Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொண்டாட்டமா? தமிழ் இன உணர்வைக் கொன்று ஆட்டமா?

Featured Replies

கொண்டாட்டமா?

தமிழ் இன உணர்வைக்

கொன்று ஆட்டமா?

அன்பார்ந்த வர்த்தகர்களே! தமிழுணர்வுள்ள மக்களே!

சமகாலங்களில், தாயகத்தில் நடைபெறும் கொடுமையான நிகழ்வுகளினால், மனம் துவண்டு வழமைக்கு மீளாமல் இருக்கும் இந்நேரத்தில், கனடாவில் தமிழர்கள் மத்தியில் நடைபெறும், நடைபெறவிருக்கும் களியாட்ட நிகழ்வுகள் எம் மனதுக்கு மட்டுமன்றி, எம் தாயக உறவுகளின் மனங்களையும் வேதனைப்படுத்துபவையாகவே அமைகின்றன.

கடந்த ஓகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற அப்பாவிப் பள்ளி மாணவிகள் மீதான சிறிலங்கா அரசின் கொலைவெறியாட்டம் உட்பட, யாழ். மண்ணில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் இன்றி எம்மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரங்கள் என்பன கனடிய தமிழர்களாகிய எமக்கு எவ்விதத்திலும் சந்தோசம் அளிப்பவையாக அமையவில்லை. தொடர்ந்தும் சிறிலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் எமது தாயக உறவுகள் மீதான விமானக் குண்டுவீச்சுகளும், படுகொலைகளும் வழமையான எமது செயற்பாடுகளுக்குத் திரும்ப முடியாமல், மனதில் முள் தைத்தது போல் கவலையளிப்பவையாகவே அமைந்து வருகிறது என்பது எந்தவொரு தமிழ் மகனாலும் மறுக்க முடியாத உண்மை. அத்துடன் எம் உறவுகள் தாயகத்தில் அகதிகளாக அலைந்து, உண்ண உணவின்றி, நிம்மதியான உறக்கமின்றி தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இங்கு நடைபெறும் களியாட்ட நிகழ்வுகள், அம் மக்களின் நெஞ்சினில் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்' செயலாகவே விளங்கும். கனடியத் தமிழரின் களியாட்ட நிகழ்வுகள், புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் அவர்களுக்கு என்றென்றும் துணையாக இருப்போம் என்கின்ற அவர்களின் எண்ணங்களை சிதைத்து அவர்களின் மன நிலையை மேலும் பாதிக்கும்.

இந்நிலையில், எமது துயரில் பங்கெடுத்து, எம் தாயக நிலவரங்களையும், நாட்டு நடப்புகளையும் கனடிய தமிழ் மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துகின்ற முக்கிய முன்னிலை ஊடகமான ரி.வி.ஐ தொலைக்காட்சி மற்றும் சி.எம்.ஆர் வானொலி என்பன இணைந்து முன்னெடுத்து நடத்தும் "கொண்டாட்டம்" நிகழ்வு மூலம் வரலாற்றுத் தவறொன்றை இழைப்பதாகவே நாம் கருதுகிறோம். இந்நிகழ்வையே, களியாட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, தற்போதைய தமிழ் மக்களின் மனநிலைக்கேற்ப கவனயீர்ப்பு நிகழ்வாக மாற்றியமைப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இந்நிகழ்வு, தெற்காசிய சமூகங்கள் இணைந்து நடத்தும் ஒரு நிகழ்வெனினும், தமிழர்களால், 90 வீதம் தமிழர்களை மட்டுமே நம்பி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒரு நிகழ்வாகும்.

இவ்வாறான மிகப்பெரும் களியாட்ட நிகழ்வின் மூலம் கனடிய அரசிற்கும், சர்வதேச சமூகத்திற்கும், குறிப்பாக தெற்காசிய சமூகத்திற்கும் நாம் எடுத்துக்கூற விழைவது என்ன? நாம் அஞ்சுவதெல்லாம், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால், அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் அஞ்சலிக் கூட்டத்தில் பங்கு பற்றியது சில ஆயிரக்கணக்கான மக்கள், ஆனால் முற்றுமுழுதான களியாட்ட நிகழ்வில் பங்கு பற்றுவதோ பல்லாயிரக்கணக்கான மக்கள் என்றதொரு பிழையான செய்தி எடுத்துக்கூறப்பட்டுவிடுமோ என்றுதான்.

