Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைவாய்ச் சொன்ன கதைகள்

Featured Replies

சமீபத்தில் கி. ராஜநாராயணன், கழனியூரன் தொகுத்து வெளியிட்டிருந்த "மறைவாய்ச் சொன்ன கதைகள்" என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்தப் புத்தகத்தை ஊரிலிருந்து வரும் நண்பனிடம் வாங்கிவரச் சொல்லியிருந்தேன். வாங்கி வரச் சொல்லிவிட்டு ரொம்ப சங்கடப் பட்டுவிட்டேன். அவன் ஏதும் இதை ஆபாசப் புத்தகம் என்று நினைத்து விடுவானோ என்று.  புத்தகத்தை படித்தவுடன் தான் தெரிந்தது ஒரு கெட்ட வார்த்தை கூட இந்தப் புத்தகத்தில் கிடையாது என்பது.

புத்தகத்தில் பதியப்படிருந்த இந்த வார்த்தைகள் போதும் இந்த நூலை பற்றி அறிந்து கொள்வதற்கு "பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம் காலமாக கேட்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருபவை. இவை ஆபசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்க முறை ஒருபுறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொருபுறமும் ஆக்கிரமித்து கொண்டிருக்கும் இச்சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாக திகழ்கின்றன"  

நிறைய கதைகளை படித்து விழுந்து விழுந்து சிரிக்க முடிந்தது. நேரம் கிடைப்பின் வாசித்து பாருங்கள். வேடிக்கைகளும் வினோதங்களும் நிறைந்த இக்கதைகளை நீங்கள் ரசிக்க கூடும்...

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் வாசிக்கத்தான் வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்பிடியான கதைகள் வாசிக்க நல்ல விருப்பம். எங்கள் தகப்பனார் காலத்து பழைய கதைப் புத்தகம் ஒன்று வாசித்தும் இருக்கிறன். :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

கி.ராஜநாராயணனின் கரிசல் மண்வாசனைக் கதைகள் வட்டார வழக்குகள் விளங்காமல் வாசிப்பதற்குக் கடினமாக இருக்கும். எனினும் அவரது நாவல்கள்/சிறுகதைகள் பலவற்றை விரும்பிப் படித்திருக்கின்றேன். குறிப்பாக சாகித்திய அகாடமி விருது பெற்ற கோபல்லபுரத்து மக்கள் நல்லதோர் நாவல்.


மறைவாகச் சொன்ன கதைகள் புத்தகத்தை படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. என்றாலும் அதில் வந்திருக்கக்கூடிய சில கதைகளை இணையத்தில் உள்ளன. சில கதைகளை முன்னர் இணைக்க நினைத்திருந்தாலும் இணைக்கவில்லை! :icon_mrgreen: 

என்னதான் என்று அறியும் ஆவலில் உள்ளவர்களுக்கு ஒரு கதை கீழே.





ராசா தேடின பொண்ணு! - கி.ராஜநாராயணன்
(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).

இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சான். இது என்ன கூத்துடாப்பா; மதுரை மீனாச்சிக்கு மூணுதனங்கள் முதலில் இருந்ததாகச் சொல்லுவாங்க. இவன் என்னடான்னா நாலு தனங்கள் வேணுங்கறானே எங்க போக, என்று பெரியவங்க வருத்தப்பட்டாங்க.

யப்பா, இப்பிடியா உள்ள ஒரு பெண்ண நீதாந் தேடிக் கண்டுபிடிக்கணும். எங்களாலே ஆகாதுன்னுட்டாங்க.

சரீன்னு சொல்லி இவன் புறப்பட்டாம். ஊரு ஒலகமெல்லாம் சுத்தினாம். ஆத்துல குளத்துல வாய்க்கால்லன்னுட்டு வரீசைய பாத்துகிட்டே வந்தாம். விதவிதமானதுகளத் தாம் பாத்தானே தவிர நாலு உள்ளதுகளுமில்ல. மூணு உள்ளதுகளுமில்ல. சொல்லப் போனா ஒண்ணரை, ஒண்ணே முக்காலு இப்பிடித்தான் இருந்துச்சாம்.

