Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில், அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு 17.12.2013 அன்று.

Featured Replies

ஒரு போராட்டம் எதிர்பாராத விதமாக தோற்றுப்போகிற போது பேராடும் தரப்பு எதிர்ப்பு அரசியலை தற்காலிக ஒய்வு நிலைக்கு கொண்டு வருவதும் இந்த காலகட்டத்தில் தன்னுடைய இயங்கு தளத்தில் இருக்கக் கூடிய மிதவாத சக்திகளின் சமரச அரசியலை அனுமதிப்பதும் உலகின் பல்வேறு விடுதலைப் பேராட்டகளங்களிலே நடந்திருக்கிறது.

அதேநேரம் ஒரு போராட்டத்தை ஒடுக்கி வெற்றிகொள்ளும் அடக்குமுறையாளர்கள் எப்போதும் தம்மிடம் சரணடைந்த அல்லது விலை போன பேரிடும் தரப்பினர் சிலரை திரை மறைவில் முன்நிறுத்தி தீவிர எதிர்ப்பரசியல் ஒன்றை உருவாக்கப் போவதான மாயத் தோற்றம் ஒன்றை ஏற்படுத்துவர்கள்.

 

விளக்கில் சென்று விழும் விட்டில் பூச்சிகளைப் போல இந்த மாய எதிர்ப்பரசியலை நம்பி தங்களை இனங்காட்ட முற்படும் உண்மையான போராளிகளை ஆக்கிரப்பாளர்கள் இனங்கண்டு அழித்தொழிப்பார்கள்.

இவ்வாறான தந்திரோபாயம் ஏற்கனவே பிலிப்பைன்ஸ் மலேசியா இந்தோனிசியா எல்சல்வடோர் சிலி முதலான பல்வேறு நாடுகளில் ஆக்கிரமிப்பாளர்களால் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.

நமது விடுதலைப் போராட்டத்திலும் கேபி கருணா பிள்ளையான டக்ளஸ் முதலானவர்களை வைத்து சரணாகதி அரசியலை ஊக்குவிக்கும் சிறீலங்கா அரசு திரைமறையில் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவை தடுப்பதற்கும் உண்மையான எதிர்ப்பரசியல் உயர் வீச்சுடன் எதிர்காலத்தில் உருவாகமல் தடுப்பதற்கும் தானே போலி எதிர்பரசியல் உன்றை உருவாக்கி நகர்த்தி வருகிறது.

 

புலிகள் கூட்டமைப்பின் திரை மறைவில் இருப்பதாகவும், திரும்பி வந்து போராட்ட போவதாகவும் கூறி  கூட்டமைப்புக்கு பாடை கட்டுகிறார். மேற்கு நாடுகளை ஓட்டிக்கலைக்கலாம் என்று கனவு காண்கிறார்.  ஏகாதிபத்தியத்தை விமர்ச்சிக்கும் நேரம் கம்யூனிசத்க்கும் வக்காலத்து வாங்கவில்லை. மன்னர் ஆட்சி முறைத்தான் இவர்களினது வழி முறை. 

  • Replies 100
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்கு ஒரு கொளகை இருக்கு என்றது உங்களுக்கு விளங்காது.  ஆனால் வாக்கு போடும் மக்கள் அப்படி அல்ல யார் கூட்டமைப்பு யார் கூட்டு முன்னணி என்று விளங்கித்தான் வாக்கு போடுவார்கள். அவர்களுக்கு விளக்கம் கூட.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" தமிழ் கூட்டுடைப்பின் நிலை இதான் இதை விட்டு நீங்கள் எத்தினை பக்கம் கூட்டைமைப்பை நியாயபடுத்தினாலும் காரியத்துக்கு ஆவாது .

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" தமிழ் கூட்டுடைப்பின் நிலை இதான் இதை விட்டு நீங்கள் எத்தினை பக்கம் கூட்டைமைப்பை நியாயபடுத்தினாலும் காரியத்துக்கு ஆவாது .

என்னுடைய நியாயத்திற்கு மட்டும்தான் உங்களின் பதில். மக்களின் வாக்கு கூட்டமைப்பின் நியாயத்திற்குதான் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நியாயத்திற்கு மட்டும்தான் உங்களின் பதில். மக்களின் வாக்கு கூட்டமைப்பின் நியாயத்திற்குதான் போகிறது.