அன்புள்ளங்கொண்ட தமிழர்; தேசத்து மக்களே, தாயகத்தில் எங்கள் இன மக்கள் எப்படிப் போனால் நமக்கென்னவென்று இருந்துவிட்டுப் போக நாங்கள் என்ன இன உணர்வற்ற மனிதர்களா? அங்கு பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் எம் உடன்பிறப்புக்கள் இல்லையா? அவர்களின் துயரம் எமது துயரமில்லையா? ஒரு கணம் சிந்தியுங்கள்...

ஆகவே மக்களே இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற களியாட்ட நிகழ்வுகளை தவிர்ப்பதன் மூலமோ அல்லது ஒத்திவைப்பதன் மூலமோ எமது தமிழ் இன உணர்வை வெளிப்படுத்துவது எமது தார்மீகக் கடமையாகும். உங்கள் உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சங்கங்களே! அமைப்புக்களே! ஒன்றியங்களே! நீங்கள் உங்கள் தாயக உடன் பிறப்புக்களுக்காக உணர்வை வெளிப்படுத்தும் தருணம் இது. துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவோ, வேறு எந்த வழிகளிலோ நீங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் வெளிப்படுத்துங்கள்.

தேசிய உணர்வால் கட்டி எழுப்பப்பட்ட ஊடகங்களால், மக்களுக்காகவென நடத்தப்படுகின்ற களியாட்டங்களில் மக்களிடம் அறவிடப்படுகின்ற பணம் தனிமனித தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவா? தமிழ்த் தேசியத்தை வளர்ப்பதற்காகவா?

சிந்தியுங்கள்! முடிவெடுங்கள்!

நன்றி!

அன்புடன்

கனடியத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்

tamilgraduates@gmail.com

416-273-2860

உங்கள் முடிவுக்கு எம் ஆதரவு அது மட்டும்மல்ல இலங்கை பொருளாதாரத்தை பாதிக்கும் வண்ணம் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் அதற்கும் எம் ஆதரவை தருவோம்

  • தொடங்கியவர்

கனடிய வர்த்தகப் பெருமக்கள் நினைத்தால், விழா ஏற்பாட்டாளர்களிற்கு எடுத்துச் சொல்லி தமது எதிர்ப்பினைத் தெரிவிப்பதன் மூலம், களியாட்ட விழாக்கள் தவிர்க்கப்படும்.

நாங்கள், ஓரிருவர் மட்டுமன்றி, ஒருமித்த குரலாய் அனைவரும் தத்தமது நியாயமான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

நாம் ஆரம்பித்திருக்கும் இச் செயற்பாடு, எவரெவர், எவ்வெப்பொழுது, எம் மக்களின் உணர்வுகளிற்கெதிராக வலுப்பெறுகிறார்களோ, அதை அமைதி வழியில் சொல்லித் திருத்துவதற்கான ஒரு முயற்சியே அன்றி, எவ்விதத்திலும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கல் செயற்பாடாக அமையமாட்டாது.

உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

90 அல்ல 98...99 வீதம் தமிழர்களின் வருகையை எதிர்பார்த்துத்தான் நடத்தப்படுகிறது.

தமிழ் மக்களிடம் தெளிவு வேண்டும். மக்கள் இடம் இந்த நியாயமான வேண்டுகோள் போக வேண்டும். அதற்கு இணையங்களும் பத்திரிகைகளும் நல்ல பங்களிப்பை வழங்கலாம்.

நிகழ்ச்சியை நிறுத்து மாறு கேட்டு நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு ஏன் என்றால் அதை முன்னின்று ஏற்பாடு செய்பவர்கள் அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள். தெளிவு பெற்றமக்கள் பெருமளவில் புறக்கணிக்க வேண்டும். அதன் மூலம் நல்ல தொரு செய்தி செருப்படியாக சொல்லப்பட வேண்டும். இவர்களின் கடமையுணர்வற்ற நடவடிக்கைகளிற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும்.

