Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசு தன்னிச்சையாக எதையும் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - 'தி இந்து'வுக்கு சம்பந்தன் செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு பிரிட்டன் பிரதமர் கேமரூன் வருகை தந்த உற்சாகத்துடன் காமன்வெல்த் மாநாடு நிறைவுறும் அதேநாளில் முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கொழும்பில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி இது.

1976-ல் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தில் ‘தமிழ் ஈழமே தீர்வு’ என்று பிரகடனம் செய்தீர்கள். இப்போது வடக்கு மாகாணத் தேர்தலில் உங்கள் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றபோது, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ என்ற நிலைப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி என்று வர்ணித்தீர்கள். அப்படியெனில், தனித் தமிழ் ஈழம் என்பதை இலங்கைத் தமிழ் மக்கள் தேர்தலின் மூலம் நிராகரித்துவிட்டார்களா?

நாம் 70களுடன் இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். ஒரு இனத்தின் வரலாற்றில் பல்வேறு சகாப்தங்களை தாண்ட வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும். நாங்கள் ஆரம்பத்தில் கூட்டாட்சி தத்துவத்தின்கீழ் ஒரு தீர்வைக் காண முயன்றோம். ஆனால், அது கைகூடவில்லை. மாறாக, எங்கள் மக்கள் மீது பெரும்பான்மையினரால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. 1956, 1958, 1961, 1977, 1981, 1983-ம் ஆண்டுகளில் வன்முறைகள் தொடர்ந்தன.

இந்த வன்முறைகளை இலங்கை அரசே முன்னின்று நடத்தியது. இவற்றில் 1983 ஜூலையில் நடந்த கலவரம் முத்தாய்ப்பாக அமைந்தது. ஆரம்பத்தில் நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காரணங்களால் எங்கள் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எமது உரிமைப் போர்கள் சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் உரிமைக் கோரிக்கைக்கு நியாயமான, சுதந்திரமான, நடைமுறைக்கேற்ற தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதுதான் இன்று எங்களுக்கு இருக்கும் ஒரே யதார்த்தமான வழி.

வடக்கு மாகாணத் தேர்தலின்போது, 3-ல் 2 பங்கு வெற்றியைத் தந்தால், ராணுவத்தை தமிழர் பகுதியிலிருந்து அகற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ராணுவத்தை அகற்றுவது சாத்தியம் எனக் கருதுகிறீர்களா?

ராணுவத்தை அகற்றுவது என்ற எங்களின் கோரிக்கை தொடர்கிறது. எங்கள் நிலங்களில் ராணுவம் இருப்பது தொடர்ந்து அசவுகரியத்தையும் சுயமரியாதைக் குறைவையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக எங்களின் பெண்களுக்கு - யாழ்ப்பாணத்தில் இருக்கும் விதவைகளுக்கு பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தேர்தலின்போது வடக்கு மாகாணத்தில் பயணித்த காமன்வெல்த், சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளைப் படித்துப் பார்த்தால் ராணுவத்தின் அத்துமீறல் புரியும்.

அதையும் தாண்டி நாங்கள் வடக்கில் வெற்றி பெற்றிருக்கிறோம். ராணுவத்துக்கு எதிரான உணர்வை தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை உணர்ந்து நியாயமான முடிவுகளை எடுக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை. ஆட்சியின் அஸ்திவாரம் ஜனநாயகம். மக்களின் ஜனநாயக முடிவை மதிக்க வேண்டியது அரசின் கடமை.

காமன்வெல்த் மாநாட்டுக்கு மன்மோகன் சிங் வராதது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி நீங்கள் கருதுவது என்ன?

காமன்வெல்த் அமைப்பின் மதிப்பீடுகளை இலங்கை அரசு மதித்து நடக்கவில்லை. குறிப்பாக நல்லாட்சி, தனிமனித உரிமைகள், நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றில் இலங்கை அரசின் செயல்பாடு கவலைக்குரியதாக உள்ளது. ஆனால், அதேநேரத்தில், இந்திய அரசைப் பொருத்தவரை - இந்தியப் பிரதமரைப் பொருத்தவரை இத்தகைய முடிவுக்கு வர அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

எத்தகைய முடிவெடுக்கும் உரிமையும் இந்தியாவுக்கு உண்டு. இது குறித்து நான் தனிப்பட்ட முறையிலோ எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலோ கருத்துரைக்க விரும்பவில்லை. ஆனால், எங்களுக்கு இந்தியாவின் உதவி நிச்சயம் தேவை. இந்திய அரசுடனும் தமிழக அரசுடனும் இணைந்து எங்கள் பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியாவின் பரிபூரண உதவி எங்களுக்குத் தேவை.

