Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்

Featured Replies

  • தொடங்கியவர்

10678845_841301045915236_636335116256469

  • Replies 199
  • Views 22k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

10301176_842469252440396_958125191318300

  • தொடங்கியவர்

திருமணமான புதியதில் பெண்கள்

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்

அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.

இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.

6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.

9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து

=======================

1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்

வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்

போதும் புரியுதா??

3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.

ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்

இருக்கு.

7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!

8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க

முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்

கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து

=====================

1. காதில் வாங்குவதே இல்லை.

2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்

3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.

இல்லாட்டி போங்க.

4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்டபோது.

8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என்

பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

10352199_846786105342123_451599520092866

  • தொடங்கியவர்

போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். தாக்குதலைத் தீவிரப் படுத்த நினைத்தான் படைத் தளபதி. ஆனால் எதிரணியினரை விட இவரணியில் குறைந்த வீரர்களே இருந்தனர். தளபதிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும், போர் வீரர்களிடையே அச்சமும், சந்தேகமும் சூழ்ந்திருந்தது. அவர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது என்று யோசித்தான் தளபதி.

அனைவரையும் அழைத்தான். ” நண்பர்களே, நாம் போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். தாக்குதலைத் தீவிரப் படுத்தினால் வெற்றி நமதே. ஆனாலும் குறைந்த வீரர்களைக் கொண்டு எவ்வாறு வெற்றி பெறுவது என்ற சந்தேகம் நம்மிடையே சூழ்ந்துள்ளது. அதனால் கடவுளை வேண்டிக் கொண்டு இந்த நாணயத்தை சுண்டுகிறேன். தலை விழுந்தால் தாக்குதலைத் தொடரலாம். வெற்றி நமதே. பூ விழுந்தால் தோல்வி. நாம் சரணடைந்து விடலாம்” என்றான்.

”தலைவிதியை நாணயம் தீர்மானிக்கட்டும்“ என்றான்.

அனைவரும் ஆமோதித்தனர். கடவுளை வேண்டியவாறே சுண்டினான். விழுந்தது தலை. வீரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. தன்னம்பிக்கை பொங்க தாக்குதலைத் தொடர்ந்தனர். வெற்றி வாகை சூடினார்கள்.

போர் முடிந்ததும் சொன்னான் தளபதியின் உதவியாளன் “தலை விதியை யாராலும் மாற்ற முடியாது. நாணயம் காட்டியது சரியாக இருக்கிறது”. தளபதியும் சிரித்துக் கொண்டே சொன்னான் “சரியாகச் சொன்னாய்” என்றவாறே, நாணயத்தை அவனிடம் காட்டினான். ”நாணயத்தின் இருபக்கங்களும் தலை”

ஜென் சிறு கதை : நம்பிக்கை தான் வெற்றியைத் தருகிறது.

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கல்யாணம் பண்ணிப்பார்...