பயலுக்கு சே’ன்னு ஆயிட்டது!

பின்னே ஏம் இப்பிடிச் சொன்னாம்?
அதுக்கு ஒரு காரணம் இருந்தது.

ஒரு நா ராத்திரி அவம் தூக்கத்துல ஒரு சொப்பனங்கண்டாம். அந்த சொப்பனம் விடியப் போற நேரத்துல வந்தது.

விடியப் போற நேரத்துல வார சொப்பனம் பலிக்கும்ங்கிற நம்பிக்கெ.
அந்த சொப்பனத்துல ஒரு பொண்ணு குளிச்சிக்கிட்டிருக்கா; உடம்பெத் தேச்சிக் குளிக்கிறப்போ தேக்கிற வளைய சத்தங்கூடக் கேட்டுது. கவனிச்சிப் பாத்தப்போ அந்தப் பொண்ணுக்கு முதுகுல ரெண்ணு தனங்கள் இருந்தது.
ரொம்ப ஆச்சர்யம் இவனுக்கு.

இவனே நெனச்சது உண்டு; இப்பிடி இருந்தா சில சமயத்துல வசதியா இருக்குமேன்னுட்டு.

முழிப்புத் தட்டியதும் தான் நினைச்சாம். நிச்சயம் எங்கோ அப்பிடி ஒரு பொண்ணு இருக்கா. கட்டாயம் தேடிக் கண்டுபிடிச்சிக் கட்டிக்கிடணும். அதுலயிருந்து அவன் அவளைத் தேட ஆரம்பிச்சாம்.

நாலு தனங்கள் உள்ள பொண்ணுகளெத் தேடித் தேடி எங்கயும் காங்காம அலுத்து, ஒருநா ஒரு குளத்தங்கரை மரத்து எணல்லெ அசந்து படுத்தவன் நல்லாத் தூங்கிட்டாம்.

அவம் முந்தி ஒருநா சொப்பனத்துல கண்டானே, அப்பக் கேட்டுதெ, அதேபோல வளைய சத்தம் கேட்டுது.
கொஞ்சங்கொஞ்சமா பயலுக்கு முளிப்பு வந்தது.

அரண்மனையில, பஞ்சுமெத்தயில படுத்துக்கிட்டிருக்கிறதா நெனச்சிக்கிட்டிருந்தவனுக்கு, மரத்துக் கடியில உதுந்து குமிஞ்சிக் கிடக்கிற சருகு இலைக மேல வேட்டிய விரிச்சிப் படுத்துக் கிடக்குது தெரிஞ்சது. பெறவுதாம் குளத்துக்கரைங்கிறது ஞாபகத்துக்கு வந்தது. ஆனா, வளையச்சத்தம் இன்னும் கேட்டுக்கிட்டுத் தானிருந்தது.

பைய்ய எந்திரிச்சி பாத்தாம். கண்ணெ கசக்கிவிட்டுப் பாத்தாம். சொப்பனங்காணலை, நெசந்தாம்! அந்த தாமரைக் குளத்து படிக்கட்டுல ஒரு பொண்ணு அம்மணமா குளிச்சிக்கிட்டிருந்தா. யாருமே பாக்கலெங்கிற தைரியத்துல சாவாசமா உக்காந்து குளிச்சிட்டிருந்தா. இவனுக்கு அவளோட முதுகுப்பக்கந்தாம் தெரியிது. முதுகுல ரெண்டு தனங்கள் இருந்தது தெரிஞ்சது.

ஆகா! நாம நெனச்சது கெடச்சுட்டு. கடவுளே கொண்டாந்து காணிச்சிட்டார். சரி, இவ குளிச்சி முடிக்கட்டும். இவளுக்குத் தெரியாமயே இவ பெறத்தால போவம். எந்த வீட்டுக்குள்ளாற நுழையிதாளோ அதெ கவனிச்சி வச்சிருந்து மொறப்படி போயி பொண்ணு கேட்டு கலியாணத்த முடிச்சிருவம்னு தீர்மானிச்சி, அதே பிரகாரம் அவ குளிச்சிட்டுப் போயி நுழையிற அவ வீட்டையுங் கண்டுபிடிச்சிட்டாம்.

