Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 வெளியிட்ட 'இசைப்பிரியா உயிருடன் கைதாகும்' காணொளி

Featured Replies

நன்றி துளசி.

 

உபயோகம் இல்லாதா திரிகளில் தீ சுவாலை கக்குபவர்கள் எங்கே?

 

எல்லோரும் சேர்ந்து பரப்புரை செய்தால் இந்த காணொளி போக வேண்டியவர்கள் கைக்கு போகாதா? 

 

மன்மோகன் சிங் பார்த்தாரா இதை. அவரிடம் யாராவது ஊடகவியலார் இது பற்றி கேட்டார்களா?

 

பொது நலவாயத்துக்கு போக முதல் கமறுன் கைக்கு இதை போக வைக்க யாருக்கும் முடியுமா? முயற்சிப்பார்களா?

 

பார்த்துவிட்டு "பாவம் பொட்டை" சொல்ல மட்டும்தான் இசைபிரியாவின் இறப்பு லாயக்கா?

 

இறந்த சொந்த உறவுக்கு நியாயம் கேட்க நாம் முன்னால் வராவிடால் மக்ரே இதில் ஏன் ஆர்வம்?

 

அண்ணா, நான் நேற்று Aseem Trivedi என்பவருக்கு message box இல் இசைப்பிரியாவின் இந்த காணொளிக்கான channel 4 இணைப்பை போட்டு விட்டேன். (ஒரு நப்பாசை தான். :D) பார்க்க மாட்டார் என்றே நினைத்தேன். ஆனால் message பார்த்திருந்தார். (காணொளி பார்த்தாரா தெரியாது) இவர் இந்திய ரீதியில் கருத்துப்படங்கள் வெளியிடுபவர். இவர் பற்றி முன்னர் ஒரு செய்தி யாழில் இணைத்திருந்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122991&p=901665

இவர் நாம் கேட்டால் உதவி செய்வாரா தெரியாது. ஆனால் முடிந்தால் ஆங்கிலத்தில் சுருக்கமாக எமது பிரச்சினையை எழுதி channel 4 காணொளிகள் பற்றியும் குறிப்பிட்டு (உரிய இணைப்பையும் வழங்க வேண்டும்) உதவி கேட்டு பார்த்தால் நல்லது.

 

இவரது முகநூல் இணைப்பு: https://www.facebook.com/cartoonistaseem?fref=ts

கடைசி ஒரு கருத்துப்படம் போட்டால் கூட தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஒருவேளை இந்திய சட்டங்களுக்கு பயப்பட்டு உதவி செய்யாவிட்டால் கூட கேட்பதால் எமக்கு நட்டமில்லை. எனக்கு english அரைகுறையாக வாசிக்க மட்டும் தான் தெரியும். ஒழுங்காக எழுதுமளவுக்கு தெரியாது. எனவே இதை யாராவது செய்வீர்களா?

பி.கு: மல்லை அண்ணா, இப்படியான தேவைகளுக்காவது ஒரு facebook account open பண்ணுங்கள். :rolleyes:

  • Replies 197
  • Views 29.6k
  • Created
  • Last Reply

மன்மோகன் சிங் இற்கு அவர் பார்ப்பாரோ இல்லையோ நாம் mail போடுவது நல்லது. அதற்கு கடிதமும் மின்னஞ்சல் முகவரியும் யாராவது தந்தால் நல்லது. எங்களுக்கு தராவிட்டாலும் கடைசி நீங்கள் யாராவதாவது போடுங்கள். :rolleyes:

 

இந்த நேரத்தில் அகூதா அண்ணா களத்தில் இருந்திருந்தால் மிகவும் உதவியாக இருந்திருக்கும். :rolleyes: நிர்வாக உறுப்பினர்கள் யாரும் அவருக்கு மீண்டும் mail போட்டு பார்ப்பீர்களா? அல்லது கனேடிய உறவுகள் யாரிடமும் அவர் தொலைபேசி இலக்கம் இருந்தால் அவரை வரும்படி கேளுங்கள். :rolleyes:

Are you living outside UK? Watch the documentary #NoFireZone by @Callum_Macrae on Channel4 Sunday 3rd Nov @ 10.50pm to watch ONLINE PLEASE USE ANY OF THE LINK

http://watchlive.channel4.com/

http://tvcatchup.com/watch.html?c=4

http://freetvall.com/video/3288BKDBHRON/Channel-4

http://livetvcafe.net/video/H8UK61U9HKDH/

http://www.stream2watch.me/live-tv/channel-4-live-stream

 

TYO

(facebook)

பாலச்சந்திரன் கொல்லப்பட்ட ஒளிப்படங்களை சனல் 4 வெளியிட்டபோது தமிழகம் அடைந்த கொதிநிலை வார்த்தை வெளிகளுக்கு அப்பாற்பட்டது. இன்று வரை மாணவர்கள் தொடரும் போராட்டம் அதன் தொடர்ச்சிதான்.

நேற்று இசைப்பிரியா குதறப்பட்ட காட்சிகள் வெளியான போது தமிழகத்தில் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்துடனும் ஒரு வித எதிர்பார்ப்புடனும்தான் பலர் அவதானித்தார்கள்.

ஆனால் வழமையான உணர்வாளர்களைத் தவிர வேறு எங்கும் எந்த மாற்றமுமில்லை. ஏனென்றால் எல்லோரும் தீபாவளியில் Busy..

மூட நம்பிக்கைகளுக்கும் முட்டாள்தனங்களுக்கும் முன்னால் ஒரு தமிழச்சியின் அலறலை செவிமடுக்க தமிழன் தயாராயில்லை.

கட்டுக்கதையும் கற்பனையுமாக இருந்தாலும் தனக்கு, தன் இனத்திற்கு, தான் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளுக்கு எதிராக ஒரு சக தமிழன் கொல்லப்பட்டதையே கொண்டாடும்படி ஆரியம் புரட்டு செய்திருக்கிறது என்பதைக் கூட உணராமல் இந்த கேடுகெட்ட நாளை கொண்டாடும் முட்டாள்களுக்கு முன்னால் தமிழச்சிகளின் மானம் எல்லாம் எடுபடாது என்று புரிகிறது.

நல்ல வேளை பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகளை ஒரு தீபாவளி "திருநாளில்" சனல் 4 வெளியிடவில்லை. இல்லையென்றால் பாலச்சந்திரனும் இசைப்பிரியாவைப்போல் அனாதையாக விடப்பட்டிருப்பான்.

ஒன்று மட்டும் புரிகிறது. தமிழர்களை ஒரு இலட்சம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

 

Parani Krishnarajani

(facebook)

இசைப்பரியா விவகாரத்தில் சுயாதீன விசாரணை: ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி கோரிக்கை

 

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஊடகவியலாளராக அறியப்பட்ட இசைப்பிரியா விவகாரத்தில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பியினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்;ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் சார்பாக ஈ.பி.டி.பி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்ற உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர். இந்த நிலையில் சனல் 4 தொலைக்காட்சி போர்க் குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா படுகொலை தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் உலக நாடுகளை மட்டுமல்ல உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை அதிர்சிக்குள்ளாகியுள்ளது.

அத்தொலைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் இராணுவத்தினர் கைது செய்த காட்சியை ஒளிபரப்பு செய்துள்ளமை தமிழ் மக்களை எரிச்சலடையச் செய்துள்ளது. நம்பிக்கைகளை தகர்ந்து போகச் செய்துள்ளது. மனித நேயமுள்ளவர்களை உலுப்பியுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் இசைப்பிரியா கைது செய்யப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பதான செய்திகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்தப்பட்டு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்படின் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்ட வேண்டும்.

அதுவே இறுதி யுத்தம் தொடர்பாக தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் படுகொலைகள் தொடர்பான அச்சங்களும் சந்தேகளுக்கும் விடைகாண்பதாக அமையும். இதனால் மக்களிடையே இருக்கும் சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் நியாயமும் பரிகாரங்களும் காணப்பட வேண்டும்.

