Jump to content

வணக்கம் FM இற்கு என்ன நடந்தது?


Recommended Posts

காலை நேரங்களில் வணக்கம் FM கேட்டுக் கொண்டு அலுவலகத்துக்கு போறது அண்மையில் ஆரம்பித்த ஒரு பழக்கம். காலை 8 இல் இருந்து 10 மணிவரைக்கும் இடம்பெறும் உரையாடல் நிகழ்ச்சி (Talk show) அநேகமான நாட்களில் சுவாரசியமாக இருக்கும். பாடல் தெரிவுகளும் நன்றாக இருக்கும். மாலை 6 மணிக்கு இடம்பெறும் செய்தி அறிக்கையையும் அநேகமாக கேட்பதுண்டு.

 

ஆனால் கடந்த சில நாட்களாக வணக்கம் FM, ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கு என்றும், தமக்கான ஆதரவினை CRTC இற்கு (Canadian Radio-television and Telecommunications Commission) இற்கு தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர். பிரச்சனை என்னவென்று விளக்கினார்களா அப்படி விளக்கும் போது நான் கேட்கவில்லையோ தெரியாது.

 

இன்று காலை வழக்கம் போல 8 மணிக்கு வணக்கம் எப்.எம் கேட்க முனையும் போது, சிறிய இடைவெளியின் பின் மீண்டும் வருவோம் என்று கூறி டாட்டா காட்டி விட்டு தம் ஒலிபரப்பு சேவையை நிறுத்தி விட்டனர். இப்ப வெறும் காத்துதான் வருகுது.

 

வணக்கம் FM இற்கு என்ன பிரச்சனை என்று யாருக்காவது தெரியுமா?  பொதுவாகவே தமிழ் ஊடகங்கள் என்றால் ஆயிரத்தெட்டு அரசியல் ரீதியிலான பிரச்சனைகளும், வியாபார ரீதியிலான பிரச்சனைகளும் ஏற்படுவது வழக்கம். ஆளுக்கு ஆள் குழிபறிப்பதும் வழக்கம். ஆனால் இவற்றுக்கும் அப்பால் ஒரு தமிழ் ஊடகம் / வானொலி நிறுத்தப்படுவது என்பது தமிழ் சமூகத்துக்கு சரியான விடயமாக இருக்காது என நினைக்கின்றேன்.

 

இது பற்றி தெரிந்தவர்கள் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

தற்போது அவர்களது இணையத்தளத்திற்கு சென்று பார்த்தேன்.......வேலை செய்கின்றது.

 

http://www.vanakkamradio.com/

 

ஆனால் வானொலி பண்பலை அலைவரிசை 105.9 இல் இல்லை என்று நினைக்கின்றேன். தம் இணையத்தளம் தொடர்ந்து இயங்கும் என்று காலையில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

Link to comment
Share on other sites

ஞாயிறு காலை எட்டுமணிக்கு அவர்களது "காற்றிடை வெளி " அரசியல் நிகழ்வு  தவறவிடுவதில்லை ,போன ஞாயிறு காலை அந்த நிகழ்வில் தமக்கு ஏற்றபட்ட பிரச்சனை பற்றி விரிவாக கதைத்து நேயர்களையும் இணைத்தார்கள் .

அவர்களது பண்பலை மார்க்கத்தில் இருக்கும் ஒருவருக்கு  மலையாள நபருக்கு போய்விட்டதாக சொன்னார்கள் .தாங்கள் வேறு ஒரு முழு நேர பண்பலைக்கு விண்ணப்பிதிருப்பதாக சொன்னார்கள் .

பல நேயர்கள் எமது மக்கள் செய்த வேலைதான் அதற்கு காரணம் என்று சொல்லும் போது நிர்வாகம் அதை மறுத்து எதுவும் சொல்லவில்லை .

இதே போல லட்டு f.m உம் மூடப்பட்டு விட்டதாக கேள்விப்பட்டேன் (தேசிய வாதிகள் கொடுத்த தொலைபேசி தொல்லை தான் அதற்கு முக்கிய காரணம் என்று கேள்வி )

Link to comment
Share on other sites

ஏனைய ஸ்காபறோ தமிழர்களைப் பொலவே நானும் வாகனங்களில் செல்லும் பொது வணக்கம் சேவையினையே கேட்பேன்.

 

விபரம் அறிய ஆவல். அத்துடன் ஆதரவை வழங்கவும் ஆர்வமாய் உள்ளேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த வானொலி தொடங்கும்போது கேள்விப்பட்ட தகவல் என்னவெனில் இது பல்மொழி வானொலியாகவே பதிவு செய்திருந்தார்கள் என்று. ஆனால் அவர்கள் தமிழில் மட்டும் தான் நடத்திக் கொண்டிருந்தனர். 2 வருடங்களில் மீள வானொலி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கும்போது, இவர்கள் தாங்கள் சரியாக நடந்துள்ளார்களா என்பதை நிருபிக்க வேண்டி வரும்.அப்படி இல்லை எனில் அனுமதிப்பத்திரம் பெறமுடியாது. இது தொடங்கும்போது கேள்விப்பட்ட விடயம். பெரும்பாலும் அது தான் பிரச்சனைக்குரிய விடயமாக இருக்கலாம். அல்லது பிரச்சனை அது சார்ந்ததொன்றாக இருக்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளது... https://soundcloud.com/bageerathan-sathiyanathan/vanakkam-fm-kaatru-veli

Link to comment
Share on other sites

உண்மையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த வானொலி தொடங்கும்போது கேள்விப்பட்ட தகவல் என்னவெனில் இது பல்மொழி வானொலியாகவே பதிவு செய்திருந்தார்கள் என்று. ஆனால் அவர்கள் தமிழில் மட்டும் தான் நடத்திக் கொண்டிருந்தனர். 2 வருடங்களில் மீள வானொலி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கும்போது, இவர்கள் தாங்கள் சரியாக நடந்துள்ளார்களா என்பதை நிருபிக்க வேண்டி வரும்.அப்படி இல்லை எனில் அனுமதிப்பத்திரம் பெறமுடியாது. இது தொடங்கும்போது கேள்விப்பட்ட விடயம். பெரும்பாலும் அது தான் பிரச்சனைக்குரிய விடயமாக இருக்கலாம். அல்லது பிரச்சனை அது சார்ந்ததொன்றாக இருக்கலாம்...