தேடி வரும் சந்தர்ப்பங்களை சம்பந்தன் பிறங் கையால் தட்டி விட்டு யசூகியுடன் பாய்ந்தால் என்ன முருக்கமரத்தில் ஏறினால் என்ன

  • தொடங்கியவர்

கமருனின் பயணம் கோவில் திருவிழாவில் சென்று தேங்காய் அடிக்கும் விவகாரம் அல்ல. இது வரையில் இலங்கையில் நடக்காத ஒரு பெரிய விஜயம். அனந்தி கூட்டமைப்பில் புதிய உறுப்பினர். ஆரப்பாட்டம் ஒன்று நடை பெறப்போவதாக கேள்விப்பட்டால் உடனே அதில் போய் நின்று கொடி பிடிக்க முடியாது. கட்சியின் பழைய உறுப்பினர்களுடன் அது பற்றி விவாதித்திருக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக கட்சியின் நிலைப்பாட்டை அறிந்திருக்க வேண்டும்.  தான் தனி அறிக்கை தயார் செய்த போது அது கட்சியின் நிலைப்பாட்டை பிரதி பலிக்கிறதா என்றதை பற்றி தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அனந்தியின் த அறிக்கையை தமக்கு தரவில்லை என்று உடனேயே சுமந்திரன் குற்றம் சாட்டி யிருந்தார். தனக்கும் விக்கினேஸ்வரனுக்கு மக்கள் ஒரே ஆதரவு ததே தருகிறார்கள் என்றதை வைத்து விக்கினேஸ்வரனுக்கு கிடைக்கும் உள் அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லையே என்று நடந்து கொள்ளக் கூடாது.

 

ஆர்ப்பாட்டம் சனல் -4 சந்திக்க போனதாக கூறுவது வெறும் அபத்தம். அதில் எந்த உண்மையும் இல்லை. மேலும் சனல்-4 சந்திக்கதான் அனந்தி அங்கு போனவாயின் அது போல பிஜயோசனமில்லாத அலுவல் ஒன்றும் இல்லை. சனெல்- 4 நமக்காக போராடும் அமைப்பு. அது தானாக நமக்கு என்ன நடக்கிறது என்று தேட முயலும் போது அதனிடம் தொடர்புகொள்ள ஏன் பொலிஸ் தடைகளை உடைப்பான். நீங்கள் முன்னர் ஒரு கருத்தில் கேட்டது மாதிரியே நடந்தவற்றை சும்மா சொல்லிவிட்டால் சனல்-4  கேட்டிருக்காதா?

 

 

ஆர்ப்பாட்டம் முத்தவெளியில் இறங்கிய (நியூசிலாந்து என்று நினைக்கிறேன்) பிரதிந்திகளை கமருன் என்று சுற்றி வளைத்தது. பிழையை கண்டு பிடித்தவுடன் வாசிக சாலையை நோக்கிச் சென்றது. அங்கே தடுக்கப்பட பொலிசுடன் ரகளைப்பட நேர்ந்தது. ஆர்ப்பாட்டத்தை பற்றி பயணத்தை ஒழுங்கு செய்த கூட்டமைப்புக்கு தெரிந்த்திருக்கவில்லை. இந்த இரகசிய ஒழுங்கை கூட்டமைப்பில் வைத்து விவாதிக்க தவறியிருந்தால் அது அனந்தியில் பிழை. அனந்தி கூட்டமைப்புக்கு எதிரிகளை காட்டிக்கொடுத்திருக்க கூடிய நல்ல ஒரு சந்தர்ப்பத்தை எதிரிகளின் லாபத்துக்கு போகவிட்டு விட்டார். 

 

வாசிக சாலையில் அரச ஆர்ப்பாட்டத்தை கமருனுக்கு காட்டத்தான் கூட்டமைப்பு தயாராக இருந்தது. ஆனால் அரச கூட்டம் நாகரீகமாக திட்டமிட்ட படி தமது கமருனுக்கான எதிர்ப்பை தெரிவித்தார்கள். நமது மக்கள் நம் தலைவர்களை கமருன் சந்தித்த போது அவர்களை தாக்க முற்பட்டு, அவர்கள் தேர்தல் ந்டந்து முடிந்த ஒரு மாதத்திலேயே மக்களின் ஆதரவை இழந்து போய்விட்டதாக காட்ட முற்பட்டு அவர்களை ஓடுகாலிகளாக மாற்றினார்கள். இதைத்தான் யானை தன் தலையில் மண அள்ளிபோடுவது எனபது. 

