Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக 8 தமிழர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவில் கைதானவர்களுக்கும் எமக்கும் தொடர்பு இல்லை: விடுதலைப் புலிகள் மறுப்பு

ஜபுதன்கிழமைஇ 23 ஓகஸ்ட் 2006இ 14:44 ஈழம்ஸ ஜப.சண்முகம்பிள்ளைஸ

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட எட்டுத் தமிழர்களுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க முற்பட்டனர்இ விடுதலைப் புலிகள் அமைப்பை அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அமெரிக்க அரசுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டனர்இ விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்காவில் நிதி சேகரித்தனர் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இரண்டு கனடிய தமிழர்களும் ஆறு அமெரிக்கத் தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது கைது சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோதுஇ கைது செய்யப்பட்வர்களுக்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் நாம் செயற்படும் முறை இதுவல்ல என்றும் இப்படி ஒரு காரியத்தை நாம் ஒருபோதும் செய்தது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

pரவாiயெஅ.உழஅ

நியூயோர்க்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பில்லை.-இளந்திரையன்.

ஆயுதக்கொள்வனவு தொடர்பில் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படும் 8 பேருக்கும் தமது அமைப்புக்கும் தொடர்புகள் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். வானூர்திகளை தாக்கும் அயுதக்கொள்வனவில் ஈடுபட்டதாக கூறி இலங்கையர்கள் உட்பட்ட 13 பேரை அமெரிக்க காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் எஸ் ஏ 18 ரக ஏவுகனைகளையும் ஏனைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்ய முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆயுதக்கொள்வனவின் போது கையூட்டல் வழங்க முன்வந்ததாக கூறப்பட்ட தகவல் தொடர்பில் கருத்துரைத்துள்ள தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன், தமது அமைப்பு ஒருபோதும் அவ்வாறான செயல்களில் ஈடுபட்டதில்லை என தெரிவித்துள்ளார்.

http://www.athirvu.com/index.php?option=co...id=350&Itemid=1

CNN 13ம் திகதி இதையே முஸ்லீம் தீவிரவாதிகளுக்காக ஆயுத பேரம் எண்று அளந்து ஒரு செய்திய போட்டார்கள் போல இருக்கு.... 3 பேரை கைது வேற செய்து இருக்கினமாம்... :roll: :roll: :roll:

http://www.cnn.com/2003/US/08/12/terror.ar...rest/index.html

இல்லை அமெரிக்க FBI இதேவேலையாத்தான் அலையுதா...??? :roll: :roll: :roll:

13ம் திகதீல இதேமாதிரி ஒரு கதையை CNN சொல்லி இருக்குதே அதுவும் இதுவும் ஒண்டா..??? இல்லை சோடிப்பா...??

4 நாட்களுக்கு முன்னம் நடந்த ஒரு விடயத்தை திரும்பவும் நடந்தது போல காட்டி இருக்கிறார்கள் போல கிடக்கே...??

http://www.cnn.com/2003/US/08/12/terror.ar...rest/index.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க-கனடிய உளவுத்துறையின் கூட்டுச்சதிக்குள் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

நமது நிருபர்

Wednesday, 23 August 2006

கடந்த 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த போது சதாஜ்கன் சரச்சந்திரன், சுரேஸ் சிறிஷ்கந்தராஜா இவர்களும் மேலும் 26 கனடிய தமிழ் மாணவர்களுடன் வட கிழக்கில் பாதிக்ககப்பட்ட மக்களுக்கும் உதவி வழங்கினார்கள்.

இன்று அவர்கள் பயங்கரவாதத்திற்க்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

கனடிய தமிழினத்தின் குரலாய் ஒலித்து கொண்டிருந்த சமூக நோக்கம் கொண்ட இந்த இளைஞர்கள் இன்று எப்.பி.ஐ (FBI)மற்றும்; ஆர்.சி.எம்.பி(RCMP)யின் கூட்டுச் சதிக்குள் சிக்கியுள்ளனர். கனடாவிலும் அமெரிக்காவிலும் அதிகரித்திருக்கும் தமிழீழத்திற்கானதும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமான ஆதரவை நசுக்கி தமிழ் மக்களை அச்ச நிலையில் வைத்திருக்கவே இரு நாட்டு உளவுப்பிரிவுகளும் விரும்புகின்றன.