 

..ஆனால் தூயவன் இவர்கள் மதியம் 11 அல்லது 12 இல் இருந்து சில மணி நேரங்களுக்கு மலையாளம் பாடல்களையும் ஆங்கிலப் பாடல்களையும் ஒலிபரப்பிக் கொண்டு இருந்தார்கள். பல முறை கேட்டு இருக்கின்றேன்.

 

 

அத்துடன் அர்ஜுன் குறிப்பிட்டு இருப்பது போல ஒருவருக்கு சொந்தமான அலைவரிசையை தகுந்த காரணம் இன்றி இன்னொருவருக்கு கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். நான் ஆதரவு கோரிய இணைப்பின அழுத்தி போகும் போது, நேரில் வந்து சாட்சி சொல்வாயா என்ற மாதிரியும் ஒரு கேள்வி வந்தது (ஆனால் அப்படி சொல்வது கட்டாயம் அல்ல)

 

ஏதோ சட்டச் சிக்கல்கள் மாதிரி தெரியுது.

Link to comment
Share on other sites

வெகு விபரமாக அன்று கதைத்துகொண்டிருந்தார்கள். நான் யாழில் யாருடனோ முறுகிக்கொண்டு இருந்ததில் அதில் வடிவாக கவனம் செலுத்தவில்லை .

உந்த வானொலி பிரச்சனைகள் எம்மவர் செய்யும் கூத்துக்கள் (எனது உறவினர்கள் உட்பட ) எல்லாம் எனக்கு அலுத்து விட்டபடியால் நிகழ்சிகளை கேட்பதுடன் சரி ,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள இணைப்பினைத் திருத்தம் செய்துள்ளேன். அதில் அந்த விடயம் பற்றி விவாதிக்கின்றார்கள். ஆனால் நான் அதை முழுமையாகக் கேட்கவில்லை. மேலோட்டமாக இடையிடையே கேட்டேன். குழப்பம் புரியவில்லை. உண்மையில் நான் அந்த வானொலியைக் கேட்பதில்லை. ரமணன் தவிர மற்றவர்கள் ஏதோ நாகரீகமாகப் பேசுகின்றோம் என்று தமிழைக் கொல்வார்கள்

Link to comment
Share on other sites

தூயவன் தந்த இணைப்பின் மூலம் காற்றிடைவெளி நிகழ்ச்சியை இப்ப முழுமையாக கேட்டேன்.

 

  • தமது  ஒலிபரப்பு Low Profile ஒலிபரப்பு உரிமம் மூலம் தொழிற்பட்டுக்கொண்டு இருந்ததாக சொல்கின்றனர்
  • அதாவது குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக்குள் மட்டும் கேட்கக் கூடிய அலைவரிசையாக பதிவு செய்து தொழில்பட்டுக் கொண்டு இருந்தார்கள்
  • இன்னொருவர் (மலையாளி) இதே அலைவரிசையில் high profile வானொலி நடத்த உரிமம் பெற்றுள்ளார். high profile என்பது பரந்த பிரதேசத்துக்குரிய உரிமம்
  • Low Profile இல் வானொலி நடத்துபவர்களின் அதே அலைவரிசையில் எவராவது high profile இல் நடத்த முற்பட்டால் அதனை CRTC வழங்கும் என்றும் அதுவரைக்கும் Low Profile இல் நடத்திகொண்டு இருந்தவர்கள் தொடர்ந்து இயங்க முடியாது என்றும் Off Air ஆக போக வேண்டி வரும் என்றும் சொல்கின்றார்கள்
  • இதனால் வணக்கம் FM இன்னொரு அலைவரிசைக்காக விண்ணபித்து இருக்கின்றார்கள் (High Profile). அது வழங்கப்பட்டால் மீண்டும் வணக்கம் FM இயங்கத் தொடங்கும் என்றும், அவ்வாறு CRTC உரிமம் வழங்க தமிழர்களின்  ஆதரவு தேவை என்றும் கேட்டுள்ளார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமையம் இந்த அறிப்பைக் இணையத்தில் கண்டேன்..

 

 

Vanakkam FM

இதோ வானலையில் வலம் வருகிறது. தற்போது வணக்கம் 102.7 FM இல்.. தொடரந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் உங்கள் வீட்டுப் பிள்ளை... We are Back On Air... 102.7 FM
Link to comment
Share on other sites

 

தற்சமையம் இந்த அறிப்பைக் இணையத்தில் கண்டேன்..

 

 

Vanakkam FM

இதோ வானலையில் வலம் வருகிறது. தற்போது வணக்கம் 102.7 FM இல்.. தொடரந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் உங்கள் வீட்டுப் பிள்ளை... We are Back On Air... 102.7 FM

 

 

நான் போடுவதற்குள்  நீங்கள் போட்டு விட்டீர்கள். வேலையால் வீட்டுக்கு போகும் போது முயன்று பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

102.7ல் வேலை செய்கிறது ஆனால் முன்னரைபோல் தெளிவாக இல்லை. இப்போது பரீட்சார்த்த ஒலிபரப்பு நடைபெறுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.