 

அது எல்லாம் நடந்து முடிந்தவை. தவறின் விளக்கம் அதிகரிக்கும் போது பிழைகளை திருத்தலாம். ஆனால் நாங்கள் சப்பிகளாக இருந்து விடக்கூடாது.  இப்போது நமக்கு மிக மிக முக்கியம் மாவையின் பேச்சு. அதை ஒரு கடதாயில் அச்சுப்பிரதி பண்ணிச் சென்று அனந்தியிடம் விள்க்கம் கேளுங்கள். நம்பிக்கையாக அவர் தன்னை அதிலிருந்து தள்ளிவைக்காமல் விளக்கம் கூறி எப்படி எல்லோரும் ஒற்றுமையாகலாம் என்றதை கூறுவாராகும்.

மற்றவை நீங்கள் வாசித்து விளங்க வேண்டியவை.

 

வாழ்த்துக்கள். 

அதுதான் ஜனநாயகம் மக்கல் தீர்ப்பேதான் மகேசன் தீர்ப்பௌ. அதை மாற்ற முயன்றால் நீங்கள் சர்வாதிகாரி. கஜேந்திரகுமாருக்கு தான் தேர்தல் வெல்லும் வரையில் மக்களின் பிரதிந்தி என்று கூற உரிமை இல்லை. இதி மியன்மார் இல்லை. தேர்தல் ந்டக்கிற இடம்.

 

அனந்தி அக்கா கமரூனை சந்திக்க கேட்டு அது மறுக்கப்பட்டது ஏன் என முதலில் சுமந்திரன் அவர்கள் கூறட்டும். மறுக்கப்பட்டதால் தான் அனந்தி அக்கா தனது அறிக்கையை அவரிடம் கையளிக்காமல் தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அங்கு வைத்து தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

சேனல் 4 ஐ சந்திக்க தான் அனந்தி அக்கா அங்கு சென்றார் என நான் கூறினேனா? கமரூனை சந்திக்க தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் ஆர்ப்பாட்ட காரரை கமரூன் சந்திக்கவில்லை. கமரூன் யாழ் பொதுநூலகத்தினுள் தான் இருந்தார். சேனல் 4 இன் ஜொன் ஸ்னோ தான் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை சந்தித்து அவர்களிடமிருந்து காணாமல் போனோரின் படங்களை வாங்கி சென்றார்.

ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த செய்தி கூட்டமைப்பினருக்கு தெரியும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏற்கனவே கமரூன் வரும் இடத்தை மாற்றி மாற்றி கூறியதால் ஆர்ப்பாட்ட காரரும் அலைந்ததாக நான் வாசித்தேன்.

 

அரசு மக்கள் போல் நின்று நடத்திய ஆர்ப்பாட்டம் ஒழுங்காக நடந்தாலும் அது அரசாங்கம் திட்டமிட்டு நடத்தியதை ஆதாரத்துடன் சேனல்4, bbc போன்றன சுட்டிக்காட்டியிருந்தன. அத்துடன் மக்கள் திரு.சம்பந்தன் அவர்களை சும்மா தாக்கவில்லை. அவரை மறித்தும் அவர் நிற்காமல் செல்ல முயன்றதால் தான் தாக்க முயன்றார்கள், திட்டினார்கள். நான் அந்த காணொளியை முகநூலில் பார்த்தேன். யாழில் பெருமாள் அண்ணா இணைத்த போது நிர்வாகத்தால் நீக்கப்பட்டு விட்டது. அவர் இறங்கி மக்களுடன் கதைத்திருந்தால் அவ்வாறு நடந்திருக்காது. அத்துடன் அங்கு இடம்பெற்றதை கமரூன் காணவில்லை என்பது முக்கிய விடையம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நியாயத்திற்கு மட்டும்தான் உங்களின் பதில். மக்களின் வாக்கு கூட்டமைப்பின் நியாயத்திற்குதான் போகிறது.

அதுதான் மக்கள் ஏமாற்றபட்டுவிட்டார்களே இனியென்ன கவலை சம்மந்தனுக்கு வால்பிடிகளுக்கு மாத்திரம் ரோச நரம்பு இருந்தென்ன சம்மந்தனுக்கும் இருக்கனும். 

அமைதி அமைதி அனந்தி அக்கா வந்திட்டு நாடுக்கு திரும்பி போய் அங்க விட போற அறிக்கையில் தெரியும் இங்கு உள்ளவர்கள் நிலமை பேச்சு என்ன என்று .

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சனத்தை பேய்காட்டி  ஓட்டுஎடுத்துபோட்டு வாய்சவுடால் வேறை .