கனடாவில் தமிழ் மக்களின் போராட்டங்கள், கண்டனக்கூட்டங்கள் என்பதை வழமைக்கு மாறாக, பெருந்தொகை மக்களுடன் நடைபெறுவதும், அவற்றை ஒழுங்கு செய்யும் அமைப்புக்களை எந்தவகையிலாவது ஒடுக்க வேண்டும் எனற ஒரு மேலாதிக்க சிந்தனையுடன் கனடிய அமெரிக்க உளவு நிறுவனங்கள் செயற்ப்பட்டுவருகின்றன.

கைது செய்யப்பட்ட சதாஜ்கன் சரச்சந்திரன் ரொரன்ரோ பல்கலைகழக (UofT) மாணவன், முன்னை நாள் கனடிய தமிழ் மாணவர் அமைப்பின் (TSA) தலைவராகவும் இருந்தவர். நண்பர்கள் மத்தியில் “சதா” என் அழைக்கப்படும் இவர் மிகவும் துடிப்புள்ள ஒரு சமூக சேவையாளர். கனடிய தமிழ் மக்கள் சார்பாக சுனாமி அனர்த்ததின் போது தாயகம் சென்ற இவர் அங்கு பல உதவிகளை செய்தவர்.

இவரைப்போலவே சுரேஷ் சிறிஸ்கந்தராஜாவும் ஒரு துடிப்புள்ள இளையவர். வல்லெட்டி துறையில் பிறந்த இவர் 15 வருடங்களுக்கு பின்னர் கடந்த 2004 ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் தாயகம் திரும்பி சிறிது காலம் அங்கு சில சமூக சேவைகளை செய்துள்ளார். வோட்லோ பல்கலைக்கழகத்தில், (University of Waterloo) இன்ஜினியரிங் பாடம் படித்து கொண்டிருக்கும் சுரேஷ் சிறிஸ்கந்தராஜா தான் ஒரு இன்ஜினியரிங் புரொக்கிராமர் மனேஜராக வரவேண்டும் என கனவு கண்டார். தாயகத்தில மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தனது தனிப்பட்ட இணையத்தில், தாயகத்தில் தான் இருந்த வேளை தன்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இட்டுள்ளார். ஆனாலும் தற்போது ரொரன்ரோவில் வைத்து பயங்கரவாதத்திற்க்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் இவர் கைது செய்யப்ட்டு ஒன்ராரியோ, கிச்சினர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர்களைப் போலவே சகிலால் சபாரத்தினமும் ஒரு துடிப்புள்ள சமூக சேவை செய்யும் இளைஞன், 2005 ம் ஆண்டில் கனடிய தமிழர் பேரவையின் (CTC) ஊடகப்பேச்சாளராக கடமையாற்றிய இவர், இன்று ஆயுதம் வங்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கனடிய அமெரிக்க கூட்டுச் சதிக்குள் சிக்கியுள்ளனர்.

இவர்களது கைதானது கனடிய தமிழர்களுக்கு அதிர்சியளிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. கனடிய தமிழினத்தின் தாயகம் மீதான பற்றுதியையும், அது நோக்கிய தொலை நோக்கு பார்வையையும் சகித்து கொள்ள முடியாது அமெரிக்க –கனடிய மேலாதிக்க சக்திகள் இப்படியான கைதுகள் மூலம் மக்களை மிரட்ட முயல்கின்றது.

ஈராக் போருக்காக கதைகளை உருவாக்கிய அமெரிக்க அரசின் சர்வதேச விவாகாரங்களை கவனித்து கொள்ளும், சீ.ஐ.ஏ (CIA) யின் வளர்ப்பு பிள்ளையான எப்.பி.ஐ (FBI)எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு நாம் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இன்றைய இவர்களின் நோக்கு தமிழ் தேசியத்திற்காதரவானவர்களை ஒடுக்குவதே, அந்த வரிசையில், கனடிய தமிழர் பேரவை, கனடிய தமிழ் மாணவர் அமைப்பு போன்ற முக்கியமான தமிழர் அமைப்புக்களை முடக்க அவர்கள் திட்டமிடலாம் எனவே தமிழர்களே விழிப்போமா

