Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடுக்குள நீரை யாழ்.குடாவிற்கு வழங்கும் திட்டம் இராணுவத் தேவைக்கே : ஸ்ரீதரன் எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(Priya Rasa)
 
இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ் குடாநாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என்ற துடித்து நிற்பது  யாழ் குடாநாட்டு மக்களின் நன்மை கருதி அல்ல இங்குள்ள இராணுவ முகாம்கள் மற்றும் எதிர் காலத்தில் இடம் பெற அரசு திட்டம் தீட்டியுள்ள சிங்கள குடியேற்றத்திற்கும் குடி நீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இன்று நடைபெறும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
sridharan.jpg
 
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
கிளிநொச்சியில் வாழ்பவர்களும் கூட யாழ்ப்பாணத்து மக்களே என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் வேறு கிளிநொச்சியில் உள்ள மக்கள் வேறு என யாரும் கருதக்கூடாது. இன்று சிங்கள பேரினவாத அரசாங்கமும் அரசுடன் தொடர்புடைய உடுகங்களும் பிரதேச வாதத்தை வளர்க்கும் வகையில்  திட்டமிட்டு செயல்படுகின்றார்கள்.
 
இது எதிர் காலத்தில் சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்பக்கு நாம் இடம் கொடுத்தவர்கள் ஆவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த வொரு சந்தர்ப்பத்திலும் கிளிநொச்சி மக்கள் யாழ்ப்பாணத்திறக்கு குடி நீர் கொடுக்க வேண்டாம் என்று கூறியவர்கள் அல்ல.
 
அவர்கள்வேண்டுவது எல்லாம் பெரும் போகத்தில் 24 ஆயிரம் ஏக்கர் காணியில் நெற்செய்கை மேற்க்கொள்ளக் கூடியதாகவும் சிறு போகத்திலும் கூட  பன்னிரெண்டாயிரம் ஏக்கரிலோ பதினெட்டாயிரம் ஏக்கரிலோ நெல் செய்வதற்கான நீரை வழங்க உறுதி மொழி தந்துவிட்டு செய்யுங்கள் என்பதே ஆகும்.
 
இதற்கு யாரும் தயாராக இல்லை. எதிர் காலத்தைப் பற்றிக் கேட்டால் பதில் கூறுவதற்க்கோ அன்றி உத்தரவாதம் தருவதற்க்கோ யாரும் தயாராக இல்லை. ஆனால் தாம் பெறும் சம்பளத்தை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளையே உரிய அதிகாரிகள் மேற்கொள்கின்றார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 
 
 
 

தமிழரின் நிலத்தை பிடுங்கி கட்டி வைத்திருக்கும் நீச்சல் தடாகங்களை நிரப்பி களியாட்டம் ஆட விவசாய பாசன தண்ணீரா?

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நாங்களும் சொன்னோம்.. :rolleyes: தண்ணீர்த் தேவை இராணுவத்துக்கே தவிர மக்களுக்கானது அல்ல.. வாய்க்காலுக்கு அருகில் வசிப்பவர்கள் சொம்பில் அள்ளிக்கொள்ள அனுமதி கிடைக்கலாம்.

இதைத்தான் நாங்களும் சொன்னோம்.. :rolleyes: தண்ணீர்த் தேவை இராணுவத்துக்கே தவிர மக்களுக்கானது அல்ல.. வாய்க்காலுக்கு அருகில் வசிப்பவர்கள் சொம்பில் அள்ளிக்கொள்ள அனுமதி கிடைக்கலாம்.

அந்த வாய்க்காலில் உருண்டு பிரண்டு விளையாடியவன் நான். பசுமையான முத்தைய்யன் கட்டு நினைவுகள். :)

சில்லறை போட்டால் தான் சொம்பு தண்ணியும் கிடைக்கும்.

பிரதேச வாதத்தைத் தூண்டிவிட சிங்களம் கையில் எடுத்திருக்கும் ஒரு ஆயுதமே இந்த இரணைமடு நீர் விவகாரம்.... 

போரினால் அனைத்தையும் இழந்திருக்கும் வன்னி வாழ் மக்களின் நீர்த் தேவை முழுமையாகப் பூர்த்தியடைந்து மீதமாகத் தண்ணீர் இருந்தால் மட்டுமே அதைக் கேட்பதற்கான உரிமை யாழ் மாவட்டத்திற்கு இருக்கிறது.

