Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதலமைச்சருக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

C.V.Vigneswaran.jpgவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு

வருகை தருமாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டெலி அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுற்று அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மேற்கொண்டார். இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசற்ஸ்தலத்தில் சந்தித்து பேசினார்.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரை அமெரிக்காவின் தூதுவர், தென்கொரிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்டவர்கள் கடந்த வாரத்தில் சந்தித்து பேசியிருந்தனர். இந்த நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரநிதிநிதியும் அவரைச் சந்தித்து பேசியுள்ளதுடன், தமது நாடுகளுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இது, முக்கியத்துவத்துடன் நோக்கப்படுகிறது.

மோதல்களினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தில் பொருளாதார, சமூக அபிவிருத்தி அக்கறையோடு முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றுக்கான உதவிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் அதிகமாகவே இருக்கிறது.

இந்த நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுக்களில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளமை  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஐரோப்பா சென்று நாடுகளின் பிரதான அதிகாரிகளை கண்டு தமிழரின் உரிமை, உதவிகளுக்கான கோரிக்கைகளை வைக்க வேண்டும்.

 

புலம்பெயர் மக்களை சந்தித்து இதுவரையில் மேம்படாது இருக்கும் உறவைப் பலப்படுத்தி அவர்களை தாயாக மக்களுக்கான சேவைகளில் ஆர்வமாக இறங்க வைக்க வேண்டும். தேவை இல்லாத கேள்விகளுக்கு "இப்போது என்னிடம் பதில் இல்லை" என்று கூறி விவாதங்களை பிரயோசனமில்லாத திசையில் போகாமல் தவிர்க்க வேண்டும்.

 

வாழ்த்துக்கள்!

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ உங்களிடம் நிறையவே கேள்விகள் கேட்கவேண்டியிருக்கு, எல்லாத்துக்கும் ஆயித்தமா வாங்கோ. தமிழன் தெருத்தெருவாய் அலையுறான் பொதுநலவாய மாநாட்டில் சர்வதேசத் தலைவர்கள் பங்குபற்றக்கூடாது என, அவரோ மன்மோகன் சிங்கே வருக யாழ்ப்பாணத்துக்கு வருக என அழைப்பு விடுக்கிறார். ஏனையா தெரியாத்தனமாத்தான் கேட்கிறேன் யாழ்ப்பாணத்தில வாழ்பவந்தான் தமிழனா இல்லை மட்டக்கிழப்பு திருகோணமலையில் வாழ்பவர்கள் என்ன வேடுவரா? வடக்குக் கிழக்குக்குப் பயணம்செய் எனக் கேட்கலாம்தானெ. வாங்கோ வாங்கோ கனக்கக் கேள்விகள் கேட்க இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ உங்களிடம் நிறையவே கேள்விகள் கேட்கவேண்டியிருக்கு, எல்லாத்துக்கும் ஆயித்தமா வாங்கோ. தமிழன் தெருத்தெருவாய் அலையுறான் பொதுநலவாய மாநாட்டில் சர்வதேசத் தலைவர்கள் பங்குபற்றக்கூடாது என, அவரோ மன்மோகன் சிங்கே வருக யாழ்ப்பாணத்துக்கு வருக என அழைப்பு விடுக்கிறார். ஏனையா தெரியாத்தனமாத்தான் கேட்கிறேன் யாழ்ப்பாணத்தில வாழ்பவந்தான் தமிழனா இல்லை மட்டக்கிழப்பு திருகோணமலையில் வாழ்பவர்கள் என்ன வேடுவரா? வடக்குக் கிழக்குக்குப் பயணம்செய் எனக் கேட்கலாம்தானெ. வாங்கோ வாங்கோ கனக்கக் கேள்விகள் கேட்க இருக்கு.

 

 

ஐரோப்பா சென்று நாடுகளின் பிரதான அதிகாரிகளை கண்டு தமிழரின் உரிமை, உதவிகளுக்கான கோரிக்கைகளை வைக்க வேண்டும்.

 

புலம்பெயர் மக்களை சந்தித்து இதுவரையில் மேம்படாது இருக்கும் உறவைப் பலப்படுத்தி அவர்களை தாயாக மக்களுக்கான சேவைகளில் ஆர்வமாக இறங்க வைக்க வேண்டும். தேவை இல்லாத கேள்விகளுக்கு "இப்போது என்னிடம் பதில் இல்லை" என்று கூறி விவாதங்களை பிரயோசனமில்லாத திசையில் போகாமல் தவிர்க்க வேண்டும்.

 

வாழ்த்துக்கள்!

 

முக்கியமா Elugnajiru கேள்விகள் கேட்டால், இங்கிலீஷ் தெரியாது எண்டு சொல்லிப் போடுங்கோ! :icon_mrgreen:

Edited by Nathamuni

முக்கியமா Elugnajiru கேள்விகள் கேட்டால், இங்கிலீஷ் தெரியாது எண்டு சொல்லிப் போடுங்கோ! :icon_mrgreen:

எப்படியோ சீவிக்கத்தானே வேணும். :D

 

சுப்பிரமணிய சாமி, இலங்கோவன், நாகராஜா, நாச்சியப்பன், ஜெயதிலகா சேர்ந்து TVயில் ஒரு விவாதம் நடத்தினார்கள் தானே.  அதை கேட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்குபோட்டுவந்து இருக்க தான் இந்த திரி தென்பட்டது. அதனால்த்தான் அப்படி எழுதினேன்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் சரளமாகத் தெரியாது.

எனக்குத் தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் சரளமாகத் தெரியாது.