உச்சந்தலையைச்
சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்...
உலகமே உன்னை வெறித்துப்
பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையின் கொடூரம்
புரியும்..
உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்..
ஷாட்ஸ் பனியன்
அழுக்காகும்..
பழைய சாம்பார் கூட
அமிர்தமாகும்..
ஃபிரிட்ஜ் ,வாசிங்
மெசின், கிரைண்டர்,மிக்ச
ி கண்டுபிடித்தவன்
தெய்வமாவான்.
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும்
பீதி கொள்ளும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம்
துலக்குவாய்.. .
காத்திருந்தால். ...'வரட்டும்...
இன்னிக்கி வச்சிருக்கேன்'
என்பாய்...
வந்துவிட்டால்....
'வந்திட்டியா செல்லம்
போலாமா' என்பாய்....
வீட்டு வேலைக்காரி கூட
உன்னை மதிக்காது - ஆனால்
வீடே உன்
கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...
கார் வாங்கச்சொல்லி கட்டியவள்
வயிற்றில்
மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப்
பிடிக்க, வயிற்றுக்கும்
தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று உருளக்காண்பாய்.
..
இந்த மானம், இந்த வெக்கம் , இந்த
சூடு, இந்த சொரணை, எல்லாம்
கட்டிய
நாளோடு கழட்டி வைத்து விடுவது தான்
கொண்டவளை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்...
கல்யாணம் பண்ணிப்பார்...
இருதயம்
அடிக்கடி எதிர்த்துப் பேசத்
துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
மட்டுமே உனது குரல்
ஒலிக்கும்...
உன்
நரம்பே நாணேற்றி உனக்குள்ளே வெறியேற்றி விடும்...
எதிரில் எது கிடந்தாலும்
கோபத்தில்
உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்...
குருதிக்
கொதித்து எரிமலையாய்
வெடிக்கக்
காத்திருக்கும்... -
ஆனால் உதடுகள் மட்டும்
ஃபெவிகாலைவிட அழுத்தமாக
ஒட்டியிருக்கும்...
பிறகு.... "என்ன அங்க
சத்தம்..." என்கிற ஒத்த சவுண்டில்
சப்த
நாடியும் அடங்கிவிடும்...
கல்யாணம்
பண்ணிப்பார்...
சப்பை பிகர் கூட செட்டாக
விட்டாலும் , சாதி சனம் கூட
சட்டை செய்யா விட்டாலும்..
உறவுகள் கூட
உதவாக்கரை என்றாலும்....
செட்டான
ஒரு பிகரும் முதல் நாள்
நைட்டு லெட்டர்
எழுதிவைத்து ஓடிப்போனாலும்..
.
நீ நம்பிய
அவனோ அவளோ உன்னை நட்டாத்துல
விட்டுவிட்டு போனாலும
விழித்து பார்க்கையில் சரக்கடித்த
போதையில் தெருவில்
கிடந்தாலும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
மகாரௌரவம்,
கும்பிபாகம், காலசூத்திரம்,
அசிபத்ரவனம்,
அந்த கூபம், கிருமி போஜனம்
இதில்
ஏதேனும்
ஒன்று இங்கேயே நிச்சயம்
கல்யாணம் பண்ணிப்பார்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இயற்க்கை எங்கே
தென்னை ஓலை விசிறி எங்கே ?
பனையோலை விசிறி எங்கே ?
பல்லாங்குழி எங்கே ?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே ?
தெல்லு விளையாட்டு எங்கே ?
கோபி பிஸ் விளையாட்டு எங்கே ?
சாக்கு பந்தயம் எங்கே ?
கில்லி எங்கே ?
கும்மி எங்கே ?
கோலாட்டம் எங்கே ?
திருடன் போலீஸ் எங்கே ?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே ?
ஊனாங்கொடி ரெயில் எங்கே ?
கம்பர்கட் மிட்டாய் எங்கே ?
குச்சி மிட்டாய் எங்கே ?
குருவி ரொட்டி எங்கே ?
இஞ்சி மரப்பா எங்கே ?
கோலி குண்டு எங்கே ?
கோலி சோடா எங்கே ?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே ?
கரிப்பழம் எங்கே ?
கள்ளிப்பழம் எங்கே ?
இளுவான் எங்கே ?
எலந்தை பழம் எங்கே ?
சீம்பால் எங்கே ?
ரோசம் வளர்த்த கொங்க மாட்டுப்பால்
எங்கே?
பனம் பழம் எங்கே ?
சூரிப்பழம் எங்கே ?
இளுவான் எங்கே ?
பழைய சோறு எங்கே ?
நுங்கு வண்டி எங்கே ?
பூவரசன் பீப்பி எங்கே ?
கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே ?
நடைபழக்கிய நடை வண்டி எங்கே ?
அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே ?
பண்பு எங்கே ?
பாசம் எங்கே ?
நேசம் எங்கே ?
மரியாதை எங்கே ?
மருதாணி எங்கே ?
சாஸ்திரம் எங்கே ?
சம்பரதாயம் எங்கே ?
விரதங்கள் எங்கே ?
மாட்டு வண்டி எங்கே ?
கூட்டு வண்டி எங்கே ?
ஆழ உழுத எருதுகள் எங்கே ?
செக்கிழுத்த காளைகள் எங்கே ?
எருமைமாடு எங்கே ?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே ?
பொன் வண்டு எங்கே ?
சிட்டுக்குருவி எங்கே ?
குயில் பாட்டுபாடும் குயில் எங்க?
குரங்கு பெடல் எங்கே ?
அரிக்கேன் விளக்கு எங்கே?
விவசாயம் எங்கே ?
விளை நிலம் எங்கே ?
ஏர்கலப்பை எங்கே ?
மண் வெட்டி எங்கே ?
மண்புழு எங்கே ?
வெட்டுமண் சுமந்த பின்னல்
கூடை எங்கே ?
பனை ஓலை குடிசை எங்கே ?
தூக்கனாகுருவி கூடு எங்கே ?
குளங்களில் குளித்த கோவணங்கள்
எங்கே ?
அந்த குளங்களும் எங்கே ?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே ?
ஆட்டுக்கல் எங்கே ?
அம்மிக்கல் எங்கே ?
மோர் சிலுப்பி எங்கே ?
கால்கிலோ கடுக்கன் சுமந்த
காதுகள் எங்கே ?
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும்
பெரியவர்கள் எங்கே ?
வெத்திலை பாக்கு பரிசங்கள்
எங்கே ?
தோழிலும் இடுப்பிலும் சுமந்த
பருத்தி துண்டும்
எங்கே ?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும்
எங்கே ?
தாய்பாலை தரமாய் கொடுத்த
தாய்மையும் எங்கே ?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே ?
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள்
எங்கே?
இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பையும்
எங்கே ?
தாவணி அணிந்த இளசுகள் எங்கே ?
சுத்தமான நீரும் எங்கே ?
மாசு இல்லாத காற்று எங்கே ?
நஞ்சில்லாத காய்கறி எங்கே ?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே ?
எல்லாமையும் விட முன்னோர்கள்
வாழ்ந்த
முழு ஆயுள் நமக்கு எங்கே ?
இதற்க்கு பாமரனாலும்,
மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,
ஏன் கணினியாலும் கூட பதில்
சொல்ல முடியாது.
ஏனென்றால் இருக்கும்
நிம்மதியை இழந்து பணம்
எனும்
காகித்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
அதுசரி
அடுத்த
தலைமுறையை பற்றி சிந்திக்க
நமக்கு எங்கே நேரம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயங்கள் நிறைய இருக்கே நான் இன்றுதான் மீண்டும் வந்தேன். தொடருங்கள் யோகு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விசயங்கள் நிறைய இருக்கே நான் இன்றுதான் மீண்டும் வந்தேன். தொடருங்கள் யோகு :D

