Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி மாவட்டத்தில் மசூதி மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
140101101548_batticalao_muslims_624x351_

ஆரையம்பதியில் தாக்குதல் நடந்த இடத்தில் காவலர்கள்

இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள மசூதியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அடையாளந்தெரியாத ஆட்களின் தாக்குதலுக்குள்ளானது.

புஜபிட்டியா பிரதேசத்திலுள்ள முல்லேகம மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாகனமொன்றில் வந்ததாக கூறப்படும் குழுவொன்றினால் மசூதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பிரதேச வாசிகளும் உள்ளுர் செய்தியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

சிங்களவர்களும் முஸ்லிம்களும் இன ஐக்கியத்துடன் வாழும் இந்த பகுதியில் இடம் பெற்ற இந்த சம்பவம் உள்ளுர் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பௌத்த பிக்குமார்கள் உட்பட பிரதேச அரசியல்வாதிகள் என பலரும் நேரில் சென்று பார்வையிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு ஆறுதல் கூறினர்.

ஆரையம்பதியிலும் தாக்குதல்

அதேவேளை மற்றுமோர் சம்பவத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள சிகரம் கிராமத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளத்திற்குரிய உடமைகள் குழுவொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் காணியை அடையாளமிட்டு அமைக்கப்பட்ட சற்றுவேலியை சேதமாக்கிய இந்நபர்களினால் காணியில் அண்மையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக இருப்பிடமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டுவரும் காவல்துறை, சம்பவத்தின் பேரில் உள்ளுர் வாசியொருவரை கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக கூறுகின்றது.

இந்த பிரதேசத்தில் காணி தொடர்பாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான நெருக்கடியின் பின்னனியிலே இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என முஸ்லிம்கள் கருதுகின்றார்கள்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/01/140101_attackonmosque.shtml

இந்த பிரதேசத்தில் காணி தொடர்பாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான நெருக்கடியின் பின்னனியிலே இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என முஸ்லிம்கள் கருதுகின்றார்கள்.

சிங்களவனே தாக்குதல் நடத்தினாலும் தமிழர்கள் மேல் பழியை போட்டு விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
கண்டியில் மசூதி ஒன்றின் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல்!

batticalao_muslims_-150x150.jpgஇலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள மசூதியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அடையாளந்தெரியாத ஆட்களின் தாக்குதலுக்குள்ளானது.

புஜபிட்டியா பிரதேசத்திலுள்ள முல்லேகம மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாகனமொன்றில் வந்ததாக கூறப்படும் குழுவொன்றினால் மசூதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பிரதேச வாசிகளும் உள்ளுர் செய்தியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

சிங்களவர்களும் முஸ்லிம்களும் இன ஐக்கியத்துடன் வாழும் இந்த பகுதியில் இடம் பெற்ற இந்த சம்பவம் உள்ளுர் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பௌத்த பிக்குமார்கள் உட்பட பிரதேச அரசியல்வாதிகள் என பலரும் நேரில் சென்று பார்வையிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு ஆறுதல் கூறினர்.

அதேவேளை மற்றுமோர் சம்பவத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள சிகரம் கிராமத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளத்திற்குரிய உடமைகள் குழுவொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் காணியை அடையாளமிட்டு அமைக்கப்பட்ட சற்றுவேலியை சேதமாக்கிய இந்நபர்களினால் காணியில் அண்மையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக இருப்பிடமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறை, சம்பவத்தின் பேரில் உள்ளுர் வாசியொருவரை கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக கூறுகின்றது.

இந்த பிரதேசத்தில் காணி தொடர்பாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான நெருக்கடியின் பின்னனியிலே இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என முஸ்லிம்கள் கருதுகின்றார்கள்.

http://tamilleader.com/?p=25206

சிங்களவனே தாக்குதல் நடத்தினாலும் தமிழர்கள் மேல் பழியை போட்டு விடுவார்கள்.

இணக்க அரசியல் சித்தாந்தம்.

கையாலாக இஸ்லாமிய தலைமை தமிழரை தாக்கி சிங்களவருக்கு சால்வை போடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அப்பாவித் தமிழர்களைப் பலியாகக் கேட்கிறாயோ.....! அல்லாவே...!! புத்தனே...!!!   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.