Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்து மதத்தில் உள்ள குறைகளை களைந்து விட்டு மற்ற மதத்தில் உள்ள குறைகளை பாருங்கள் என சொல்பவர்கள் முதலில் தங்கட மதத்தில் உள்ள குறைகளை களையலாமே <_<

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் 

 

அன்ன இன்னும் அம்மா அப்பா சாமிகள் இந்தியாவில் அருள் பாலித்துகொண்டு தான் இருக்கிறார்கள்

அதை நம்பி அங்க ஒரு கூட்டமும் இங்கிருந்து ஒரு கூட்டமும் பின்னுக்கு திரிஞ்சு கொண்டு தான் இருக்கு 

நித்தியானந்தா இன்னும் குண்டலினியை எழுப்பிக்கொண்டு தான் இருக்கிறார் 

HomoSex சாய்பாபாவை இன்னும் ஒரு கூட்டம் கும்பிட்டு கொண்டு தான் திரியுது நிறைய Duplicate சாய் பாபாக்களும் வந்து கொண்டிருக்கிறார்கள் 

 

பாவம் பிரேமானந்தா இவர்களை போல் பிரபல்யம் அடைய முன் மாட்டியதால் கம்பி எண்ணுகிறார்

 

இவையனைத்தையும் இந்து மதத்தை கேவலப்படுத்த நான் சொல்லவில்லை குற்றம் எங்கும்  உள்ளது  அது மதத்தில் அல்ல

பின்பற்றுபவர் மனத்தில்  

 

எந்த மதத்தை பின்பற்றுபவர்களானாலும் அதனை உண்மையாக பின்பற்றினால் இப்படி உங்களை போல் மதம் பிடித்து திரிய மாட்டார்கள் .....

 

நான் ஒரு கிறிஸ்தவன் ஆனாலும் எல்லா மதத்தையும் மதிக்கிறேன் ,பௌத்தத்தையும் தான் காரணம் பௌத்தம் இங்கே கொலைகளை செய்யவில்லை பௌத்த மதம் பிடித்தவர்கள் தான் அதனை செய்தார்கள் 

 

என்னுடைய இந்து நண்பர்களை விட எனக்கு புராணங்களிலும் இதிஹாசங்களிலும் அறிவு அதிகம் அதனை பெருமையாக கூட நான் சில நேரம் நண்பர்களிடம் சொல்வதுண்டு 

 

இறுதியாக ஒன்றை கூறுகிறேன் உடனே மதம் பரப்புகிறேன் என்று தூக்கிக் கொண்டு வந்துவிடாதீர்கள் 

இது கிறீஸ்தவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் என்று எதிர் பார்க்கிறேன்

இயேசு இரண்டு வசனங்கள் கூறியிருக்கிறார்

1. உங்களுள் ஒரு பாவமும் அறியாதவர்கள் அவள் மீது முதற்கல்லை எறியுங்கள்

2. நீ உண் கண்ணிலிருக்கும் உத்திரத்தை உணராமல் உண் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை பார்க்கிறதென்ன

உன் கண்ணில் இருக்கும் விட்டத்தை எடுத்து ஏறி பின் உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாக கண் தெரியும்

 

விளக்கம் அவசியமில்லை என்று நினைக்கிறேன் தொப்பி அளவானவர்கள் எடுத்து போட்டு கொள்ளுங்கள் 

உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கின்றேன். இந்தச் சாமிகள் மீது தண்டனை கொடுக்கப்படுமாயின் அதை இந்துக்கள் ஏற்கின்றார்கள் என்பதே. ஒரு சாமியார் என்பதற்காக எந்தச் சமயத்திலும் குற்றவாளிகளுக்கு வக்களத்துக் கொடுக்கவிரும்பவில்லை என்று. சாமிமார் என்பது ஒரு வித பலவீனம் தான். எப்படி பிள்ளைபிடிகாரர்களின் செயல் மீது கவனமின்மையோடு மக்கள் இருக்கின்றார்களோ அதே அளவு சாமிமார்களின் செயற்பாடுகள் மீதும் கவனமின்மையாடு தான் இருக்கின்றார்கள்.

