Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
[ புதன்கிழமை, 27 நவம்பர் 2013, 12:45.16 PM GMT ] தமிழ்வின்
vikneswaran_tree_001.jpg
யாழ்.குடாநாட்டில் தமிழீழ மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார்.

குடாநாடு முழுவதும் படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றைய தினம் செய்யப்பட்டிருந்ததுடன், இளைஞர்களின் நடமாட்டமும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கும் கடுமையான பாதுகாப்பு, ஏற்படுத்தப்பட்டிருந்தது.

 

இதேபோன்றே யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த மரக்கன்றுகள் நடும் திட்டம் கைவிடப்பட்டதாக முதலமைச்சர் நேற்று மாலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை திடீர் ஏற்பாட்டில் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடன் இணைந்து, முதலமைச்சர் வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தில் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டிவைத்தார்.

நிகழ்வில் கல்வி அமைச்சர் த. குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப் பினர்கள் வே.சிவயோகன், பா.கஜதீபன், இ.ஆனல்ட் ஆகியோரும் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

vikky_tree_001.jpg

vikky_tree_002.jpg

vikky_tree_003.jpg

vikky_tree_004.jpg

vikky_tree_005.jpg

vikky_tree_007.jpg

vikky_tree_008.jpg

vikky_tree_009.jpg

vikky_tree_010.jpg

vikky_tree_011.jpg

vikky_tree_012.jpg

vikky_tree_013.jpg

 

Edited by Paanch

மாவீரர் வாரத்தில் மாவீரரை தவிர மற்றவர்களுக்கு மரியாதை செலுத்த அரசு இடம் தருகிறது என்றதை உலகுக்கு காட்ட சிலர் முயன்ற பொழுத்து மாவீரர் தினத்தன்றும் விதையாகிப்போன மாவீரர்களுக்கு மரம் நாட்டி மரியாதை செய்ய முடியும் என்பதை கூட்டமைப்பு நிரூபித்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன மரம்?

 

அரசமரம் போல கிடக்கு! :o

உணர்சிகளை நிறுத்த முற்பட்டால் இதனுடைய தாக்கம்  மிகமோசமாக இருக்கும் -சி.வி. விக்கினேஸ்வரன்

 

எமது மக்களின் உணர்சிகளை  இராணுவப்பலத்தின் மூலமாகவோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ நிறுத்த முற்பட்டால் இதனுடைய தாக்கம்  மிகமோசமாக இருக்கும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மரநடுகை விழாவில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

ஒரு பரம்பரை எம்மை விட்டுப் போனதையும் புதிய பரம்பரை வருவதைக் கட்டுவதற்குமே நாங்கள் மரங்களை நடுகை செய்கின்றோம். மரங்கள் நடுவதன் மூலம் சுற்றுச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்படும் அதனைப் போலவே எங்கள் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்பட ஒரு அங்கமாக இந்த மரங்களை நாங்கள் நடுகின்றோம் என்றார்.

எமது இனத்தின் பல இளைஞர் யுவதிகள் எங்களை விட்டுப்போய் விட்டார்கள் இதனால் எமது இளைஞர் சமுதாயத்தில் ஒரு மேம்பாடு வரவேண்டும் இதனை எடுத்துக்காட்டும் முகமாக இந்த மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள ஏ-9 வீதியில் இருந்த அத்தனை மரங்களும் போய்விட்டது நல்ல காடுகளாய் இருந்த இடமெல்லாம் வெறும் தரைகளாக மாறிவிட்டது. எது எங்கே போனது? எப்படி போனது? யார் கொண்டு போனது? நான் நினைக்கின்றேன் ஒரு சர்வதேச விசாரணை நடத்தினால் அது தெரியவரும்.

 இவற்றுக்காக எங்கள் பிரதேசங்களில் புதிய மரங்களின் தேவைப்பாடுகள்  இருக்கிறது அந்த மரங்களை நாங்கள் திரும்பவும் வரவழைக்க வேண்டும்  வளரவிடவேண்டும் அதே போன்று தான் எங்கள் வாழ்விலும் புதிய சமுதாயம் மேம்படவேண்டும் என்றார்.