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதென உங்கள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. புறக்கணிப்பதற்கு பதில் அதிலேயே பங்கேற்று உங்கள் அவலங்களை எடுத்துரைத்திருக்கலாமே?

காமன்வெல்த் மாநாட்டில் எங்கள் கருத்துகளை முன்வைக்க எங்களுக்கு அனுமதியில்லை. அதேநேரத்தில் எங்களைச் சந்திக்க வரும் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இலங்கைத் தமிழர்களின் துயர் தீர சர்வதேச சமூகத்திடம் எங்களைப் பற்றி எடுத்துக்கூறும் முயற்சி எப்போதும் தொடரும்.

பிரிட்டன் பிரதமர் கேமரூன் யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நீங்கள் என்ன பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்?

எங்களை ஆட்சி செய்த நாடு பிரிட்டிஷ். குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில்தான் எங்களுக்கு அந்த நாடு சுதந்திரம் தந்தது. சுதந்திரத்தின்போது இயற்றப்பட்ட அரசமைப்பு சாசனத்தில், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படு்த்தப்பட்டுள்ளது. இன்று அந்தப் பாதுகாப்பு அம்சம் மீறப்படுகிறது.

தங்களால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம் போதுமானதாக இல்லை என்பது பிரிட்டிஷ் அரசின் கருத்து. அதற்குப் பரிகாரமாக அந்நாட்டுப் பிரதமர் கேமரூன் யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளார். இந்தப் பின்னணியில்தான் கேமரூன் பயணத்தை நாங்கள் பார்க்கிறோம். பத்திரிகையாளர் சந்திப்பில் கேமரூன் தெரிவித்த கருத்துகளை இந்தப் புரிதலோடுதான் அணுகுகிறோம். இதன்படித்தான் இலங்கைத் தமிழர் விவகாரத்தைப் பார்க்க வேண்டும் என இலங்கை அரசைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.

13வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த இலங்கை அரசு தயங்குவது ஏன்?

இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்டத் திருத்தத்தை நிரந்தர அரசியல் தீர்வாக எவரும் கருதவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்கீழ் அந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இலங்கையின் வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணமாக இணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு பற்றியும் அது கூறுகிறது.

ஆனால், ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரசும் இந்தத் திருத்தத்தில் திருத்தம் செய்து கொண்டேயிருந்தன. சந்திரிகா குமாரதுங்க, பிரதமராயிருந்த ரனில் விக்ரமசிங்க, இன்றைய அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தோன்றியபடி திருத்தங்களை உருவாக்க முயன்றனர்.

இந்த சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி அதிகாரப் பரவலை சாத்தியமாக்கப் போவதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனுக்கு ராஜபக்சே உறுதியளித்தார். ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின்கீழ் உருவான சட்டத்திருத்தத்தை மாற்றுவதற்கோ மீறுவதற்கோ முயற்சி செய்வது வியன்னா மாநாட்டு சாசனத்தை மீறிய செயலாகும். இந்த விஷயத்தில் இலங்கை அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது. செய்தால், சர்வதேசரீதியில் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

 

http://www.puthinappalakai.com/view.php?20131118109460

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் பிரதமர் கேமரூன் யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நீங்கள் என்ன பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்?

 

இது என்னய்யா கேள்வி?

இது என்னய்யா கேள்வி?

அவிங்க அப்பிடித்தான் கேப்பாங்க.

இந்து இல்ல?

அதன் ஆங்கிலத்தையும் பார்க்க வேண்டும். மற்ற்வர்கள் கிந்துவை புரிந்துகொள்ளாமல் "பாரதூரமான தாக்கம்" என்றிருப்பார்கள். சம்பந்தர் எல்லாக் கேள்விகளுக்கும் சளாப்பிப்போடார். இனி ஒருதடவை கிந்து சம்பந்தரிடம் போக விரும்ப்பாது.

  • கருத்துக்கள உறவுகள்

தடக்கி விழுந்தாலும் நம்மடைய மன்னன் பேட்டி குடுப்பதில் சூரன், சம்மந்தனை நம்பி கெட்டவர்கள் சார்பாக 25 எலிகேசி என இந்த பெருமை பெறும் விருதை வழங்குகின்றோம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திர மொழியில் கமருனின் கூற்று ஒரு எச்சரிகை அல்ல. இலங்கை அரசு தன்னை சரிசெய்து கொள்ள வழங்கப்பட்ட ஆலோசனை.

  • கருத்துக்கள உறவுகள்

சோரம் போவதை கூட கௌரவமாக சொல்ல முடிவது இந்த அசிங்கம் பிடிச்ச அரசியலில்தான்.