http://www.worldtamilpress.com/index.php?o...d=625&Itemid=27

ம்.. கைதுசெய்யப்பட்ட பலரும் வன்னிப்பிரதேசத்துக்கு போய் வந்துள்ளனர்.. விடுதலைப்புலிகள் தங்களுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பில்லை என்று கை கழுவிவிட்டனர்.. எல்லாத்துக்கும் முடிவுகட்டும் வகையில் கைதுசெய்யப்பட்டவர்களின் உரையாடல்கள் வீடியோ படம் பிடித்துள்ளதாகவும் வாக்குமூலங்களை ஒலிப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. குற்றப்பத்திரிகை தாக்குதல் செய்தபோது பதிவுசெய்யப்பட்ட விபரங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன..

http://www.usdoj.gov/nye

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...er=asc&&start=0

இவற்றை விட விடுதலைப்புலிகள் அமைப்பை அமெரிக்க பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குவதற்காகவும்.. தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தைப்பற்ற

ம்.. நான் எழுதினது தூக்குப்பட்டிருக்கு.. எண்டபடியா நம்ம டாக்குத்தர்தான்.. சொல்லாமல் சொல்லியிருக்கிறியள்..

:P :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்குப் போனால் புலி தான் என்று சொல்வது அறியாமை. தரைவழியாக யாழ்பாணம் போகவேண்டுமானால் வன்னியால் தான் போய் வரவேண்டும்.

இதை விட, இரகசியமான முறையில் ஒளிப்பதிவு என்பது புதிய விடயமல்ல. வாகன ஓட்டியது தப்பு என்பதற்கும் இரசியமாககத் தான் படம் பிடிப்பார்கள். இதை பெரிய விடயமாகக் காட்ட முனைவது உச்சி குளிர்வின் உச்சம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடரும் கனடிய பாதுகாப்பு பிரிவின் தமிழ் இளையோர் கைதுகள்

நமது நிருபர்

வியாழக்கிழமை, 24 ஆவணி 2006

நேற்று முன்தினம் மேலும் இரு தமிழ் கனடியர்களை கைது செய்துள்ளதாக, ஆர்.சி.எம்.பியினர் அறிவித்துள்ளனர்.

கனடா ஒன்ராரியோ பிரம்டனை சேர்ந்த ரமணன் மயில்வாகனம் 29 வயது மற்றும், பிரதீபன் நடராஜா 30 வயது ஆகியோரே நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கனடிய உளவுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பிரம்டன் நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டவர்களாவர்.

ஒரு வாரகாலத்தில் கைது செய்யப்பட்ட 6வது தமிழ் கனேடியர்கள் இவர்களாவர். தமிழர்கள் தொடர்ந்து கைது செய்ப்படுவதால், தமிழ் மக்கள் மீளா அதிர்சியிலிருக்கின்றனர். திட்டமிட்ட கைதுக்களால் இவர்களுக்கு பிணையை பெற முடியவில்லை.

எப்.பி.ஐயின் திட்டமிடலில் கனடிய உளவுப்பிரிவும் இணைந்து செய்யும் இந்த தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்கள் மீதான நடவடிக்கை தமிழ் கனேடியர்கள் மத்தியில் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியாத கனடிய அரசியல் தலைமைகள் இக் கைதின் மூலம் திருப்திப்பட்டுக்கொள்கின்ற

2 more Canadians arrested in Tamil Tigers investigation

Last Updated Thu, 24 Aug 2006 00:42:37 EDT

Two more Canadian men have been arrested in an alleged conspiracy to buy weapons for the Tamil Tigers in Sri Lanka.

Ramanan Mylvaganam, 29, appeared in a Brampton, Ont., court on Wednesday. He was picked up the previous evening in Mississauga, the RCMP said.

Piratheepan Nadarajah, 30, was arrested in Toronto on Wednesday evening and will appear at the Brampton court on Thursday.

They are the fifth and six Canadians to be arrested in the alleged plot, which is being investigated by law enforcement agencies in Canada and the U.S. At least 14 people are in custody, with arrests also made so far in Buffalo, N.Y., San Jose, Calif., Seattle, Wash., and Connecticut.