இயேசு என்ன சொன்னார் என்பது பற்றிக் கவலையில்லை. ஏனென்றால் அவரே தெளிவில்லாதவர். ஒரு தரம் ” ”தேவனே! தேவனே... என்னை ஏன் கைவிட்டீர்” என்பார். மறுதரம், ”நானே தேவன். உங்களை இரட்சிக்க வந்தேன் ”என்பார். அவருக்கே தான் யார் என்பதில் தெளிவில்லை.  அதற்குள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கின்றாராம்.

 

 

2. நீ உண் கண்ணிலிருக்கும் உத்திரத்தை உணராமல் உண் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை பார்க்கிறதென்ன

உன் கண்ணில் இருக்கும் விட்டத்தை எடுத்து ஏறி பின் உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாக கண் தெரியும்

 

தன்னை காப்பாற்றத் தெரியாமல் சித்திரவதைப்பட்டு , ஆணி அடிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒருவர், உலகத்தைக் காப்பாற்ற வந்தேன், உங்களின் பாவங்களை இரச்சிக்க வந்தேன் என்று சொல்வதற்கு இந்த வசனம் நன்றாகவே பொருந்துகின்றது.

ஆயருக்கு எதிராக மன்னாரில் போலியான துண்டுப் பிரசுரம்; கண்டிக்கிறது மன்னார் மாவட்ட இந்து மகா சபை

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு எதிராக வெளியான துண்டுபிரசுரம் இந்து கிறிஸ்தவ மத உறவை குழப்பும் திட்டமிட்ட செயல். இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்து மகா சபை தெரிவித்துள்ளது.

ஆயருக்கு எதிராக மன்னார், வவுனியா மாவட்டங்களில் "மன்னார் மாவட்ட இந்து சங் கம்' என்ற பெயரில் வெளியான துண்டுப்பிரசுரம் தொடர்பாக நேற்று புதன்கிழமை மன்னார் மாவட்ட இந்து மகாசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் வீதியில் அமைக்கப்பட்டிருந்த நாவலர் திருவுருவமும் இடபக்கொடியும் தாங்கிய சிலை கடந்த 6ஆம் திகதி இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த விரும்பத்தகாத நிகழ்வு தொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபை, மன் னார் ஆயரைச் சந்தித்து கலந்துரையாடியது. சிலை உடைக்கப்பட்டமைக்கு ஆயர் தனது வருத்தத்தினை தெரிவித்ததுடன் அவ் இடத்திலேயே மீள சிலையை அமைப்பதற்கு தனது ஆதரவையும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மன்னார் ஆயர் தொடர்பில் துண்டுப் பிரசுரம் ஒன்றை சிலர் திட்டமிட்டு வெளியிட்டுள்ளனர்.

அவருடைய பெயருக்கு பங்கம் ஏற்படும் வகையில் திட்ட மிடப்பட்டு சிலர் நடந்துகொண் டுள்ளனர். இது மத நல்லிணக்கத்தை குழப்பும் செயல். துண்டுப் பிரசுரத்துக்கும் மன்னார் மாவட்ட இந்து மகா சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/News

 

 

இலங்கையில் இஸ்லாம் இந்து பிழவுகள் எப்படி உருவாக்கப்பட்டதோ அப்படியே இந்து கிறிஸ்தவ பிழவுகள் வேகமாக உருவாக்கப்படுகின்றது. இதற்கு ஒத்து ஊதி தூபம் போடும் போக்கையே இந்தமத வெறியர்கள் இங்கு செய்து வருகின்றனர்.

 

தங்கள் மததில் உள்ள குறைகளை சரிசெய்ய முடியாத வக்கற்ற கூட்டம் அடுத்த மதங்களின் குறைகளை தூக்கிப்பிடிக்கின்றது. இவ்வாறு தூக்கிப்பிடிப்பவர்களுக்கு நன்கு தெரியும் இப்படித் தூக்கிப்பிடித்தால் மத முரண்பாடும் விரோதமும் நன்கு வளரும் இனம் மேலும் சிதையும் என்று. இந்தியா என்ற தேசத்தில் யுவன் என்ற ஒருவர் மதம் மாறினாலும் சரி ராஜந்தர் மாறினாலும் சரி அதை இழுத்துவந்து ஈழத்தில் செருகி இங்கு பிழவுகளை ஏற்படுத்தும் சிங்களப்பேரினவதத்துக்கு பக்கபலமாய் நிற்கின்றனர். பிரதேச வாதத்தை அடிப்படையாக வைத்து இனத்தை சிதைத்த  கருணா போன்றவர்களை விட மதவாதத்தை கிழறிவிட்டு இனத்தை சிதைப்பவர்கள் மோசமான துரோகிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மேலே உள்ள செய்தியில் மதவாதத்தை கடந்து ஈழத்தில் மக்கள் இருக்க முற்படுவது இங்குள்ள இந்து மத வெறியர்கள் மற்றும் மோடிக்கு சொம்பு தூக்குபவர்களுக்கு எரிச்சலை கொடுக்கலாம். அவர்களைப் பார்த்தென்றாலும் இவர்கள் கருத்து மாறட்டும்.

