Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் சமாதானத்தை அடைய கொடுக்கக்கூடிய விலை என்ன?

Featured Replies

எந்த ஒரு சமூகத்தினது யுத்தமோ பேச்சுவார்த்தையோ இறுதி இலக்கு சமாதான சகவாழ்வாகத்தான் இருக்கம் முடியும். அந்த வகையில் எமது போராட்ட இலக்கை நாம் அடைய எம்மால் விட்டுக்கொடுக்கக் கூடிய அளவு வீச்சு என்ன?

உணர்ச்சி பூர்வமாக கருத்துகளை முன்வைப்பதைவிட அறிவு பூர்வமாக பிரச்சினைகளை அணுகுவதே இங்கு அவசியமாக இருக்கிறது.

யுத்தத்தின் நீட்சி தாயகத்தில் தமிழர்களது இருப்பையே இல்லாதொழித்துவிடக்கூடிய அபாய அறிவிப்பை எமக்கு முன்மொழிந்து நிற்கிறது.

இந்த இக்கட்டான நிலையில் புலம் பெயர்ந்த நாம் ஆற்றவேண்டிய வரலாற்று பணி என்ன?

யுத்தத்துக்கு எதிரான குரலை வலுப்படுத்துவதும் சமாதானத்தின் இறுதி நம்பிக்கையை நாம் இழந்துவிடாமல் இருப்பதும் இன்றைய தேவைகளில் முதன்மையானது.

அதற்கு நாம் என்ன விலை கொடுக்கப்போகிறோம்?

  • Replies 67
  • Views 11.4k
  • Created
  • Last Reply

சமாதானம் என்பதன் தொனி என்ன... சிங்கள இனவாதிகளிடம் சொந்த நிலத்தை உரிமைகளை இழந்து அவர்களின் ஏவலுக்கு அடிபணிந்து வாழ்வதா...??!

இலங்கை என்பது சிறீலங்காவாக மாற்றமடைந்த போது மெளனித்திருந்தமே அதே போல் மெளனிகளாக சிறுகச்சிறுக சிங்களவனுக்கு இலக்காகி அழிவதா...??!

இல்ல..புகழிடம் என்று இடம்பெயர்ந்து தமிழர் என்ற இனத்துவத்துக்கான அனைத்து அடையாளங்களையும் தொலைத்து அந்நியருக்கு அவர்களின் தேசத்தில் கூலிகளாகி..பொருள் பெற்று செல்வந்தர்களாக வாழ்வதா...??!

இல்ல பாரம்பரிய மண்ணில் எம்மை நாமே என்றும் பாதுகாக்கக் கூடிய வகையில் எம்மை நாமே நிர்வகித்து எமது அடையாளங்களைக் காத்து எமக்காவும் உலக்குக்காவும் வாழ்வதா...??! இதில் எது..சமாதானம்...என்பதற்குள் அடக்கப்படுகிறது..??! :idea: :roll: :?:

சமாதானத்தின் விலையும் ஈழத்தமிழர்கள் உயிரே!

ÌÕÅ¢¸Ç¢ý ¸Õò§¾ ±ý ¸ÕòÐ :idea:

  • தொடங்கியவர்

சமாதானம் என்பதன் அர்த்தம் எமது அரசியல் பார்வையில்தான் உண்மையான அர்த்தம் கொள்கிறது. யுத்தத்தின் நீட்சி தமிழ் இனத்தை இலங்கை தீவில் பூண்டோடு அழித்துவிடும். தொடர்ச்சியான யுத்தம் சிங்கள இனவாத மேன்மைக்கே வழிவகுக்கும். சமாதான கோசத்தின் மூலம்தான் நாம் எமது இலக்கை அடைய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லவும்.

சமாதானமாக சிங்களவருடன் ஒத்து வாழ சிங்கள அரசாலோ அல்லது வேறு சக்திகளாலோ ஏதாவது தீர்வு முன்வைக்கப் பட்டுள்ளதா? அல்லது நீங்கள் ஏதாவது வழிமுறைகளைப் பிரேரிக்கப் போகின்றீர்களா?

யுத்தம் ஆரம்பித்தது யார்? இதை நிறுத்த என்ன செய்ய முடியும்? யார் சொல்லி யுத்தம் நிறுத்தப்படும்? யுத்தம் இல்லாமல் ஏதாவது உரிமைகளைப் பெறமுடியுமா?