ஆகவே எமது கோரிக்கைக்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் உண்மையை வெளி உலகிற்கு தெரியப்படுத்துவார் என எதிர்பார்க்னிள்றோம்" என குறித்த கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

tamilmirror

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுமை காக்க வேண்டுகிறோம் இந்த பொதுநல மாகா நாடு முடிந்த பின்பு நமது மாண்பு மிகு கல்வி அறிவாளர்கள், நீந்தமான்கள், நாயனார்கள், சுமெரியர் எல்லாம் மிக மிக வன்மையாக கண்டித்து அறிக்கை விடுவினம்
இப்போ அறிக்கை விட்டால் சட்டப்படி பாரிய குற்றம். அது அறிவாளிகளாகிய கூட்டணியினருக்கு மட்டும் தான் விளங்கும்.. பாமர தமிழ் மக்களுக்கெல்லாம் விளங்காது.. அரசியல்... அது தான் நமக்கு வாக்கு போட்டார்கள்.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த ஒளிப்பதிவில் இருக்கும் ஒரு இராணுவ அதிகாரியின் படம் வந்துள்ளது. இங்கு தரையேற்ற முடியவில்லை :mellow:

அந்த ஒளிப்பதிவில் இருக்கும் ஒரு இராணுவ அதிகாரியின் படம் வந்துள்ளது. இங்கு தரையேற்ற முடியவில்லை :mellow:

 

இதில் தரவேற்றி விட்டு copy பண்ணி போடுங்கள்.

http://imageshack.us/

Edited by துளசி

no fire zone இன்னும் பார்க்காதவர்கள் இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்.

 

http://www.youtube.com/watch?v=t8-wPGPsHiU&hd=1

 

(facebook)


இங்கிலாந்தில் உள்ளவர்கள் சேனல் 4 இல் சென்று நேரடியாக பாருங்கள்.

http://www.channel4.com/programmes/no-fire-zone/4od#3601317

நாங்கள் அதில் பார்க்க முடியாமல் உள்ளது.
 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சனல் 4 படம் இங்கு சனிக்கிழமை முழுவதுமாக திரையிடப்பட்டது (90 நிமிடங்கள்). நேற்று அதனை சுருக்கி 50 நிமிடங்களாக ஒளிபரப்பியிருந்தார்கள். 

 

திரையிடலின் பின்னர் ஒரு சிறிய விவாதம் நடைபெற்றது. இத் திரையிடலை சுவிஸ் நாட்டு அமைப்புக்ளே முன்னின்று செய்தன. வந்தவர்களும் 75வீதம் வெளிநாட்டவர்கள் தான். 

அதில் ஒரு தமிழர் நடுநிலையாக பேசுவது போல் ஆரம்பித்து இடையில் இந்த படத்தில் புலிகளை பற்றி விமர்சனம் ஒரே ஒரு வசனம் மட்டுமே வருகிறது என்றார். அதை அந்த நொடுடியிலயே நடத்துபவர்கள் மறுத்தனர். அதற்கு படத்தில் வரும் பல காட்சிகளை ஆதாரமாக சொன்னார்கள். பின்னர் அவர் முஸ்லீம்களை இங்கே நாம் மறந்து விட்டோம் என்பது பற்றி பேசினார். அதற்கு பதில் கொடுப்பது தேவையற்றது என்றே பலரும் நினைத்திருப்பார்கள் போல. ஆனால் இப்படியானவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. அவரை இதுவரையில் நான் சுவிஸ் நாட்டில் கண்டதில்லை. அவர் பேசிய ஜெர்மன் மொழியின் உச்சரிப்பு அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகிறார் என்பதை காட்டியது. ஒரு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். குடும்பி கட்டியிருந்தார். 

 

பின்னர் அவரிற்கு பல தமிழர்கள் பதிலடி கொடுத்தார்கள். அதன் பின்னர் அவர் அடங்கி விட்டார். 

 

எனது பங்கிற்கு நானும் ஒரு கேள்வியை கேட்டேன்.

 

இத்தனை ஆதாரங்களிருந்தும் எதற்காக இனப்படுகொலை என்பதை ஏற்க மறுக்கிறீர்கள் என கேட்டேன். 

அதற்கு அவர்கள் உப்புச்சப்பில்லாத பதிலை தந்தார்கள்.