எங்கள் காணிகளிலோ தனிநபர்களின் காணிகளிலோ மரங்கள் நடுகை செய்வதை எந்த அரசாங்கத்தினாலேயோ தடைசெய்ய முடியாது இன்று நாங்கள் பல இடங்களில் மரங்களை நடுகை செய்திருக்கின்றோம் எனது வீட்டிலும் இன்று நான் ஒரு மரததை நட்டிருக்கின்றேன். இது எங்கள் மனத்தைப் பொறுத்தது உணர்ச்சிகளைப் பொறுத்தது என்றார்.

இறந்த ஆத்மாக்களின் அத்மா சாந்திக்காகவும் புதிய உலகிற்கு எங்களை கொண்டு செல்லவும் ஒரு அடையாளமாக இந்த மரநடுகை அமைந்துள்ளது. இதனை செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது   இதனை அரசாங்கம்  குறுகிய நோக்கத்துடனேயே பார்க்கிறது.

ஒரு நீர்த் தொட்டிக்குள் ஒரு பந்தை அமுக்கும் போது அது எவ்வாறு எழுச்சி பெறுகின்றதோ அதனைப் போலவே மக்களின் உணர்ச்சிகளும் இருக்கும் எமது மக்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் முகமாக இவ்வாறான நடவடிக்கைகளை  செய்ய விடாமல் இராணுவத்தின் ஊடாக பலாத்காரத்தின் ஊடாக அல்லது வன்முறையூடாக தடுத்தால்  இதனுடைய தாக்கம்  மிகமோசமாக இருக்கும் என்பதை  அரசாங்கம் கணக்கில் எடுக்க வேண்டும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

tamilmirror

  • கருத்துக்கள உறவுகள்

vikky_tree_013.jpg

 

இது என்ன மரம்?

 

அரசமரம் போல கிடக்கு! :o

 

அரச மரத்தை நட்டால்... தான், ஆமி வந்து புடுங்கி எறியாது.

மரம் வளர்ந்த பிறகு... அதிலை, விகாரை கட்ட பிக்குகளும் இப்பவே... பிளான் போட்டிருப்பாங்கள்.

இப்பவே... மரத்துக்குப் பாதுகாப்பாக, ஒரு வைரவ சூலத்தை... பக்கத்தில‌ குத்தி வைக்கிறது நல்லது.

Edited by தமிழ் சிறி

ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்படாக அமையாது – சம்பந்தன்

 

தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் போற்றிப் புகழ்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டங்கட்டியுள்ளது.

இது கட்சியின் நிலைப்பாடு அல்லவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் டெய்லிமிரருக்கு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் அறிக்கை பற்றி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, 21ஆம் திகதி செப்டெம்பர் மாதம் நடந்த மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கட்சி வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் தேசியப் பிரச்சினை தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

'பிரபாகரனின் பிறந்ததினமான நவம்பர் மாதம் 26 இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் உணர்ச்சி வசப்பட்டிருக்கலாம். அவர் ஓர் உணர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்;. நாம் இந்தப் பாணியில் எமது தேர்தல் பிரசாரத்தை செய்யவில்லை.

ஸ்ரீதரன் கூட இவ்வகையில் பிரசாரம் செய்யவில்லை. எமக்கு முன்னரே தெரிந்திருந்தால் நாம் இதை அனுமதித்திருக்க மாட்டோம்' என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

'இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல. நாம் இதில் தெளிவாக உள்ளோம்'  எனவும் அவர் கூறினார்.

tamilmirror

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வீட்டின் மீது இன்று அதிகாலை கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மாவீரர் தினத்தில் மரம் நடுகைநிகழ்வினை ஏற்பாடு செய்தவர் என்ற காரணத்திற்காகவே அவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
D045454.jpgD2356506.jpgD20154465.jpgUntitlD204504ed-6.jpg

virakesari

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வல்வெட்டித்துறை அலுவலகத்துக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை இனந்தெரியாதோரால் மலர் வளையமும் மலர் மாலையும் வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையத்தளத்திற்குக்கு தகவல் தருகையில், தமிழ் மக்கள் அடக்கு முறைகளில் இருந்து நிச்சயம் விடுதலை பெறுவார்கள் என்றும் தமிழ் மக்களுக்கு நான் நன்றி சொல்ல  கடமைப்பட்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்தார். 