பழைய வரலாறுகளையும் எழுதிய ஒப்பந்தங்களின் நிலைகளையும், புலிகளின் இடைக்கால ஆட்சிக்கு என முன்மொழியப்பட்ட வரைபுக்கு நடந்த கதியையும் அலசி ஆராய்ந்துவிட்டு வாருங்கள்.

தனி நாடு இல்லாவிட்டால் இலங்கைத் தீவில் தமிழினம் ஒருபோதும் இருக்கமாட்டாது. ஒன்றில் சிங்களம் படித்து சிங்களவராக மாற வேண்டும் அல்லது அடிபட்டு அழியவேண்டும்.

ஈழத்தில் தமிழினம்..சிங்களத்தால் அழியப்போகுதோ...இல்லையோ..தமிழர்

யுத்தத்தைப்போல சமாதானமும் கடினமான அரசியல் போராட்ட வழிமுறை.

ஈழப்போர்- 4 தொடங்கி சில நாட்களில் கடந்தகாலத்தில் நாம் ஒருபோதும் கண்டிராத புதிய அரசியல் இராணுவ நகர்வுகள் இலங்கை அரசியலின் பின்புலத்தில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எதிரி விரும்பி உருவாக்கும் யுத்த களத்தில்-காலத்தில் சமாதானம் என்பது ஒரு கொரில்லா தாக்குதல் போன்றது.

ஆயுத யுத்தம் என்பது எமக்கு சாதகமான நிலையில் எம்மால் முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் போர். எதிரிக்கு சாதகமான யுத்த களத்தில் அமைதி யுத்தம்தான் எமது அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும்

யுத்தத்தின் மூலம் சமாதானம்..என்பதுதான் சந்திரிக்காவின் கோசமும் கூட..! ஒரு கையில் வெண்புறாவைத் தாங்கியபடி மறுகையால் தாங்கிகளை இயக்கியபடி யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவதை வான்வழியில் விதைத்துக் கொண்டு..செம்மணியில் விதைத்தது என்னவோ..தமிழர்களின் பிணக்குவியல் தான்.

கடந்த ஒரு வாரச் சண்டையில் 200 போராளிகளினதும் 400 மக்களினதும் மரணத்துக்காகவா...சமாதானம் என்று 4 வருடங்கள்..200க்கும் மேற்பட்ட போராளிகளையும் 800 பொதுமக்களையும் தியாகம் செய்தோம்..! தமிழர்களுக்கு இழப்பு என்பது..சமாதானம் என்ற போர்வைக்குள் இருக்கும் பீரங்கியாலும் வரும்..நேரடியாக சமர்க்களத்தில் உள்ள பீரங்கியாலும் வரும்.

சமாதான காலம் வெளிப்படைக்கு தமிழ் மக்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கலாம்..ஆனால் அந்த சமாதான காலத்தில் எதிரி எம்மோடு சமாதானமாக வர விரும்பி இருக்கவில்லை என்பதையே அவனுடைய இராணுவ வலுவாக்கம் சுட்டிக்காட்டி இருக்கிறது..! எதிரி தன்னை இராணுவ ரீதியில் வலுவாக்கிக் கொள்வானாயின்..அது எமது அழிவுக்குத்தான் வழி வகுக்கும் என்பதை சமாதானம் என்ற உசச்ரிப்பின் கீழ் நிகழும் போருக்கான ஆயத்தங்கள்..சொல்கின்றன..!

சமாதானம் என்பது ஈழத்தைப் பொறுத்தவரை மனமாற்றங்களின் அவசியம். அதை ஆயுதத்தால் வரவழைக்க முடியாது. சிங்கள இனம் தமிழரின் நியாயப்பாடுகளைப் புரிந்து கொள்ள முனைய வேண்டும். அல்லது புரிந்து கொள்ள வழிகாட்டப்பட வேண்டும்.

இது ஒரு பக்கம் சிங்கள இளைஞர்களுக்கு யுத்த வெறியை ஊட்டிக் கொண்டு..மறுபுறம் சமாதானம் என்று பேசிக் கொண்டால்..மலருமா புரிந்துணர்வும்...சமாதானமும்..