 

வேற்றுமதத்தில் குறைகாணும்  இந்துமதவெறியர்களுக்கு இந்துமதத்தின் வண்டவாளங்களை கிண்ட வெளிக்கிட்டால் நாத்தம் தாங்க முடியாது என்பது நன்கு தெரியும். இங்கே என்னும் பல திரிகள் அது சார்ந்து உள்ளது. 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறப்பில் இந்து மதமாக இருந்தாலும், எனக்குக் கிறிஸ்தவத்தையும் மிகவும் பிடிக்கும்.  சேர்ச்சில் அவர்கள் பூசை செய்யும் விதம், பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் விதம் மற்றும் பைபளில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள்  மிகவும் பிடிக்கும்.  எமது ஐயர்களைவிடச் சேர்ச்சைச் சேர்ந்தவர்கள் எமக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள்.  எமது பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வைச் சொல்வார்கள் அல்லது மிகவும் ஆறுதலாக இருப்பார்கள்.  இதனை எமது ஐயர்மார் செய்து நான் கேள்விப்பட்டதுகூட இல்லை.  அதேபோல, இந்து மதத்தில் மூலம் எமக்குச் சொல்லப்பட்ட பல விடயங்கள் மூடநம்பிக்கைகளாகவே எமக்குத் தென்பட்டது.  நாம் அவற்றை வெளிநாட்டிற்கு வந்து பின்பு பிரித்தறிந்த பின்னரே அவற்றின் உண்மையான விபரங்கள் தெரிய வந்தன.

 

 

மதங்கள் என்பறை மனிதனால் உருவாக்கப்பட்டவை.  தூயவன் குறிப்பிடும் மதங்கள் 21ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் சில சுயநல மனிதர்களால் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை.  அதனை வைத்து முழுக் கிறிஸ்தவத்தையும் குறை கூறுவது பொருத்தமற்றது என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை.  கத்தோலிக்கம், கிறிஸ்தவம் வேறு.  இவர் குறிப்பிடும் மதங்கள் வேறு.  இவற்றின் வேறுபாடுகளை அறிந்துவிட்டு இங்கு எழுதட்டும்.  மேலதிகமாக விவாதிக்கலாம்.  ஆனால், அரைகுறையாக தெரிந்து கொண்டு எழுதுபவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது.

 

முடிந்தால் ஆங்கிலத்திலுள்ள பைபிளை வாசியுங்கள்.  ஏனெனில், தமிழில் பைபிளை மொழிபெயர்த்திருக்கும் விதம் புதியவர்களுக்கு தவறான கண்ணோட்டத்தையே ஏற்படுத்தும். 

 

பிறப்பால் இந்து, இப்போது கிறிஸ்தவமாக மாறிவிட்டீர்கள் அப்படித் தானே. இதைத் தான் வியாபார தந்திரம் என்பது. மேலே இணைத்த பல காணோளிகளாகட்டும், பிள்ளைபிடிக்காரர் செய்கின்ற மதப் பிரச்சாரமாகட்டும். எல்லாமே அடிப்படையில் ஒருவன் இந்துவில் இருந்து மதம் மாறிவிட்டான், முஸ்லீமில் இருந்து மதம் மாறிவிட்டான்.  என்று சொல்லி ஆகவே நீங்கள் வாருங்கள் என்று ஆட்களை இழுக்கின்ற வேலை செய்வார்கள். இது கிறிஸ்தம் கொண்டிருக்கின்ற வியாபார யுக்திகளில் ஒன்று.  அந்த வியாபார யுக்திகளை நீங்கள் எங்களுக்கும் விட்டுப் பார்க்கின்றீர்கள்.

இந்து மதத்தில் மூலம் எமக்குச் சொல்லப்பட்ட பல விடயங்கள் மூடநம்பிக்கைகளாகவே எமக்குத் தென்பட்டது.

