Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி எழுச்சி

Featured Replies

கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டதில் கலந்து கொண்டவர் என்கிற முறையிலும் முதல் எதிரியை மண்ணை கவ்வச் செய்தவர் என்கிற முறையிலும் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது சகாக்களுக்கு வாழ்துக்கள்.

1463039_10151716984997202_1114915997_n.jந்த் கேஜ்ரிவால

 

ஆம் அத்மி கட்சியின் திரு அரவிந்த் கேஜ்ரிவால்

வெற்றிக்கு சில காரணங்கள் .....

1.கார்கில் போரிலும் , மும்பை 26-11-2008 ஐ எஸ் ஐ

ரவுடிகளின் தாக்குதலிலும் , நாட்டைக் காப்பாற்ற

போராடி, தன் காதுகளின் கேட்கும் திறனை இழந்த ,

முன்னாள் என் எஸ் ஜி கமாண்டோ திரு சுரீந்தர்

சிங்கை டெல்லி கண்டோன்மென்ட் தொகுதியில் வேட்பாளராக

நிறுத்தி , பெரிய அளவில் மக்கள் ஆதரவை பெற்றார்.

2. ஒரு வசதியும் இல்லாத ராக்கி பிர்லா என்ற பெண்

பத்திரிக்கையாளர ை மங்கோல்புரி தொகுதியில்

தன்னுடைய ஆம் ஆத்மி வேட்பாளராக்கி , வெற்றியை பெறச்

செய்தார்.

3. திரிலோக்புரி தொகுதியில் ராஜு திங்கன்என்ற CISF

– முன்னாள் வீரரை வேட்பாளராகி வென்றார்.

4.சீமாபுரி தொகுதியில் அறிவிக்கப்பட்ட ஆம்

ஆத்மி பெண் வேட்பாளர் இறந்ததும், இறந்த வேட்பாளரின்

வேலை இல்லாத , சொந்தத்தில் ஒரே ஒரு தொலைபேசி கூட

இல்லாத திரு தர்மேந்திர சிங் என்ற

அவரது சகோதரரை நிறுத்தி வெற்றி பெற்றார்.

5.பத்பர்கஞ் என்ற தொகுதியில் , மனீஷ் சிசொதியா என்ற

முன்னாள் பத்திரிக்கையாளர ை நிறுத்தி ,

வெற்றி பெற்றார்.

அவர் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள்

பொதுமக்களை கவரக்கூடியவர்கள ாகவும், இவர்

தயாரித்துள்ள அணி வெற்றிபெற்றால், நிச்சயம் நல்ல

மாறுதலை உருவாக்குவார் என்ற

நம்பிக்கையை உருவாக்கியது. அதுவே ஆம் ஆத்மியின்

வெற்றிக்கு காரணம். மேலும் காங்கிரசின்

ஓட்டுவங்கியை காலிசெய்துவிட்ட ார்.

 

ஜெரிவால் ஒரு நரி வால் என்று சொல்லுறாங்கள் அண்ணா ஹசரா விடம் இருந்து பிரித்து அவரை வெளியில் எடுத்தது காங்கிரஸ் தான் பொறுமையா அடுத்த அவரின் நகர்வை பார்ப்பம் :rolleyes:

ஜெரிவால் ஒரு நரி வால் என்று சொல்லுறாங்கள் அண்ணா ஹசரா விடம் இருந்து பிரித்து அவரை வெளியில் எடுத்தது காங்கிரஸ் தான் பொறுமையா அடுத்த அவரின் நகர்வை பார்ப்பம் :rolleyes:

 

பிஜேபி  ஆளுங்க  வேணும்னா  அப்படி  சொல்லுவாங்க , காங்கிரஸ்  எதிர்ப்பு  வாக்குகள்  அவர்களுக்கு  கிடைக்காமல்  போய்விடும் .

இன்று ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா இவர்களில் யார் ஆதரவு தெரிவித்தாலும் இன்னும் ஆறு மாதத்தில் டெல்லியில் மீண்டும் தேர்தல் வருவது உறுதி. பொதுத் தேர்தல் அறிவித்தவுடன் நிச்சயம் இவர்கள் ஆதரவை விலக்கிக் கொள்வார்கள்.

எங்களைத் தவிர யாரும் நிலையான ஆட்சி அமைக்க முடியாதென்று கூறி அந்தத் தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும்.

பாரதிய ஜனதாவோ, மக்களின் நாடாளுமன்றத் தேர்தல் மனநிலையை பயன்படுத்தி தனிப்பெரும்பான்மை பெற முயற்சிக்கும்....

மேலும், ஆறு மாதத்தில் இவர்கள் என்ன செய்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டைக் கூட ஆம் ஆத்மியின் மேல் இவர்கள் இருவரும் வைக்கலாம். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்குமான மாற்று யாருமே கிடையாது என்ற நிலையை உருவாக்க முயலுவார்கள்.

