Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை:தமிழ் மண்ணின் பிழையை மன்னியுங்கள்: வைரமுத்து

Featured Replies

தமிழ் மண்ணின் பிழையை மன்னியுங்கள்: வைரமுத்து உருக்கம்ஆகஸ்ட் 30, 2006

சென்னை:

சீககிய மண்ணின் பிழையை (இந்திரா காந்தி படுகொலை) மன்னித்த சோனியா காந்தி அம்மையார், தமிழ் மண் செய்த பிழையையும் (ராஜீவ் காந்தி படுகொலை) மன்னித்து ஈழத் தமிழர்களின் அவலம் தீர உதவ வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

தமிழர் பேரவை சார்பில் இலங்கையின் செஞ்சோலை முகாமில் இலங்கை விமானத்தாக்குதலில் உயிர் நீத்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

செஞ்சோலை முகாமில் உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டன. சுப. வீரபாண்டியன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தை தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொடங்கி வைத்தார்.

திரைத்துறையினர் , கவிஞர்கள், தமிழறிஞர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள் ஏராளமானோர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். கவிப் பேரரசு ரைவமுத்து நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார்.

இலங்கை முல்லைத் தீவில்செஞசோலை பிஞ்சுகளுககாக கனத்த மனத்தோடு இங்கே கண்ணீர் அஞ்சலி செலுத்தகூடி இருக்கிறோம். பறித்து வைக்கப்பட்ட காய்கறிகளாக அடுக்கி வைக்கப்பட்ட பிஞ்சுப் பிணங்களைப் பார்க்கும் போது நெஞ்சு வெடிக்கிறது.

கும்பகோணம் தீவிபத்தில் இறந்து போன கொழுந்துக் குழந்தைகளுக்காக தமிழ்நாடு எழுந்து நின்று அழுதது. கும்பகோணத்தில் நடந்தது விபத்து, செஞ்சோலையில் நடந்தது படுகொலை. விபத்துக்கு அழுகிற தமிழா, கொலைக்கு அழ மாட்டாயா என்று கேட்கத் தோன்றுகிறது.

ஈழத்தமிழினம் யுத்தத்தில் அழிந்து விடுமோ என்ற அச்சம் இங்கே எழுப்பப்பட்டது. ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. யுத்தத்தால் புலிகளை வெல்ல முடியாது என்ற உணர்வு சிங்கள ராணுவத்திற்கு இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழன் செயவது உணர்ச்சிகரமான யுத்தம். இனம் காக்க, நலம் மீட்க அவன் புரியும் யுத்தம் சத்தியமானது.

உணர்ச்சியுள்ள யுத்தம் தான் வலிமையானது. ஒருசிங்கம் முயலைத் துரத்தும் போது சிங்கத்தின் வேகம் அதிகமா? முயலின் வேகம் அதிகமா? என்று கேட்டால், முயலின் வேகம்தான் அதிகமாக இருக்கும். தமிழன் இன மானம் காக்க போராடும் போது அவன் போர் தான் வெல்லமுடியாததாக இருக்கும்.

இலங்கைத் தமிழர்களின் துயரத்தில பங்கேற்கும் விதமாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் கருணாநிதியின் உள்ளத்தின் வலிமையை உணர்கிறோம். இந்திய அரசுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். சிங்கள அரசுக்கு எந்த நிலையிலும், ஆயுதங்களை வழங்கி விடாதீர்கள். அது தமிழர்களுக்கு ஆபத்து.

பாகிஸ்தானிடமிருந்தும் சிங்கள அரசு ஆயுதங்கள் வாங்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது இந்தியாவுக்கே ஆபத்து. இரண்டிலும் இந்திய அரசு கவன¬டன் இருக்க வேண்டும்.

