Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது முதல் இசை முயற்சியில்... முள்ளிவாய்க்கால் பாடல்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் முயற்சி என்று சொல்ல முடியவில்லை..  :D "விடுதலை தேசம் வரும்.." உண்மை.

 

எனது கருத்துக்கள் சில..

 

  1. பாதி பாடலுக்கு மேல் தாளத்தை மாற்றியபோது Bass ஒலி இல்லாதமை தெளிவாகத் தெரிகிறது. Bass, Rhythm sections பாடல்களுக்கு கண்டிப்பாக அவசியம்.
  2. ஒலிச்சேர்ப்பில் குரல் அமிழ்ந்துவிட்டதை அநேகர் சொல்லிவிட்டார்கள்.
  3. பாடல் மெதுவாகச் செல்வது எனக்கு ஒரு குறையாகப் படவில்லை. எடுத்துக்கொண்ட பின்னணி இசை அமைப்பிற்கு இது பொருத்தமாகத்தான் உள்ளது. மெல்லிய இதயம் படைத்தவர் நீங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. :D

டிஸ்கி: தனக்கு கருத்து சொல்லாமல் இளங்கவிக்கு சொல்றாரே இந்தால் எண்டு த.சூ கோவிக்கப் போறார்.. :o  டூவீலரில் போனால் பரவாயில்லை.. மாருதி காரில் போற த.சூவுக்கு அட்வைஸ் தேவையில்லைதானே.. :icon_idea:  (சும்மா.. பகிடிக்கு).

 

படைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது கருத்து சொல்லக் கூடாது என்பது என் எண்ணம்.. அது கற்பனைத்திறத்தைப் பாதித்துவிடும். த.சூ. புரிந்துகொள்வார் என நம்புகிறேன். :unsure:

 

இசைக்கலைஞன்

 

கொம்பியூட்டர் மைக்கில் பாடி, ஒரு software இனூடாக record பண்ணி பரீட்சாத்தமாக பாடி கிட்டத்தட்ட 3 அரை வருடங்கள்உக்கு முன்னும், அதன் பிறகு ஒரு சிறிய இசைக்கோர்வை மட்டும் அதே காலப்பகுதியில் யாழில் போட்டதற்குப் பின்னர் இதுதான் எனது முறையான இசையில் வந்த பாடல், நான் எந்தவொரு இசைக்குழுவிலோ, இசையமைப்பிலோ ஈடுபடவில்லை... நம்புங்கள்... உண்மை...

 

ஆனால் பலமுயற்சிகள் செய்து எல்லாம் கொம்பியூட்டர் காட்டிஸ்சில் கிடந்தாலும் இதுதான் உங்கள் ரசனைக்கு வந்த பாடல்..இனி ஒவ்வொன்றாக வரும் பயப்படாதீர்கள் கேட்கத்தயாராகுங்கள்... 

 

தாளம் மாம் இடத்தில்று நீங்க சொன்ன பிழை இருக்கிறதுள், காரணம் ஒரே frequency range இல் அந்த இடத்தில் சில இசை அறிமுகப்படுத்தியிருந்ததால் Bass Guitar இன் அளவை நன்றாக குறைக்கவேண்டியிருந்தது, தாளத்தில் வரும் சில சத்தங்களின் அளவைக் குறைத்து பேஸை கூட்டி, குரலும் எனது mix இல் dominate பண்ணும் அளவில் சில திருத்தங்கள் செய்துகொண்டிருக்கிறேன், விரைவில் திருத்திய பதிவைத் தருகிறேன்.

 

எல்லாம் midi யை use software instrument ஆல் எனது பாடல் முழுக்க செய்ததால் திருத்தங்கள் செய்வது மிகச் சுலபம்...மற்றும் படி பாடலின் tempo  நான் ஏற்கனவே தீர்மானித்தது தான்... இந்தப் பாடலுக்கு வேகம் அதிகம் வந்தால் உணர்வு கெட்டுவிடும்...