சமாதானம் என்பது ஈழத்தில் தமிழர்களின் நியாயங்கள் சிங்களவர்களால் புரிந்து கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ஆயுத பாவனைக்கான ஆயத்தமாக இருக்கக் கூடாது. அதுவரை சமாதானம் என்பது வெறும் கேலிக் கூத்துதான்..! :idea:

  • தொடங்கியவர்

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

சிங்கள இராணுவம் புதிதாக இடங்களை ஆக்கிரமிக்கும். ஆட்டிலறி, கிபீர் என்பனவற்றைப் பாவித்து மக்களைக் கொல்லும். பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றீர்கள். ஒவ்வொரு தடவையும் மக்கள் கொல்லப்படும்போது சர்வதேச நிறுவனங்களின் முன்னின்று மகஜரைக் கையளித்தால் அவர்கள் எப்படியாவது யுத்தத்தை நிறுத்துவார்கள் என்று நம்பச் சொல்லுகின்றீர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான், லெபனான் போன்ற இடங்களில் மக்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். தற்போது தமிழீழத்திலும் இது தொடர்கின்றது. சமாதானமாக இருந்தால் எல்லாவற்றையும் அடையலாம் என்று சொல்ல வருகின்றீர்கள். கடந்த 4 1/2 வருடமாக சமாதானம் நிலவத்தானே போர் நிறுத்தம் வந்தது. ஏன் சமாதானம் வரவில்லை?

உண்மையில் உங்கள் செய்தி என்னவென்று விளங்கவில்லை???

சமாதானம் எண்று ஒண்று வரவேண்டுமானால் ஒரு தரப்பு மற்றய தரப்பை சமனான பலம்வாய்தவர்களாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்....! தங்களின் பலத்தை கணக்கிட்டு அதை நம்புவோர்த்தான் எதிரியின் பலத்தை சரியாக எடை போடமுடியும்...

இந்த நிலையில் சமாதானம் எங்களின் கைகளில் இல்லை அது எப்போதுமே சிங்களவனின் தெரிவாகத்தான் இருக்கும்...!

''புலிகள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு திரும்பினால் ஒரு பலமான இராணுவத்தை சந்திக்கவேண்டி இருக்கும்'' உங்களில் பலருக்கு நினைவிருக்கும் இது அமெரிக்க தரப்பால் சில மாதங்களுக்கு முன் தமிழர் தரப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அமைச்சின் பிரதி துணைச்செயலாளர் ஸ்டீவ் மான் அரசின் வான் தாக்குதல்கள் குறித்து கண்டித்ததும் அவர் கொழும்பைவிட்டு வெளியேறியதும் அரசின் வான் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும் தற்செயல் அல்ல.

முல்லை செஞ்சோலை தாக்குதலின் பின் அரசு வெளியிட்ட ஒளிப்படங்களின் பாணி அமெரிக்கா இராக், ஆப்கானிஸ்தான் மேல் வான் தாக்குதல் செய்தபின் வெளியிட்ட ஒளிப்படங்கள் போல் இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.

அண்மைய அரசின் வான் தாக்குதலின் பின்புலத்தில் அமெரிக்க ஐரோப்பிய ஆலோசனையும் உதவியும் மறைமுகமாக நிறையவெ இருக்கிறது. அரசு வான் தாக்குதலில் தேர்ந்தெடுக்கும் இலக்குகளை வைத்து இதை ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது.

அடுத்து இந்திய அரசின் இராணுவ உதவி குறித்து நாம் மிக விழிப்பாக இருக்கவேண்டும்.

இலங்கை அரசுக்கு பாகிஸ்தான் இராணுவ உதவி என்பது போல் வெளியில் பாவால் காட்டிக் கொண்டு அமெரிக்க இந்திய இராணுவ அரசியல் உதவிகள் திரை மறைவில் நிகழும் புதிய நகர்வுகள் பற்றிய செய்திகள் கசியத்தொடங்கிவிட்டது.

ஆக, சமாதானம் என்ற கோசம்தான் எமது போராட்டத்தின் இருப்புக்கு தற்போது பாதுகாப்பு தரகூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு தீர்வும் தமி;ழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க பின்வரும் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.

[*] தமிழீழ விடுதலைப்புலிகள், ஆயுதங்களும் படை அமைப்புகளும், தீவு முழுவதும் உள்ள தமிழரின் பாதுகாப்புக்காக தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டரீதியான இராணுவமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

[*] தீவு முழுவதும் (மலையகம் கொழும்பு உட்பட) தமிழருக்கு, தமிழ் மொழியிலான நிருவாகம் நிறைவான அதிகாரங்களுடன் தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

போர் மூலம் தீர்வு கண்ட பிரச்சினைகளில், மக்கள் நிம்மதியாக வாழுவது, நாட்டை வெற்றி பெற்ற படைகள் முற்று முழுதாக கைப்பற்றி ஆட்சி அமைத்த நாடுகளிலேயே இடம் பெற்றிருக்கிறது.