 

யோகு என்றால் யார்??? இணையததளம் மாறி வந்து வீட்டீர்கள் என நினைக்கின்றேன்!!!!!  :lol:  :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நாகப்பாம்பும் வஞ்சனையும்...

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர். (மூதுரை-25)

நாகப்பாம்பு தன்னிடம் நஞ்சு இருப்பதை அறிந்து புற்றில் ஒளிந்து வாழும்.நஞ்சு இல்லாத நீர்ப் பாம்போ அஞ்சாமல் எங்கும் திரியும்.

வஞ்சனை மிக்க உள்ளத்தினர் மறைத்துப் பேசுவர்.வஞ்சனையில்லா நெஞ்சத்தவரோ ஒளித்துப் பேசமாட்டார்.நீர்ப்பாம்புக்கு விஷமில்லாத தால்அது எங்கும் பயமின்றித் திரியும்.விஷமுள்ள நாகப்பாம்பு புற்றில் வசிக்கும். அதேபோல,உள்ளத்திலே கள்ளம் இல்லாதவர் வெளிப்படையாகப் பேசுவார். வஞ்சகர் ஒளித்துப் பேசுவார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயங்களைப் பதிவிடுகின்றீர்கள் .... தொடருங்கள் !  :)

  • தொடங்கியவர்

தெள்ளிய ஆலின் சிறு பழத்தோர் விதை

செம்மீன் சினையினும் நுண்ணிதே ஆயினும்

அண்ணல் யானை ஆட்பெரும்படையுடன்

மன்னருக்கிருக்க நிழலாகும்மே!!

தேம்படு பனையின் திரள் பழுத்தோர் விதை

வானுற ஓங்கி வளமுற வளரினும்

ஒருவருக்கிருக்க நிழலாகும்மா?

- வெற்றி வேற்கை

 

ஆலம் பழத்தின் விதை உருவத்தில் மீனின் சினை முட்டையை விட மிகமிக சிறியதாக இருந்தாலும்கூட அந்தவிதை மண்ணில் ஊன்றி பின்னர் வளமுற வளர்ந்துவிடின் மன்னரது காலாட்படை, குதிரைப் படை,யானைப்படை,போன்ற எண்ணற்ற நபர்களுக்கு நிழல் தந்து இளைப்பாற இடம் தரும் அளவிற்கு மாபெரும் ஆலமரமாக வளர்ந்து உதவிசெய்கிறது.

