Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது பொறுமையை பலவீனம் என்று தப்புக்கணக்கு போடக் கூடாது - முதல்வர் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது பொறுமையை பலவீனம் என்று தப்புக்கணக்கு போடக் கூடாது - முதல்வர் விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 23 நவம்பர் 2013, 07:21 GMT ]


சிறிலங்கா இரா­ணு­வத்தைத் தொடர்ந்தும் வடக்கு மாகா­ணத்தில் நிலைகொள்ள வைத்து, அதன் அர­வ­ணைப்பில் குளிர்­கா­யலாம் என்று எண்­ணு­வது முட்டாள்தனம் என்று வட­க்கு மா­காண முதலமைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரி­வித்துள்ளார்.

சாவ­கச்­சேரி பிர­தேசசபையின் உள்­ளூ­ராட்சி வாரநிகழ்வு நேற்று இடம்­பெற்­ற­ போது, அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

“மக்கள் தமது மனோ­நி­லையை தேர்­தலில் எடுத்­தி­யம்பி இருந்­தாலும் அர­சாங்கத்துக்கு சார்­பா­ன­வர்கள் அதை உணர்ந்து கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

தொடர்ந்தும் தமது மத்­திய அர­சாங்க அதி­கா­ரங்­களை மாகா­ணத்தின் மீது திணித்து விடவே நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மக்­களின் நன்­ம­திப்­பைப்­பெறத் தவ­றி­ய­வர்கள் தொடர்ந்து ஆணைகள் இடத் துணிந்­துள்­ளார்கள்.

அதற்­காக முன்னர் தமது கையாட்­க­ளாகப் பாவித்து வந்த அரச அதிகாரி­களைத் தமக்கு துணை நிற்­கு­மாறு வற்­பு­றுத்தி வரு­கின்­றனர்.

இதனால் மக்­களின் தேவைகள் மற்றும் அவர்­க­ளுக்­கான சேவைகள் என்­பன பாதிப்­ப­டை­கின்­றன என்ற எண்ணம், சற்­றேனும் இத்­த­கைய அதி­கா­ரத்தில் உள்ளவர்களுக்கோ, அரச அதிகாரி­க­ளுக்கோ இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

தமது அதி­கா­ரங்­களும் ஆணை­க­ளுமே அவர்­க­ளுக்கு அத்­தி­யா­வ­சி­ய­மாகப் போய்­விட்­டன.

அர­சாங்­கமும் மாகாணசபையும் ஒரு கூட்­டு­றவு அடிப்­ப­டையில் சேர்ந்­தியங்கி­னால் தான் மாகாணசபை நிர்­வா­கமும் உள்ளூராட்சி நிர்­வா­கமும் வெற்றி அளிக்­க­மு­டியும்.

நானோ நீயோ என்ற பாணியில் ஒரு­வரின் உரிமைகளை மற்­றவர் பாவிக்க எத்­த­னித்தால், கூட்­டு­றவு நிலை அழிந்து முரண்­பட்ட நிலையே உரு­வாகும்.

மக்­களின் நன்மை கருதி நாங்கள் அமை­தி­யாக - பொறு­மை­யு­டன் தான் எமது தடங்­களைப் பதித்து வரு­கின்றோம்.

அதனை எமது வலு­வின்மை அல்­லது தளர்வு நிலை என்று எம்­மி­னிய சகோ­தர சகோ­த­ரிகள் தப்­புக்­க­ணக்குப் போட்­டு­வி­டக்­கூ­டாது.

மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்கள் தமது மக்­க­ளுக்­கான சேவையைச் சீரும் சிறப்­பு­டனும் செய்ய வழி அமைப்­ப­தா­லேயே மாகா­ணத்தில், பிர­தேச சபைக்­குட்­பட்ட பிர­தே­சங்­களில் ஜன­நா­ய­கத்தின் சுவ­டுகள் பதிக்­கப்­ப­டலாம். இல்­லை­யென்றால் அரா­ஜ­கமே மிஞ்சும்.

இதுவரை ­கா­லமும் அரச அதி­காரம், இரா­ணுவ பலம், அனு­ச­ரணைப் படையின் அட்­டூ­ழி­யங்கள் போன்­ற­வற்றின் உத­வி­யுடன் நடத்தி வந்த அரச நிர்­வா­கத்தை, மக்கள் வேண்டாம் என்று தெளி­வாகக் கூறி­விட்­டார்கள் என்­பதை இந்த அரச சார்­பான அதி­காரம் படைத்­த­வர்கள் புரிந்து கொண்டு நடக்கப் பழகிக் கொள்­ள­ வேண்டும்.

இரா­ணு­வத்தைத் தொடர்ந்தும் மாகாணத்தில் நிலைகொள்ள வைத்து அதன் அர­வ­ணைப்பில் குளிர் காயலாம் என்று எண்­ணு­வது மடமை.