நாட்டின் ஒரு பகுதியை பிரித்தெடுத்த மக்கள், எல்லையில் உள்ள எதிரியுடன் என்றும் நிம்மதியாக வாழவில்லை. அது பாகிஸ்தான் - இந்தியாவாக இருக்கலாம்,. இசுரேல் - பலஸ்தீனமாக இருக்கலாம், எதியோப்பியா - எரித்திரியாவாக இருக்கலாம். இங்கே மக்கள் நிம்மதியாக வாழவில்லை.

சமாதானமாக நாடு பிரித்த சிங்கப்பு_ர், மலேசியாவுடன் நிம்மதியாக வாழ்கிறது. ஆனால் இது சிறிலங்காவுடன் சாத்தியம் இல்லை.

விடுதலைப்புலிகள் முழு இலங்கையையும் கைப்பற்றி, தமது பொம்மை ஆட்சியை சிறிய சிங்களப்பகுதியில் அமைப்பர் என்று சிங்களவர் பயப்படுகிறார்கள். இதற்கு ஆதாரம் கேட்பவர்களுக்கு நான் சொல்லக்கூடியது, 1990 களில் சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர் எனக்கு இதை நேரடியாகவே சொன்னார் என்பது மட்டுமே.

சிறிலங்காவில் போரிலும், அநர்த்தத்திலும், மக்களை கோள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு கொடுப்பதை கொடுக்காமல் எந்த தீர்வும் சாத்தியம் இல்லை. அவர்கள் இவ்வாறான சமாதான தீர்வின் பின், புதிய கட்டுமானம், வணிகம் போன்றவற்றில் இன்னும் அதிகம் சிங்கள மொழி ஆட்சிபிரதேசத்தில் (அவர்கள் ஆட்சி) கொள்ளையடிக்கலாம், என்று அவர்களுக்கு புரியயவைக்க வேண்டும். இதை உத்தியோகபுூர்வ பேச்சுவார்த்தைகளில், சமாதான பேச்சுக்கள் மூலம் செய்ய முடியாது. வணிகத்தில் தேர்ந்தவர்கள்(deal Makers), தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து, சிங்கள தலைவர்களை ஆசைகாட்டி வழிக்கு கொண்டு வரவேண்டும். முடிவு மட்டும்

[*] தமிழீழ விடுதலைப்புலிகள், ஆயுதங்களும், படை அமைப்புகளும், தீவு முழுவதும் உள்ள தமிழரின் பாதுகாப்புக்காக தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டரீதியான இராணுவமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

[*] தீவு முழுவதும் (மலையகம், கொழும்பு) உட்பட, தமிழருக்கு தமிழ் மொழியிலான நிருவாகம் நிறைவான அதிகாரங்களுடன் தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

யுூட் அண்ணா அதெப்படி இப்படியான கருத்துகள் ஆரம்பிக்கும்

போது சரியாக வாறீங்கள்? :?

''புலிகள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு திரும்பினால் ஒரு பலமான இராணுவத்தை சந்திக்கவேண்டி இருக்கும்'' உங்களில் பலருக்கு நினைவிருக்கும் இது அமெரிக்க தரப்பால் சில மாதங்களுக்கு முன் தமிழர் தரப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..

அமெரிக்காவிம் பூச்சாண்டி போனதடவை ஆனையிறவை மீட்ட போதும்... தீச்சுவாலை நடவடிக்கைக்கு நேரடி திட்டமிடலுக்கு கொடுத்த அடியுடன் சரியான விபரணம் கொடுக்க பட்டு உள்ளது... இதைப்பற்றி நாங்கள் அல்ல அமெரிக்கா வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்து நீண்ட காலமாகி இப்போ புலிக்கொடியை ஏற்றினாலும் குற்றம் இல்லை எண்று சொல்லும் நிலையில் அமெரிக்கா நடு நிலமைக்கு வந்து நீண்ட காலமாச்சு...! இதே அமெரிகாவில் அல்கைடாவின் தலைவரான பின்லாடனின் படத்தை தூக்குக்கொண்டோ இல்லை அவர்களின் சின்னத்தை தூக்கிக்கொண்டு போய் பாருங்கள் உங்களுக்கான மரியாதை சரிவர தெரியும்... ஆனால் புலிக்கொடி அந்த முறையில் கௌரவிக்க பட்டு இருக்கிறது... இதையே சிங்கள் ஊடகங்கள் அமெரிகா புலிகளின் சுயநிர்ணயத்தை மதித்து இலங்கை துண்டாட வளிசெய்கிறது எண்று பினாத்தும் அளவுக்கு இருக்கு நிலமை...!

கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அமைச்சின் பிரதி துணைச்செயலாளர் ஸ்டீவ் மான் அரசின் வான் தாக்குதல்கள் குறித்து கண்டித்ததும் அவர் கொழும்பைவிட்டு வெளியேறியதும் அரசின் வான் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும் தற்செயல் அல்ல.

முல்லை செஞ்சோலை தாக்குதலின் பின் அரசு வெளியிட்ட ஒளிப்படங்களின் பாணி அமெரிக்கா இராக், ஆப்கானிஸ்தான் மேல் வான் தாக்குதல் செய்தபின் வெளியிட்ட ஒளிப்படங்கள் போல் இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.

அண்மைய அரசின் வான் தாக்குதலின் பின்புலத்தில் அமெரிக்க ஐரோப்பிய ஆலோசனையும் உதவியும் மறைமுகமாக நிறையவெ இருக்கிறது. அரசு வான் தாக்குதலில் தேர்ந்தெடுக்கும் இலக்குகளை வைத்து இதை ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது..

அடுத்து இந்திய அரசின் இராணுவ உதவி குறித்து நாம் மிக விழிப்பாக இருக்கவேண்டும்..

இந்தியா.., இந்திய தமிழர்களைத்தாண்டி ஒரு நடவடிக்கையை எடுக்கும் என நினைப்பது உள்நாட்டில் வேண்டாத வினையை ஏற்படுத்தும் என்பதை அறியாத முட்டாள்கள் அல்ல.... அதயும் தாண்டி தமிழர் சாவது இப்போதுதான் நிகழ்வதும் இல்லை... 1991ம் ஆண்டு முதல் வாளாது இருந்த தமிழகம் இப்போது மட்டும் கிளர்ந்து எழ தமிழக அரசு பார்த்துக்கொண்டு இருக்கின்றது அவர்களுக்கு உதவியும் செய்கிறது கண்டும் காணாமல் இருக்கின்றது மத்திய அரசை வேண்டுகிறது என்பதெல்லாம் புதிய நடவடிக்கைகள் இதுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை அவர்களுக்கு தெரியாமல் தமிழக அரசு செயற்படுகின்றது என்பதை எப்படித்தான் சொல்கிறீர்கள் எண்றுதான் புரியவில்லை...!

இலங்கை அரசுக்கு பாகிஸ்தான் இராணுவ உதவி என்பது போல் வெளியில் பாவால் காட்டிக் கொண்டு அமெரிக்க இந்திய இராணுவ அரசியல் உதவிகள் திரை மறைவில் நிகழும் புதிய நகர்வுகள் பற்றிய செய்திகள் கசியத்தொடங்கிவிட்டது.

ஆக, சமாதானம் என்ற கோசம்தான் எமது போராட்டத்தின் இருப்புக்கு தற்போது பாதுகாப்பு தரகூடியது.

இலங்கைக்கு உதவியை செய்வது அமெரிக்காதான் இல்லை, பாக்கிஸ்தானும், ஜப்பானும் கூட உதவிகள் செய்யலாம் அது எல்லாம் இலங்கையின் கட்டுப்பாட்டை இலங்கை அரசு வைத்திருக்கின்றது என்பது வெளியில் இலங்கை அரசு செய்யும் பிரச்சாரத்தை நம்பித்தான்...!

இலங்கை தன்னை எப்போதும் வெற்றி பெறும் தரப்பாக காட்டி கொள்கிறது எண்றால் அதன் காரணம் உலகம் வெல்பவனைத்தான் நேசிக்கிறது என்பதால்த்தான்...! எவ்வளவுதான் தோல்விகள் எண்றாலும் தாங்கள் எதையும் இளக்கவில்லை என்பது எல்லாம் தங்களின் நாட்டில் இருந்து நலன் பெறவிருப்புபவர்களிடம் பிரச்சினையை சீரமைக்க உதவி பெற மட்டுமே.... இதுவே தாங்கள் தேற்பதாக இலங்கை காட்டினால் அவர்களுக்கு உதவி செய்ய சொந்தமக்களே வரமாட்டார்கள்....!