  • தொடங்கியவர்

அமைதி அமைதி அனந்தி அக்கா வந்திட்டு நாடுக்கு திரும்பி போய் அங்க விட போற அறிக்கையில் தெரியும் இங்கு உள்ளவர்கள் நிலமை பேச்சு என்ன என்று .

 

அதுதான் அண்ணா, எதுவும் நடக்க முன்னரே இவ்வாறு குழப்புவதை தான் எதிர்க்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வந்த மக்கள் இரகசிய திட்டத்துடன் வந்த போது இறங்கி பேசுவது கீறோக்களுக்கன செயல். அவர் யூலிய சீசர் இல்லை அஞ்சினருக்குசதம மரணம் என்பது யூலிய சீசரின் வசனம். கூட்டமைப்பினரின் பாது காப்பு அவர்களின் பொறுப்பு. அரசாங்கம் செய்யாது. 

சம்பந்தை காணத மக்கள் கமருன் வந்த போது சம்பந்தரை சந்திக்க வாசிக சாலை சென்றார்களா?

இனி உங்களை ஆண்டவனாலும் திருத்த ஏலாது சனம் ஏதாவது உணர்ச்சி வசபட்டு செய்யுமுன் வீட்டிலை போய் குறட்டை விடலாம்.

அப்படி சனம் செய்தால் அனைவருக்கும் அவமானம் அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

 

இப்ப சந்திப்புக்கு போகவேணுமா வேணாமா சட்டெண்டு சொல்லுங்கோ நித்தா வருது :D :D

  • கருத்துக்கள உறவுகள்

வந்த மக்கள் இரகசிய திட்டத்துடன் வந்த போது இறங்கி பேசுவது கீறோக்களுக்கன செயல். அவர் யூலிய சீசர் இல்லை அஞ்சினருக்குசதம மரணம் என்பது யூலிய சீசரின் வசனம். கூட்டமைப்பினரின் பாது காப்பு அவர்களின் பொறுப்பு. அரசாங்கம் செய்யாது. 

சம்பந்தை காணத மக்கள் கமருன் வந்த போது சம்பந்தரை சந்திக்க வாசிக சாலை சென்றார்களா?

அனந்தி யாழ்ப்பாணத்தில் நடக்க முன்னர் குழப்பியிருக்காவிட்டால் சரி. 

சும்மா குண்டுசட்டிக்குள் கோவோறு கழுதை விட்டது மாதிரி கருத்துக்கள் எழுதாதிங்க எத்தினை தரம் விளங்கப்படுத்துவது.

இப்ப சந்திப்புக்கு போகவேணுமா வேணாமா சட்டெண்டு சொல்லுங்கோ நித்தா வருது :D :D

பிரான்சில் உங்கள் இடத்தில் நான் இருதால் கட்டாயம் சமூகமளிப்பன் .

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் நிராகரிக்க வேண்டுமா?

 இந்த களத்திலே அரசியல் பேசும் முதலமைச்சர் விக்னேசுவரனையோ சம்பந்தனையோ சுமந்திரனையே மாவை சேனாதிராசாவை நாங்கள் துரோகிகள் காட்டிக்கொடுப்பவர்கள் என்று வசைபாடினால் எம்மைவிட அறிவிலிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

ஏனென்றால் அவர்கள் இணக்க அரசில்வாதிகள் அவர்களுக்கு தெரிந்த தெல்லாம் சமரச அரசியல் மட்டும் தான்.இந்தியா எங்களது உரிமைகளை பெற்றத்தரும்.உலகநாடுகள் எல்லாம் எம்பக்கம்.மகிந்தவிடமிருந்த நாங்கள் எமது உரிமைகளை பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக்கொள்ளுவோம் என்று தான் அவர்களுக்கு சொல்லத் தெரியும்.

எனவே இந்த இணைக்க அரசியல் வாதிகளுக்கு ஊடாக அவர்களது இயங்கு தளத்தை அடிப்படையாக வைத்து நாம் எமது எதிர்ப்பரசியலை எப்படி முன்நகர்த்துவது எப்படி என்பதையிட்டுத்தான் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு எப்படி துரோகிப்பட்டம் என்று சிந்திக்க கூடாது.