அதே நேரம் பனைமரத்தின் விதை உருவத்தில் மிக பெரியதாக இருந்தாலும் கூட பனைமரமாக வளர்ந்துவிடும்போது அதன் நிழலில் ஒருவர்கூட இளைப்பாற முடியாத நிலைதான் ஏற்படுகிறது.

 

  • தொடங்கியவர்

இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகள்........

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

 

  • தொடங்கியவர்

நவீன தொழில்நுட்ப காதல்..!

பெண் அப்பா நான் லவ் பண்றேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்...

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...

WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ......

WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறம் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...

அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...

அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...

ONLINEல ஜாலியா இருங்க...

E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...

G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...

எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....

பெண் : ???????????

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

கன்னியாகுமரி கடற்கரையில் நின்று கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு துறவி....

கரையில் இருந்து சற்று தொலைவில் கடலுக்குள் ஒரு பாறை இருந்தது. அலைகள் மோதும் அந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்ய அந்த துறவியின் மனம் துள்ளியது...

அருகிலிருந்த மீனவர்களிடம் படகில் கொண்டுவந்து அந்த பாறையில் விடுமாறு உதவி கேட்டார் அந்த துறவி...

மீனவர்கள் ஒரு ரூபாய் கொடுங்கள் அங்கு கொண்டுவந்து விடுகிறோம் என்றனர்.

துறவியிடம் ஒரு ரூபாய் கூட இல்லை...
உடனே கடலில் குதித்து நீந்திச் சென்று அந்த பாறையை அடைந்து தியானத்தில் மூழ்கினார்...

அந்த துறவி வேறு யாருமல்ல...
39 வயதே வாழ்ந்திருந்தாலும் இவ்வையகம் உள்ளவரை தன்னை இவ்வுலகம் மறக்கமுடியாதபடி தன் பெயரை சரித்திரத்தின் அழியாத கல்வெட்டுகளில் பொன் எழுத்துக்களால் பொறித்துவிட்டுச் சென்ற மகா யோகி விவேகானந்தர் தான்....
முதன்முதலில் இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உலக அரங்கிற்கு எடுத்துச்சென்று பெருமை அவரையே சேரும்.

# அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்ப்பது தவறு அல்ல...
ஆனால் அந்த உதவி கிடைக்காத போதும் தான் நினைத்ததை சாதிப்பவர்கள் தான் வரலாறாய் வாழ முடியும்.

 

  • தொடங்கியவர்

கம்பரும் சோழ மன்னனும்...

சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் மனவேறுபாடு இருந்தது என்பதைப் பல்வேறு கதைகள் சுட்டுகின்றன. எடுத்துக்காட்டாக,

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ 

உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை 

விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ 

குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு

மேலே சுட்டி உள்ள பாடல் சோழ மன்னனை வெறுத்துக் கம்பர் அந்த நாட்டை விட்டு நீங்கும்போது பாடியதாகத் தெரிகிறது. சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. உடனே கம்பர், “மன்னவன் நீ ஒருவன் தானா? நீ ஆதரிப்பாய் என்று எண்ணியா நான் தமிழைக் கற்றேன்? என்னை ஆதரிக்காத மன்னர் உலகில் உண்டோ? குரங்கை ஏற்றுக்கொள்ளாத கிளையைப் பார்த்தது உண்டா? அதுபோல என்னை ஆதரிக்காதவர்களைப் பார்த்தது உண்டா?” என்று கூறி நீங்கினார்.

 

  • தொடங்கியவர்

யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

  • தொடங்கியவர்

படித்ததில் பிடித்தது: பிறந்த நாளை விவரிக்கவும் என மேதகு.அப்துல்கலாம் அவர்களிடம் BBC யில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன விளக்கம்...
நம் வாழ்கையில் அன்று ஒரு நாள் தான், நாம் அழும் பொது நம் அன்னை சிரித்தாள்...

  • தொடங்கியவர்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப்பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த் தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது. 