சோனியா காந்தி அம்மையாருக்கு இந்த நேரத்தில ஒரு வேண்டுகோள். நீங்கள் தியாக திருவிளக்கு. பாரத பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தீர்களே, அதற்காக சொல்லவில்லை. உங்களது மாமியார் இந்திரா காந்தியை சுட்டு வீழ்த்தியவர் ஒருசீக்கியர். ஆனால் அந்த பழைய சோகத்தை மன்னித்து விட்டு ஒரு சீக்கியரையே இந்திய நாட்டுப் பிரமதர் ஆக்கினீர்களே. அதுதான் உங்கள் தியாகத்தின் உச்சம்.

சீக்கிய மண்ணின் பிழைய மன்னித்த நீங்கள், தமிழ் மண் செய்த ஒரு பிழையை மன்னிக்கக் கூடாதா? உங்கள சோகம் பெரியது. நிகழ்ந்திருக்கவே கூடாது. ஆறுதல் மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அதையும் தாண்டி அந்தப் பிழையை நீங்கள் மறந்து மன்னித்தால் சிகரத்தின் உச்சிக்கே சென்று விடுவீர்கள்.

இலங்கைத் தமிழர்களின் அவலம் தீரட்டும். அங்கே ஒரு நிரந்தர விடியல் வேண்டும் என்றார் வைரமுத்து

http://thatstamil.oneindia.in/news/2006/08...8/30/tamil.html

எங்களுக்காக அவர் மன்னிப்புக் கேட்கிறார்..! ஆனால் இங்கு...அம்மா என்று ஒரு ஆட்சித் தலைவரை உச்சரிக்கக் கூட மனம் விடுகுதில்லை..ஈழத்தமிழர்களிட

  • தொடங்கியவர்

எங்களுக்காக அவர் மன்னிப்புக் கேட்கிறார்..! ஆனால் இங்கு...அம்மா என்று ஒரு ஆட்சித் தலவைரை உச்சரிக்கக் கூட மனம் விடுகுதில்லை..ஈழத்தமிழர்களிட

ஓருவரை தாக்கி எழுதவேண்டாம் வடிவு பாவம் அவர் இது நாகரீகம் அல்ல

கவிஞர் வைரமுத்து அவர்களுக்கே தமிழ் படிப்பீக்க ஒருவர் முயல்வதை எண்ணி மகிழ்ச்சி...... :wink: :P :P :P

தமிழ் மண்ணின் பிழையை எண்றுதான் சொல்லி மன்னிப்பு கேட்டார் கவிஞர்.... அதாவது தமிழக மண்ணில் நடந்த துன்பியல் சம்பவத்துக்காக.....! அவ்வளவு அவதானமாகதான் கவிகள் பேசியுள்ளார் எண்றுதான் நான் இதுவரை நினைத்து இருந்தேன் இந்த பகுதியை படித்த பின்னர்தான் அப்படி இல்லை எண்று புரிகிறது........!

பல கருத்துக்கள் அழிக்கபட்டு விட்டன ஏன் என்று தெரியவில்லை நாம் தப்பாக எழுதவில்லையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல கருத்துக்கள் அழிக்கபட்டு விட்டன ஏன் என்று தெரியவில்லை நாம் தப்பாக எழுதவில்லையே

வைரமுத்து அவர்கள் ஈழ தமிழர்/என்று கூறவில்லை, பொதுப்படையாக தமிழ் மண் என்று தான் கூறியுள்ளார். தமிழகத்தில் எம்போராட்டம் சார்பில் ஏற்படும் மனமாற்றத்தை கவனத்த்தில் எடுத்து கருத்தெழுதவும்.

சீககிய மண்ணின் பிழையை (இந்திரா காந்தி படுகொலை) மன்னித்த சோனியா காந்தி அம்மையார், தமிழ் மண் செய்த பிழையையும் (ராஜீவ் காந்தி படுகொலை) மன்னித்து ஈழத் தமிழர்களின் அவலம் தீர உதவ வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

அது புரிய உமக்கு வயசு காணாது வடிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்றால் ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு தவறு செய்யவில்லை என்கிறீர்கள். தமிழ் நாட்டு தமிழர்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஏதோ தவறு செய்துவிட்டார்கள் போல் உள்ளது. அது எங்களிற்கு தெரியவில்லை. மன்னிக்கனும். அதற்கு தான் தமிழ் நாட்டு தமிழர்களின் சார்பில் வைரமுத்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் போல்.