இந்த சாத்தியங்களை கருத்தில் கொண்டு இவர்கள் இருவரின் ஆதரவையும் ஏற்காமல் இருப்பது ஆம் ஆத்மியின் வளர்ச்சிக்கே உதவும்.

இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், வாய்ப்பு கொடுத்தும் ஆட்சி அமைக்க மறுத்துவிட்டனர், பார்த்தீர்களா இவர்களின் லட்சணத்தை என்றும் இந்த இரு கட்சிகளும் ஆம் ஆத்மியின் குற்றங்களை சுமத்தக் கூடும், முன்னால முட்டும் பின்னால போன உதைக்கும், பாவம்யா கெஜ்ரிவால் !

 

பேஸ்புக் .

  • கருத்துக்கள உறவுகள்

வால்பையனை ஆட்சி அமைக்க கூப்பிட்டால் இரண்டு வருடங்கள் நிபந்தனையற்ற ஆதரவு கிடைத்தால் மட்டுமே செய்வேன் என்று சொல்லலாம்.. சரியென்று ஒப்பந்தம் போட்டால் ஒப்பந்த நகலை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு வழங்கிவிட வேண்டும்.. :rolleyes:

ப.சிதம்பரம் மேல shoe எறிஞ்ச நபர் (Jarnail Singh) ஆம்ஆத்மி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

 

1426372_468303123286299_1722616670_n.jpg

 

 

Edited by VENDAN

1509072_768318166516369_1352894563_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட்டது தனது மாநில மக்களை காப்பாற்ற ...அண்ணன் சீமான் போராடுவதோ ஈழம் அமைக்க

அண்ணன் சீமான் வேண்டும் என்றால் யாழ்பாணத்தில் வெல்லலாம்

சார்.. கண்ணைத் திறவுங்கள்..! காட்சிகள் தெரியட்டும்..!! :D பாகிஸ்தானில் இந்துக்களுக்கு கொடுமை பற்றி பேசி வாக்கு வாங்கியிருக்கினம் வட இந்திய கட்சிகள்..

சார்.. கண்ணைத் திறவுங்கள்..! காட்சிகள் தெரியட்டும்..!! :D பாகிஸ்தானில் இந்துக்களுக்கு கொடுமை பற்றி பேசி வாக்கு வாங்கியிருக்கினம் வட இந்திய கட்சிகள்..

 

இசை நீங்க அவரின் கட்சியின் கொள்கைகளை இங்கு பதியலாமே....

 

அவரின் கொள்கையில் முதலாவது பாகிஸ்தானில் இந்துகளுக்கு தனி நாடா? :lol:

ஆட்சி அமைப்பது பற்றி விவாதிக்க வருமாறு துணை ஆளுநர் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்புவிடுத்துள்ளார், ஆட்சியமைக்க உரிமை கொள்ள போவதில்லை என பாஜக அறிவிப்பு...

இசை நீங்க அவரின் கட்சியின் கொள்கைகளை இங்கு பதியலாமே....

அவரின் கொள்கையில் முதலாவது பாகிஸ்தானில் இந்துகளுக்கு தனி நாடா? :lol:

உங்கள் கட்சியில் நடப்பது போல் கள்ளகூட்டுக்கு சகோதரத்துவ கொலை செய்யும் கொள்கை அவர்களிடம் இல்லை.

சொந்தமக்களை போட்டுத்தள்ளி எதிரிக்கு அடிவருடும் கொள்கை யாழ் செஞ்சேனை கட்சியில் நடக்கிறது. ஒரு தடவை ஸ்ரீதர் தியேட்டருக்கு போய் கொள்கை பற்றி கேளுங்கள்.

வெள்ளைவானில் கூட்டிக்கொண்டு போய் காட்டுவார்கள்.

பதிவு செய்யப் பட வேண்டிய ஒரு நிகழ்வு...

சில ஆண்டுகளாகவே என் மனதில் இருந்து வந்ததும் அண்மைய காலங்களில் உறுதிப்பட்டதுமான ஒரு சிந்தனை... இப்போது சற்று வேறு வடிவில் வந்து வெற்றி பெற்றது குறித்து.....

மக்கள் பல காலமாக மாற்றத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களைக் காத்து ரட்சிக்க ஒரு ‘ரட்சகன்’ வர மாட்டானா என்று காத்துக்கிடக்கிறார்கள்... அவர்களுக்கு அப்படி ஒரு சரியான ‘மாற்று’க் கிடைக்காததாலேயே, இருப்பதில் எந்தக் கொள்ளி குறைவாகச் சுடும் என்று பார்த்து எடுத்து சொறிந்து சுட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் குறைவான கொள்ளி, அதிகமான கொள்ளியைப் பார்த்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நக்கலாகச் சிரிப்பதெல்லாம் நாம் பார்த்த காட்சிகள்தாம்...