குடாநாட்டின் குடிநீர்த் தட்டுப்பாட்டை ( அப்படி ஒன்று இருந்தால்) தீர்ப்பதற்கு மாற்று வழி குறித்து  சிந்திப்பதே அந்த விவசாயிகளுக்கு செய்யும் பேருதவி....

  • கருத்துக்கள உறவுகள்

மகாவலியினை முன்னிறுத்தி இலங்கை அரசு தொடங்கியிருப்பது இன அழிப்பின் அடுத்த கட்டம் 

 

 

இலங்கை அரசு மீண்டும் மகாவலியை வடக்கிற்கு கொண்டு வரப்போவதாக கூறுகின்றது. மறுபுறம் மாங்குளத்தினில் ஜந்து இலட்சம் மக்கள் வாழ்கின்றதான யாழ்ப்பாணத்திற்கு ஈடான நகரமொன்றை உருவாக்கப்போவதாக கூறுகின்றது. தற்போது இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் எடுத்துச்செல்லப்போவதாக கூறுகின்றது. மாங்குள நகரம் உருவான பின்னர் அதற்கும் இரணைமடுவிலிருந்தே தண்ணீர் எடுத்துச் செல்லப்படப் போவதாக கூறப்படுகின்றது. முதலில் மாங்குளத்தினில் குடியேற்றப்படப் போகின்ற ஜந்து இலட்சம் பேரும் யாரென்பது தெரிய வேண்டும். தற்போது மகாவலியினை முன்னிறுத்தி இலங்கை அரசு தொடங்கியிருப்பது இன அழிப்பின் அடுத்த கட்டமென எச்சரித்துள்ளார் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. கிளிநொச்சியில் உள்ள தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லுங்கள் என்றே சொல்கிறோம.

 

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டுவர உள்ளதாகவும் அதனை கிளிநொச்சி மக்கள் எதிர்ப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, இரணைமடு குளத்து நீர் கிளிநொச்சிக்கே போதாது உள்ளது.

 

அந்நீரினை கொண்டு இப்பொழுது 8 ஆயிரம் ஏக்கர் சிறுபோக விவசாயமே செய்ய முடிகிறது. அதனை 16 ஆயிரம் ஏக்கராகவோ 24 ஆயிரம் ஏக்கராகவோ விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் சேகரித்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லாம். இம்முறை மழை பொய்த்ததால் அந்த சிறுபோகமும் கேள்விக்குறியாக இருக்கிறது.

 

யாழ்ப்பாணத்தை பொருத்தவரை தண்ணீர் பற்றாக்குறை உண்டு என யாருமே இதுவரை கூறவில்லை. யாழ்ப்பாணத்தில் காணப்படும் நன்னீர் நிலைகளை பாதுகாத்து சீரமைத்தாலே யாழ்ப்பாண தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். யாழ்ப்பாணத்தில் உள்ள இதுவரை ஆழமே காணப்படாத நிலாவரை கிணறு, வழுக்கையாறு மற்றும் இடியுண்டு குளம் ஆகியவற்றை புனரமைத்து நன்னீர் ஆக்கலாம்.

 

அதேபோல தொண்டமனாறு துருசு திருத்தப்பட்டுள்ளதால் வடமராட்சசியினில் உவர் நீர் நன்னீராகத் தொடங்கியுள்ளது. அதே போன்று அரியாலையில் உள்ள நன்னீர் தடுப்பு சுவர்களை புனரமைப்பதன் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்கலாம். இவ்வாறு யாழ்ப்பாண நீர்நிலைகளை முகாமைத்துவம் செய்யாமல் யாழ்ப்பாண உணவு களஞ்சியமான கிளிநொச்சி விவசாயத்தை அழித்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கின்றார்கள்.