நாங்கள் தமிழ் மண் என்றால் ஈழத்தையும் தமிழ் நாட்டையும் சேர்த்து பார்த்துவிட்டோம். ஆனால் வைரமுத்து பிரித்து பார்த்துள்ளார் என்பது இப்பொழுது நீங்கள் சொல்லி தெரிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா என்ரை கருத்தை அளிக்கிறீங்கள். நான் எதாவது தப்பா எழுதிறேனா?

அப்போ ரஜீவ் ஈழத்தில் செய்தகொலைகள் என்ன கோயில் கணக்கா?????????

  • தொடங்கியவர்

அப்படி என்றால் ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு தவறு செய்யவில்லை என்கிறீர்கள். தமிழ் நாட்டு தமிழர்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஏதோ தவறு செய்துவிட்டார்கள் போல் உள்ளது. அது எங்களிற்கு தெரியவில்லை. மன்னிக்கனும். அதற்கு தான் தமிழ் நாட்டு தமிழர்களின் சார்பில் வைரமுத்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் போல்.

நாங்கள் தமிழ் மண் என்றால் ஈழத்தையும் தமிழ் நாட்டையும் சேர்த்து பார்த்துவிட்டோம். ஆனால் வைரமுத்து பிரித்து பார்த்துள்ளார் என்பது இப்பொழுது நீங்கள் சொல்லி தெரிகின்றது.

சரிபா இந்த ஜரோபிய நாடுகளுக்கு புலிகள் என்ன செய்தார்கள்? அப்படி இருந்து தடைவரவில்லையா?

உங்களை யார் இந்தியா செய்ததை மறக்க சொன்னது?

வருசம் வருசம் நினைவுகள் கொண்டாடுங்கோ அழுங்கோ

அதுக்காக இந்தியன் யாரவ்து எம்க்காக குரல் கொடுத்தால் இல்லை உனது நாட்டுகாரன் இப்படி செய்தான் அப்படி செய்தான் என்று அவனுக்கு தடை போட வேண்டாம்

நாளை ஒரு நாள் இந்தியாவும் ஈழமும் நட்பு நாடாகவும் இருக்கும் அதுக்காக ஈழம் இந்திய போரில் இறந்த போராளிகளை மறக்க முடியுமா? இல்லை வருடம் வருடம் நினைவுகள் செலுத்த பட வேண்டும் அதே மாதிரியும்

இந்தியாவும் தான் ஈழ போரில் இறந்த இராணுவத்தை நினைவுகூறுவார்கள் அது வேற ஏன் என்றால் ஈழம் கிடைத்த பின் நாம் இந்திய பாகிஸ்தான் போல இருக்க முடியாது இஸ்ரேலும் அமெரிக்காவும்(இந்தியா&ஈழம்) போல் இருப்போம்

இருக்க வேண்டிய தேவியும் இருக்கு அது தான் நடக்கும்

  • தொடங்கியவர்

அப்போ ரஜீவ் ஈழத்தில் செய்தகொலைகள் என்ன கோயில் கணக்கா?????????

இது பற்றி தானே ஒரு தனி தலைப்பில் தொடங்கினர் என்ன மாதிரி போகுது? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி வடிவு உமக்க போரில் மண்டையில் அடிபட்டு விட்டதா?? நான் என்னமோ எழுதுகிறேன் நீர் என்னமோ தடைசெஞ்சிட்டாங்கள் மறந்திட்டாங்கள் என்டு.