கனடாவில் உள்ள எமது போராட்டத்தை புரிந்த வேற்று இனத்து ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்விமான்கள் என்று பலர் இருக்கிறார்கள். இவர்களை உள்வாங்கி நிகழ்ச்சிகள் நடத்தி இவர்களின் பங்களிப்பை அதிகரித்து எம்மவர்களையும் ஆங்கிலத்தில் கருத்துப்பரிமாற்றங்கள் கலந்துரையாடல்களை ஊக்குவிக்க வேண்டிய முக்கிய பணி இன்னமும் செய்படாமல் இருக்கிறது. இதை பற்றி பலரும் எடுத்து செல்லியாகிவிட்டது ஆனால் அதை செய்வதில் எந்த ஆர்வமே முக்கியத்துவமோ இல்லை. வருடத்திற்கு 2 கொண்டாட்டம் நடத்தி காசு புடுக்கிறதில் தான் நிக்கினம். இப்படியான ஊடகங்கள் எமக்கு தேவை தானா?

TVI போன்றவர்களால் ஒரே ஒரு நன்மை அவர்கள் தேசியத்திற்கு எதிராக விசமப்பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் கடமையுணர்வோடு நடக்கவில்லை. அவர்கள் ஊர்காற்று போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது தேசிய ஆதரவு வாடிக்கையாளர்களையும் அவற்றிற்கான விளம்பரதாரரையும் வைத்து பணம் சம்பாதிக்க. ஆனால் கனடாவில் உள்ள எமது போராட்டத்தை விளங்கியவர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துங்கள் என்றால் அது தமக்கு தொல்லை கொடுக்குமாம் தடை செய்து போடுவினம் என்று வாண வேடிக்கை விடுகிறார்கள்.

கேக்கிறவன் கேணையன் என்று தான் உந்த வியாக்கியானத்தை தருகிறார்கள். விடுதலைப் புலிகள் பகிரங்கமாக நடத்தும் தமிழ் தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மறுஒலிபரப்பு செய்கிறார்கள். அது தயாரிக்கப்படுவது வன்னி என்று அதில் பங்கு பற்றுபவர்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் தமிழ் தேசிய தொலைக்காட்சி இலச்சினைகளை எடுத்துபோட்டு படம் காட்டினமாம் சட்ட சிக்கலில் இருந்து தப்ப. தமிழனை மற்றவர்கள் ஏமாத்துவது ஒரு பக்கம் இப்படியாக எமக்குள் இருப்பவர்கள் எம்மவர்களை ஏமாற்றுவது இன்னமும் வேதனையானது.

இவர்கள் ஊர்காற்று போன்ற நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்புவது தேசியத்திற்கு பலம் சேர்க்க அல்ல தேசியத்தின் பெயரால் வாடிக்கையாளர்களை கவர்ந்து பணம் பிடுங்க. உண்மையாக தேசியத்தை நேசித்து நடப்பவர்கள் என்றால் கனடாவில் உள்ள அரசியல்வாதிகள் கல்விமான்கள் மனிதஉரிமை ஆவலர்களை வைத்து எத்தனையே கருத்தாடல்கள் விவாதங்கள் செய்திக் கண்ணோட்டங்களை ஆய்வுகளை நடத்தியிருப்பார்கள். சொந்தமாக முயற்சி எடுத்து நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அர்பணிப்பும் ஆர்வமும் கிடையாது. ததேதொ தரமாக தயாரித்துத் கொடுக்க அதை காட்டி கனடாவிலுள்ள தேசிய ஆதரவாளர்களிடம் பணம் பிடுங்குவதுதான் இவர்களுடைய தேசிய ஆதரவின் உச்சக்கட்ட வெளிப்பாடு இதை விட வேறு என்ன செய்திருக்கிறார்கள் இதுவரை?

அட இப்பத்தானே கண்டுபிடிச்சனீங்க........

இந்த கொள்ளையில போவாங்களோட கதைச்சுக் கதைச்சே ஆதிக்கு கொலைவெறி பிடிச்சுக் கிடக்கு....

அரசியல் களம் செய்வாங்கள் பாருங்கோ...... மக்கள் செயற்பாடு எப்பிடி இருக்கோணும் என்று கருக்துச் சொல்லுவாங்கள். ஆகா நம்மாட்கள் சிந்தனைச் சுடர்களா இருக்;காங்களே என்று வாயை பிளக்க வைப்பாங்களுங்கோ.... எல்லாம் கமேராவுக்கு முன்னால மடடுந்தான்...... அடப்பாவிகளா?