virakesari

 

விக்னேஸ்வரனின் உருவப்படம் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

 

 

DSCF7384.JPG
-சுமித்தி தங்கராசா

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் தாங்கிய பதாகை இனந்தெரியாத நபர்களினால் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் கிழித்து எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

யாழ். சிவகுருநாதர் வீதியிலமைந்துள்ள உதயன் விருந்தினர் விடுதியில் நடப்பட்டிருந்த பதாகையே இவ்வாறு கிழித்து எரிக்கப்பட்டுள்ளது.

விடுதியை சுற்றி கட்டப்பட்டிருந்த மதிலால் ஏறிப்பாய்ந்த நபர்களே பதாகையை இவ்வாறு கிழித்து எரித்துவிட்டு தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில், விக்னேஸ்வரன் தனது ஊடக சந்திப்புக்கள் சிலவற்றை மேற்படி விருந்தினர் விடுதியில் வைத்து நடத்தியமையினால் அப்பகுதியில் இப்பதாகை நாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள் குணசேகரன் சுரேன்)
DSCF7386.JPG
DSCF7387.JPG
DSCF7389.JPG

tamilmirror

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரனின் கருத்து கட்சியின் நிலைப்படாக அமையாது – சம்பந்தன்

 

சம்பந்தன் கருத்து மக்களின் நிலைப்படாக அமையாது – தமிழ்மக்கள்

"மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாகிய எனக்கு பாராளுமன்றில் உரையாற்றுவதற்கான சிறப்புரிமை உண்டு. எனது பாராளுமன்ற சிறப்புரிமையை கேள்வி கேட்பதற்கு சபாநாகருக்கும் மட்டுமே உரிமை உண்டு. வேறு எவருக்கும் நான் ஆற்றும் உரைகள் குறித்து வெளியில் இருந்து  கேள்வி எழுப்பும் உரிமை கிடையாது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  தெரிவித்துள்ளார்.

'பாராளுமன்றில் நான்ஆற்றும் உரை குறித்து வெளியில் இருந்து கேள்வி எழுப்பும் உரிமை எவருக்கும் கிடையாது"

 

 

"நான் பாராளுமன்றில் என்ன பேசவேண்டும் என்பதனை கட்சியிடம் கேட்டு பேசவேண்டிய அவசியம் இல்லை. நான் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவன். அப்படி கட்சியிடம் கேட்டுத்தான் பேசவேண்டும் என்றால் நான் வாழ்க்கையில் எதனையும் பேச முடியாது."

"அந்த வகையில் எனது பாராளுமன்ற உரைகள் குறித்து பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் படி எதனை நீக்க வேண்டும் எதனை சேர்க்க வேண்டும் என்பதனை சபாநாயகரே தீர்மானிக்க முடியுமே தவிர வேறு எவரும் வெளியில் இருந்து விமர்சிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது என சிவஞானம் சிறீதரன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

ஹன்சாட் இலிருந்து தனது உரை நீக்கப்படும் என்பது தெரிந்தும் தான் கூறவந்த விடயத்தை தெளிவாக துணிச்சலாக கூறிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனை பாராட்ட வேண்டும். அதேவேளை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மண்ணிற்கு விதையாக வீழ்நத மாவீர்ர் நினைவாக மரம் கெளரவ முதல்வர் விக்கினேஸவரனுக்கு நன்றி.

Edited by tulpen

சம்பந்தர் எப்பவோ போய் சேரவேண்டிய நபர். இன்னமும் ஏன் இருக்கிறார். துணிந்து கூறியவரை பாராட்டவிட்டாலும் பரவாயில்லை இப்படி முதுகில் குத்துவது தமிழன் என்று சொல்லி வாழ்வதிலும் பார்க்க மஹிந்தவுக்கு கு.... க..... வாழலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.