Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் புலிகளின் ஆதரவாளன் அல்ல : கெலும் மெக்ரே விமான நிலையத்தில் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தான் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவித்துள்ள செனல் -4 தொலைக்காட்சியின் தயரிப்பாளர் கெலும் மெக்ரே தான் புலிகளின் ஆதரவாளன் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
calum-mercare-channel-4-diarakter1.jpg
நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கெலும் மெக்ரேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் விமான நிலைய வாயிலில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதெ கெலும் மெக்ரே இதனை தெரிவித்துள்ளார்.
 
குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அவ்விடத்துக்கு வந்த கெலும் மெக்ரே ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடவும் முற்பட்டுள்ளார்.
 
இதன்போது கருத்து தெரிவித்த கெலும் மெக்ரே, 
 
தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்லவெனவும் அந்த அமைப்பிடமிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
 
அத்துடன் விடுதலைப் புலிகளும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அது தொடர்பிலும் தான் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, தான் ஒரு நிர்மாணி என்ற வகையில் தனக்கு எந்தவொரு நிர்மாணத்தினையும் படைக்கும் உரிமை உள்ளது என குறிப்பிட்ட அவர், தற்போது தான் இலங்கைக்கு வந்ததன் நோக்கம் பொது நலவாய அரச தலைவர்களின் மாநாடு தொடர்பில் செய்தி சேகரிப்பது மட்டுமே தெரிவித்தார்.
 
எவ்வாறாயினும் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டத்தில் விடுதலைபுலிகளின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

இந்த ஆள் எங்கட கட்சி போல கிடக்கு .

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 எந்த ஒரு கடத்திலும் விடுதலைப்புலிகளுக்கு வக்காளத்து வாங்கி பதிவிடவில்லை.

 

சிங்களவர்கள் விடுதலைப்புலிகள் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதை முன்னிறுத்த வெளிக்கிட்டால் தமிழர் 1952 இல் இருந்து சிங்களவர்களாலும் சிங்களப் படைகளாலும்.. கொல்லப்பட்டதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை எல்லாம்.. கெலும் மெக்ரே கேட்டால்.. அவர் இன்று கொண்டுள்ள விடுதலைப்புலிகள் மீதான தவறான பார்வையை மாற்றிக் கொள்ள வாய்ப்புப் பிறக்கலாம்.

 

சனல் 4 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறுதிக்கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான.. சர்வதேச நியமங்களுக்குப் புறம்பான பொதுமக்கள் மீதான படுகொலைகளையே போர்க்குற்றம் என்று கண்டிக்கிறது. அவை குறித்து சர்வதேச விசாரணைகளைக் கோருகிறது. அதில் சிறீலங்கா அரசும் படைகளும் சம்பந்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை வெளியிடுகிறது.

 

இதனையே சிறீலங்காவின் இனப்பிரச்சனை முழுவதும் என்று எடுத்தால்.. சிங்களவர்களை விட தமிழர்கள் சிங்களவர்களால் பாதிக்கப்பட்டதே அதிகம். விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்டதை விட ஒட்டுக்குழுக்களால் பாதிக்கப்பட்ட மக்களே அதிகம். இந்த உண்மைகளும் வெளில வரணும். அதனை எல்லாம் சனல் 4 இதுவரை செய்யவும் இல்லை. செய்ய முற்படவும் இல்லை.

 

சனல் 4 மே 2009 இறுதிக்கட்டத்தில்.. தாக்குதலற்ற வலயத்துக்குள் பொதுமக்கள் இழுத்து வைச்சு படுகொலை செய்யப்பட்டதையும்.. சரணடையச் சொல்லி பின்னர் சரணடைந்தவர்களை கொன்றது... பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றது.. சிறையில் அடைத்தது.. திறந்த வெளிச் சிறைகளில் இட்டது.. பின்னர் வெளியில் விட்டிட்டு கண்காணிப்பது.. உளவியல் சித்திரவதை செய்வது... பாலியல் சித்திரவதை செய்வது தொடர்பிலும்.. அதன் பின் நிகழும்.. இராணுவ பெருக்கம்.. விரிவாக்கம்.. விஸ்தீரனம்.. இன சுத்திகரிப்பு பற்றியுமே பேசுகிறது.

 

பிரிட்டன் இலங்கையை விட்டு வெளியேறிய பின்.... சிறீலங்காவில் தமிழ் இனத்துக்கு எதிராக நடத்தப்பட்ட  சிங்களவர்களின் தாக்குதல்கள் என்று பேச வெளிக்கிட்டால்.. சிங்களவர்கள்.. முழுப்பேரும் போர்க்குற்றவாளிகளாக நிற்க வேண்டிய நிலை தான் தோன்றும்..! விடுதலைப்புலிகளின் தாக்குதல் சம்பவங்களில் சிங்களவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றால்.. அத்தனை சம்பவங்களிலும் தமிழர்களும்... சிங்களவர்களால்.. பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அர்த்தமாகும். அதற்கு மேலதிகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. என்பதை சிங்களவர்களும் சனல் 4 உணர வேண்டியதும் கட்டாயம் ஆகும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் எங்கட கட்சி போல கிடக்கு .

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்கின்றார் .