 

இனப்படுகொலையா இல்லையா என்பதை நாங்கள் முடிவு செய்ய முடியாது. நீதிமன்றங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும். இதனை இனப்படுகொலையாக சித்தரிப்பதில் ஒரு சில அமைப்புகள் அக்கறையாக இருக்கின்றன என்றார். அதன் பின்னர் என்னை தொடர்ந்து கேட்க அனுமதிக்காமல் கேள்வி நேரத்தை முடித்துவிட்டார். 

இது மனிதஉரிமை மீறல் என்று எந்த கோர்டும் சொல்லவில்லை. போர்குற்றம் என்று எந்த கோர்ட்டும் சொல்லவில்லை. ஆனால் இனப்படுகொலை என்று பேசுவதற்கு மட்டும் எதற்கு கோர்ட் சொல்லும் வரை காத்திருக்க வேண்டும்? அடுத்த திரையிடலில் இதுவே எனது கேள்வியாக இருக்கும். 

 

அடுத்த திரையிடல் 7.12.2013 அன்று நடைபெறுகின்றது. இது மூன்றாவது தடவையாக இங்கே திரையிடப்படவுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்ரியா படுகொலை வீடியோவிற்கும் பாலச்சநதிரன் படுகொலை புகைப்படங்களுக்கும் பல் ஒற்றுமைககள் உள்ளன. அவர்கள் போரில் கொல்லப்படவில்லை. ராணுவத்தால் உயிரோடு பிடிக்கப்பட்டு கொடூரமாக அழிக்கப்பட்டவர்கள். பொதுவாக போர்க்குற்றங்கள சம்பந்தமான் குற்றச் சாட்டுகள் அனுமானத்தின் பெயரில் எழுப்பப்படும் . ஆனால் ஈழத்தில் இறுதிபோரில் நடந்தவை அனைத்தும் ஒரு திரைப்படம் போல நேரடியாக காட்சிப் படுத்தபட்டிருக்கிறது. ஹிட்லரின் வதை முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் கூட இதற்குப் பக்கத்தில் வர முடியாது..பெணகள், குழந்தைகள், ஊடகவியலாளர்கள் திடர்பான அனைத்து போர் நெறிமுறைகளும் இவ்வளவு பச்சையாக மீறப்பட்டதற்கு இன்னும் என்ன நேரடி சாட்சியங்கள் தேவை? சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூக்குரலிடுபவர்கள் இப்போது எங்கே போனார்ககள்?

இந்தியா சர்வதேச நீதியில் நம்பிக்கை கொண்ட நாடாக இருந்தால் இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்திருக்க வேண்டும்.. ஆனால் இந்திய அரசாங்கம் இன்னும் ராஜபக்‌ஷேவின் பூட்ஸ் காலிற்கு பாலிஷ் போடுவதில்தான் குறியாக இருக்கிறது. ஐ,நா மன்றத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று பாலச் சந்திரனின் புகைப்படத்தைக்காட்டி கெஞ்சினோம், இப்போது இசைப் பிரியாவின் வீடியோவைக் காட்டி காமன்வெல்த் மாநாட்டிற்கு போகாதீர்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.

அந்தப் பெண் பலிபீடத்தை நோக்கி ஒரு மிருகத்தைப் போல இழுத்துச் செல்லபடும் காட்சியை வாழ்நாளில் மறக்க முடியாது. நீதிக்காக தமிழர்கள் உங்களிடம் மண்டியிடவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அப்போதுகூட இந்தக் கொடூரத்தின் மேல் உங்களுக்கு எந்த உறுத்தலும் எதிர்வினையும் கிடையாதா?

இந்திய அரசாங்கம் இவ்வளவு கொடூரமான போர்க்குற்றவாளியை பாதுகாத்தால் அது வரலாற்றில் தீராத அவமானத்தை தேடிக்கொள்ளும்.

Manushya Puthiran

FB

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் கொல்லப்பட்ட ஒளிப்படங்களை சனல் 4 வெளியிட்டபோது தமிழகம் அடைந்த கொதிநிலை வார்த்தை வெளிகளுக்கு அப்பாற்பட்டது. இன்று வரை மாணவர்கள் தொடரும் போராட்டம் அதன் தொடர்ச்சிதான்.