எப்போதாவது ‘விடிவெள்ளி’ போல யாராவது ‘ரட்சகனாக’ உதிப்பார்கள், மக்களும் ‘வந்தாச்சுப்பா ரட்சகன்’ என்று தீபாவளி கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். அவர்கள் கொண்டாட்டம் தீரும் முன்பே நம் ‘ரட்சகர்’கள் அவர்களைத் தீர்த்து விடுவார்கள்..... கொள்ளி எண்ணிக்கை ஒன்று கூடிப்போயிருக்கும்... மக்களும் ‘அதுதான் தெரிஞ்ச கதையாச்சே’ என்று மீண்டும் வானத்தைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்... நாம் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல முறை பார்த்த காட்சிகள்தாம்...

இப்போது தில்லியில் அப்படியொரு ‘ரட்சகன்’ தோன்றியிருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு பெரிய ‘ஜே’ போடாவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது. ஊழலுக்கு எதிராகவும் அறம் சார்ந்த அரசியலை முன்வைத்தும் நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை ஆயுதமாக்கிப் போராராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆடி வென்றிருக்கிறார். ஆரத்தி எடுத்து வரவேற்போம்.

எத்தனை இயக்கங்கள் புதிதாக வந்தாலும் வெகு மக்கள் ஆதரவு கிடைக்காவிட்டால் தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாகி விடுகின்றன. அது மட்டுமில்லை, கடிக்கவும் ஆரம்பித்து விடுகின்றன. வெகுமக்கள் ஆதரவு வேண்டுமெனில் ‘ரட்சகன்’ நேர்மையானவன், நல்ல்ல்லவன், ஒழுக்கமானவன் என்று மக்கள் நம்ப வேண்டும். இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் மக்கள் முன் போய் நிற்க முடியும். அன்னாஹசாரேயை மக்கள் சும்மா ‘லுலுவாய்’க்கெல்லாம் ஏற்கவில்லை. பெரியவர் உண்மையிலேயே ‘பெரியவர்’ என்று நம்பிக்கை வந்ததாலேயே அத்தனை பெரிய கூட்டம் சேர்ந்தது அவருக்கு... அவர் தோற்றமதிப்பின் (image) நிழலாக வளர்ந்ததாலேயே அரவிந்துக்கு இந்த ‘வெகு’மக்கள் நம்பிக்கை சாத்தியமாயிற்று.. அதை சிதற விடாமல் அரசியல் கட்சியாக வளர்த்தெடுத்து விடாப்பிடியாகப் போராடி, பழம் தின்று கொட்டை போட்ட இரண்டு வௌவால்களை வீழ்த்தியது மிகப் பெரும் சாதனையே !.

இவர் வளர்ச்சியும் வெற்றியும் நமக்குப் பாடங்கள். கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்போம். அதிகாரம் வந்ததும் இவரும் வழக்கமான அரசியல்வாதியாகி விடாமல் இருப்பாரேயானால் இந்தியா முழுமைக்குமான ‘மாதிரி நாயகன்’ ஆக இருப்பார். ஆட்சி அமைக்கக் குதிரை பேரத்தில் இறங்காமல் எதிர்க்கட்சியாகவும், அதுவும் முடியவில்லையென்றால் மறுதேர்தல்தான் என்றும் நிலை எடுத்து முதல் ‘சிக்சர்’ அடித்து விட்டார். இனியும் ‘ரன் அவுட்’ ஆகாமல் ‘சதம்’ எடுக்க வேண்டும் என்று இந்தியாவின் ஒவ்வொரு சாதாரணக் குடிமகனும் வேண்டிக் கொள்கிறார்....

இந்த அரசியல் அணுகுமுறை மாற்றம் தான் நான் சில காலமாகச் சிந்தித்து வந்ததும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதும்..... இனி இதற்குத்தான் எதிர்காலம்.... இதை முன்வைக்காமல் வழக்கமான அரசியல்தான் கதி என்று இருப்பவர்களால் எந்தப் பலனும் இல்லை, அவர்கள் பின்னால் அலைகிறவர்களுக்கும் மோட்சம் இல்லை....

தேவை நமக்கொரு துடைப்பம் .....!..... அது வரும்வரை மற்றவற்றிற்கு நம் கதவை ‘அடைப்பம்’....

 

கவிஞர் தாமரை

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

1509072_768318166516369_1352894563_n.jpg

 

(facebook)

 

காலச் சக்கரம் என்பது, உருண்டோடிக் கொண்டே.... இருக்கும்.

அது, ஒரு இடத்தில்... இருக்கும், என்று நினைக்கும்... அரசியல் வாதிகளுக்கு நல்ல பாடம்.

வ‌ர‌ப்போகும், இந்திய‌ நாடாளும‌ன்ற‌த் தேர்த‌லிலும்... காங்கிர‌சுக்கு ந‌ல்ல‌ பாட‌ம் புக‌ட்ட‌ வேண்டும்.

த‌மிழ்நாட்டில்... காங்கிர‌சுக்கு, பாட‌ம் புக‌ட்ட‌ சீமான் தான்.. ச‌ரியான‌ ஆள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.