தாயகத்தில் மக்கள் படுகிறபாட்டை வெளி உலகத்திற்குக் கொண்டு வர மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டிய காலத்தில்

களியாட்டத்திற்கு விளம்பரம் போடுவாங்கள் பாருங்கோ... சும்மா சொல்லக்கூடாது இவங்களுந்த கோதாரிக் கொண்டாட்ட விளம்பரங்கள் 90 வீதம் போட்டு வர்த்தக விளம்பரம் 8 வீதம் போட்டு மிச்ச 2 வீதத்தை தாயகத்திற்கான மக்கள் குரலுக்காக இணைப்பாங்கள்பாருங்கோ எப்படிப்பட்ட விடுதலை வியாபாரிகள் என்று இதுக்கு மேல சொல்ல வேணுமோ?

என்னத்தைத்தான் நாங்க கத்தினாலும் ஊடகங்களைத் தட்டிக் கேட்டு எந்த ஊடகத்திலும் எழுத முடியாது பேசமுடியாது ஏனென்றா எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டை.....

ஆகமிஞ்சி கேள்வி கேட்டா ஓகே நாங்க எங்களின் நிகழ்வை ஒத்திவைக்கிறம் உங்களால் முடிஞ்சா எங்களின் உதவி இல்லாம மக்களை பெரும் எண்ணிக்கையில இணையுங்கோ பாப்பம் என்று சவால் விடுகிறாங்கள்.

இல்லையென்றா சொல்லுகிறான்கள் தாயகத்திற்காகத்தான் இந்த நிகழ்வைச் செய்யிறம் என்று எங்கள் வாய்க்குப் புூட்டுப் போடுகிறாங்கள்.

உவர்களோடு நேர கதைச்சு நிப்பாட்ட முடியாது. எல்லாம் மக்களின் ஆதரவை நம்பித்தான் இருக்கினம் அது தான் அவர்களிற்கு பணம் கொடுப்பது. மக்களிற்கு தெளிவு வந்து கொண்டாட்டத்திற்கு போகாமல் விட வேண்டும். இன்றய நவீன தொழில்நுட்ப உலகில் உவர்கள் தான் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பாடல்களில் ஏகபோக கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள் என்று நினைப்பது மடமை.

இணையத்தினால் பலவற்றை செய்யலாம். உலகத்தமிழரில் ஒரு கட்டுரை விளக்கமாக எழுதினால் மக்களுக்கு போய்சேராதா? அவ்வாறு 1..2 பேருடன் இணைந்து மற்றவர்களிற்கு தமது கடமை என்ன என்பதை உணர வைக்க வேண்டும். அவர்களிற்கு பணம் தான் எல்லாம் என்றால் அந்த பணத்தை செய்ய வேண்டிய கடமையை செய்தால்தான் கிடைக்கும் என்ற நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

உவர்கள் தான் தஞ்சம் என்று பயந்து கொண்டு சில இறுக்கமான முடிவுகளை எடுக்காவிட்டால் மற்றங்கள் வராது. நிலமை மோசமாகிக் கொண்டு தான் போகும்.

கட்டுரை எழுதுவதற்கு என்று சிலர் இருக்கினம்..... விசயம் தெரிஞ்சதுகள்தான் ஆனால்...... இங்க இடம்பெறும் கோமாளிக் கூத்துகளை அவையள் எழுதிறதில்லையோ? அல்லது உலகத்தமிழர் பிரசுரிக்கிறது இல்லையோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

புதிதாக எவரும் எழுதினால் இணைப்பதற்கு ஆயிரம் யோசனை.... பழகியவர்கள் எழுதினாலும்....... சில விடயங்கள் உலகத்தமிழரில் கேள்விக்குறி?

உணர்வா? பொருளா? என்ற கேள்வி என்னிடம் கேட்டால் உணர்வு என்றுதான் அடித்துச் சொல்வேன். தாயகத்தின்பால் உணர்விருந்தால் உதவி தன்னால் கிடைக்கும். இந்த ஊடகக் காரர்களின் கால்களில் தேசியவாதிகள் தவங்கிடக்கத்தேவையில்லை. ஆனால் கனடாவைப் பொருத்தவரை ஊடகங்கள் மக்கள் உணர்வுகளை மழுங்கடிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. அது நன்றாக அவர்களுக்கே தெரியும். பித்தலாட்டங்களும், போலிகளும் ஊடகங்களை ஆளும்வரை கனடிய மக்களின் தாயகப்பற்று விடுதலை வியாபாரிகளால் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையே நிலைக்கப்போகிறது. மக்களிடம் தாயகப்பற்று இருக்கிறது. சரியான வழிநடத்துனர்கள் அல்லாத நிலையில் அது ஊடகங்களின் போட்டிகளாலும், லாப நோக்குகளாலும் ஒருமித்த நிலையற்று ஊசிப்போன நிலையை எட்டிக்கொண்டிருக்கிறது. பட்டதாரிகள் விடயத்தைக் கையிலெடுத்திருக்கின்றனர்....