நேற்று இசைப்பிரியா குதறப்பட்ட காட்சிகள் வெளியான போது தமிழகத்தில் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்துடனும் ஒரு வித எதிர்பார்ப்புடனும்தான் பலர் அவதானித்தார்கள்.

ஆனால் வழமையான உணர்வாளர்களைத் தவிர வேறு எங்கும் எந்த மாற்றமுமில்லை. ஏனென்றால் எல்லோரும் தீபாவளியில் Busy..

மூட நம்பிக்கைகளுக்கும் முட்டாள்தனங்களுக்கும் முன்னால் ஒரு தமிழச்சியின் அலறலை செவிமடுக்க தமிழன் தயாராயில்லை.

கட்டுக்கதையும் கற்பனையுமாக இருந்தாலும் தனக்கு, தன் இனத்திற்கு, தான் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளுக்கு எதிராக ஒரு சக தமிழன் கொல்லப்பட்டதையே கொண்டாடும்படி ஆரியம் புரட்டு செய்திருக்கிறது என்பதைக் கூட உணராமல் இந்த கேடுகெட்ட நாளை கொண்டாடும் முட்டாள்களுக்கு முன்னால் தமிழச்சிகளின் மானம் எல்லாம் எடுபடாது என்று புரிகிறது.

நல்ல வேளை பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகளை ஒரு தீபாவளி "திருநாளில்" சனல் 4 வெளியிடவில்லை. இல்லையென்றால் பாலச்சந்திரனும் இசைப்பிரியாவைப்போல் அனாதையாக விடப்பட்டிருப்பான்.

ஒன்று மட்டும் புரிகிறது. தமிழர்களை ஒரு இலட்சம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

 

Parani Krishnarajani

(facebook)

 

உண்மை. எனது மகளைத் தமிழாலயத்தில் கொண்டுசென்றுவிடும்போது தீபாவளி வாழ்த்துக் கூறிக்கைகுலுக்கும் தமிழர்களைக் கண்டபோது இவர்களது அறியாமையை எப்படி மாற்றுவது என்ற எண்ணமே தோன்றியது. பலதேவையற்ற விண்ணானங்களை எடுத்துப் புகழ்பாடும் புல்லுருவிகளான நிர்வாகம் கூட இசைப்பிரியா பற்றிய நினைவூட்டலைச் செய்யவில்லை. யேர்மனியியிலே பலதமிழர்கள் வெளிநாட்டவர்சபை, யேர்மன் பெண்கள் சபை என்று  இருக்கிறார்கள்.ஒன்று தமிழர் காலாசாரமென்று கிந்திப்பாட்டைப்போட்டு நடனமாடுவது அல்லது பெண்கள்தினமென்று கூடி கொண்டாடிக் கும்மாளமடித்துக் கலைந்துவிடுவதோடு சரி. எங்கே இவர்களால் இசைப்பிரியாக்களை நினைக்கமுடியும்.ஆனால் அரங்குகளில் மைக்கிலே; அப்பப்பா இவர்களது தேசிய உணர்வு புல்லரிக்கும் போங்கள்.

Edited by nochchi

 

அடுத்த திரையிடல் 7.12.2013 அன்று நடைபெறுகின்றது. இது மூன்றாவது தடவையாக இங்கே திரையிடப்படவுள்ளது. 

 

இத்தகவலை இங்கு இணைக்கிறேன்.

 

No Fire Zone: The Killing Fields of Sri Lanka

Samstag, 7. Dezember, 18 Uhr

Stattkino, Löwenplatz 11, 6004 Luzern

 

Eintritt frei. Anmeldung für Platzreservation: info@amnesty.ch

http://www.gfbv.ch/d...ltungskalender/

Bitte weiterleiten...

Danke!

 

tyo

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்ரியாவின் மரணத்தை எண்ணி கண்ணீர் விடுகிறேன் --கலைஞர் அறிக்கை

இசைப்ரியாவின் மரணம் பற்றிய வீடியோ உண்மையானது தான் -ப.சிதம்பரம் குறிப்பு

இசைப்ரியாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் --டக்ளஸ் தேவானந்தா பேட்டி

இன்னும் ராஜபக்சே மட்டும் தான் இந்த லிஸ்டுல வரலை ....