பெறகென்ன; போயி பொண்ணு கேட்டாம்.
ராசாவுக்கு பொண்ணுகேட்டா முடியாதுன்னு சொல்ல இயலுமா?
கலியாணம் முடிஞ்சது.

மொதநா ராத்திரி, பய ஆசையோட அவளெ கட்டிப்புடுச்சி முதுகெப் புடிச்சாம்.
என்னத்தெ எளவு ஒண்ணத்தையுங்காணம்?ன்னு அவக்கிட்டயவே கேட்டாம்.
அவளுக்கு சிரிப்பு வந்திட்டு. அட கோட்டிக்காரப்பய ராசா மவனேன்னு நெனச்சிக்கிட்டு.

‘மாட்டுக்கு வாலு பின்னாலே
மனுசனுக்கு பாலு முன்னாலே’ங்கிறது கூட ஒனக்குத் தெரியாதா?

மார்ல இருக்கவேண்டியது எங்கனாச்சும் முதுகில இருக்குமான்னு கேட்டா
ஏங்கண்ணாலயே பாத்தென ஒம் முதுகில இருந்த்தேன்னு கேட்டாம்
முன்னால இருந்த அதெத்தாம் நீ பின்னால பாத்தென்னா

இவனுக்கு வெளங்கல.

பெறவு அவதாம் வெளக்கமாச் சொன்னா

ஒடம்ப நல்லாத் தேய்ச்சிக் குளிக்கணும்னுட்டுதாம் அவ அந்த காட்டுக் குளத்துக்குப் போவாளாம். வயித்துக்குச் கீழெயெல்லாம் தேச்சிக் குளிக்க இதுக ரெண்டும் எடைஞ்சலா இருக்கும்னுட்டு அதுகள ரெண்டு தோள்களுக்கும் மேலே எடுத்துப் போட்டுக்கிடுவாளாம். அதுக முதுகில கிடக்கும்போது பாத்துட்டு பய சரியாப் பாக்காம முதுகுலதாம் இருக்கும்னுட்டு நெனச்சிக்கிட்டா நாம என்ன செய்யிறதுன்னு கேட்டாளாம்.


http://www.sirukathaigal.com/%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81/

இப்போ குமுதத்தில் கி.ரா தொடர் வருகின்றது "வேதபுரத்தார்க்கு நல்ல குறி சொல்லு " என்ற பெயரில் .வாசிப்பதே மிக சுக அனுபவம் .

(2-10-13) இதழில் ஒரு கதை வந்தது .பிள்ளையில்லா ஒரு வனவேடன் மனைவியை நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது எனக்கு ஒரு பிள்ளை வேண்டும் .என்று அனுப்பிவிடுகின்றான் .காட்டிற்குள் போகும் அவள் ஒரு விறகுவெட்டியை சந்தித்து அவனுடன் உறவு கொள்வதுதான் கதை .அதை மிக அழகாக எழுதியிருந்தார் .

கதையின் கடைசி வசனம் "ஆசுவாசம் தீர்ந்து அவளை அவனுடைய குடிசைக்கு இட்டுக்கொண்டு போய் வைத்துக்கொண்டான் .

ஒரு குழந்தை பிறந்துவிட்டால் நம்மை விட்டு போகமாட்டாள் என்பது அவன் கணக்கு ,

ஒரு குழந்தை உண்டாகிவிட்டால் இவனிடம் இருந்து ஓடிப்போய் விடலாம் இது அவளுடைய கணக்கு ."

  • தொடங்கியவர்

புத்தகத்தை விட இங்கு ஏராளமான கதைகள் கிடைக்கும் போலிருக்கே :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.