Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன்; ஜனாதிபதி ஆணைக்குழு முன் அனந்தி சசிதரன் சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ananthi+sashitharan.jpg

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் கணவர் சசிதரனை (தமிழீழ விடுதலைப் புலிகளின்  முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன்) இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன்மூதல் அமர்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது. அந்த அமர்பின் மூன்றாம் நாளான இன்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டு வாக்குமூலமளிக்கும் போதே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 “2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நானும், எனது கணவரும், பிள்ளைகளும் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். அப்போது, என்னையும், பிள்ளைகளையும் தனியாக வவுனியாவுக்கு அழைத்துச் சென்ற இராணுவத்தினர், எனது கணவரை விசாரணைகளின் பின் விடுதலை செய்யவதாக தெரிவித்தனர். நானும் எனது பிள்ளைகளும் செட்டிக்குளம் மெனிக்பார்ம் முகாமில் தங்கவைக்கப்பட்டோம். ஆனாலும், கணவர் பற்றிய விபரங்கள் அதன் பின்னர் கிடைக்கவில்லை.

 கடைசியாக, 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது கணவரை ரயிலில் அழைத்துச் செய்வதைக் கண்டதாக உறவினர் ஒருவர் கூறினார்.  கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் அப்படித்தான் இருப்பேன்” என்று அனந்தி சசிதரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நீங்கள் உங்கள் கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியினை அடையாளப்படுத்த முடியுமா? என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் கேள்வி எழுப்பினர்.

 அதற்கு பதிலளித்துள்ள அனந்தி சசிதரன், “எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து 4 வருடங்கள் கடந்துவிட்டன.  அன்றைய தினம் நான் அவரை ஒப்படைக்கும் போது மோதலின் அகோரத்தினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். அதனால் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் என்பதை, அவர்களின் உடைகளிலிருந்த சின்னங்கள் மூலம் உணரமுடிகிறதே தவிர; அவர்களை என்னால் அடையாளப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.4tamilmedia.com/newses/srilanka/20155-2014-01-20-07-53-10

நேரத்தையும் இடத்தையும் சொன்னால்...இலங்கை இராணுவம் தகுந்த முறையில் பதிலளிக்க வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

நேரத்தையும் இடத்தையும் சொன்னால்...இலங்கை இராணுவம் தகுந்த முறையில் பதிலளிக்க வேண்டும்...

 

விசாரணையை ஆரம்பிக்கும் முதலே

அவர்கள் இதற்கான பதிலை தெரிவு செய்துவிட்டே விசாரணையை  ஆரம்பித்திருப்பார்கள்

ஏனெனில்

என்ன  நடந்தது என்று எமக்குத்தான் தெரியாது

ஆனால் அவர்களுக்கு

இடம்

நேரம்

செய்தவர்

செய்யச்சொன்னவர்.............

எல்லாம் தெரியும்

தெரிந்து கொண்டே  வழக்கை தாமே ஆரம்பிப்பது

பேய்க்காட்டலாம் என்ற  ஆசையில்

ஆனால்

உலகம் அடுத்த கட்டத்துக்கு போய்விட்டது

பொறுத்திருந்து பார்க்கலாம்

துணிச்சலாக தனது கணவருக்காகவும் காணாமல் போன உறவுகளுக்காகவும் தன்னம்பிக்கையுடன் தன்னம் தனியே வாதாடும் திருமதி அனந்தி சசிதரன் பாராட்டுக்குரியவர். இலங்கையில். சட்டப்படிப்பு படித்த தமிழ் பழைய அரசியல்வாதிகளிடமே இந்த துணிவு இருக்கவில்லை. இந்த துணிவும் அர்ப்பணிப்பும் அவர்களிடம் இருந்திருந்தால் நாட்டில் ஆயுத போராட்டமே தொடங்கியிராது.

துணிச்சலாக தனது கணவருக்காகவும் காணாமல் போன உறவுகளுக்காகவும் தன்னம்பிக்கையுடன் தன்னம் தனியே வாதாடும் திருமதி அனந்தி சசிதரன் பாராட்டுக்குரியவர். இலங்கையில். சட்டப்படிப்பு படித்த தமிழ் பழைய அரசியல்வாதிகளிடமே இந்த துணிவு இருக்கவில்லை. இந்த துணிவும் அர்ப்பணிப்பும் அவர்களிடம் இருந்திருந்தால் நாட்டில் ஆயுத போராட்டமே தொடங்கியிராது.

மெத்தபடித்த கொழும்பு தமிழ் வர்க்கத்திற்கும் போராட ஆசை தான் ஆனால் பாழாய் போன சொத்துக்கள் வியாபாரங்கள் பாதித்துவிடும் என்ற கொள்கையால் முடியவில்லை.

சிங்களவனை கண்டால் பயந்து சிங்களத்தில் பேசிவிட்டு பின் சுதந்திர சொற்பொழிவு நடத்துவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.