 

பொருளாதார 

வியாபார  சந்தையில் எம்மினமும் மறக்கப்பட்டு விடக்கூடாதே என்ற  நப்பாசைக்கு கிடைத்த ஒருவராக  இவரைப்பார்க்கின்றோமே தவிர............

 

இவர் உண்மையைச்சொல்லணும் என்று  தான் எல்லோரும் எதிர்பார்க்கின்றோம்....

 

உங்களைப்போல் வாந்தி  எடுப்பவராக மட்டுமல்லாது

வேற்று இனத்தவராக இருந்தபோதும்

சில உண்மைகளை  வெளிக்கொண்டு வந்ததற்காக

எம் உள்ளம் என்றும் அவரை வாழ்த்தும்..............

சில உண்மைகள் அல்ல பல உண்மைகள் கொண்டுவந்து இருக்கின்றது சனல் நான்கு ,இவர்கள் எல்லாம் எமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் .(பிரான்சிஸ் கரிசன் ,கோர்டன் வைஸ் உட்பட ).

ஒரு நாடாக இலங்கை தனது சொந்த பிரஜைகளுக்கு செய்த அந்த கொடுமையை உலகிற்கு கொண்டுவருவதுதான் இவர்களின் இலக்கு .

புலிகள் பற்றி இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை எப்போதோ  அந்த பட்டியலில் தள்ளிவிட்டார்கள் .

சனல்-4 ஊடகவியலாளர்களை தேநீர் அருந்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

MR-with-Jonathan-Miller-500-1.jpgசனல்-4 ஊடகவியலாளர்களை தேநீர் அருந்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி, பொதுநலவாய வணிக அரங்கத்தை ஆரம்பித்துவைத்ததன் பின்னர் காரிலேறுவதற்கு தயாரானபோது சனல்-4 ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்டனர்.

அக்கேள்விகளை கவனிக்காது அவர்களை தேநீர் அருந்தவருமாறு ஜனாதிபதி சிரித்தவாறே கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இலங்கை வந்துள்ள சனல்-4 ஊடகவியலாளர்களை ஜனாதிபதி எதிர்கொண்டபோது தான் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுகளை மனங்கொள்வதில்லையென கூறினார்.

ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகதத்தர்கள் மற்றும் அவரது பாரிவாரங்களிடையே காணப்பட்ட ஜனாதிபதி
' இல்லை, நாம் அப்படியானவர்கள் அல்ல' என உரத்துக் கூறினார்.

சனல்-4 ஊடகவியலாளரான ஜொனதன் மில்லர் தாம் ஜனாதிபதியை சந்திக்க முடியுமா எனக்கேட்டபோது அவர் ஆம் என பதிலளித்தார்.
'அதற்கென்ன, நாம் தேநீர் விருந்தில் சந்திப்போம்' எனக் கூறினார்.

தன்னை பாதுகாத்து நின்ற பாதுகாப்பு ஊழியர்களை கடந்து அவர் வரமுயன்றபோது மில்லர் தனது குரலை உயர்த்தி தன்னை சனல்-4 ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தினார்.

பின்னர் ஜனாதிபதி, மில்லரை  நோக்கிவந்து கைகளை குலுக்கினார்.

மில்லருடன் சேர்ந்து நடந்த ஜனாதிபதி நாம் மீண்டும் சந்திப்போம் என்றார்.

சந்திப்புக்கு ஒத்துக்கொண்டதற்காக மில்லர் ஜனாதிபதிக்கு நன்றி கூறினார். ஜனாதிபதி தனது வாகனத்தில் ஏறியபோது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பகிஷ்கரிப்பை பற்றிய கேள்வியை மில்லர் உரத்த குரலில் கேட்டனர்.

 ஜனாதிபதி இதற்கு பதில் கூறவில்லை. ஆனால் தான் ஊடகவியலாளர்களை சந்திக்கவிரும்புவதாக அவர் கூறியதை கேட்க முடிந்தது.

 

யுத்த குற்றங்கள்  சாட்சியங்கள் கிடைக்குமாயின் ஆவணப்படங்களை  இன்னும் தயாரிப்பேன்

 

யுத்த குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்கள் கிடைக்குமாயின் அவை தொடர்பிலான ஆவணப்படங்களை எதிர்காலத்தில் இன்னும் இன்னும் தயாரிப்பேன் என்று சனல்-4 ஊடகவியலாளரும் 'யுத்த சூன்ய வலயம்' படத்தின் இயக்குநருமான கலம் மக்றே தெரிவித்துள்ளார்.

'ஐக்கியத்துக்கான சக்தி' எனும் ஐக்கிய தேசியக்கட்சி சார்பான அமைப்பு ஜாதிக சேவா சங்கம் தனது தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வலுவான சான்றுகள் கிடைக்குமாயின் அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் பற்றி ஆவணப்படங்களை இன்னும் தயாரிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை மறுக்காமல் அரசாங்கம் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவேண்டுமென என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் என்ற வகையில் தான் தனது கடமையை செய்துவருவதாகவும் அவர் கூறினார். உண்மையான சான்றுகளின் அடிப்படையிலேயே தான் ஆவணப்படங்களை தயாரித்ததாக மக்றே கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.