 

படைப்பில் ஈடுபடும் ஒருவருக்கு உங்கள் கருத்து சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது எனும் உங்கள் எண்ணத்துக்கு நான் தலை வணங்குகின்றேன்....  

முதல்முயற்சியே நன்றாக இருக்கின்றது......வாழ்த்துக்கள்.

 

குமாரசாமி அண்ணா

 

உங்கள் ஊக்குவிப்புகளுக்கு மிக்க நன்றிகள்...

Edited by இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

 

தங்கள் இசை முயற்சி தொடர வேண்டும் எனவிரும்புகின்றேன்!

 

விசுகு அண்ணா

 

மிக்க நன்றிகள்....

இதே குரலை வேறு பாடலில் கேட்டது போல ஒரு உணர்வு... இது உங்களின் முதல் பாடலா இளங்கவி... ???

வரிகளும் இசையும் ,இசை சேர்க்கையும் மெட்டும் நண்றாக இருக்கு...

பாடல் வரிகளில் கொஞ்சம் தெளிவில்லாமல் கேக்குது... voice clarity யை நல்லா பதிவு செய்து வசனங்களை தெளிவாக கேக்கிற மாதிரி இருந்தால் இன்னும் நண்றாக இருக்கும்... பாடல் மனதில் நிக்க வரிகள் ஞாபகம் அவசியம் எண்டு நினைக்கிறன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்முயற்சியே நன்றாக வந்திருக்கின்றது......வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா....!

 

தமிழினி...

 

மிக்க நன்றிகள்....

முதல்முயற்சியே நன்றாக இருக்கின்றது......வாழ்த்துக்கள்.

 

தமிழரசு...

 

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்...

நல்ல முயற்சி இளங்கவி எல்லோரும் பேசிக்கொண்டு இருக்க நிங்கள் செயலுக்கு முக்கியம் கொடுத்ததுக்கு வளருங்கள் இன்னும் மெருகுடன் வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

முடிவல்ல முள்ளிவாய்க்கால் முடிவல்ல....
புதிதல்ல இழப்புக்கள் புதிதல்ல....
 

விடுதலை தேசம் வரும்.....

 

உங்கள் ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள் இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்பொழுது மீண்டும் கேட்டேன்

உங்கள் குரலில் ஒரு  இனிமையான ஈர்ப்பு இருக்கிறது 

தொடருங்கள்

நல்ல எதிர்காலமுண்டு

வாழ்க வளமுடன்..........

 

விசுகு அண்ணா...

 

உங்கள் பாராட்டுக்களைக் கேட்க இன்னமும் இன்னமும் பல படைப்புக்களை தரவேண்டுமென்ற எண்ணமே அதிகரிக்கிறது... நன்றிகள்...

Edited by இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே குரலை வேறு பாடலில் கேட்டது போல ஒரு உணர்வு... இது உங்களின் முதல் பாடலா இளங்கவி... ???

வரிகளும் இசையும் ,இசை சேர்க்கையும் மெட்டும் நண்றாக இருக்கு...

பாடல் வரிகளில் கொஞ்சம் தெளிவில்லாமல் கேக்குது... voice clarity யை நல்லா பதிவு செய்து வசனங்களை தெளிவாக கேக்கிற மாதிரி இருந்தால் இன்னும் நண்றாக இருக்கும்... பாடல் மனதில் நிக்க வரிகள் ஞாபகம் அவசியம் எண்டு நினைக்கிறன்...