Three of the Canadians were arrested in the U.S. last weekend, after investigators alleged they tried to purchase from undercover agents surface-to-air missiles and hundreds of AK-47 assault weapons.

They were identified as Sathajhan Sarachandran, Sahilal Sabaratnam and Thiruthanikan Thanigasalam.

Suresh Sriskandarajah, 26, was arrested in Ontario on Monday.

The trio arrested in Canada are likely to face extradition to the U.S., according to RCMP Sgt. Michele Paradis.

Paradis wasn't able to comment on what led to the latest arrests.

"There is an effort made to determine where the alleged criminal offence happened and that's the jurisdiction in which the charges will be laid. In this case those charges were laid in the U.S.," she said.

"Any information to specifics on the charges have to come solely from the U.S. authorities."

Some of the accused also face charges of attempting to bribe U.S. federal officials into having the Tigers removed from the government's list of terrorist organizations, and of trying to obtain classified information.

The Tigers have been engaged in a violent campaign for independence since the early 1980s. More than 65,000 people have been killed in the conflict.

A ceasefire in 2002 has all but collapsed in recent months, leading to hundreds of casualties.

Canada added the Tamil Tigers to its official list of terrorist organizations in April, nine years after the U.S.

Congressman's trip to Sri Lanka probed

Meanwhile, the investigation has led to increased scrutiny for a U.S. congressman who took a trip to Sri Lanka in 2005.

The Chicago Tribune reported Wednesday that law enforcement officials allege that the money for a trip taken by congressman Danny Davis and an aide actually came from the Tigers.

Davis said he knew the Federation of Tamil Sangams of North America was "associated" with the Tamil Tigers but did not realize that the trip's costs were covered with funds controlled by the rebel group,

The Democratic representative said he took the trip in the wake of the December 2004 tsunami, after Tamils in his district expressed concern that relief funds raised in the U.S. were not being distributed equitably in Sri Lanka.

The Tribune reported that Davis has accepted 47 trips paid for by private groups since 2000, one of the highest totals in Congress. The five-term congressman is up for re-election in November.

http://www.cbc.ca/story/world/national/200...apons-bust.html

*********நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமிபகாலமாக அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தனது விரோதப் பாங்கை வெளிப்படுத்தியே வந்திருக்கும் வேளையில் எங்ஙளுடைய சிலர் அவர்களுடைய தேசத்துக்கே சென்று வியபரம் செய்ய வெளிக்கிட்டது மடத்தன்மையே. :shock: :?

அவர்கள் தென்டித்து ஐரோப்பியாவில் புலிகளுக்கு தடையை கொண்டுவந்தது புலிகளின் செயட்பாடுகளுக்கு உலகரீதியாக தஙகளுடைய கைவரிசையை காட்டுவதற்க்கே. :idea:

இப்படியான ஒரு பின்னனியில் நம்முடையவர்கள் மிகவும் கவனமாக அல்லவோ செயல்பட்டிருக்கவேண்றும் :?:

அமெரிக்கனை திசை திருப்பவோ அல்லது பேய் காட்டவோ போயிருந்தால் பரவாயில்லை. :twisted:

(sorry I'm still learning to type in Thamizh :lol: )

குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்படும்வரை மிகவும் ரகசியமான முறையில் ஒளி..ஒலிப்பதிவுடன் நடைபெற்றிருப்பது இந்நடவடிக்கை சாதாரணமானதல்ல என்பதை உணர்த்துகின்றது..

இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.. மேலும் ஐவரிடம் விசாரணைகள் தொடர்கின்றன..

FBI எப்போதுமே இரகசிய விசாரனைகளை முடித்த பின்னர்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்... இதை தொலைக்காட்ச்சிகளில் வரும் FBI files நிகள்ச்சிகளையும் அமெரிக்க தொலைகாட்ச்சிகளின் கிரைம் வோச் நிகள்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்...! இதுக்கு மேலான நடவடிக்கைகளை குற்ற தடுப்பு பிரிவான FBI எடுத்து இருக்கிறது என்பதும்...

இதை எல்லாம் சும்மா தூக்கி பிடிச்சு துள்ளாதையும்...!