காலக் கொடுமை .....

 

-FB-

  • கருத்துக்கள உறவுகள்
அவள் குரல் ஒலித்தால்தான்
ஈழச் சேவல் கூவும் 
என்று இருந்த காலம் ஒன்று 
இருந்தது..
அதை..
அழித்து விட்டார்களே
சிங்கள இனப்பேய்கள் ..?
**************************
மு.வே.யோகேஸ்வரன்
****************************
இசைப்பிரியா அழகுதான்
என்று சொல்லும் 
தசைப் பிரியர்களே..அவளின்
ஒவ்வொரு அங்கத்தையும்
சிங்கள இன வெறிக் கழுகள்
சுவை பார்த்தபோது 
நீங்கள் எங்கே போனீர்கள்?

அட.. எங்கள் தங்கை
ஒரு தாமரையடா..
காலையிலும் அவள் அழகுதான்
மாலையானால்..கூட 
அவள் அழகுதான்..

அவளின் புற அழகில்
நாம் எப்போதும் 
மயங்கியதில்லை ..
அவளோர் ஈழத்தின் விடிகாலை
நட்சத்திரசம்..!
.
அவள் குரல் ஒலித்தால்தான்
ஈழம் விடியும் 
என்று இருந்த காலம் ஒன்று 
இருந்தது அதை..
அழித்து விட்டார்களே
சிங்கள இனப்பேய்கள் ..?

 

Friday 8th November'13 @ 20:30 GMT, Saturday 9th November'13 @11:30 GMT and Sunday 10th November'13 @ 17:30 GMT

Sri Lanka's Unfinished War: http://www.bbc.co.uk/programmes/n3cstnpt

 

Gobynath Nithiyanantham

(facebook)

No Fire Zone: The Killing Fields of Sri Lanka + Director Q&A http://www.dochouse.org/film-screening/No-Fire-Zone-The-Killing-Fields-of-Sri/349
Tuesday 5th November, 2013 at 8:00pm

 

Riverside Studios,

Crisp Road, Hammersmith, W6 9RL
UK

 

