Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கவர்களுக்கும் தமிழர்களுக்கும் கலாச்சாரம் ஒன்றே ; நாம் வெளியேற அவசியமில்லை என்கிறார் காங்கேசன்துறை எஸ்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே கலாச்சாரம் தான் சிங்கள பொலிஸாருக்கு தமிழரின் கலாச்சாரம் தெரியாது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றை நாம்  எதிர்க்கின்றோம் என காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.

அதில் வடக்கு முதல்வர் இங்கு பணியாற்றி வருகின்ற சிங்கள பொலிஸார் தமிழ் மக்களுடைய கலாச்சாரம் தெரியாதவர்கள் அவர்களை அரசு திருப்பி பெறவேண்டும் என கோரியிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் முகமாகவே இதனை அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு முதலமைச்சரின் கருத்து தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் அகியோர் பதிலளித்துள்ளனர்.

எனினும் வடக்கு முதல்வரின் கருத்தை நாமும் எதிர்க்கின்றோம். இருப்பினும் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள முறைப்பாட்டு பகுதியில் தமிழ் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தமிழ் மொழியில் முறைப்பாடுகளும் பெறப்படுகின்றன.

2009 ஆம் ஆண்டு யுத்த முடிவுக்குப் பின்னர் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர்கள் 60 பேர் வடக்கிற்கு நியமிக்கப்படுள்ளனர். அவர்களில் இருவர் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் 460 தமிழ் பொலிஸார் பயிற்சி முடித்துக் கொண்டு வடக்கு மாகாணத்தில் கடமையாற்றி வருகின்ற வேளை800 பேருக்கு தற்போது பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களும் விரைவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, வடக்கில் உள்ள நீதிமன்றங்களுக்கு பொலிஸ் நிலையங்களில் இருந்து தமிழ் மொழியிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது.

மேலும் 1996ஆம் ஆண்டு அமுலான திட்டத்தின்படி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் சிங்கள மொழியைக் கொண்ட பொலிஸாருக்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி இதுவரை 9 குழுக்கள் நிறைவு செய்துள்ளதுடன் 10 ஆவது குழு பயிற்சியை நிறைவு செய்யவுள்ளது.

சிங்களவர்களும் வெற்றிலை சாப்பிடுகின்றனர் தமிழர்களும் வெற்றிலை சாப்பிடுகின்றனர். அதுபோல சிங்களவர்களும் சோறு சாப்பிடுகின்றனர் தமிழர்களும் சோறு சாப்பிடுகின்றனர். எனவே சிங்களவர்களுக்கும்  தமிழர்களுக்கும் ஒரே கலாச்சாரம் தான்.

மேலைத்தேச நாடுகளைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கூட சிரிக்காத சூழலில் எமது நாட்டில் இன மத வேறுபாடு இல்லாது உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஐரோப்பியர் இலங்கைக்கு வந்த காலத்தில் சிங்களவர்களும் தமிழர்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். அப்போதும் கூட பௌத்தமும் இந்து மதமும் இருந்தன.

அத்துடன் அநுராதபுரம் பொலநறுவை கதிர்காமம் போன்ற இடங்களில் பௌத்த விகாரைகளுக்கு அருகில் இந்துக் கோயில்களும் உள்ளன. கதிர்காமத்தில் உள்ள முருகக் கடவுளை இந்துக்களும்  பௌத்தர்களும் வணங்குகின்றனர்.

மேலும் நல்லூர் ஆலய திருவிழாக்காலத்தில் கூட பொலிஸார் வேஸ்டி அணிந்து சைவ உணவுகளையே சாப்பிட்டிருந்தனர். இவற்றிலும் கூட கலாச்சார வேறுபாடு காணப்படவில்லை.

எனவே எமது நாட்டினை சிறந்த நாடாக கட்டியெழுப்பவே நாம் உழைத்து வருகின்றோம் என்றார்.

இதன்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேராவும் கருத்துக்களை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=559202412501288622#sthash.Gr6nlLQA.dpuf
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமா விக்னேஷ்வரன் என்ன அர்தத்தில் அறிக்கைகளை வெளியிடுகின்றார் என்று விளங்கவில்லை. தனது குடும்பத்துக்குள்ளேயே சிங்களவர் இருப்பது தெரியவில்லையா? தனது குடும்பத்துக்குள் இருக்கும் சிங்கள இனத்தவருக்கு மட்டும் தான் தமிழ் கலாச்சாரம் தெரியும் என்று நினைக்கின்றாரா?
இல்லை தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் தனது சொல்லை வேத வாக்கா எடுப்பினம் என்ற நினைப்பா?

அப்போது ஏன தம்புள்ள அம்மன் கோவிலை இடித்தார்கள்?

 

எதற்கும் யாழ்பாணத்தில் எந்த தமிழ் பொலிசுகள் மொழி பெயர்ப்பு வேலை செய்க்கிறார்கள். போட்து கீசருடன் வந்தவர்களா அல்லது அராபியர்களுடன் வந்தவர்களா. தமிழ் கலாசாரம் பௌத்த பொலிசுகளுக்கும் இந்து பொலிசுகளுக்கும் மட்டும்தானே தெரியும். :o 

<_<  

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்பெயருள்ள அனைவருக்கும் சிங்களம் தெரியும். தமிழ்ப்பெயருள்ள பலருக்குத் தமிழ் தெரியாது, சிங்களம் மட்டுமே தெரிகிறதே?. இங்கு ஒரே கலாச்சாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது. :o 

வெத்திலை போடுவதையும் சோறு சாப்பிடுவதையும் ஒப்பிட்டு கலாச்சார ஒற்றுமை பற்றி  பேசுபவரிடம் போய் எந்த பத்திரிக்கை கேள்வி கேட்டது? 

 

அரசியல் அறிக்கைகளுக்கு அதிகாரிகள் மட்டத்தில் பதிவருவது அதிகார துஸ்பிரயோகத்தின் ஆதாரம்.

மன்னிக்கவும் போராட்டம் ,விடுதலை என்ற வரையறைக்குள்ளும் நாம் எவ்வளவு கண்ணியமானவர்கள் என்பதை காட்டிய எம் கலாச்சாரத்துடன் ,அதே போராட்ட சூழலில் மிருகங்களையும் விட கேவலமாய் சத்தி எடுக்கின்ற சிங்கள கலாச்சார வீதியில் புழுக்கை போடுவோரை ஒப்பிடுவதை வன்மையாய் கண்டிப்பதுடன் ,மூக்கை பொத்திக்கொள்கிறேன். :(  :D

இது தமிழ்-சிங்கள சணடை. பௌத்த-இந்து அல்ல. இந்த மனிதன் தாங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தும் சண்டைக்கு பாதுகாப்பு தேடிக்கொண்டுதான் கருத்து வைக்கிறார். அதனால்தான் நான் அப்படி எழுதினேன்.

 

தமிழ் படித்த சிங்கள் பொலுசுகள் எமக்கு தேவை இல்லை. சிங்களவர்கள் ஆங்கிலம் படித்தபின்னரும் சுதந்திரம் கேட்டார்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.