 

தயா

 

கிட்டதட்ட மூன்றரைவருடங்களுக்கு முதன் என்று நினைக்கிறேன் ஒரு மென்பொருளின் உதவியுடன் கொம்புயூடர் மைக்கில் பாடி ஒரு பாடல் யாழில் இணைத்திருந்தேன்...அதில் என் குரலை நீங்கள் சரியாகவே கேட்டிருக்க முடியாது காரணம் அது ஒரு பரீட்சாத்த முயற்சி, என் குரலைவிட இரைச்சல் தான் அதிகமாக இருந்தது காரணம் என் குரலை சரியாகப் பதிவுசெய்து கொள்ள முடியவில்லை. அது என் உணர்வை என் வரிகளிலும் குரலிலும் சொல்லும் முயற்சி, அதன் பின் இதுதான் நான் கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கிய ஒரு பாடல்.... வேறு எங்கும் நான் இதுவரை பாடியது கிடையாது.... இந்தக்குரலைக் கேட்டு யாரும் பாட கூப்பிட்டால் காசு வாங்கிக்கொண்டு மாத்திரம் பாடிக்கொடுப்பேன்......கிகிகிகீ... :)  

 

பல குரல்கள் செர்ந்து பாடுவது போல ஒரு எபெட் செய்தேன், அதில் சில தவறுகள்... எனவே தான் ஏற்கனவே சிலர் சொல்லியிருந்தது போல நடந்திருக்கு... திருத்திய பதிவு வெகு விரைவில் தருகிறேன், அதில் நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல நிச்சயம் இருக்கும்.... 

 

நன்றிகள்....

நல்ல முயற்சி இளங்கவி எல்லோரும் பேசிக்கொண்டு இருக்க நிங்கள் செயலுக்கு முக்கியம் கொடுத்ததுக்கு வளருங்கள் இன்னும் மெருகுடன் வாழ்த்துக்கள் .

 

அஞ்சரன்...

 

 உங்கள் எல்லோரின் விருப்பம் போல இன்னமும் பல படைப்புக்களைத் தருவேன்.... பலரின் கருத்துக்களும் எங்களை வளர்க்கும்.... மிக்க நன்றிகள்

முடிவல்ல முள்ளிவாய்க்கால் முடிவல்ல....

புதிதல்ல இழப்புக்கள் புதிதல்ல....

 

விடுதலை தேசம் வரும்.....

 

உங்கள் ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள் இளங்கவி

 

 

வாத்தியார்....

 

 

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்....

Edited by இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

மென்மையாய் மிக மென்மையாய் மனசைப் பிழிந்து செல்லும் சோகம்!

 

தொடர்ந்து எழுதுங்கள் இளங்கவி!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளங்கவி,
பாடலின்... ஆரம்பக் குரல் சிறப்பு. பின்பு... தொய்ந்து போட்ட மாதிரி... எனக்கு இருந்தது.
முள்ளிவாய்க்கால், படுகொலையை... அசையும் படங்களாக, தொகுக்கப் பட்டிருந்தது சிறப்பாக இருந்தது.

உங்களில் பிழை பிடிப்பது, எனது நோக்கமல்ல, மனதில் பட்டதைச் சொன்னேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இளங்கவி .........என் இரத்த உறவு என்ற வகையில் சில தகவல்களை தருகிறேன் ..............ஓடியோவில் உங்கள் குரலை பதிவு செய்திருந்தால் அதை நோர்மலிஸ் மூலம் சத்தமாக உருவாக்கலாம் .....................எடிட் பண்ணுவதில் கூடுதலான கவனம் எடுங்கள் /எமது இசை பாடல்களுக்கு குரலே மிக முக்கியம் ......................நானும் சில அனுபவங்களின் பின்னரே இதை உங்களுக்கு எழுதுகிறேன் ............................எப்பொழுதும் குரலை மேல் வைக்கவேண்டும் . வெள்ளைகள்  ஏன் என்று கேட்பார்கள் .....அவர்கள் முறை அது .அனால் எங்கள் முறையை அவர்களால் ப்ருரிந்து கொள்ள முடியாது ........என்னில் இசை என்பது எம்மிடம்தான் உள்ளது . இவர்களிடம் நாம் படிக்கலாம் .................ஆனால்ம் அதை பயன்படுத்தி எம் இசைக்கு ஏற்றவாறு சில விடயங்களை நாம் செய்யவேண்டும் ..............இவற்றை நான் எழுதுவது நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும் ......................தேடலே வாழ்க்கை .இதை இன்றுவரை ரன் வாழ்பில் கண்டுகொண்டிருக்கிறேன் ....நான் ஒன்றும் பெரியவன் என்று நினைத்து இதை உங்களுக்கு சொல்லவில்லை .உங்களைப்போலவே தேடிக்கொண்டிருக்கும் உங்கள் நண்பன் .......................எம் தேசியத்தலைமை எமக்கு காட்டிய அதே பாதையில் ஒருமைப்பட்டு பயணிப்போம் ....................இறைவனின் ஆசியும் அருளும் ,என்றும் உங்களோடு இருப்பதாக ..............

