Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் பறந்தது புலிக்கொடி - திணறுகின்றது படைத்தரப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ltte_flag_protest_20090519_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளும், மக்களும் வருடாவருடம் அனுஸ்டிக்கும் மாவீரர் தினம், எதிர் வரும் 27 ஆம் திகதியும் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்கும் முனைப்புக்கள் பல தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகின்றது

இந்த நிலையில் மன்னார்  பனங்கட்டிக்கொட்டு – எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர் (கோபுரம்) ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியக்கொடியான 'புலிக்கொடி' ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தகவலறிந்த படைத்தரப்பினர் இன்று திங்கட்கிழமை  காலை சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துரையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொடியினை அகற்றியுள்ளனர்.

தற்போது மேலதிக விசாரனைகளை படைத்தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். எனினும்; இராணு புலனாய்வுத்துரையினர் குறித்த சம்பவத்தை முடிமறைத்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு,

இச்சம்பவத்தை; மறுத்துள்ள மன்னார் காவல் துறையினர் அவ்வாறான சம்பவம் இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை மடிச்சுக் கட்டி அடிப்பெட்டிக்க போடுங்க என்று மாற்றுக்குழு மாற்றுக் கருத்து..மன்னர்கள்.. புலம்பெயர் நாடுகள் எங்கும் விழுந்து விழுந்து எசமானர்களுக்கு பிரச்சாரம் செய்ய.. தாயகத்தில் அதை பறக்க விடுறாங்களே..! இதென்ன கொடுமை..!

தொடரும்.......

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம்  என்ன  தலைப்பு........... :(  :(  :(

வடக்கில் இராணுவ பீரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்ற குரல் அதிகரித்து வரும் நிலையில் புலிப் புரளியைக் கிளறி தமது இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது அதன் புலனாய்வுப் பிரிவோ ஏன் இந்தக் கொடியேற்றும் செயலைச் செய்திருக்கக் கூடாது.

 

இதனைக் காரணம் காட்டி வழமை போலவே தமது அரசியல் எதிரிகளை அல்லது அவர்களின் ஆதரவாளர்களைக் கைது செய்தவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

 

எனவே இது சிங்களமே அரங்கேற்றும் நாடகமாக இருக்கலாம் என்பதே எனது கணிப்பு.

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இராணுவ பீரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்ற குரல் அதிகரித்து வரும் நிலையில் புலிப் புரளியைக் கிளறி தமது இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது அதன் புலனாய்வுப் பிரிவோ ஏன் இந்தக் கொடியேற்றும் செயலைச் செய்திருக்கக் கூடாது.

 

இதனைக் காரணம் காட்டி வழமை போலவே தமது அரசியல் எதிரிகளை அல்லது அவர்களின் ஆதரவாளர்களைக் கைது செய்தவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

 

எனவே இது சிங்களமே அரங்கேற்றும் நாடகமாக இருக்கலாம் என்பதே எனது கணிப்பு.

 

பல்களைகளகத்தை பூட்டி துண்டு பிரசுரங்களை உள்ளே எறிந்து படம் காட்டி பல்கலைகளகத்தை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டது நாடகம் 1.
 
இது நாடகம் 2. எல்லாம் வழமையான பாணி தான்.

இதெல்லாம்  என்ன  தலைப்பு........... :(  :(  :(

 

 

அது குருபரனின் சந்தைப்படுத்தல் தந்திரம்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம்.. புலிக்கொடி ஏத்தினா ஆமி நிற்கும்.. மாவீரர் சுடர் ஏத்தினா ஆமி நிற்கும்.. ஆமி போகாது என்று பயங்காட்டிறதும் அரசியலாப் போச்சுது. சிங்களவன் ஆமியை புலிக் கொடி வர முதலே கொண்டாந்திட்டான். அதை அவன் லேசில எடுக்கப் போறதும் இல்ல. குறைஞ்சது புலிக்கொடியாவது பறக்கட்டுமேன். சிங்கக் கொடிதான் பறக்கனுன்னு விரும்புறாய்களோ என்னவோ..??!


சிங்கள இராணுவத்தை ஒரு சர்வதேசப் பொறிமுறைக்குள்ளால் வெளியேற்றினால் அன்றி.. புலிக்கொடி ஏத்தாமல் விடுறதாலையோ.. மாவீரர் தினம் அனுஷ்டிக்காமல் விடுறதாலையோ.. சிறீலங்கா அரசிற்கு அடிவருடுவதாலோ அது நடக்கப் போற விடயமில்லை..! இதனையும் மக்கள் அறிந்து தெளிவது அவசியம்.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.