ம்.. நான் எழுதினது தூக்குப்பட்டிருக்கு.. எண்டபடியா நம்ம டாக்குத்தர்தான்.. சொல்லாமல் சொல்லியிருக்கிறியள்..

:P :lol::lol:

சும்மா வெண்புறா தலைவர் எண்டு உமது மாற்றுக்கருத்து ஊடகங்கள் மாதிரி பொய்யான கட்டுக்கதைகளை இங்கே புனைய வேண்டாம்... வெண்புறாவின் தலைவரின் பெயர் வைத்தியர் S.N மூர்த்தி...

அங்கு கைது செய்யப்பட்டவர் வைத்தியர் முருகேசு. விநாயகமூர்த்தி

இப்படியான உங்கள் தரப்பின் பேராசை மிக்க தமிழன் பலத்தை அளித்ததாக மனமகிழும், கட்டுக்கதைகளுடன் இனிமேல்பட்டு இங்கு வருவதை தவிர்த்து வேற வேலையை பாரும்...! அப்பிடி வந்தா வெட்டுத்தான் விளும்....! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கைதுகள் அமெரிக்காவிலும், கனடாவிலும் இருக்கும் தமிழீழ ஆதரவாளர்களையும், செயற்பாட்டார்களையும் வெருட்டப் பாவிக்கப்பட்ட யுக்திகளே. அத்தோடு புலத்தில் வாழும் தமிழர்களையும் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படாமல் ஒதுங்கி இருக்கப் பண்ணும் நடவடிக்கைதான், மற்றும்படி எதுவுமில்லை. ஆனால் தமிழர்களை இது மேலும் பலமுள்ளவர்களாக மாற்றும்..

ம்.. ஒதுங்கி இரு எண்டு அவங்தான் சொல்லோணுமாக்கும்.. தலைவர்மார் தங்களுக்கு உதுக்கும் தொடர்பில்லையெண்டு முடிவெடுத்தமாதிரி படிச்ச பெடியள்.. முடிவெடுக்கவேண்டியவங்கள்.. முடிவெடுப்பாங்கள்.

:idea: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ரொம்ப ஆசைதான்.

பனங்காட்டு நரிகள் இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாதுகள்..

ம்.. ஒதுங்கி இரு எண்டு அவங்தான் சொல்லோணுமாக்கும்.. தலைவர்மார் தங்களுக்கு உதுக்கும் தொடர்பில்லையெண்டு முடிவெடுத்தமாதிரி படிச்ச பெடியள்.. முடிவெடுக்கவேண்டியவங்கள்.. முடிவெடுப்பாங்கள்.

:idea: :idea:

ஆசையை பாருங்கப்பா...! உணர்வு எண்டது இரத்ததில் வருவது.... இந்தாளுக்கு சாக்கடையில இருந்து வருகுது போல கிடக்கு....

அதுசரி இதே செய்தியை இஸ்லாம் தீவிரவாதிகளுக்கான ஆயுத பேரமாக கருதி FBI செய்தியை வெளியிட்டு இருந்தது பின்னர் பல்ட்டி அடிச்சு புலிகளுக்கானதாக சந்தேகப்படுவதாகத்தான் சொல்கிறது... இன்னும் ஊர்ஜிதம் செய்யவில்லை....! TRO வின் கணணிகளும் கணக்கு வளக்குகளும் மட்டும் 24 மணிநேரம் பரிசோதிக்க பட்ட பின்னர் திரும்பவும் கொடுத்து விட்டார்கள்... ஆகவே அங்கு ஒண்றையும் சந்தேகப்படுமாறு எடுக்கவில்லை என்பது தெளிவாகிதது....!

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் Dr. N.A. ரஞ்சிதன், 60வயது TRO வின் அமெரிக்க தளத்தின் தலைவர் விசாரணைகளுக்கு பிறகு விடுவிக்க பட்டு இருக்கிறார்...! இதுவரை FBI எதுவிதமான குற்றச்சாட்டுகளையும் TRO மீது சுமத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...! ஆனாக் கைது செய்யப்பட்டவர்களில் ஆகக்குறைந்தது ஒருவர் TROவுடன் தொடர்பாடல்களை வைத்திருந்தார் என்பதுக்கான ஆதாரம் இருக்கிறது என்கிறார்கள்...! ஆனால் அவர் TROவின் உறுப்பினர் கிடையாது எண்று Dr. N.A. ரஞ்சிதன் ஆகிய TROவின் அமெரிக்க அமைப்பாளர் கூறி இருக்கின்றார்...!