 

கிளிநொச்சியில் பாரிய தண்ணீர் பிரச்சினை உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி பிரதேசத்தில் வாழும் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு நன்னீர் இல்லை. அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இன்னும் சில கிராமங்களுக்கு நன்னீர் இல்லை விவசாயத்திற்கு நீர் போதாமல் உள்ளது . அதுமட்டுமின்றி இம்முறை மழைவீழ்ச்சி போதாமையால் இரணைமடு குளத்தில் 15 அடி தண்ணீரே சேகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்ட பின்னர் கோடை காலத்தில் குளத்தில் நீர் இல்லாத போது பயிரா? உயிரா? என்ற பிரச்சினை உருவாகும். பின்னர் இந்தியாவில தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் உள்ளது போல இங்கும் பிரச்சினைகள் உருவாகும்.

உண்மையினில் இரணைமடு குளத்து நீரை யாழ்ப்பாண மக்கள் கேட்கவில்லை.இலட்சங்களிலும் மில்லியன்களிலும் வருமானம் பார்க்கும் அதிகாரிகள் சிலரே இதில் முனைப்பு காட்டுகின்றனர்.அருகாகவுள்ள பூநகரிக்கு சாவகச்சேரிக்கு குழாய் மூலம் நீரினை கொண்டுவந்து பின்னர் அங்கிருந்து பூநகரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல தி;;ட்டமிட்டுள்ளனராம்.

இத்திட்டத்திற்கான ஆலோசனை மற்றும் அதிகாரிகளிற்கு கொடுப்பனவென இரண்டாயிரம் மில்லியன ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் குளத்தை ஆழப்படுத்த வெறும் 1800 மில்லியனே ஒதுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் தட்டுப்பாடு என கூறி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டுவர முயல்கிறார்கள்.

கிளிநொச்சியிலிருப்பவர்கள் யாழப்பாணத்திலிருந்து வந்தவர்களே.இரணைமடுவினில் உள்ள வயல்களினில் 80 சதவீதம் யாழ்ப்பாணத்தவர்களினதே. இந்நிலையினில் அவர்களிடையே பிளவை தூண்ட சிலர் முற்படுகின்றனர்.யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியர்கள் வன்னி வரமாட்டார்களென கூறுகின்றனர்.இது திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் சதியே.ஒரு ஆசிரியரும் அவ்வாறு கூறியிருக்கவில்லை.திரிபு படுத்தி செய்திகளை வெளியிடுகிறார்கள்;.

 

எனவே எமது சுதேசியம் அழிக்கப்பட்டு பல்தேசியம் ஊடுருவ வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமா என நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103025/language/ta-IN/article.aspx

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வளங்களின் பற்றாக்குறைதான் மக்களை வடகிழக்கின் ஏனைய பகுதிகளுக்கு அனுப்பி எம் தாயகப் பிரதேசத்தை மனித வளத்தால் இன்றும் தக்கவைக்கின்றது என்பதை விக்னேஸ்வரன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வளங்களின் பற்றாக்குறைதான் மக்களை வடகிழக்கின் ஏனைய பகுதிகளுக்கு அனுப்பி எம் தாயகப் பிரதேசத்தை மனித வளத்தால் இன்றும் தக்கவைக்கின்றது என்பதை விக்னேஸ்வரன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

உண்மை. சிறிய குடாவிற்குள் முடங்கி இருக்கும்  யாழ் மக்கள் வளமான வன்னிபகுதிக்கு குடிபெயர்வதன் மூலம் தாங்களும் பயன்பெறலாம். எமது தாயக பகுதியையும் தக்கவைக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வளங்களின் பற்றாக்குறைதான் மக்களை வடகிழக்கின் ஏனைய பகுதிகளுக்கு அனுப்பி எம் தாயகப் பிரதேசத்தை மனித வளத்தால் இன்றும் தக்கவைக்கின்றது என்பதை விக்னேஸ்வரன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நல்ல கருத்து.

முன்பு நீங்கள் யாழ் நீர் விடய கருத்தாடலில் எல்லா குளங்களும் நிலத்தடி ஊற்றுகளை தொடுவதாக கூறியிருந்தீர்கள்.

இங்கு டொரோண்டோவிலும் நிலத்தடி நீர் இல்லாத படியால் 100க்ஷ்100க்ஷ்15 அடி குளம் வெட்டி மழை நீர் சேகரித்து பாவிக்கிறோம். வறண்ட கோடையில் 5 ஏக்கர் வரை நீர் பாசனம் செய்வோம்.

இப்படியான நீர்தேக்கிகளை யாழில் அமைக்க முடியாதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.