எனவே மக்­களின் நன்­ம­திப்­பையும் ஆத­ர­வையும் பெற்­ற­வர்கள் தத்­த­மது கட­மை­களில் ஈடு­பட வழி­ய­மைத்துக் கொடுப்­பதன் அவ­சி­யத்தை சக­லரும் உணர்ந்து கொள்­வார்கள் என்று நம்­பு­கின்றோம்.

மத்­திய அர­சாங்­கத்­திற்கு அடுத்­த­தாக மாகாணசபையும், அதற்கு அடுத்­த­தாக பிர­தேசசபை­களும் இருந்து வரு­கின்­றன. இவை மூன்றும் ஒருவர் மற்­ற­வரின் எல்­லைக்குள் பிர­வே­சி­யாமல் இருந்தால் தான் சுமூ­க­மான உறவைப் பேணி வளர்க்க முடியும்.

அதி­காரப்பகிர்வே 13வது திருத்தச்சட்­டத்தின் குறிக்கோள். ஆனால், போது­மா­ன அதிகாரப் பகிர்வு அந்தத்­ தி­ருத்தச் சட்­டத்தின் கீழ் வழங்­கப்­பட்­டதா? இல்­லையா? என்று பரி­சீ­லிக்க இது­வரை காலமும் போதிய சந்­தர்ப்­பங்கள் எழ­வில்லை.

ஏனென்றால் பொது­வாகத் தெற்கில் உள்ள மாகாணசபைகள் ஆளுங்­கட்­சியின் வசமே இருந்து வந்தது. அப்­படி இல்லை என்­றாலும் பெரும்­பான்­மை­யின மக்­களே மத்­திய அர­சாங்­கத்­திலும் இருந்­தார்கள். மாகாணசபை­க­ளிலும் இருந்­தார்கள்.

அவர்­க­ளுக்குள் அதி­காரப்பகிர்வு கட்­டா­ய­மாகத் தேவைப்­ப­ட­வில்லை. உள்­ளூ­ராட்சி சிறந்து விளங்க வேண்­டு­மென்று அவர்கள் கருதியிருந்தால், போதிய அதி­காரப்பகிர்வு தேவைப்­பட்­டி­ருக்கும்.

ஆனால் அவர்கள் அவற்றை இது­வரை போது­மா­ன­தாகக் கோர­வில்லை.

ஆனால் வட­க்கு மா­காணம் அப்­ப­டி­யல்ல. நாங்கள் கட்­சியால் வேறு­பட்­ட­வர்கள் மட்­டு­மல்­லாது, கலை­களால் வேறு­பட்­ட­வர்கள். மொழி­யினால் வேறு­பட்­ட­வர்கள். மதத்­தினால் வேறு­பட்­ட­வர்கள். நிலத்தின் அமைப்­பினால் வேறு­பட்­ட­வர்கள்.

காலா­தி­கா­ல­மாகத் தனித்து, வேறு­பட்ட வாழ்க்கை முறையில் வளர்ந்து வந்­த­வர்கள். எமக்குத் தான் அதி­காரப்பகிர்வு தேவைப்­பட்­டது.

ஆனால் சுமார் 25 வரு­டங்­க­ளாக அது எமக்குக் கிட்­ட­வில்லை. தற்­போது கிட்­டி­ய­துந்தான் தெரி­கி­றது. ஆளு­ந­ருடன் சேர்ந்து அர­சாங்கம் எந்­த­ள­விற்கு எமது அதி­காரப்பகிர்வை அர்த்­த­மற்­ற­தாக்­கலாம் என்­பதை அவ­தா­னிக்க வேண்டும்.

அதா­வது எமது அதி­காரப்பகிர்­வுக்­கா­கவே 13வது திருத்தம் கொண்டு வரப்­பட்­டது. அதனை 25 வரு­டங்­க­ளுக்கு மேல் எம் பூமியில் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை.

ஆனால் நடை­மு­றைப்­ப­டுத்த ஒரு சந்­தர்ப்பம் கிடைத்­ததும் அதைச் சிதைக்கச் சதி நடக்­கின்­றது.

தேர்­தலின் போது இவ்­வாறு நடக்கக் கூடும் என்­பது நாம் அறிந்து வைத்­தி­ருந்­த­து தான்.

ஆனால் நடை­மு­றையைப் பார்த்தால் அர­சாங்­கத்­துடன் சேர்ந்­தி­யங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்­சர்கள் சிலர், தமிழ் பேசும் அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து எம்மை இயங்க விடாமல் செய்யப் பார்க்கிறார்கள்.