(twitter)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிமிடத்துக்கு முன் தமிழ்நாட்டில் திடீரென முளைத்த பெண்ணியவாதிகள் கவனத்திற்கு..! பெண்ணியம் , பெண்மையின் மேன்மை, பெண் உரிமை, பெண் விடுதலை என்றெல்லாம்ஊடகங்களின் முன் வீராவேசமாக பேசும் பெண்ணியவாதிகளே..! டெல்லி பெண் நிர்பயாவுக்காக நியாயம் கேட்க, சென்னை மெரீனாவில் திடிரென உதித்த பெண்ணிய போராளிகளே! எது தடுக்கிறது உங்களை ??? இசைப்ரியா தமிழின பெண் என்பதா?? இல்லை அவர் உங்கள் பார்வையில் பெண்ணே இல்லை என்பதாலா ?? அரைகுறை ஆடை அணிந்து, அர்த்தராத்திரியில் ஆண் நண்பருடன் வெளியே செல்லும் பெண்ணுக்கு தான் ஆதரவு என்று உங்கள் பெண்ணுரிமை சட்டம் சொல்கிறதா ?? இன்றைய நவநாகரிக மங்கையாக இல்லாமல், நாட்டுக்காக... ஆயுதம் ஏந்திய காரணம் தடுக்கிறதா ??? எது தடுக்கிறது ??? ஏன் இந்த கள்ள மௌனம் ??? உங்கள் ஆடை புரட்சிக்கு ஆதரவாக களமிறங்கும் நீங்கள், ஆடையின்றி மானபங்கப்படுத்தப்பட்டு , கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணுக்காக களமிறங்க நினைக்ககூட மறுப்பதேன் ??? உங்களை போன்ற போலி பெண்ணியவாதிகளை விட, தன் தாயையும் , சகோதரியையும், மனைவியையும், மகளையும் கட்டுப்படுத்தியும், மதித்தும், காக்கும் சராசரி ஆண் (உங்கள் பார்வையில் ஆணாதிக்க வெறியன் ) எவ்வளவோ மேல்..! ஒரு சக பெண்ணுக்காக, சுயமாக சிந்தித்து போராட வக்கில்லாதவர்கள் தயவுசெய்து மைக்கை பிடித்துக்கொண்டு மீடியா முன்பு வாயாட வந்துவிடாதீர்கள்.. தலை நிமிர்த்தவே தகுதி அற்றவர் நீங்கள்.!!! -“இந்தி”(தீ)யன் அல்ல தமிழன்டா ” — Kalai Vany மற்றும் 2 பிறர் பேர்களுடன் புகைப்படம்: தமிழ்நாட்டில் திடீரென முளைத்த பெண்ணியவாதிகள் கவனத்திற்கு..! பெண்ணியம் , பெண்மையின் மேன்மை, பெண் உரிமை, பெண் விடுதலை என்றெல்லாம் ஊடகங்களின் முன் வீராவேசமாக பேசும் பெண்ணியவாதிகளே..! டெல்லி பெண் நிர்பயாவுக்காக நியாயம் கேட்க, சென்னை மெரீனாவில் திடிரென உதித்த பெண்ணிய போராளிகளே! எது தடுக்கிறது உங்களை ??? இசைப்ரியா தமிழின பெண் என்பதா?? இல்லை அவர் உங்கள் பார்வையில் பெண்ணே இல்லை என்பதாலா ?? அரைகுறை ஆடை அணிந்து, அர்த்தராத்திரியில் ஆண் நண்பருடன் வெளியே செல்லும் பெண்ணுக்கு தான் ஆதரவு என்று உங்கள் பெண்ணுரிமை சட்டம் சொல்கிறதா ?? இன்றைய நவநாகரிக மங்கையாக இல்லாமல், நாட்டுக்காக... ஆயுதம் ஏந்திய காரணம் தடுக்கிறதா ??? எது தடுக்கிறது ??? ஏன் இந்த கள்ள மௌனம் ??? உங்கள் ஆடை புரட்சிக்கு ஆதரவாக களமிறங்கும் நீங்கள், ஆடையின்றி மானபங்கப்படுத்தப்பட்டு , கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணுக்காக களமிறங்க நினைக்ககூட மறுப்பதேன் ??? உங்களை போன்ற போலி பெண்ணியவாதிகளை விட, தன் தாயையும் , சகோதரியையும், மனைவியையும், மகளையும் கட்டுப்படுத்தியும், மதித்தும், காக்கும் சராசரி ஆண் (உங்கள் பார்வையில் ஆணாதிக்க வெறியன் ) எவ்வளவோ மேல்..! ஒரு சக பெண்ணுக்காக, சுயமாக சிந்தித்து போராட வக்கில்லாதவர்கள் தயவுசெய்து மைக்கை பிடித்துக்கொண்டு மீடியா முன்பு வாயாட வந்துவிடாதீர்கள்.. தலை நிமிர்த்தவே தகுதி அற்றவர் நீங்கள்.!!! -“இந்தி”(தீ)யன் அல்ல தமிழன்டா ” வல்வை அகலினியன்

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியா அக்காவின் வாழ்க்கை வரலாறு....!

 

 v306.jpg

 

 

இசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள். அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமையாக அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கோளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. இரக்ககுனத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள். .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. .மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர், யாரவது துன்பபடுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிச்சென்று அவர்களுக்கான உதவிகளை செய்துவிடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள். அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள். புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால். அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில் 1995 ஆம் ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது. எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான். தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும், துன்புறுத்தியும் படுகொலை செய்தான். உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்றோடு நடந்தும், ஓடியும், விழுந்தும், எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒருவழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர். சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள். தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள். ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தமானால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள். 1999 ஆம் ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா. இயக்கத்தில் இணைந்துகொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா…? சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்தக்கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது. இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்கபோகின்றது என்பது தெரிந்தோ என்னவோ ”இசையருவி” என பெயர்சூட்ட பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்ச்சிகளை முடித்தாள்.சோபனா, தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள். இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவுசெய்ய வைத்தது. இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்..