தகவல்களில் பெரும்பகுதி:::: (Tamilweek)

அதுதான் ஆரம்பத்திலேயே குற்றப்பத்திரிகையை கொண்டுவந்த போட்டுவிட்டேனே.. ஒலி ஒளிப்பட வாக்குமூலங்களுடன் கைதுசெய்யப்பட்டுளார்களென..

டாக்குத்தர் மூர்த்தி உதுக்கு என்ன செய்யிறதெண்டு முடிவெடுக்கவேணும்.. அந்தாளுக்கு இப்ப வெளிச்சிருக்கும்.. ஒருவேளை அவரும் சேர்ந்து விளையாடி குற்றம் நிரூபணமானால் அனுபவிக்கவேண்டியதுதான்.. விதி யாரை விட்டுது..

இதில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் அப்பாவி இளைஞர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக செயற்பாடுகளை எடுத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கனடாவில் இருந்து கைது செய்யபட்டவர்களில் ஒருவர் ஒட்டாவா ஒன்றுகூடலை முன்னின்று நடத்தியவர். :!: கனடாவில் சமீப காலமாக அதிகரித்துவரும் தேசியத்திற்கு ஆதரவான குரல்களும் தடைகளுக்குப் பின் புலிகளைப் பற்றி அடக்கிவாசித்தவர்கள் இப்பொழுது மீண்டும் வெளிப்படையாகவே புலிகளை ஆதரிக்கத் தொடங்கியதும் கனடா அரசாங்கத்திற்கு பெரிய அடியே (ஒட்டாவாப் பாராளுமன்றத்திற்கு முன்னால் புலிகள் சுதந்திரபோராட்ட வீரர்கள் என்று முழங்கியதைக் குறிப்பிடலாம்). இதனால்தான் இவ்வகையான செயற்பாடுகளை முடக்கும் எண்ணத்துடன் இவ்வாறு பொய்க்குற்றச்சாட்டுக்களை இவர்கள் மேல் சுமத்தியுள்ளது. இனித் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

ம்.. ஒதுங்கி இரு எண்டு அவங்தான் சொல்லோணுமாக்கும்.. தலைவர்மார் தங்களுக்கு உதுக்கும் தொடர்பில்லையெண்டு முடிவெடுத்தமாதிரி படிச்ச பெடியள்.. முடிவெடுக்கவேண்டியவங்கள்.. முடிவெடுப்பாங்கள்.

புலிகள் இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வெளியிடவில்லை. தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லையென்று கூறியது இன்னொருவர் அழைப்பெடுத்து மட்டுப்படுத்தப்பட்ட பேட்டியைக் கண்டபோதுதான். அதுவும் அவர்கள் சொன்னது சரிதானே. அவர்கள் எப்பொழுது ஏவுகணைவாங்கவும் ஏ,கே 47 வாங்கவும் சொன்னார்கள். எல்லாம் அமெரிக்காவின் திட்டமிட்ட சதிதானே. :!:

டாக்குத்தர் மூர்த்தி உதுக்கு என்ன செய்யிறதெண்டு முடிவெடுக்கவேணும்.. அந்தாளுக்கு இப்ப வெளிச்சிருக்கும்.. ஒருவேளை அவரும் சேர்ந்து விளையாடி குற்றம் நிரூபணமானால் அனுபவிக்கவேண்டியதுதான்.. விதி யாரை விட்டுது..

அந்த டாக்குத்தர் வேற வெண்புறா டாக்குத்தர் வேற எண்டு முன்னமே சொல்லியாச்சு இப்பவும் சும்மா பினாத்தாதையும்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சல்லிக்காசு செலவில்லாமல்

இலங்கை இராணுவத்திடமிருந்து

விரும்பியதை எடுக்கக்கூடியதாக

இருக்கும் போது ...இது என்ன கதை :evil: :evil: :evil: :x :x :x

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.