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது: 

“நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழு ந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.” நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு அவசரமாக 50 டாலர் தேவைப்பட்டது அவனும் யார் யாரிடமோ கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை கடைசியாக நொந்து போய் கடவுளுக்கு கடிதம் எழுதினான் கடவுளே எனக்கு அவசரமாக 50 டாலர்கள் தேவை அனுப்பி வைக்கவும்ன்னு எழுதி அதில் பெறுநர் முகவரியாக கடவுள் அமெரிக்கா ன்னு எழுதி இருந்தான் இந்த வேடிக்கையான கடிதம் ஒபாமாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது ஒபாமாவும் சிறுவனின் நம்பிக்கை வீணடிக்க விரும்பாமல் பணத்தை அனுப்ப முடிவு செய்தார் ஆனாலும் ஒரு சிறுவனுக்கு 50 டாலர்கள் மிக அதிகம் என நினைத்து தனது சொந்த பணத்திலிருந்து 30 டாலர் பணத்தை மட்டும் அந்த சிறுவனின் முகவரிக்கு அனுப்பினார் அதில் அனுப்புநர் முகவரியாக ஒபாமா வெள்ளை மாளிகை அமெரிக்கா ன்னு எழுதி அனுப்பினார் இரண்டு நாட்களில் அதே சிறுவனிடமிருந்து கடவுள் முகவரிக்கு பதில் கடிதம் வந்தது எனது கஷ்டத்திக்கு பணம் குடுத்த கடவுளுக்கு மிக்க நன்றி ஆனால் இனிமேல் எனக்கு பணம் அனுப்பும் போது நேரடியாக எனது முகவரிக்கு அனுப்பவும் ஏன் என்றால் நீங்கள் ஒபாமா மூலமாக அனுப்பினால் அவர் பாதி பணத்தை ஆட்டையை போட்டுவிடுகிறார் அதனால் தான் சொல்கிறேன் என்று எழுதியிருந்தது.....

என்னம்மா ஒபாமா .... இப்படி பண்றீங்களேமா ???

 

படித்ததில் பிடித்தது: பிறந்த நாளை விவரிக்கவும் என மேதகு.அப்துல்கலாம் அவர்களிடம் BBC யில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன விளக்கம்...

நம் வாழ்கையில் அன்று ஒரு நாள் தான், நாம் அழும் பொது நம் அன்னை சிரித்தாள்...

 

அருமை!

  • தொடங்கியவர்

இந்த ஐந்தையும் முடிஞ்சா டிரை பண்ணுங்க

1.உங்களுக்கு உண்மையா இருங்கள்

2.எந்த ஏக்கத்தையும் மிச்சம் வைக்காதீங்க

3.அன்பின் வடிவமெடுங்கள்

4.இந்த நொடி இந்த நிமிடம் வாழுங்கள்

5.பெறுவதை காட்டிலும் அதிகமா கொடுங்கள்

  • தொடங்கியவர்

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து...

“பந்திக்கு முந்து படைக்குப் பிந்து“ என்பது பழமொழியா? விடுகதையா? என்று முடிவு செய்ய முடியவில்லை. ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்க என்று போர்க்களத்திற்கு அனுப்பிய தாயைப் புறநானூறு பாடுகிறது. இந்த மண்ணில் "பந்திக்கு முந்து படைக்குப் பிந்து' என்பது பழமொழியாக வந்திருக்க முடியுமா? இது "பழமொழி இல்லை விடுகதை' என்று சிலர் சமாதானம் சொல்கிறார்கள். வலது கை, சாப்பாடு என்றால் முன்னே வரும்; சண்டை என்றால் அம்பை நாணில் வைத்து வில்லை வளைத்து இழுத்துவிட பின்பக்கமாகப் போகும் என்று விடுகதைக்குப் பதில் சொல்கிறார்கள்.

சாப்பாடு, சண்டை கிடக்கட்டும். அன்றாட வாழ்க்கையில் முந்துகிறவர்களைக் கவனித்துப் பாருங்கள். சாலைகளில் முந்துகிறார்கள்; வரிசையில் முந்துகிறார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதாய் நினைத்து வரிசையிலும் சாலைகளிலும் முந்துகிறார்கள்.

முந்துவது வேறு; முன்னேறுவது வேறு. பல நாடுகளில் சாலைகளில் வாகனங்களில் செல்வோர் முன்னே செல்லும் வாகனத்தைக் குறிப்பிட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் மீறி மேற்செல்லக்கூடாது என்று தடை விதித்திருக்கிறார்கள்.