ஒருவேளை அரசாங்கத்துக்கும் எமக்கும் இடையில் நெருங்கிய உறவு அடுத்த தேர்தலின் போது ஏற்பட்டால், தமது பாடு இக்கட்டானதாக அமைந்து விடுமோ என்ற கிலேசம் தான் அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுகின்றதோ தெரியவில்லை.

அண்மைய தேர்தல் அவர்களின் ஆதரவு வெகுவாகக் குறைந்து வருவதை எடுத்துக்காட்டியது. இழந்த ஆதரவை பெருக்கிக் கொள்ளலாம் என்று சதிகளில் ஈடுபடுகிறார்களோ தெரியவில்லை.

எது எவ்வாறு இருப்பினும் உள்நாட்டு விடயங்களை இப்பொழுதும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

எனினும் அந்த நம்பிக்கைக்கு அதற்கு மாறான ஒரு செயலாகத்தான் மேற்கூறிய சதிகள் அரங்கேற்றப்படுகின்றன.

விரைவில் சிங்களப் பொதுமக்கள் எமது யதார்த்தத் தேவைகளையும் இன்று எமக்கு நடக்கும் சதிகள் பாற்பட்ட நடவடிக்கைகளையும் புரிந்து கொண்டு தமது அரசாங்கத்திற்குப் போதுமான நெருக்குதல்களை அளிக்க முன்வருவார்கள் என்றும் நம்புகின்றேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


http://www.puthinappalakai.com/view.php?20131123109490

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு வேண்டுகோளும் எதிர்ப்பும்..........

  • கருத்துக்கள உறவுகள்

முதல் அமைச்ஹரின் செயல்பாடுகளை விட பேச்சு தான் அதிகமா வந்து கொண்டு இருக்கு முதல் அமைச்சரா வந்ததில இருந்து வடக்கு மாகாணசபை அபிவிருத்தி திட்டங்கள் ஒண்டையும் அறிவிச்சதா காணோம்.... விதைவைகளின் மறுவாழ்வு சுகாதாரம் கல்வி அபிவிருத்தி என்று ஒரு திட்டங்களும் இல்ல ஜஸ்டு வெறும் சவுண்டு மட்டும் வருது ....:D

  • கருத்துக்கள உறவுகள்

முதல் அமைச்ஹரின் செயல்பாடுகளை விட பேச்சு தான் அதிகமா வந்து கொண்டு இருக்கு முதல் அமைச்சரா வந்ததில இருந்து வடக்கு மாகாணசபை அபிவிருத்தி திட்டங்கள் ஒண்டையும் அறிவிச்சதா காணோம்.... விதைவைகளின் மறுவாழ்வு சுகாதாரம் கல்வி அபிவிருத்தி என்று ஒரு திட்டங்களும் இல்ல ஜஸ்டு வெறும் சவுண்டு மட்டும் வருது .... :D

 

 

பொறுங்கப்பா........

அந்தாளும்  முதலடியை  வைக்கப்பார்க்குது

அண்ணன்  தம்பி  பிள்ளைகள் என்று மகிந்த குடும்பமே எல்லா  இடமும் கண்ணிவைடி மாதிரி  நிற்கிறாங்கள்

காலை  வைக்கவிட்டால்தானே....... :(

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் ஜஸ்ட் சும்மா வெறும் சாட்டு அண்ணே.... வடமாகனத்துக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியில் ஆரம்ப வேலைகளை தொடங்க முடியும்

இது எல்லாம் ஜஸ்ட் சும்மா வெறும் சாட்டு அண்ணே.... வடமாகனத்துக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியில் ஆரம்ப வேலைகளை தொடங்க முடியும்

உதவிக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு இளம் சிங்கத்தை எதிர்பார்கின்றாராம் . :mellow:

என்ன இருந்தாலும் சம்மந்தி எல்லே சுண்டல் பொறுமை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் சம்மந்தி எல்லே சுண்டல் பொறுமை :lol:

 

அஞ்சரன்  சுண்டல் ஜி இன் ஆதங்கம் உங்களுக்கு புரியவில்லை  மாவை ஜயா வந்திருந்தால் இந்தப் பிரச்னை எதுவும் வந்திருக்காது எண்டு சொல்லுறாரு

அஞ்சரன்  சுண்டல் ஜி இன் ஆதங்கம் உங்களுக்கு புரியவில்லை  மாவை ஜயா வந்திருந்தால் இந்தப் பிரச்னை எதுவும் வந்திருக்காது எண்டு சொல்லுறாரு

 

ஏன் அண்ணே ஜிக்கு வேண்டபட்ட ஆளே மாவை ஐயா .

சிலருக்கு குழந்தை பிறந்தவுடன் ஓடித்திரிய வேண்டும் என்ற ஆசை ,யதார்த்தங்களை புரியாதவர்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.