Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்தன், விஜயேந்திரன் உள்பட 23 பேரும் விடுதலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேரையும் விடுதலை செய்து புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

sangarachariyar%201a.jpg

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி கோவிலின் உள்ளே உள்ள தனது அலுவலகத்தில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், ரஜினிகாந்த், அம்பிகாபதி, பாஸ்கர், குமார், ஆனந்தகுமார், அனில்குமார், மீனாட்சி சுந்தரம், பழனி, குருவிரவி, ஆறுமுகம், தில்பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண், ஆறுமுகம், சேகர், சில்வர் ஸ்டாலின், செந்தில்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரவி சுப்ரமணியம் அப்ரூவரானார்.

இந்த வழக்கில் 2004 நவம்பர் 11ஆம் தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் , ஜனவரி 10ஆம் தேதி ஜெயேந்திரர் ஜாமீனில் வெளியே வந்தார். ஜெயேந்திரர் வெளியே வந்த மறுநாள் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக 2005 ஜனவரி 21ஆம் தேதி காஞ்சிபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் தனிப்படை காவல்துறையினர் 1873 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 370 சாட்சியங்களுடன் 712 ஆவணங்களும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வந்த சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஜெயேந்திரர் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி 2005 அக்டோபர் 28ஆம் தேதி சங்கர ராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டு புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்றது.

sangarachariyar%202a.jpg

370 சாட்சியங்களில் வழக்கிற்கு தேவையான 189 பேரிடம் மட்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடந்தது. அப்போது சாட்சிகள் அளித்த வாக்குமூலம் தலைமை நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. இதில் அப்ரூவர் ரவிசுப்ரமணியம் உள்பட 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

இந்த வழக்கில் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கதிரவன் கடந்த 2013 மார்ச் 21ல் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறப்பு சான்றிதழை காஞ்சிபுரம் காவல்துறையினர் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அன்றைய தினம் தங்கள் தரப்பு வாதம் அனைத்தும் முடிந்துவிட்டதாக சங்கராச்சாரியார்கள் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கிடையே சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா தனக்கு வழக்கு விசாரணை குறித்த ஆடியோ வீடியோ நகல்கள் வேண்டும் என்று புதுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருந்ததால் வழக்கில் தீர்ப்பு வழங்குவது தள்ளிப்போனது.

 

இந்நிலையில், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரான ஆனந்த் சர்மா தனக்கு வழக்கு விசாரணை குறித்த ஆடியோ, வீடியோ நகல்கள் தேவையில்லை என்றும், தீர்ப்புகூற தனக்கு ஆட்சேபணையில்லை என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சங்கரராமனின் கொலை வழக்கில் நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி முருகன் உத்தரவிட்டிருந்தார்.

புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கினை நீதிபதிகள் சின்னபாண்டி, குமாரசாமி, ராமசாமி, முருகன் ஆகியோர் விசாரித்து உள்ளனர்.

தீர்ப்பு விவரம்

 

இறுதியாக நீதிபதி முருகன் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கினார். அப்போது, ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும், குற்றச்சதி செய்ததாக கூறப்படுவதை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயேந்திரர் மவுன விரதம்

தீர்ப்புக்கு பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ஜெயேந்திரரிடம் கருத்து கேட்க செய்தியாளர்கள் முயன்றனர். அப்போது, அவரது உதவியாளர்,  ஜெயேந்திரர் இன்று மவுன விரதம் இருப்பதாக தெரிவித்தார்.

 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=21687

 

இந்திய நீதித்துறை எந்தளவுக்கு படு கேவலமானது என்பதற்கு இந்தத் தீர்ப்பு இன்னுமொரு உதாரணம். வெறுமனே பற்றறி வாங்கிக் கொடுத்த பேரறிவாளனுக்கு மரண தண்டனை; காமக் கொடூரன் ஜெயேந்திரனுக்கு விடுதலை.

 

விகடனில் வந்துள்ள சில பின்னூட்டங்களில் சில:
 

 

இன்னும் 10 வருஷம் கழித்து தீர்ப்பு சொல்லி இருந்தால் வாதியும் செத்து இருப்பான், பிரதிவாதியும் செத்து இருப்பான்... சாட்சியும் செத்து இருப்பான்..