எதிரே வருகிறவர்கள் நம்மைக் கடந்து நமக்குப் பின்னே செல்கிறார்கள்; நம் பின்னே வருகிறவர்கள் நம்மைத் தாண்டி நமக்கு முன்னே போகிறார்கள். நம்மைத் தாண்டி நமக்கு முன்னே போகிறவர்கள் நம்மைத் தாண்டிக் குதித்துச் செல்வதில்லை. நாம் போகிற திசையிலேயே நம்மை விட விரைவாகப் போகிறார்கள். நமது வழிக்குப் பக்கத்தில் நுழைந்து நமது வழியில் குறுக்கீடு செய்தும் போகிறார்கள்.

தனிமனிதர் என்று மட்டுமில்லை, நாடுகளும் அப்படித்தான் இன்னொரு நாட்டை ஓவர்டேக் செய்கின்றன.

- இரசித்தது..முந்துவது வேறு; முன்னேறுவது வேறு..

 

  • தொடங்கியவர்

அம்மா  மடியில் உறங்கும் குழந்தைக்கு  மட்டுமே ஆயிரம்  அடுக்கு  பாதுகாப்பு .

 

 

  • தொடங்கியவர்

ஒரு தம்பதி நல்ல ஜாலியான மூடுல பேசிக்கிறாங்க

மனைவி : நீங்க என்ன செய்வீங்க நான் இறந்துட்டா? திரும்ப கல்யாணம் செய்வீங்களா?

கணவன்: சே சே மாட்டேன்

மனைவி: ஏன், மாட்டேன்! கல்யாண வாழ்கையை விரும்பமாட்டீங்களா?

கணவன்: ம்ம்ம்... விரும்புவேன்

மனைவி: பின்ன ஏன், இன்னும் ஒரு கல்யாணம் செய்ய கூடாது?

கணவன்: சரி சரி, செஞ்சுகிறேன்.

மனைவி: செஞ்சுப்பீங்களா? (கோவப்பார்வை)

மனைவி: நீங்க நம்ம வீட்டுல தங்குவீங்களா?

கணவன்: கண்டிப்பா, இது ரெம்ப நல்ல வீடு இல்லயா...!

மனைவி: ம்ம்ம்... நீங்க அவளோட இந்த பெட்ரூம்மை யூஸ் பன்னுவீங்களா?

கணவன்: அப்ப, நாங்க போய் எங்கே தூங்குறது?

மனைவி: என்னோட படத்தை எடுத்துட்டு அவ படத்தை மாட்டி விடுவீங்களா?

கணவன்: அது செஞ்சுதானே ஆகனும்

மனைவி: என்னோட நகைகள் எல்லாம் அவகிட்ட கொடுப்பீங்களா?

கணவன்: சே சே, அவளோடதுதான் விரும்புவா.

மனைவி: ஓ, என்னோட காரை அவள ஓட்ட அலவ் பன்னூவீங்களா?

கணவன்: ஆமா ஆமா, அது புதுசுதானே...

மனைவி: எனக்கு டிரைவிங் கத்துகொடுத்தது போல, அவளுக்கும் கத்து கொடுப்பீங்களா?

கணவன்: இல்ல இல்ல, அவளுக்கு கார் ஓட்ட தெரியும்.

மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்...என்ன்னாதூஊஊஉ

கணவன்: அய்யய்யோ தெறியாம வாய விட்டுட்டனோ?

அப்புறம் என்ன ஸ்டார்ட் மியூசிக்... அடிதான்!

 

  • தொடங்கியவர்

ஒரு நாள் ISIS தீவிரவாதிகள் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழி மறைத்தனர்.

ISIS தீவிரவாதி - நீ எந்த மதம்?

அந்த மனிதர் - நாங்கள் முஸ்லிம் (அவர்கள் உண்மையில் கிருஸ்டின்)

ISIS தீவிரவாதி - அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்களாம்.

(காரில் இருந்தவரின் மனைவி நடுங்கிவிட்டாள்)

ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி பைபிளில் இருந்து சில வரிகளை கூறினார்.

ISIS தீவிரவாதி - சரியாக கூறினாய் நீ செல்லலாம்.

கார் சிறிது தூரம் நகர்ந்ததும் அவரின் மனைவி "எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள்,

ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது?"

அவர் - அவர்களுக்கு குரான் தெரியாது.

மனைவி - அது எப்படி உங்களுக்கு தெரியும்.

அவர் சிரித்துக்கொண்டே "அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்"

எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை.

தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது, அவர்கள் மனிதர்களும் கிடையாது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.