  • தொடங்கியவர்

தம்பி வடிவு உமக்க போரில் மண்டையில் அடிபட்டு விட்டதா?? நான் என்னமோ எழுதுகிறேன் நீர் என்னமோ தடைசெஞ்சிட்டாங்கள் மறந்திட்டாங்கள் என்டு.

முத்த பிள்ளை எப்பவும் :P :?: அவரம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் இது சரிவராதப்பு. பேசி முடிச்சிட்டு சொல்லும் வாறன்.

பழைய சம்பங்களை..நாங்கள் பட்ட துயரங்களை..அறியாதவர் தெரியாதவர்..

பேசலாம்..குருவிகள் நீங்களுமா..எத்தனை துன்பியல் சம்பவங்களுக்கு காரணங்களா அமைந்தது அமைதிப்படை வரவு

...

அந்தப்பொழுதில் அந்த அனோநிலையில்.. அந்த நடவடிக்கை..

நடந்தேறியது..

இது போக..பேசுபவர்கள் எதுவேண்டுமானாலும் பேசலாம்..

இந்தப் போராட்டம் படையிலிருந்து வந்ததல்ல..தனிமனித விதையிலிருந்து வந்தது.

தயவுசெய்து ஈழத்தமிழனாக இருந்து..முரணாக பேசி நொந்த இதயங்களை..வேதனை செய்யாதீர்கள்.

இந்த இழுக்கு உங்கள் சந்ததி வரை காவிச்செல்லாதீர்கள்.

மேற்கோள்:

தமிழ் மண்ணின் பிழையை எண்றுதான் சொல்லி மன்னிப்பு கேட்டார் கவிஞர்.... அதாவது தமிழக மண்ணில் நடந்த துன்பியல் சம்பவத்துக்காக.....! அவ்வளவு அவதானமாகதான் கவிகள் பேசியுள்ளார் எண்றுதான் நான் இதுவரை நினைத்து இருந்தேன் இந்த பகுதியை படித்த பின்னர்தான் அப்படி இல்லை எண்று புரிகிறது........!

ஆகா ஓகோ தமிழ்மண்

மேற்கோள்:

வைரமுத்து அவர்கள் ஈழ தமிழர்/என்று கூறவில்லை, பொதுப்படையாக தமிழ் மண் என்று தான் கூறியுள்ளார். தமிழகத்தில் எம்போராட்டம் சார்பில் ஏற்படும் மனமாற்றத்தை கவனத்த்தில் எடுத்து கருத்தெழுதவும்

சரி நீங்கள் சொல்வது போலவே வைத்துக் கொள்வோம். அப்படியாயின் எமக்குச் சம்மந்தமில்லாத விடயத்தை ஏன் வைரமுத்து எமது உயிர் நீத்த உறவுகளின் அஞ்சலிக் கூட்டத்தில் கையாள வேண்டும். யாழ்பாடி இதற்குரிய பதிலை உங்களால் தரமுடியுமா?? அல்லது இதையும் து}க்கிவிட்டு சந்தோசப்பட போகின்றீர்களா??

இந்த கருத்தை நான் முதலில் எழுதவில்லை. அதை முதலில் கவனத்தில் கொள்ளவும்.

ஆகா ஓகோ தமிழ்மண்

நான் சொன்னது கவிஞர் வைரமுத்துஅவர்கள் தமிழீழம்- தமிழகம் என பிரித்து கருத்தை வைக்கவில்லை. தமிழ் மண் என பொதுவாகவே வைத்துள்ளார் என்பதே.

இது தல எழுதியது.