 

உலகத்தில் உள்ள மதங்களில் பேய், பிசாசு பற்றி அதிகம் சொன்னதும், அவற்றினை இயேசு நாதர் விரட்டியடித்தார்( பரிசுத்த ஆவியைப் பற்றிச் சொல்லவில்லை. ) என்று சொல்லிக் கொள்வதும் பைபிளில் தான் அதிகம்.

 

 

மத்தேயு 4:1-11

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

இயேசுவுக்குண்டான சோதனைகள்

பின்னர் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்கு அழைத்துச் சென்றார். பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக இயேசு அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நாற்பது நாள் இரவும் பகலும் இயேசு உணவேதும் உட்கொள்ளவில்லை. அதன் பின், இயேசுவுக்கு மிகுந்த பசியுண்டாயிற்று. அப்போது அவரை சோதிக்கப் பிசாசு வந்து, அவரிடம்,, “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இந்தக் கற்களை அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான்.

அதற்கு இயேசு,

, “‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல.

    மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’

என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார்.

பின்பு பிசாசு இயேசுவைப் பரிசுத்த நகரமான எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். பிசாசு இயேசுவை தேவாலயத்தின் மிக உயரமான இடத்தில் கொண்டுபோய் நிறுத்தி, ,“நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இங்கிருந்து கீழே குதியும். ஏனென்றால்,

, “‘தேவன் உமக்காகத் தன் தூதர்களுக்குக் கட்டளையிடுவார்,

    தூதர்களின் கரங்கள் உன்னைப் பற்றும்.

ஆகவே உன் கால்கள் பாறைகளில் மோதாது’

என்று வேதவாக்கியங்களில் எழுதியிருக்கிறது” எனக் கூறினான்.

அதற்கு இயேசு,

, “‘தேவனாகிய உன் கர்த்தரை சோதிக்கக் கூடாது’

என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதில் சொன்னார்.

பிசாசு பின்னர் இயேசுவை மிக உயரமான ஒரு மலைச் சிகரத்திற்கு அழைத்துச் சென்று, உலகின் எல்லா நாடுகளையும் அவற்றின் மகிமைகளையும் பொருட்களையும் காட்டினான். பிறகு பிசாசு இயேசுவிடம்,, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் நான் உமக்குத் தருவேன்” என்றான்.

10 இயேசு பிசாசை நோக்கி,, “சாத்தானே, என்னை விட்டு விலகிச் செல்!

, “‘நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும்.

    அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்!’

என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்.

11 எனவே பிசாசு இயேசுவை விட்டு விலகினான். அதன் பிறகு சில தூதர்கள் வந்து அவருக்குச் சேவை செய்தனர்.

மத்தேயு-12:24

24 

மக்கள் இவ்வாறு கூறுவதைப் பரிசேயர்கள் கேட்டனர். பரிசேயர்கள்,, “பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர். பெயல்செபூல் பிசாசுகளின் தலைவன்.

 

 

 

“தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” என அப்போஸ்தலன் பேதுரு எச்சரிக்கிறார். (1 பேதுரு 5:8) பேய்களைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக் கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக் கூடாதே.”1 கொரிந்தியர் 10:20, 21.

 நிறைய இவ்வாறு உள்ளது. கூகிளுக்கு நன்றிகள். என்ன சொல்ல வருகின்றேன் என்றால்  ” பேய்காட்டி,பேய்க்காட்டி” என்று ஒரு சொல் வருமே. பேயைக் காட்டி மதம் விற்பது என்பது இதுவாகத் தான் இருக்கும். நீங்கள் இயேசுவைப் பின்பற்றாவிடின், பிசாசு, சாத்தான் உங்களைப் பிடித்துவிடும் என்று ஒரு அப்பாவிச் சமூகத்தை ஏமாற்றிப் பிழைக்கின்றார்கள். 

சொல்லப் போனால், மற்றய மதங்களில் இப்படிப் பேயைப் பற்றிய அதிக சிந்தனைகள் இருப்பதாகத் தோன்றவில்லை. யாராவது இருப்பின் சொல்லலாம். இஸ்லாம் கூட மரணத்தின் பின் என்ன நடக்கும் என்றே சொல்லி மிரட்டுகின்றது என நினைக்கின்றேன்.இந்து மதமும் சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் மரணத்தின் பின்னரான சம்பவங்களைத் தான் சொல்கின்றது. ஆனால் பைபிள் இருக்கும்போது உங்களைப் பேய் பிடித்துவிடும் என மிரட்டுகின்றது.  மேலே நான் இணைத்த சில காணோளிகள் இவ்வகையானவையே.