காலம் கடந்த தீர்ப்பு அநீதிக்கு சமம்..

இப்போதைய கேள்வி? சங்கரராமனை கொன்றது யார்?

பகவானா?

 

 

படுகொலை செய்யபட்டும் நீதி கிடைக்காத கோடான கோடிகளின் கூட்டத்தில் இன்று ஒரு சங்கரராமனும் தன்னை இணைத்து கொண்டார்...!!!

 

 

சாட்சி சொன்னவன் எல்லாம் அப்படியே தலை கீழாக மாத்தி சொன்னதால சாமிக்கு விடுதலை ...

அதிகாரி அறிக்கை (FIR) யை மாத்தி எழுதினா கூட பேரறிவாளனுக்கு தூக்கு ....

அதனால் சகலமானவர்களுக்கும் தெரிவப்பது என்னவென்றால்

உலகிலேயே முதன்முதலாக, சங்கரராமன் என்பவர் தன்னைத்தானே கொலைசெய்துகொண்டார்...
அப்புறம், தீவிரவாதி உதயகுமார் வெடிகுண்டு தயாரித்து வெடித்தார்....

வாழ்க நீதி ...!
வாழ்க இந்தியா .....!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம் கேட்ட இந்திய நீதித்துறை அது எப்பிடி ஐயா ஒருவர் தன்னுடைய கழுத்தை வெட்டி தற்கொலை பண்ணிக்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

1441403_1433024566925917_349819523_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப்படத்தை, இணையத்தில் தேடிப்போட்டு, இணைக்க வாறதுக்கிடையில நெடுக்கர் முந்தீற்றார்! :o

 

ம்ம்ம்.... இளம் இரத்தம் !!! :D

 

நன்றிகள் நெடுக்கர்!

  • கருத்துக்கள உறவுகள்

நீதி பதி இடம் லஞ்சம் கொடுப்பது சம்மந்தமாக காஞ்சி ஜெயேந்திரர் பேசி கொண்ட ஆடியோ டேப் நீங்கள் கேட்டது உண்டா !

  • கருத்துக்கள உறவுகள்

நீதி பதி இடம் லஞ்சம் கொடுப்பது சம்மந்தமாக காஞ்சி ஜெயேந்திரர் பேசி கொண்ட ஆடியோ டேப் நீங்கள் கேட்டது உண்டா !

 

1:30´வது வினாடியிலிருந்து அவர்களின் உரையாடலைக் கேட்க... இந்திய நீதித்துறையிலும், சங்கர மடத்திலும்... நம்பிக்கையே அற்றுப் போய் விட்டது.

முன்பு இந்த வழக்கு... சென்னையில் நடந்து வந்தது.

சங்கராச்சாரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க பாண்டிச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது குறிப்பிடத் தக்கது.

அது, எதற்கு என்று... இப்போ புரிந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

1:30´வது வினாடியிலிருந்து அவர்களின் உரையாடலைக் கேட்க... இந்திய நீதித்துறையிலும், சங்கர மடத்திலும்... நம்பிக்கையே அற்றுப் போய் விட்டது.

முன்பு இந்த வழக்கு... சென்னையில் நடந்து வந்தது.

சங்கராச்சாரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க பாண்டிச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது குறிப்பிடத் தக்கது.

அது, எதற்கு என்று... இப்போ புரிந்து விட்டது.

யாரப்பா, அந்தத் 'தமிழ் சிறி' ங்கிறது? :D 

 

533729_581997725188603_440563391_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Pics: Ways To Keep Your Heart Healthy

Menu Search

ஒன்இந்தியா > தமிழ் > செய்திகள் > தமிழகம்

சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்!

Posted by: Shankar

Published: Thursday, November 28, 2013, 13:32 [iST]

-எஸ் ஷங்கர்

சங்கரராமன்....