என்ன செய்யப்போகிறார்களோ?

அல்லது நாலு நாளைக்கு இதைப்பற்றிக் கதைச்சுப்போட்டு ஆளாளுக்கு ஊடகக்காரங்களுடைய பொல்லாப்பு நமக்கெதுக்கு என்று ஒதுங்கப் போகினமோ? பார்ப்பம்

  • தொடங்கியவர்

எமக்கென்று ஒரு ஊடகம் வேண்டும் என்பதில் எமக்கு இரண்டாம் கருத்து இல்லை. எனினும்இ நாங்கள் தான்இ இது எம்முடைய வானொலிஇ இது எம்முடைய தொலைக்காட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்ளுகின்றோமே தவிரஇ அவர்களின் "கொண்டாட்ட" வேலைகள் எம்மைத் "திண்டாட" வைத்துக்கொண்டிருக்கிறது.

உணர்வற்றுஇ பொருள் ஒன்றே குறியாக அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

உதாரணமாகஇ "செய்திச் சுருக்கத்தில்"இ

சம்பூரில் 20 அப்பாவிப் பொது மக்கள் பலி.

இந்தியாவில் 98 அகதிகள் தஞ்சம் புகுந்தனர்.

யாழில் உணவுத் தட்டுப்பாடு.

....................

என்று எமது உறவுகளின் அவலநிலையைச் சொல்லிவிட்டுஇ அடுத்த நிமிடமே "கொண்டாட்டம்... கொண்டாட்டமே..." என்று நொடிக்கொரு தடவை பாட்டைக் கேட்கும் பொழுது இதற்காகவா நாம் கையெழுத்து வைத்தோம் என்று எமது தலைவிதியை எண்ணித் தலைகுனிகிறோம்.

இதைத் தடுக்க வழியே இல்லையா???

ஏன் அனைவரும் மௌனமாகவே இருக்கின்றனர்???

நாம் சில தமிழுணர்வாளர்களைத் தொடர்புகொண்ட பொழுது, அனைவரும் இந்த விசயத்தில் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருப்பதை நாம் அறிந்தோம். ஆனால் அவர்களின் மௌனம், எமக்கு ஆச்சரியப்படுத்துகிறது.

எம்முடைய இவ் முன்னெடுப்பிற்கு அனைவரும் முன்வந்து தமது உதவிகளை வழங்க வேண்டும். அவர்களும் அறிக்கைகளை பத்திரிகைகள், வானொலிகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

குறுகிய காலத்தில் இவ் வேலைகளை முன்னெடுத்துள்ளோம். மக்களுக்கு இச் செய்திகளை எடுத்துச்செல்ல வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

சிஎம்ஆர், ரிவிஐ பாணியில் சொல்வதென்றால், கொண்டாட்டத்திற்கு இன்னும் 3 நாட்கள், 23 மணித்தியாலங்கள், 04 நிமிடங்களே உள்ளன.

சரி சரி நீங்களும் சேர்ந்து விளம்பரம் செய்யுங்கோ.

எந்தப் பத்திரிகை? எந்த வானொலி? என்றும் சொல்லுங்கோவன்

கதைக்கப் போனாக் கட் பண்ணிடுவாங்கள் அதெல்லாம் ஒருகலை

ஆளைக்காட்டினா ஆப்பு வைப்பாங்கள்!

இதைத் தவிர்க்க நினைச்சாங்கள் எண்டா பழைய ஒypபரப்புகளை எடுத்து விடுவாங்கள் அல்லது உருப்படியான ஒypபரப்பாளங்கள் ஓய்வெடுப்பாங்கள்... அல்லது கட்டாயமா வேற விடயங்கள் கதைக்க வேண்டாமே என்று நழுவுவாங்கள் இல்லையென்றால் சகோதர ஊடகத்தைப்பற்றிக் கதைப்பதை தவிர்த்து கலந்துரையாடுவோம் என்பார்கள்.