இலட்சியப்போராளி - Iladsiyaporali

facebook

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்விற்க்கு பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இசைப்பிரியா படுகொலை கோரத்தைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து நவம்பர் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலைகளைத் தொடர்ந்து இலங்கை அரசின் மீதும் குறிப்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே மீதும் குற்றச்சாட்டுகள் உலகெங்கிலும் இருந்து வருகிறது. தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இதை வலியுறுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றி உலகத்தமிழர்கள் அனைவரது ஒட்டுமொத்த உணர்வுகளை உலகுக்கு உணர்த்தி இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பாக சேனல் 4-ல் ஒளிபரப்பப்பட்ட தமிழீழப் பெண் இசைப்பிரியாவின் கொடூர மரணம் கல்மனங்களைக் கூட கரைய வைப்பதாக இருக்கும் போது மத்திய அரசின் மெத்தனம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது. எனவே மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமரும், இந்தியாவின் பிரதிநிதிகளும் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் கண்ட ஆர்ப்பாட்டங்கள் வரும் 8.11.2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/sarath-kumar-lead-agitation-against-isaipriya-s-brutal-murder-186621.html

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாவின் கொலைக்கு உலகம் எல்லாம்மிருந்து கண்டனங்கள் வந்து கொண்டு இருக்க வழமை போல சம்மந்தனும் விக்கியும் மௌனம் கேட்டால் அடிபொடிகள் சொல்லுவினம் அரசியல் சாணக்கியம் என்று

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கத்துக்கு மாறா டக்கி அங்கிள் குரைக்குது. நம்மாட்கள் நித்திரையாக்கும் ஹசன் சீயை விட்டுதான் நித்திரையாலை எழுப்பவேணுமாக்கும்.

பொதுநலவாய மாநாட்டில் இசைப்பிரியா குறித்து பிரித்தானியா கேள்வி எழுப்பும் - இமானுவேல் அடிகளார்
[Monday, 2013-11-04 18:12:01]
News Service
"இனப்படுகொலை தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை - புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஓயாது. இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பான வீடியோ, போராட்டங்களை மேலும் கூர்மையாக்கும்." இவ்வாறு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இமானுவேல் அடிகளார் நேற்று தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டனின் பிரசன்னம் மற்றும் சனல் - 4 விடியோ விவகாரம் ஆகியன தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது: பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டன் பிரதிநிதிகள் பங்கேற்பது தொடர்பில் நாம் அவர்களுடன் பேச்சு நடத்தினோம். கடிதங்களை எழுதினோம். தற்போதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும், தங்களின் பங்குபற்றல் அவசியம் என பிரிட்டன் அதிகாரிகள் கருதுவதால் கொழும்பு மாநாட்டில் அவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 
கொழும்பில் வைத்து மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையிடம் கேள்வி எழுப்பப்படும் என்று பிரிட்டன் பிரதிநிதிகள் கூறினார்கள். எனவே, இசைப்பிரியா தொடர்பிலும் அவர்கள் கேள்வி தொடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளை, இனப்படுகொலை சாட்சிகள் தற்போது வெளிவந்த வண்ணமுள்ளன. இவற்றை மறைப்பதற்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது. இவற்றை ஒருபோதும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. நாம் மறக்கவும் மாட்டோம்.

தொடர்ந்து போராடுவோம். அனைத்துலக விசாரணை மூலம் நீதி கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை. இதர புலம்பெயர் அமைப்புகளும் இது விடயத்தில் எம்முடன் இணைந்துச் செயற்பட வேண்டும் என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=96443&category=TamilNews&language=tamil


வழக்கத்துக்கு மாறா டக்கி அங்கிள் குரைக்குது. நம்மாட்கள் நித்திரையாக்கும் ஹசன் சீயை விட்டுதான் நித்திரையாலை எழுப்பவேணுமாக்கும்.

வெளியில் நடந்தேற வேண்டியவை நடக்காவிட்டல் பொது ஊடகங்கள் அது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.

 

யாழில் நடக்க வேண்டியவை நடந்தேறாதபோது நமது கடமை குரல் எழுப்புவது.

  • கருத்துக்கள உறவுகள்

jq85.jpg
 
 

cmwp.jpg
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.