கடந்தகால தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கு நிகழ்காலம் பற்றிய அவதானம் மிகமிக முக்கிய மானதாகும்

 
 

 

இவ்வளவு நடந்தும் இப்படி எழுதிறாரே சிவ சின்னபொடி இந்தாள் என்ன .....? 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சந்திப்புக்கு போகவேணுமா வேணாமா சட்டெண்டு சொல்லுங்கோ நித்தா வருது :D :D

 

 

போய் உங்கள் கண்ணோட்டத்தை பதியுங்கள். நீங்கள் மட்டுமல்ல பிரான்ஸ் உறவுகள் கட்டாயம் செல்ல வேண்டும். உங்கள் கருத்துக்களையும் கட்டாயம் வைக்கலாம்.நேரடிச் சந்திப்பு எப்போதுமே சரியான  விளக்கத்தை தரும்.

போய் பார்த்து என்ன? 

 

சில கதைகளை எதிரிகள சதி பண்ணி முடித்து வைப்பார்கள். இடம் கொடுப்பவர்கள் மேலே போக முடியாது. கூட்டமைப்பில் தேர்தலுக்கு இடம் கிடைப்பதை பெரிதாக போற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் தேர்தலுக்கு இடம் கிடைப்பதை பெரிதாக போற்ற வேண்டும்.

உலகின் பெரிய நகைச்சுவை

உலகின் பெரிய நகைச்சுவை

தேர்தலில் நின்றவர்களை பார்த்து இப்படி சிரிக்கலாமா? பதவியை கைவிட்டுவிட்டு வீட்டையா திரும்பிப் போகச் சொல்கிறிர்கள்? பாவங்கள். 

Edited by மல்லையூரான்

அரசுடன் ஒட்டாது இன்றுவரை குரல் கொடுக்கும் இவரை கள உறவுகள் சந்திப்பதே நன்று.

கயேந்திரகுமார் செய்யும்  நற்காரியங்கள் எல்லாரும் அறிய வாய்ப்பு இல்லை. அவரின் உலகநாடுகளுக்கான எமது இனத்தின் அழிவுகளை பிரச்சாரம் செய்யும் நுட்பத்தை தமிழக அரசியல் வாதிகள் ,மற்றும் மாவையார்,சுரேஷ் போன்றோர்  போற்றி தமக்குள்ள வியந்ததை நான் அருகில் இருந்து பார்த்தவன். ஆகவே அவரை குறை சொல்வது  நல்லதல்ல. 

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு, கமருடன்னான பயணத்தை ஆர்ப்பாட்ட ஊர்வலம் கலக்காமல் எற்ப்படு செய்தாக கேள்விப்படிகிறேன். இதில் கஜேந்திர குமார் தனது ஆரப்பாட்டத்தை துளைத்திருந்தார். இது திட்டமிட்டப்பட்ட படி கமருனின் பயணம் ந்டை பெறாமல் இருக்க செய்த முயற்சியாக கூறப்படுகிறது. கஜேந்திர குமார் விதைவைகள் பற்றியோ, காணிப்பறிப்பு பற்றியோ, இராணுவத்தை வெளியேற்றுவது பற்றியோ எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை.

 

கஜேந்திரகுமார் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றமைக்கு ஆதாரம்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132228&p=959509

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

இது இன்னொரு ஆதாரம்.

 

hfae.jpg

 

(twitter)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரங்களையும் சேதாரமாக்கும் விகாரமனத்தைக் கொள்ளாமல். ஊகங்கள் இன்றி மக்கள் பிரதிநிதிகளில் ஒருவரான அனந்திபற்றிய உண்மை நிலையை, புலம்பெயர் தமிழ் மக்களும், நேரில் காணக்கூடிய நாளான இன்று, அவருடைய நிகழ்வில் பங்குபற்றும் வாய்ப்புகள் கொண்ட அனைத்து யாழ்கள உறவுகளும், உண்மை நிலையை உள்ளபடி எடுத்துரைப்பார்கள் என நம்புவோமாக. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

 

கருத்தரங்கில் பங்கு பற்றினேன்

கேள்விகள் எதையும் என்னால் கேட்கமுடியவில்லை.

கேட்கப்பட்ட கேள்விகளையும்

அதற்கான பதில்களையும் பின்னர் பதிகின்றேன்.

 

கருத்தரங்கு தொடங்கும் முன்பே

பொறுப்புடன்  நடந்து கொள்ளுமாறும்

அவரது நிலையை  உணர்ந்து கேள்விகளை  வைக்குமாறும்  சொல்லப்பட்டது

அங்கு வந்த எல்லோருமே பொறுப்புடன் நடந்து கொண்டனர்.