  • தொடங்கியவர்

சிரிஆர் - கனடியத் தமிழ் வானொலியில் எமது கொதுவான கருத்துக்களைத் தெரிவிப்பதற்கென, திண்ணை, கலந்துரையாடல் போன்ற ஆக்கபூர்வமான பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அவ் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி நமது கருத்துக்களை நாகரிகமான முறையில் தெரிவிக்கலாம். "அவங்கள் காசடிக்கிறாங்கள்", "அந்த ஒலிபரப்பாளர் அப்படிச் சொன்னவர்" போன்ற தனிப்பட்ட வாதங்களை முன்வைக்காமல், இந்தத் தருணத்தில் கொண்டாட்டம் தேவையா? இல்லையா? போன்ற கருத்தை முன்வையுங்கள்.

அல்லது களியாட்ட நிகழ்வுகளின் விளம்பரங்களை மட்டுப்படுத்தச் சொல்லி அழுத்தம் கொடுக்கலாம்.

முயற்சி செய்து பாருங்கள்.

அலுவலக தொடர்புகளுக்கு: 416-264-8798

வானலையில் கலந்துகொள்ள: 416-264-1423

நல்லதொரு முயற்சி. அலுவலக தொடர்புகளுக்கு முயன்று பயனில்லை. வானலையில் கலந்து கொண்டாலும் உடனே கட் பண்ணிவிடுவார்கள்.

மேலே சொன்ன மாதிரி ஊர் சங்கங்கள் அமைப்புக்கள் மூலமாக முயற்சி செய்தால் நல்ல பயனை அடையலாம்.

முயற்சிப்போம்.

உங்கள் முயற்சிக்கு எமது ஆதரவும் உண்டு குருக்ஸ் சொன்ன மாதிரி நிகழ்ச்சியை நிறுத்துமாறு

கேட்டால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். ஆகவே மக்கள் அவ்

நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதே ஒரு வழியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படைப்பாளிகள் கழகம் மக்களை இந்த கொண்டாட்டத்தில் பங்குபற்ற இது தருணமல்ல என்று அறிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இதுக்கு என்ன சொல்லுறியள்??

akkinithandavam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த வீட்டில் சாவீடு

ஊருக்குள் திருவிழா நடந்துகொண்டுதான் இருக்கும். சாவீட்டுக்காரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். திருவிழாவையும் நடாத்தமாட்டார்கள். அண்டைஅடுத்தவர்களுக்கு துக்கம் கிடையாது சாவீட்டுக்குப் போய் ஒருபாட்டம் அழுதுவிட்டு அத்தோடு சரி அவர்களின் சோகம்.

பிறகென்ன உற்சாகம் களியாட்டம், கேளிக்கை இது தொடர்கதை புலம்பெயர்ந்த பலரும் அண்டைவீடுகளாகத்தான் ஆகிவிட்டார்கள் அப்படிப்பட்டவர்களிடம் பறையறைந்து சாவீட்டை அறிவி என்றால் நடக்கிற காரியமா? எவரெவர் தாயகத்தின் துன்பங்களை தத்தம் துன்பமாக நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் இந்நிகழ்வுகளைப் புறக்கணித்து அந்நிகழ்வுகளை வெற்றியடையாது செய்வார்களானால் மட்டுமே இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் தொடராது இதற்குமேல் என்ன சொல்ல?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியொரு நிகழ்வை நடாத்தி அதன் முலம் கிடைக்கும பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் தானே..?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி செய்வார்களா?

இங்குதான் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இயங்கிக்கொண்டு இருக்கிறதே.....

மக்கள் முன்னிலையில் இக்கொண்டாட்டத்தில் கிடைக்கும் வருமானத்தை தாயகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த நிறுவனங்கள் வழங்குமா?

உது மட்டுமே..இப்ப எல்லாம் கோயில் திருவிழாக்கள் ..சமர் ஞாயிறு..பாங் கொலிடே என்று பார்த்துத் தான் வரும்..கடவுளுக்கு அப்பதானே கொலிடே...! அதில தாயகத்துக்கு அன்பளிப்பு அனுப்புறம் என்டதும் விளம்பரமா இருக்கும்..! உண்மைல அந்த அன்பளிப்புக்கள்..தாயகத்துக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.