Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா உறங்கா விழிகள் அமைப்பின் அனுசரணையுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் புலமைப் பரிசில் பரிசளிப்பு நிகழ்வு

Featured Replies

கனடா உறங்கா விழிகள் அமைப்பின் நிதி உதவியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவினரால் கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2013.10.13) கலை 10.30 மணியளவில் இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது. 

இந்நிகழ்விற்கு த.தே.ம.மு வின் கல்விமேம்பாட்டுப் பிரிவுப் பொறுப்பாளரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான திரு.செல்வராசா இரவீந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.கந்தசாமி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் திரு.மரியாம்பிள்ளை இக்னேசியஸ் அவர்களும், ஓய்வுபெற்ற ஆசிரியரும் அரசியல் ஆய்வாளருமான திரு.சி.அ.யோதிலிங்கம், கிளநொச்சி மாகா வித்தியலய அதிபர் திரு பங்கயற்செல்வன் அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர். 

tnpf_vanni_3.jpg

இந்நிகழ்வில் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளும், வடமாகாணத்தில் முன்னிலை பெற்ற இரண்டு முஸ்லீம் மாணவ, மாணவிகளும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் நினைவு விருது இவ்விழாவின் சிறப்பு அம்சமாக அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலப் பரீட்சையில் 1ம் இடம் பெற்ற மாணவனான யாழ் ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாசாலையத்தைச் சேர்ந்த செல்வன் பரமநாதன் தனுராஜ் அவர்கள் மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ஞாபகார்த்த நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விருதினை ஆண்டு தோறும் தமிழ்த் தேசத்தில் தமிழ் மொழி மூலம் இப் பரீட்சையில் தோற்றி அகில இலங்கை ரீதியில் முதல் நிலை பெறும் மாணவருக்கு வழங்குவதென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்திருக்கின்றது. இவ்விழாவில் பேராசிரியர் க.கந்தசாமி, அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம், கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் திரு. மரியாம்பிள்ளை இக்னேசியஸ். கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி.சிவகரன் காஞ்சனா  கிளிநொச்சி மகா வித்தியாலையத்தின் அதிபர் திரு.அரசரத்தினம் பங்கயற்செல்வன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் பிரிவுத் தலைவியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி.பத்மினி சிதம்பரநாதன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் திரு.சிவபாதம் கஜேந்திரகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

tnpf_vanni_2.jpg

நன்றியுரையினை கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினருமான திரு. செ.கஜேந்திரன் நிகழ்த்தினார். இவ் விழாவிற்கு கனடாவில் இயங்கும் ‘உறங்காவிழிகள்” என்னும் தொன்டு அமைப்பு நிதி உதவியினை அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அடுத்து வரும் வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

tnpf_vanni_1.jpg

விஸ்வலிங்கம் மணிவண்ணன்

ஊடகப்பேச்சாளர்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

சனமே வராது என்று யாரோ எழுதிய  போலிருக்கு இங்கு....... :)

இவ்வாறன நிகழ்வுகளை நிறுவனங்களோ ,அரசியல் கட்சிகளோ நடாத்துவதற்கு வட மாகாண ஆளுநர் தடைசெய்திருந்தார் .அதாவது பாடசாலைகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு யாரை பிரதம விருந்தினராக அழைப்பது உட்பட .வட மாகாண அரசு இயங்கத்தொடங்கியிருக்கும் சூழலில் கல்வியமைச்சர் அங்கீகாரம் வழங்கியிருக்கலாம் .

 

தற்போதைய கல்வியமைச்சர் ஆளுநருடன் முரண்பட்டுத்தான் முன்பு பதவி விலகினவர் .

 

வட -கிழக்கு மக்களுக்கு யார் உதவி செய்தாலும் வரவேறக்கப்படவேண்டும் .யார் உதவி செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் .நல்ல முன்மாதிரியான செயல் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

கனடா உறங்கா விழிகள் அமைப்பிற்கும் அவர்களின் உதவிகளை
மக்கள் முன் கொண்டு சென்ற த தே ம மு விற்கும் நன்றிகள்

 

கௌரவிக்கப்படும் மாணவர்களை முன்னிறுத்துதல் அவசியம்
 

நல்ல முயற்சி. யுத்தத்தின் பாதிப்பிற்குட்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதை முன்னிலல்படுத்திச் செயற்படுவதே இன்றைய தலையாய கடன்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்ச்சி. அப்படியே குதிரையை கழட்டி விட்டிட்டு சைக்கிளை வீட்டுப்பக்கமாக கொண்டுவாங்கோ பொன்னம்பலத்தார்.

விசுகு நீங்கள் ஓவரா குஜால் ஆகிறியள். இதில 50 வரையானனோரே இருக்கிறனர் அதுவும் மாணவர்களின் குடும்பம் ஆசிரியர்கள் எட்செக்ரா. இத விட ஊரில ஒரு சாதாரண சாமத்திய வீட்டுக்கு கூடப்பேர் வருவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் புலமைப்பரிசில் பரிசளிப்பு விழா ...

24 அக்டோபர் 2013



தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிபிரிவினால் நடத்தப்பட்டது:-


Jothi_CI.JPG

இவ்ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கிழக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவினரால், கனடா உறங்கா விழிகள் அமைப்பின் நிதி உதவியுடன்,  மட்டக்களப்பு கல்லடியிலுள்ள துளசி மண்டபத்தில் கடந்த 2013.10.19 சனிக்கிழமை நடாத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு த.தே.ம.மு வின் கல்விமேம்பாட்டுப் பிரிவு இணைப்பாளரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலாநிதி கோணாமலை கோணேசபிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி த.ஜீவராஜ் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி குணபாலன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), செல்வராசா கஜேந்திரன் (முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர்), விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி) சி.அ.யோதிலிங்கம் (அரசியல் ஆய்வாளர்) ஆகியோரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் 9 பேரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த 35 மாணவ மாணவிகளும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நன்றி

வி.மணிவண்ணன்
தேசிய அமைப்பாளர்/ஊடகப் பேச்சாளர்    
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி    
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98088/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.