இப்படித்தான் பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரியான மாக்கோஸ் அவர்களை அமெரிக்கா கொடுத்த ஊக்கமும் அவருக்கான படை உதவி எண்று அமர்க்களப்படுத்தியது... ஆனால் அவருக்கு எண்று தோல்வி முகம் எண்று கண்டதோ அண்று அவைரை கைகழுவியும் விட்டது....

முதலில் மற்றவர்கள் எல்லாரும் சேர்ந்து எங்களை அளிக்காப்போறார்கள் என்பதை விட்டு எங்களை பலமானவர்களாக்கும் விதத்தை பற்றி சிந்திப்பது நலம்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சுருக்கமா சொல்வதானால் ஆயுதத்தை போட்டு விட்டு சரணடையட்டாம் :twisted: :twisted: :twisted:

யாரோ கேள்வியும் கேட்டு பதிலும் கொடுக்கிற மாதிரி கிடக்கு. :? :roll:

யாரோ கேள்வியும் கேட்டு பதிலும் கொடுக்கிற மாதிரி கிடக்கு. :? :roll:

என்ன நன்பரே இது கூடவா புரியவில்லை சில குருவிகள் புறாவக மாறி புதிதாக இனைந்தது நோக்கு தெரியுது :lol: :P :lol:

  • தொடங்கியவர்

ஆனையிறவு மீட்புப்போர் காலகட்டம் இன்றைய அமெரிக்க அல்கைடா எதிர்ப்பு யுத்த நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அமெரிக்காவில் எமது கொடியை பறக்கவிட அனுமதித்தை ஒரு அரசியல் அங்கீகாரமாக பார்ப்பது அமெரிக்க உள்துறை மற்றும் வெளித்துறை அரசியலை எம்மால் ஆழமாக பகுத்தாய்வு செய்யமுடியாமல் போன தவறாகும்.

புலி கொடி அமெரிக்காவில் பறக்கக்கூடிய நிலையில் இன்று இருப்பதற்கு முக்கிய வரலாற்று காரணம் தமிழர் தலைமை தமிழீழ விடுததைப்போராட்ட ஆரம்பகாலத்தில் பிரகடனப்படுத்திய உலக அரசியல் சார்பு நிலைக்கோட்பாடு. ஈ பி ஆர் எல் எவ் எண்பதுகளின் ஆரம்பதில் அமெரிக்க அலன் தம்பதிகளான கடத்திய போது எல் ரி ரி ஈ அதை முதல்முதலில் கண்டித்ததுடன் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்யும்படி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிவித்தது. அப்போதைய அமெரிக்க சோவியத் பனிப்போரில் புலிகள் தமது நிலையை தெளிவாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். அன்று மிக தெளிவாக புலிகளின் தலைமை எடுத்த முடிவின் பயன்களை புலம் பெயர்ந்து அமெரிக்க ஐரோப்பிய மண்ணில் வாழும் நாம் இன்றும் அனுபவிக்கிறோம்.

இன்னும் ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். 1987 இந்திய இலங்கை ஒப்பந்ததின்பின் உருவான ஈழப்போரில் மேற்குலகம் வெளிப்படையாக புலிகளை ஆதரித்ததும், அதில் இந்திய (சோவியத்) சார்பு ஈ பி ஆர் எல் எவ் படுதோல்வியை சந்திக்க வாய்ப்புகள் உருவானதொன்றும் தற்செயல் அல்ல.

புலிகளின் தலைமை மேற்குலகுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவுதான் எமது போராட்டதை இன்று வரை காப்பாற்றிவந்துள்ளது. மேற்குலகுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு தமிழர் தலைமை வர தாமதம் ஏற்பட்டிருந்தால் ஜே ஆர் ஜெயவர்தனா காலத்திலேயே எமது போராட்டம் தோற்கடிக்கப்ப்ட்டிருக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அழிந்துபோன அனைந்து அமைப்புகளுக்கும் புலிகளுக்கும் உள்ளவித்தியாசம் சர்வதேச அரசியலில் புலிகள் எடுத்த தந்திரோபாய சரர்பு நிலைதான். அதனால்தான் புலிகளால் இருபது வருடங்களுக்கு மேல் தமிழர்க்கு தலைமை கொடுக்கமுடிகிறது. புலிகளின் முதல் வெளியீடான வந்த ''சோசலிச தமிழீழத்தை நோக்கி'' என்ற புத்தகத்தில்தான் சோசலிசம் என்ற அரசியல் கோட்பாடு முன்னிலைப்படுத்தப்பட்டது. அதுவும் அப்போது லண்டனில் படித்து கொண்டிருந்தவரது சொந்த அரசியல் ஆசையே தவிர புலிகளது அரசியல் அல்ல. இருப்பினும் தலைமை சரியான நேரத்தில் சரியான திசையில் எமது போராட்ட அரசியலை நெறிப்படுத்தியதன் விளைவுதான் இன்று எம்மால் அறுவடை செய்யப்படும் புலிக்கொடி ஏந்தும் சுதந்திரதின் சூட்சுமம்.