இதே கருத்தை பிரதிபலிக்கும் முகமாகவே நான் எழுதி இருந்தேன்

அத்துடன் இப்பகுதியில் வைரமுத்து அவர்களையும், தனிப்பட்ட ரீதியில் விமர்சித்தும் தற்போதைய , தற்போதைய தமிழக மக்களின் ஈழ்ப்போராட்டம் சார் கருத்த்நிலையை பாதிக்க/ அவமதிக்க மாதிரியானதும் கருத்துக்கள் வைக்கப்பட்டு அவை நீக்கப்பட்டன. அதை கருத்தில் கொண்டே மேலே சொன்ன கருத்து வைக்கப்பட்டது. அதாவது தமிழக மக்களும், அரசியல் வாதிகளும் எமக்கு சார்பான நிலை எடுக்கும் போது அதை பாதிக்கும் வகையில் கருத்தெழுதுவதை தவிருங்கள் என்பதற்காகவே சொல்லப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக தமிழக அரசு ஆதரிக்கும் போது அவர்களிற்கு சார்பாக பேசுவீர்கள். ஆதரிக்காத போது எப்படி வேணும் என்றாலும் பேசலாம? இது உங்கள் சுயநலத்தை காட்டுகின்றது.

இப்பொழுது வைரமுத்து தமிழீழத்தையும் தமிழகத்தையும் பிரித்து பேசவில்லை என்று சொல்கிறீர். ஆனால் முதல் அவர் தமிழ்மண் என்று மாத்திரமே குறிப்பிடுகிறார் என்று சொன்னீர். அப்படியானால் அவர் தமிழ்மண் என்று ஈழத்தையும் சேர்த்து குறிப்பிடுகிறாரா?

அன்னை சோனியா காந்தி அந்த துன்பியல் சம்பவத்தை எப்போதோ மறந்து விட்டார்... சில அல்லக்கைகள் தான் தேவையில்லாமல் இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றன.... தமிழர் ஒற்றுமை ஒன்றே இந்த அல்லக்கைகளை அடக்க வல்லது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக தமிழக அரசு ஆதரிக்கும் போது அவர்களிற்கு சார்பாக பேசுவீர்கள். ஆதரிக்காத போது எப்படி வேணும் என்றாலும் பேசலாம? இது உங்கள் சுயநலத்தை காட்டுகின்றது.

இப்பொழுது வைரமுத்து தமிழீழத்தையும் தமிழகத்தையும் பிரித்து பேசவில்லை என்று சொல்கிறீர். ஆனால் முதல் அவர் தமிழ்மண் என்று மாத்திரமே குறிப்பிடுகிறார் என்று சொன்னீர். அப்படியானால் அவர் தமிழ்மண் என்று ஈழத்தையும் சேர்த்து குறிப்பிடுகிறாரா?

நான் எந்த இடத்திலும் தமிழக அரசை விமர்சித்தோ அல்லது தமிழக அரசியல் வாதிகளை விமர்சித்தோ கருத்து வைத்ததும் இல்லை,

விவாதங்களில் கருத்து எழுதுவதும் இல்லை. இப்பகுதில் ஈழவன்85 பல கருத்துக்கள் நீக்கப்பட்டதாக கேட்ட வினாவுக்கு விளக்கம்ளிக்கவே அப்பதில் வைக்கப்பட்டது. மற்றும்படி இப்பகுதியில் நடக்கும் விவாததில் கலந்துகொள்ள அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை தானே லக்கி நானும் சொல்லுறன். ஆனா சில பேர் தமிழ் மண் என்டா தமிழ் நாடு மட்டும் தான் என்டு நிக்கினம். இதுக்கு என்ன செய்யிற?

லக்கி, க க க போ :D :D :D

அதை தானே லக்கி நானும் சொல்லுறன். ஆனா சில பேர் தமிழ் மண் என்டா தமிழ் நாடு மட்டும் தான் என்டு நிக்கினம். இதுக்கு என்ன செய்யிற?

எனக்குப் புரிந்தவரை வைரமுத்து கூறிய தமிழ் மண் என்பது உலகின் ஒட்டுமொத்த தமிழர்களைக் குறிக்கிறது என நினைக்கிறேன்....

சீக்கியர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா என்பது தான் வைரமுத்து கேட்கும் கேள்வி.... அதை அவர் தமிழாற்றலால் மிக மிக தன்மையாகக் கேட்டிருக்கிறார்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.