 

சர்வதேசம்

இந்தியா

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு

மாகாணசபை

அகதிகள் மற்றும் காணாப்போனோர் பிரச்சினைகள்..

 

அவரது பேச்சில் புலம் பெயர் தமிழரது ஒற்றுமை பற்றி அழுத்திக்கேட்டுக்கொண்டார்

ஒன்றுக்கு   மேற்பட்டதடவைகள்....

 

(எழுத்துப்பிழை  திருத்தப்பட்டது)

Edited by விசுகு

 

 

 

அவரது பேச்சில் புலம் பெயர் தமிழரது ஒற்றுமை பற்றி அழுத்திக்கேட்டுக்கொண்டார்

ஒன்றுக்கு மெற்பட்டதடவைகள்....

இதை முதலில் நாம் செய்து விட்டு அவரிடம் கேள்விகளை கேட்பது சிறந்தது என நினைக்கிறேன் .........

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 1-

                   காணாமல்    போனோர் தொடர்பில் மாகாணசபை  ஏதாவது நடவடிக்கைகளை  அல்லது பிரேரணைகளை  கொண்டு வந்ததா? கொண்டு வருமா?

 

பதில்: இதுவரை 3 கூட்டத்தொடரே மாகாணசபையால் நடத்தப்பட்டுள்ளது.

            அதிலும் 3வது கூட்டத்தொடருக்கு நான் வெளிநாட்டிலுள்ளேன்.

            நிச்சயமாக பிரேரணை  வரும்.

 

         அத்துடன்  நான் காணோமல் போன எனது கணவர் சார்பாக  போட்ட வழக்கே தோல்வியுறும்  நிலையிலுள்ளது.

         காரணம் இதுவரை நாங்கள் 13 பேர்தான் இதில் இணைந்துள்ளோம்.  ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு

         சாட்சியாக இருந்தும் அச்சுறுத்தல்  மற்றும் பயம் காரணமாக முன் வருகிறார்களில்லை. அப்படி அவர்கள் முன்           வருவார்களாயின் இலவசமாக வழக்கை  நடாத்தவும் செலவை ஏற்கவும்  நாங்கள் (மாகாணசபை  என்று குறிப்பிடவில்லை)

தயாராக உள்ளோம்.

 

அதேநேரம் இன்னொன்றையும் சொல்லணும்

துணிந்து நான் இறங்கிய  பின்னர்

முன்பிருந்த அச்சுறுத்தல் எனக்கு தற்பொழுது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 2 : 

 

அன்னை  தெரேசாவின் பெயரில் இயங்கும்  நாம் பல திட்டங்களை  வடக்கு கிழக்கு மக்களுக்கு செய்து வருகின்றோம்.

அதற்கான முழு  ஆவணங்களுடன் வந்துள்ளேன். சந்திக்க நேரம் தரமுடியுமா??  இங்கும் அங்கும் அரசியலை விட்டு தள்ளி  நிற்கின்றோம்.  தள்ளிநிற்கவே விரும்புகின்றோம்.

 

 

பதில் :

             உங்களுடைய வேலைத்திட்டங்களுக்கு மக்கள் சார்பில் நன்றிகள்.  எவர் என்றில்லாமல் எல்லோரது  உதவிகளும் அந்த மக்களுக்கு கிடைப்பதையே  வரவேற்கின்றேன். 


கேள்வி  3:

                    புலம் பெயர் தமிழர் நெரடியாக மாகாணசபைக்கு உதவும் வகையில் ஏதாவது முயற்கிகளை மாகாணசபை மேற்கொள்ளுமா? அதற்கான வாய்ப்புக்கள் உண்டா??

 

பதில்:

           மாகாணசபைக்கு ஒரு வங்கியை ஏற்படுத்தும் சட்ட ஆலோசனைகளில் முதல் அமைச்சர்  அவர்கள் உள்ளார்.

ஏற்கனவே பட்டுக்கொண்ட பாடத்தின்படி(புனர்வாழ்வுக்கழகம்)  அரசிடம் கொடுத்து வாங்குவதென்பது என்னவாகும் என்பது தெரிந்தவிடயம்.  சட்ட  ஆய்வுகள் முடிந்தபின் இது பற்றிய  அறிவித்தல்கள் வரும். அதுவரை வேறு சில ஏற்கனவே பதிந்த அமைப்புக்கள் ஊடாக செய்து வருகின்றோம். 2 பெயர்களைக்குறிப்பிட்டார்.  பெயர்கள் ஞாபகத்தில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.