எம்மை மற்றவர்கள் அழித்துவிவார்கள் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு நாம் எம்மை பலமானவர்களாக்குவது வெறும் கருத்து தளத்தில் நிகழ்வது அல்ல. அதற்கான கருத்து தளம் உயிர்நிலை கொள்ளக்கூடிய புறச்சூழல் எமக்கு சாதகமாக இருக்கவில்லை எனில் தற்போதை சர்வதேச சூழலுக்கு உகந்த கருத்து நிலையை தமிழர் தரப்பு கைக்கொண்டால் அன்றி சிங்களத்தை நாம் வென்று விடமுடியாது.

யுத்தத்துக்கு எதிரான குரலை வலுப்படுத்துவதும் சமாதானத்தின் இறுதி நம்பிக்கையை நாம் இழந்துவிடாமல் இருப்பதும் இன்றைய தேவைகளில் முதன்மையானது.

வரலாற்றை மறந்துவிட்டுத்தான் பேசுகிறீர்களா? எத்தனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அத்தனையும் வெறும் காகிதத்தில்தான். கடைசியாக செய்யப்பட்டது யுத்தநிறுத்த ஒப்பந்தம் அதைத்தன்னும் நிறைவேற்றினார்களா? அதுசெய்யப்பட்ட போது சிறீலங்காஇராணுவம் பெரும் அழிவுகளைச் சந்தித்திருந்தது. இராணுவத்துக்கும் ஒய்வு தேவைப்பட்டது. தனது விமானங்களைக்கூட இழந்திருந்தது. இப்ப எல்லாாவற்றையம் மீண்டும் பெற்றவுடன் மீண்டும் தொடங்கிவிட்டான்.

இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தம் பல சர்வதேச நாடுகளின் முன்னிலையில் தான் செய்யப்பட்டது. இன்றும் நினைத்தவுடன் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்துவிட்டு வருகிறான் இஸ்ரேல் காரன். சமாதானம் பேசி அழிக்கப்பட்ட விடுதலைஇயக்கம் பாலஸ்தீன இயக்கந்தான்.

இன்று சமாதானம் பேசும் சர்வதேசமெல்லாம் நாளை போர் நின்றாலோ விடுதலைப்புலிகள் பலவீனம் அடைந்தாலோ தங்கள் வேலையைப்பார்க்க போய்விடுவார்கள்.

தமிழருக்கு சுயாட்சி அல்லது தனிநாட்டுக்கு குறைந்த எந்த ஒரு தீர்வும் பாதுகாப்பானதல்ல. ஏனென்றால் சிங்களவன் அப்பிடி.

சிங்களவனுக்கு உலகநாடுகள் எல்லாம் உதவிசெய்கின்றன. விடுதலைப்புலிகளுக்கு தமிழ்மக்கள்தான் பக்கபலம். விடுதலைப்புலிகள் இல்லையென்றால் இன்று தமிழர்களின் இருப்பு கேள்விக்குறிதான். புலிகள் எம்முடிவை எடுத்தாலும் அதற்கு நாம் பக்கபலமாக இருக்க வேணும்.

  • தொடங்கியவர்

என்ன நன்பரே இது கூடவா புரியவில்லை சில குருவிகள் புறாவக மாறி புதிதாக இனைந்தது நோக்கு தெரியுது :lol: :P :lol:

குருவிகளையும் சமாதானத்தையும் ஒன்றாக பார்த்து குழம்ப வேண்டாம்.

குருவிகள் தனித்துவம் உடையவர். அதைப்போல சமாதானமும் தனித்துவம் பேணுபவர்

குருவிகளையும் சமாதானத்தையும் ஒன்றாக பார்த்து குழம்ப வேண்டாம்.