 

தமிழ்சூரியன்....

 

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி....

 

கொண்டென்சர் மைக்கிரோபோன் மூலமாகவே நான் பாடிப் பதிவுசெய்துகொண்டதனால் sound level லோ, noise லிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் மிக்ஸ் பண்ணும் போது குரலின் வொலுயுமை குறைத்து வைத்துவிட்டேன்... அது என் தவறேயொழிய ரெக்கோர்டிங்கிலோ நோர்மலைஸ் பண்ணியதிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை. மற்றும் வோக்கல் ஏபெக்ட் தனியான ட்றாக்கில் செய்து அதை மெயின் வோக்கலுடன் மிக்ஸ் பண்ணியதிலும் சற்றுப்பிழை... திருத்திய பிரதி விரைவில் தருகிறேன்...

 

சவுண்ட் ரெக்னோலொஜி படித்தபோது அவர்கள் சொல்லித்தந்ததும், சொல்லித்தருவதும் மென்பொருள், ஒலிப்பதிவு, மற்றும் எந்தெந்த இசை உபகரணங்களைப் பயன்படுத்துவது மற்றும் அவைகளைப்  பயன்படுத்தும் தொழில் நுட்பம் மாத்திரமே.. மற்றும் படி கொம்பொசிஷன் எங்கள் கற்பனையில் தோன்றுவதெயொழிய அவர்கள் சொல்லித்தரமுடியாதது....

 

நானும் மிகுந்த தேடல் உள்ள ஒருவன்.... பலபல புதுவிடயங்களைக் கற்கவேண்டும் என்று என்றும் தேடுபவன்... இந்தத் தேடல்கள் எல்லாம் நம் தாய் நாட்டுக்கு உதவவேண்டுமென்று விரும்புபவன்...

 

உங்கள் கருத்துக்களுக்கும் அனுபவப் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்....

 

என்றும் உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒருவன்... நன்றிகள். 

மென்மையாய் மிக மென்மையாய் மனசைப் பிழிந்து செல்லும் சோகம்!

 

தொடர்ந்து எழுதுங்கள் இளங்கவி!

 

 

suvy

 

நிச்சயம் பல ஆக்கங்களைத் தருவேன்.... நன்றிகள்....

வணக்கம் இளங்கவி,

பாடலின்... ஆரம்பக் குரல் சிறப்பு. பின்பு... தொய்ந்து போட்ட மாதிரி... எனக்கு இருந்தது.

முள்ளிவாய்க்கால், படுகொலையை... அசையும் படங்களாக, தொகுக்கப் பட்டிருந்தது சிறப்பாக இருந்தது.

உங்களில் பிழை பிடிப்பது, எனது நோக்கமல்ல, மனதில் பட்டதைச் சொன்னேன்.

 

தமிழ் சிறி

 

நான் நீங்கள் என்னில் பிழை பிடிப்பதாக என்றுமே நினைக்கமாட்டேன்... காரணம் உண்மையான விமர்சனம் மட்டுமே என்னை வளர்க்க உதவும்.....சிறந்த ஆக்கங்களையும் தர உதவும்.... மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.