பிர்ச்சனை இல்லை. கவலைப்படாதேங்கோ.

 

விக்கினேஸ்வரன் நெடுக தெற்கில் மட்டும் இருந்த்தால் அவருக்கு தமிழ் சரியாக வாரது.  அவர் ஐரோப்பா வரவிட்டு. டொச்சிலை, நோர்வேயனிலை கேட்டு பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை, நெடுக்கர் இணைத்த நோ பயர் சூண்ல கடைசியா ஒரு கேள்வி கேட்கப்படுகுது, அது என்னவென்றால் இவ்வளவு குற்றங்களையும் செய்த சிங்களத்தின் ஒரு குற்றவாளித் தலைவரை பிரித்தானியாவின் இளவரசரும், அந்நாட்டின் அதிபரும் கைலாகுகொடுக்கப்போகிறார்கள் எனும் பொருள்பட, அட நீங்கள் வேற எங்கட விக்கு வினாயகமே கைகொடுத்துக் கும்பிட்டு பிள்ளையார் சிலையும் வாங்கிட்டார் இதுக்குப் பிறகும் இந்தக்கேள்வி.

 

சிலநேரம் நான் பகுதிநேரமாக ஒரு இந்தியரது உணவகத்தில் வேலைசெய்வதுண்டு, அப்போது தேவைகருதி ஒருசாக்கு நிறைய பெரிய வெங்காயத்தை உரிக்கத் தந்துவிடுவார்கள், அன்று இரவுமுழுதும் நித்திரையே வராது, காரணம் எப்படிக் கையைக்கழுவினாலும் குறைந்தது ஒரு முழுஇரவு கழியுமட்டுமாவுதல் அந்த வெங்காய நாத்தம் என்கைகளிலேயே பற்றிப்பிடித்துத் தூங்க விடாது, அதுசரி இவ்வளவு இரத்தம்தோய்ந்த கைகளைப் பற்றிப்பிடித்த விக்கு வினாயகம் எப்படி இரவில் நிம்மதியாக உறங்குகிறார்?

Edited by Elugnajiru

சில கேள்விகளை அவரிடம் நேரிடைடையாக கேட்டால் மட்டும்தான் அவர்தான் தாயகத்தில் வடமாகாணத்தில் தலைவராக இருக்க தகுதியானவாரா என்ற கேள்விக்கு புலம் பெயர்மக்கள் மனத்தில் திருப்தியான பதில் கிடைக்கும்.

 

அவர் இன்று வடக்கு தலைவர் மட்டும்தான். ஆனால் இதுவரையில் பல கேள்விகளுக்கு தமிழரை புதுவாக வைத்து கேட்ப்படுகின்றன.  தமிழர்களால் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விட்ட முழ் தமிழருக்கமான பதிலை அவ்ர் வழங்க வேண்டும். நான் வடக்கின் முதல் அமைச்சர், கேள்வி வடக்கை தொடர்பு படுத்தினால்த்தான் நான் பதில் அளிக்கலாம் என்று இருக்க கூடாது. 

 

புலம் பெயர் மக்கள் பிள்ளைகளை, காணிகளை, உறவுகளை,உடமைகளை  அங்கே விட்டுவிட்டு வந்தவர்கள், தேர்தலில் பங்குகொள்ளமுடியாத நிலையில் இருக்கிறார்கள். உரிமை ஒரு புறம் இருக்க அவர்களுக்கும் அங்கே விடப்பட்ட பங்கின் அபிலாசைகள் இருக்கு. அவற்றை கூட்டமைப்பு பிரதிநிதிப்படுத்தும் போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய மானசீக கடமை இருக்கு. 

 

புலம் பெயர் மக்கள் தங்கள் நியாமான சந்தேகங்களை கேட்பதும் அவர்கள் பதில் அளிப்பதும் தான் நம்பிக்கையை வளர்க்கும்.

 

தேவானந்தாவும் இசைப்பிரியாவின் கொலை பற்றி கேட்கிறார். கூட்டமைப்பு கேட்கும் உரிமைகள் அந்த நிலைக்கு தாழ்ந்துவிடாமால காத்துகொள்வது இருபக்கத்தையும் சாரும்.  

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இப்போது சமரச அரசியலே நடத்துகின்றோம், ஏனெனில் எம்மிடம் உறுதியான அரசியல் தலைமை இல்லை. இந்த  அரசியல் வெற்றிடத்தை  நிரப்ப இவர் தகுதியானவரா என்றதை பரிசித்து பார்க்கத்தான் வேண்டும். இப்போதே நாம் சொல்லிவிட முடியாது இவர் இந்திய நிகழ்ச்சி நிரல் படிதான் நடக்கின்றார் என்று. போக போகத்தான் தெரியும். எனது கருத்தும்  மல்லையூரான் கருத்தே "புலம் பெயர் மக்கள் பிள்ளைகளை, காணிகளை, உறவுகளை,உடமைகளை  அங்கே விட்டுவிட்டு வந்தவர்கள், தேர்தலில் பங்குகொள்ளமுடியாத நிலையில் இருக்கிறார்கள். உரிமை ஒரு புறம் இருக்க அவர்களுக்கும் அங்கே விடப்பட்ட பங்கின் அபிலாசைகள் இருக்கு. அவற்றை கூட்டமைப்பு பிரதிநிதிப்படுத்தும் போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய மானசீக கடமை இருக்கு.புலம் பெயர் மக்கள் தங்கள் நியாமான சந்தேகங்களை கேட்பதும் அவர்கள் பதில் அளிப்பதும் தான் நம்பிக்கையை வளர்க்கும்".
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.