இராஜதந்திர மொழியில் கமருனின் கூற்று ஒரு எச்சரிகை அல்ல. இலங்கை அரசு தன்னை சரிசெய்து கொள்ள வழங்கப்பட்ட ஆலோசனை.

இதை ஒரு பொது மொழியாகத்தான் கொள்ளலாம்.  இந்த இடத்தில், தனிப்பட கமருன் இலங்கைக்கு என சொன்னார் என்றல் அதை எச்சரிக்கயாக இலங்கை கொள்வது நல்லது. 

 

1).ஒரு பிரதமர் பாதிக்கபட்ட பக்க விஜயத்தை 1 1/4 மணிதியாலத்திற்குள் முடித்தார். (முள்ளிவாய்க்கால் போகவில்லை). இதை தூதரகம் மிக கவனமாக திட்டமிடாதிருந்திருந்தால் அவரால் விக்கினேஸ்வரனுடன் பேசவே இந்த நேரம் காணாது. அவர் உதயன் வேலையாட்களை சரவணபவனை சந்தித்திதார். சபாபதிப்பிள்ளை முகாம் சென்றார்.  இதை அரசு விளக்கமாக ஆராய்ந்தால் அவர் திட்டமிட்ட ப்யணம் ஒன்றை செய்து அதில் தான் ஏற்கனவே தெரிந்ததிருப்பவை சரி என தனக்கு நிரூபித்துவிட்டு இலங்ககைக்கு சென்று தனது பேச்சை கொடுத்தார் என்பதைக் காணலாம் . இதன் கருத்து "இவ்வளவு நாளும் நீ சொல்லிவந்தவைகளை பொய்யா, உண்மையா என்றதை நேரில் சென்று பார்த்துவிட்டுத்தான் வருகிறேன்" என்பதுதான் பொருள்.  மகிந்தா கமருனை அழைத்து சென்று யாழ்ப்பாணத்தை காட்டி, மக்களை சந்தித்து இருவரும் ஒன்றாக கண்டவற்றை வந்து விவாதிக்கும் போது கமருன் இதை சொல்லியிருந்தால் அவர் மகிந்தாவுக்கு முன்னறிவிப்பான ஆலோசனையை இராஜதந்திர முறையில் கொடுக்கிறார் என்று சொல்ல முடியும். 

 

2). கமருன் ஊடகவியலாரை தான் அழைத்து சென்றதாக கூறினார். வழமையில் ஊடகவியலார் அரசியல் தலைவர்களுடன் அனுமதி பெற்று செல்ல வேண்டியிருக்கும். இங்கே மற்ற்வழமாக கூறுகிறார்கள். அதை போகவிட்டால், கமருன் தான் சென்றது இலங்கையில் நடப்பவற்றுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டத்தான் அங்கு போனதாகத்தான பிருத்தானிய பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடன் ஊடகவியலாரை அழைத்துச் சென்றார்ர்.  இவ்வளவற்றையும் எப்படி இலங்கைக்குள் ந்டந்து முடிந்தது என்றதை விளங்கப்படுத்த வேண்டுமாயின், அது இலங்கைக்கு மிகபெரிய "ராஜதந்திர தோல்வி"  என்பத்தால் தான் விளங்கப்படுத்த முடியும். எனவே பிருத்தானியாவிடம் இந்த பாரிய இராதந்திர தோல்வியை சந்தித்த இலங்கையை தனது நிலக்கு திரும்ப தூக்கிவிட பிருத்தானியா ஆலோசனை வழங்குகிறது என்பதிலும் பார்க்க, "அசட்டு தைரியத்தில் உனக்கு முடியாதவற்றை உன்னால் செய்யமுடியும் என்று இறுமாந்திராதே, திருந்தி விடு" என்று மிரட்டலாக எச்சரிக்கை விடுத்தது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

3). "மார்ச்சு மாதம் வரை "என்று சர்வதேச ரீதியாக ஒரு கால அளவு கொடுப்பதை ராஜதந்திர நடவடிக்கைகளிலோ, அல்லது கமருன்-மகிந்தா தனிப்ப்ட்ட பேச்சு வார்த்தகளிலோ ராஜதந்திர நடவடிக்கையாக கொள்ள முடியாது. இதை அச்சுறுத்தலாகத்தான் காண வேண்டும். இலங்கை இதை தன் மீது போர்ப்பிரகடனமாக கொள்ள முடியும். இதைதான் வாசுதேவா இங்கிலாந்தை பொதுநலவாயம் விசாரிக்க வேண்டும் என்று கூறுவதால் சுட்டிக்காட்டுகிறார்.   மேலும், 4 1/2 வருடங்கள் எதையும் செய்யாத இலங்கையை, 4 1/2 மாதங்களில் செய்யும் என்று கமருன் ஆலோசனை கொடுத்தார்  என்பது யாதார்தமானததாக படவில்லை. 