குருவிகள் தனித்துவம் உடையவர். அதைப்போல சமாதானமும் தனித்துவம் பேணுபவர்

என்ன சொல்ல வருகிறீர்கள். ஒன்றாக இருந்தாலும் தனித்துவம் பேணுவமென்றா.

புலி கொடி அமெரிக்காவில் பறக்கக்கூடிய நிலையில் இன்று இருப்பதற்கு முக்கிய வரலாற்று காரணம் தமிழர் தலைமை தமிழீழ விடுததைப்போராட்ட ஆரம்பகாலத்தில் பிரகடனப்படுத்திய உலக அரசியல் சார்பு நிலைக்கோட்பாடு. ஈ பி ஆர் எல் எவ் எண்பதுகளின் ஆரம்பதில் அமெரிக்க அலன் தம்பதிகளான கடத்திய போது எல் ரி ரி ஈ அதை முதல்முதலில் கண்டித்ததுடன் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்யும்படி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிவித்தது. அப்போதைய அமெரிக்க சோவியத் பனிப்போரில் புலிகள் தமது நிலையை தெளிவாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். அன்று மிக தெளிவாக புலிகளின் தலைமை எடுத்த முடிவின் பயன்களை புலம் பெயர்ந்து அமெரிக்க ஐரோப்பிய மண்ணில் வாழும் நாம் இன்றும் அனுபவிக்கிறோம். .

உங்களின் வாதத்திலை அடிப்படையே சிக்கலா இருக்கே....! புலிகளை தடை செய்த அமெரிக்கா கொடியேற்ற விடுவது.... அலன் தம்பதிகளை கடத்தியதை புலிகள் எதிர்த்ததாலா...???

என்ன சொல்லுறீங்கள் என்பது விளங்கித்தான் சொல்கிறீங்களா..??? புலிகளை அழிக்க பயிற்ச்சியும் ஆயுதமும் இலங்கைக்கு வளங்கின அமெரிக்கா இண்று இப்பிடி நிலை எடுக்க காரணம் புலிகள் அரசியல் வளியில் செய்த மாற்றங்கள் எண்று நீங்கள் சொன்னால், சரத் பொன்ஸ் சேகாவுக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியது எண்று புலிகள் மீது குற்றம் சாட்டி கண்டித்த அமெரிக்கா.. பன்னிய பிட்டியவில் அதேபோல ஒரு அதிகாரி கொல்லப்பட்ட போது சும்மா இருந்த்து 1 மாத இடைவெளியில் புலிகள் செய்த சீர் திருத்தத்தாலா...???? என்னால் நம்பவே முடியல்லயே...???? தகவலுக்கு நண்றி...!

ஆயுதம் இல்லாது சமாதானம் என்பது கிடைக்கும் எண்றால் அது செல்வா காலத்திலேயே கிடைத்து இருக்க வேண்டும்... 1957ம் ஆண்டின் இனப்படுகொலை நடந்திருக்காது...!

எமது பலம் மட்டும்தான் எங்களுக்கு எதையும் கொண்டுவரும்.... அமெரிக்காவின் ஆதரவைக்கூட, பலமில்லாத உங்களை சீண்டிப்பார்த்து வருத்த பலபேர் வருவார்கள். அவர்கள் நன்மை அடைவதுக்காக...! நீங்கள் பலமாக இருந்தால் அவர்களே பேரம்தான் பேசுவார்கள்... இதுதான் வித்தியாசம்...!

இனியும் எங்களால் உயிர்களை விலையாக்கமுடியாது எம் தலமையின் ஏன் பொறுமை காக்கின்றதோ தெரியவில்லை என்கே விமானஎதிர்ப்பு படையணி???,விமானபடை இனியும் பொறுமை காத்தால் வெறும் நிலத்தை மாத்திரம் தான் பெறமுடியும் பொறுமைக்கு எல்லை உண்டு அந்த எல்லை கடந்து விட்டது கொடுத்த விலைகள் காணும் என நான் நினைகின்றேன்

sencholai_children.jpg

இவ்வளவு உயிர்களுக்கும் 19000 மாவீரருக்கும் நாம் இழந்த எம் உறவுகளுக்கும் பதில் தான் என்ன :?: :?: :?: :?: :evil: :evil: :evil: :twisted: :twisted:

பிரிவுகளால் அங்கலாய்க்கும்

அகதி தமிழன்

ஈழவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.