ஒரு செய்தியாளனாக என்னால் மறக்க முடியாத நபர், நண்பர். காஞ்சிபுரத்தில் நான் இருந்த நாட்களில் தினசரி காலையும் மாலையும் என்னை தவறாமல் சந்திக்க வந்துவிடுவார். அவருடன் ஒரு மெல்லிய துண்டு போர்த்திக் கொண்டு அவரது மகன் கொழுக் மொழுக்கென்று வந்து நிற்பான். சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற நண்பர்தான் சங்கரராமனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் முறைகேடுகள் பற்றி துல்லியமாக புள்ளிவிவரம் தருவார் சங்கரராமன். எந்தக் கோயிலில் என்ன விசேஷம், அதன் வரலாறு, இப்போதுள்ள நிலைமை என எனக்குத் தேவையான விவரங்களை தினமும் தருவது அவர் வழக்கம். முடிந்தவரை தமிழகத்தின் அனைத்து கோயில்கள் பற்றியும் எனக்குப் புத்தகங்கள் தந்திருக்கிறார்... ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் எழுதிய கோயில் கட்டுரைகளை இப்போது தொகுத்தாலும் தனிப் புத்தகம் தேறும். அதற்கான பெருமை சங்கரராமனுக்குத்தான்!

ஒரு முறை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை என்ற தகவலை ஆதாரங்களோடு தந்தார். 'குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே' என குமுறினார். அதை படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினோம். சில தினங்களில் வரதராஜருக்கு வரவேண்டியவற்றில் ஓரளவுக்காவது வர ஆரம்பித்ததை மகிழ்ச்சியோடு சொல்லி, அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான 'படி இட்லி' - புதினா சட்னியை கொடுத்துவிட்டுப் போனார்!

இந்தக் கோயிலில் நடந்த இன்னொரு அக்கிரமம்... கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை. அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.

சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே புதிதாக வந்த என்னிடம்தான் அவர் சங்கர மடத்து சமாச்சாரங்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்வார்.

அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சங்கரராமன் சொன்ன பின்னணி பயங்கர ஷாக்கான சமாச்சாரம்!

ஜெயேந்திரரைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க - தங்க காணிக்கைகள் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரர் வைத்திருந்த பெயர் துஷ்டன்! நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் 'இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு', என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.

எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே பலரிடமும் சொன்னவர் சங்கர்ராமன்.

பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார்.

அதன் பிறகு அவரைப் பார்த்தாலே மற்ற நிருபர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். 'இதுக்கு வேற வேலயே இல்ல. கண்டுக்காதீங்க... இதுமேலயும் தப்பு இருக்கு,' என்றனர்.

ஒரு கட்டத்தில் சங்கரராமன் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை என்னால் செய்தியாக வெளியிட முடியவில்லை. காரணம், அலுவலகத்தில் பலரும் சங்கர மடத்தின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாக செயல்பட்டதுதான்.

இதனால் நானே கூட சில சந்தர்ப்பங்களில் சங்கரராமனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் அந்த மனிதர் புரிந்து பக்குவமாகத்தான் நடந்து கொண்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்... ஒருநாள் சங்கரராமன் வந்தார். 'சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா... குடிச்சிட்டு பூஜை பண்றான்... வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது... இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,' என்று வந்து நின்றார்.

"ஸாரி சங்கரராமன்... ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது," என்றேன். 'என்னண்ணா சொல்றேள்...' என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.

ஆனால் அவருடனான நட்பில் மாற்றமில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போனாலே போதும், எங்கிருந்தாலும் ஓடி வருவார்... ஒவ்வொரு பிரகாரம், சந்நிதிகளுக்கும் அழைத்துப் போய் கோயிலின் பெருமை சொல்வார். தவறாமல் படி இட்லி பிரசாதம் பெற்றுத் தருவார். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், கற்சங்கிலிகள் குறித்து அவர் தரும் விளக்கம் சிறப்பாக இருக்கும்.

கடைசியாக 2001-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் என்னைப் பார்க்க படி இட்லியோடு வந்திருந்தார் சங்கரராமன்.

பத்திரிகைகள் கைகொடுக்காத நிலையில், ஒரு நாள் தன்னுடைய சொந்த பெயரிலே 'எச்சரிக்கை' என்ற தலைப்பில் ஜெயந்திரர், விஜயேந்திரர், ரகு மற்றும் மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதை திருத்திக்கொள்ளும்படி கேட்டு ஜெயந்திரருக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த நான்காவது நாள், சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன்!

இதையெல்லாம் விலாவாரியாக சொல்லக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரருக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்!

Thatstamil

936537_630597386982343_626627733_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.