 

என்னைப்பொறுத்தவரை கமருன், வரும் மார்ச்சு மாதத்திற்குள், எந்த வகையான உபயோகமான மாற்றத்தையும் இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றுதான் எடுத்துக்கொள்வேன். கூட்டமைபிலிருந்து நாங்கு வக்கீல்கள், அரசிலிருந்து நான்கு வக்கீல்களை போட்டு முன்னைய பகவதி போன்ற ஒரு சர்வதேச தலைவரை நியமித்து  சட்சிகளுக்கு பாது காப்பு கொடுத்து விசாரணை ஒன்றை மார்ச்சுக்குள் இலங்கை தொடங்கினால் பிருத்தானிய அதன் பின்னர் இலங்கையினுடனான தனது பேச்சுக்களை ஆலோசனை நிலைக்கு படி இறக்கும். இப்போது அது எச்சரிக்கையாகத்தான் இருக்கிறது என்றதை சகல இலங்கை மந்திரிகளும், மகிந்தாவும். உணர்கிறார்கள்.. 

அரசு பிருத்தானியாவின் கோரிக்கைகளைகளை நீர்க்க செய்ய இப்படி முயற்சிகளில் இறங்கும். இன்னொரு தடவை அரசு உண்மையாகத்தான் அவர்களின் நிலங்களைக் கையளித்து குடியேற்றியதா அல்லது அவர்களை சிங்கள ஆமியின் குடுபங்களுக்கு மத்தியில் வீட்டு வேலைக்காரர்களா மாற்றியிருக்கிறதா என்பதை கமருன் போய் பார்க்க வேண்டிய தேவை யில்லாமல் செய்துவைக்க வேண்டிய பொறுப்பு எம் இருபக்கத்தையும் சாரும் ஆனால் கூட்டமைப்பும் நாங்களும்தான் உண்மைகளை வெளிகொண்டுவர வேண்டும்.

 

 

 

வலி.வடக்கு பிரதேசம் விரைவில் விடுவிக்கப்படும்!- பிரிட்டிஷ் பிரதமருக்கு புதுக்கதை விட்ட யாழ்.அரச அதிபர்
Written by Tamil   //  November 19, 2013   //
 

 

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் விரைவில் அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனிடம் யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உறுதிபடத் தெரிவித்தார்.
யாழ்.வந்த பிரித்தானியப் பிரதமர் சுன்னாத்தில் அமைந்துள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது அவருடன் யாழ்.அரச அதிபரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது தங்களது நிலங்கள் அரசாங்கத்தினால் இராணுவத் தேவைகளுக்காக பறிக்கப்படுவதாக மக்கள் பிரித்தானியப் பிரதமரிடம் தெரிவித்து தங்களது நிலங்களை மீட்டுத் தரக் கோரினார்கள்.

இதன்போது உடன் இருந்த அரச அதிபரிடம் பிரதமர் இது தொடர்பாக வினவினார். இதற்கு பதிலளிக்கும் போதே பிரித்தானியப் பிரதமரிடம் யாழ்.அரச அதிபர் இந்த புதுக்கதையினை அவிழ்த்து விட்டார்.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த காணிகளில் மீளக்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அண்மையில் கூட சில இடங்கள் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது. அதேபோல் ஏனைய இடங்களும் விடுவிக்கப்பட்டு இந்த மக்களுக்கும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் பிரித்தானியப் பிரதமரிடம் குறிப்பிட்டார்.

வலி.வடக்கு மக்களின் காணிகளை அரசாங்கம் கட்டாயமாக சுவீகரிக்கும் என்று அறிவித்துள்ள நிலையில் அரசாங்க அதிபர் மிகக் கேவலமாக முறையில் மனச்சாட்சி இன்றி இவ்வாறு நடந்து கொண்டதாக வலி.வடக்கு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இதேவேளை இந்த சபாபதிபிள்ளை முகாமில் நல்ல வீடுகள் உள்ள நிலையில் ஏன்? குறைபாடுள்ள வீடுகளை மட்டும் பிரித்தானியப் பிரதமரிற்கு காட்டுகின்றீர்கள் என்று உடுவில் பிரதேச செயலாளர் என்.நந்தகோபாலன் மக்களை எச்சரித்தார்.

முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நீர் மற்றும் சுகாதார வசதிகள் யாவும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபருக்கு அருகில் நின்று பிரதேச செயலாளர் பிரித்தானிய் பிரதமரிடம் சுட்டிக்காட்டி, அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயத்திடம் நல்ல பெயர் எடுத்துக் கொண்டார்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.