தளம் , கனகரக ஆயுத தொழில்ச்சாலை அணு மின் நிலையம் எல்லாம் இந்தியாவின் தெற்கே இருக்கிறது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

2009 வரை நாங்கள் எதிர்ப்பு அறிக்கை அரசியல்ம்செய்யவில்லை, ஆனால் இளவரசனுடன், வீரப்பனுடன், மாவொயிடுகளுடன் லஸ்கர் உடன் நக்க்ஸல்களுடன் உடன் இன்னும் இந்தியாவின் எதிரிகளுடன் எல்லாம் கூட்டு வைத்தோம்! ராஜிவையும் இந்த்ஹிராவிடம் அனுப்பினோம்.

இந்த்ஹிராவை கொண்டது ஒரு தனிமனிதன். அதுவும் இந்தியன்.

ராஜீவை, பல நாட்டு சதியுடன் ஒரு மக்களின் ஏக பிரதினிதிகளாக இருந்த்ஹவர்ஜள் கொன்றார்கள். வெளிநாட்டவர்கள்.

சரி தவறுக்கப்பால் அதை ஓர் மானப்பிரச்சினையாக, தம் இருப்புக்கு விடப்பட்ட சவாலாக ராஜீவ் குடும்பமும் இந்தியா அதிகாரவர்கமும் பார்த்தது.

ஈற்றில் இது முள்ளிவாய்க்காலில் வைத்து தீர்க்கப்பட்டது.

இது புலிகளின் தடைக்கு இந்தியா சொன்ன ஒப்புக்கு சப்பில்லாத குற்றச்சாட்டு... புலிகளின் உதவியால் வீரப்பன் ஒண்டும் AK47 வாங்கி விடவில்லை... இளவரசன் குண்டுகளையும் RDX , C4 விலை வெடிக்கவைக்கவில்லை... மாவோக்களையும் , நக்சல்களையும் புலிகள் அதரிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு கிடையாது... தேவையான ஆயுதங்களையும் பயிற்சியையும் நேபாளம் , பூட்டான் , பங்களாதேசிஸ் சீனாவில் இருந்தும் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்... இதை நான் சொல்லவில்லை சிதம்பரம் சொல்கிறார்...

லஸ்கரோடு புலிகளுக்கு தொடர்பு எண்டு நீங்கள் சொல்வது தான் புது செய்தி இதை இந்தியாவே சொன்னது கிடையாது...

நீங்கள் குறிப்பிடாதா உல்பாக்கள் ஆயுத கொள்வனவு ரீதியில் தொடர்பில் இருந்து இருக்கலாம்... ஆனால் அதை தொழில் முறை கூட்டு எண்று வருணிக்க முடியாது...

புலிகள் இவர்கள் எல்லாருடனும் நெருங்கிய தொடர்பை கூட்டுறவை வைக்காமல் விட்டது தான் தவறாக இருக்க சந்தர்ப்பம் அதிகம்...

இந்த்ஹிராவை கொண்டது ஒரு தனிமனிதன். அதுவும் இந்தியன்.

ராஜீவை, பல நாட்டு சதியுடன் ஒரு மக்களின் ஏக பிரதினிதிகளாக இருந்த்ஹவர்ஜள் கொன்றார்கள். வெளிநாட்டவர்கள்.

சரி தவறுக்கப்பால் அதை ஓர் மானப்பிரச்சினையாக, தம் இருப்புக்கு விடப்பட்ட சவாலாக ராஜீவ் குடும்பமும் இந்தியா அதிகாரவர்கமும் பார்த்தது.

ஈற்றில் இது முள்ளிவாய்க்காலில் வைத்து தீர்க்கப்பட்டது.

இந்திராவை கொண்றது தனி மனிதன் கிடையாது.... ஒரு இனத்தின் கோவம்... இனத்தின் விடுதலை போராளிகளான KLF அமைப்பின் தலைமை பொற்கோயிலில் வைத்து அழிக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கொலை செய்யப்பட்டார்..

அதே நீங்களாக இருந்தால் போராளிகளோடு கொல்லப்பட்ட மக்கள் போரளிகளோடு போனார்கள் அதனால் செத்தார்கள் எண்டு வியாக்கியானம் செய்வீர்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.