Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் இரகசியங்களை வெளியிடத் தயாராகிறார் லக்ஷ்மன் ஹுலுகல்ல? – ஐரோப்பாவில் அடைக்கலம் தேட முயற்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
hulugalla-030214-150.jpg

பதவியில் இருந்து நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் போர் இரகசியங்களை வெளியிட ஐரோப்பாவுக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தினால் அண்மையில் கலைக்கப்பட்ட அரச நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரியாக பணியாற்றி இவர், ஐரோப்பிய நாடொன்றின் தூதரகத்திடம் அதற்கான சந்தர்ப்பத்தை கோரியுள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த அதிகாரி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

போர் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான மிகவும் முக்கியமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளியிட சந்தர்ப்பம் வழங்குமாறு இந்த அதிகாரி ஐரோப்பிய தூதரகம் ஒன்றிடம் கேட்டுள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இந்த அதிகாரி குறித்து அவ்வப்போது பரப்பரப்பான தகவல்கள் வெளியாகி வந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக இருந்த லக்ஷ்மன் ஹுலுகல்லவே இவ்வாறு போர் இரகசியங்களை வெளியிடத் தயாராகி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=102828&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அமுக்கணும் ஆளை....

அச்சா! அப்ப இன்ற்றிரவு புட்டுக்கு கோழிக்கறிதான் தொட்டுக்க.

இனி கோழி துவக்கினால்த்தான் தற்கொலை முயற்சி பண்ண போகுது.

இந்த திருடனுக்கும் போருக்கும் தொடர்பில்லை. சிங்கள் குற்றவாளிகள் அடைக்கலம் பேறுவதை அந்த நாட்டு தமிழ்ர்கள் எதிர்ப்பு காட்ட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சில மாதங்களுக்கு முன் தற்கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பியவர். அரசின் அழுத்தம் காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியே இதன் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. ஏனென்றால், ஒருவர் போர்க்குற்ற ரகசியங்களை வெளியிட விரும்புகிறேன் , அடைக்கலம் தாருங்க்கள் என்று கேட்டுக்கொண்டே அந்த நாட்டில் இருப்பது எப்படியென்பதை முதலில் இந்தச் செய்தியை இட்டவர்கள் விளங்கப்படுத்தினால் நல்லது. ஒன்றில் ஜூலியன் அசாஞ்சைப் போலவோ அல்லது எட்வார்ட் ஸ்னோடனைப் போலவோ இலங்கையிலுள்ள இன்னொரு நாட்டின் (அமெரிக்க, இங்கிலாந்து, கனேடிய) தூதரகங்களில் ஒன்றினுற் சென்று அடைக்கலம் தாருங்கள் என்று கேட்டால் அதை ஓரளவிற்கு நம்ப முடியும்.ஆனால், அப்படி எதுவுமேயில்லாமல் ஒருவர் வெறுமனே வீட்டிலிருந்துகொண்டே, போர் ரகசியங்களை வெளியிடப்போகிறேன், அடைக்கலம் தாருங்கள் என்று கேட்கிறார் என்பதை எப்படி நம்புவது. அவர் அப்படியொரு யோசனை வைத்திருக்கிறார் என்று தெரிந்தவுடனேயே கோத்தாபய அவரை இல்லாமல்ச் செய்துவிடுவாரே??? 

நல்லதொரு செய்தி.....!

ஆனால், போர்க்களத்தில் ராணுவத்தின் முன்னேறிச் சென்ற பிரிவொன்றுடன் தொடர்ந்தும் பயணித்த அரசு ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒளிப்படப் பிடிப்பாளர் ஒருவர் போர் முடிந்த சில மாதங்களுக்குள் வெளிநாடொன்றுக்கு இடம்பெயர்ந்து சென்று, பெரும் பணத்திற்கு அந்த ஆதாரங்களை வெளியிட்டு வருவதாக ஒரு சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்ததும் நினைவிலிருக்கிறது. 

அண்ணா,

இவர் மீது சேறு வாரி இறைக்க கொத்தியே புரளியை கிளப்பி இருக்கலாம்.

இனி விசாரணை என்று சகோதரத்துவ துன்புறுத்தல் செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.