இப்படியிருக்கும்போது மேலே நண்பர் poekkiri தான் மதம் மாறியதற்கான காரணத்துக்கு மூடநம்பிக்கை பற்றிச் சொல்கின்றார். நீங்கள் மதம் மாறுங்கள். ஆனால் அதற்கு சப்பைக் கொட்டு கொட்டாதீர்கள்.

 

 

நியானி: ஒருமையில் உள்ளவை திருத்தப்பட்டுள்ளன

Edited by நியானி

இந்து மதத்தைப் பற்றி நீங்கள் அசிங்கமாக எழுதும்போது இந்த நியாய தர்மம் எங்கே போய்விட்டது. இதைப் பற்றிக் கதைப்பதற்கு ஒரு அடிப்படை யோக்கியம் கூட உங்களுக்குக் கிடையாது. ஏன் என்றால் உங்களின் வரலாறு, அங்கிருந்து தான் ஆரம்பிக்கப்படுகின்றது.

இங்கே எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியம் என்பதற்கும் , பைபிள் பற்றிய விமர்சனத்துக்கும் சம்பந்தமே கிடையாது. அதனால் தான் பைபிளில் உள்ள வசனங்களே நேரடியாகவே மேற்கோள் காட்டி எழுதினேன்.  இங்கே இவ்வாறு வங்குரோத்துத் தன்மை கிளறப்படும்போது மறைப்பதற்கு முயற்சி எடுக்கின்றார்கள்.

தங்களுடைய மதவியாபாரத்துக்கு இப்படியான வெளிப்படு்தல்கள் தடையாக இருக்கும் என அஞ்சுகின்றார்கள்.

நான் இப்படி எழுத இவர்கள் தான் அடிஎடுத்துக் கொடுத்தார்கள்.

இங்கே இத்திரி எக்காரணத்தினாலும் முடக்கப்படுமாயின் அது என் தடை வரைக்கும் இவ்வாறே என்னை எழுதத் துாண்டும். தவிர, முன்பு பகிரப்பட்ட மதங்கள் தொடர்பான திரிகளுக்கும் நிர்வாகம் பதில் சொல்ல வேண்டி வரும். அவை மீண்டும் ஆராய வேண்டும்.

 

 

இந்து மதத்தில் உள்ள அசிங்கங்களைத்தான் நான் எப்போதும் சுட்டிக்காட்டுகின்றேன் தவிர நான் எக்காலத்திலும் மற்றய மதங்களுக்குள் மூக்கை நுளைப்பதில்லை. உங்களது செயற்பாடுகள் எப்போதும் மற்ற மதத்துக்குள் மூக்கை நுளைப்பது. எனது கருத்துக்கள் மதவிரேதாதமாகாது உங்களது கருத்துக்களோ மத விரோதத்தை வளர்ப்பதைத் தவிர வேறெதையும் செய்யாது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிய முடியாதளவுக்கு நீங்கள் ஒன்றும் பவா கிடையாது.

 

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சில திருத்தங்கள்--

இயேசு என்ன சொன்னார் என்பது பற்றிக் கவலையில்லை. ஏனென்றால் அவரே தெளிவில்லாதவர். ஒரு தரம் ” ”தேவனே! தேவனே... என்னை ஏன் கைவிட்டீர்” என்பார். மறுதரம், ”நானே தேவன். உங்களை இரட்சிக்க வந்தேன் ”என்பார். அவருக்கே தான் யார் என்பதில் தெளிவில்லை.  அதற்குள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கின்றாராம்.

” ”தேவனே! தேவனே... என்னை ஏன் கைவிட்டீர்” என்பது இவ்வாறு வர வேண்டும்.

என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27.46)



”நானே தேவன். உங்களை இரட்சிக்க வந்தேன் ”என்ற வசனம் இப்படி வந்திருக்க வேண்டும்.
 

நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. (ஏசாயா 45:5)
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. (ஏசாயா 45:22)


 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இஸ்லாம் இந்து பிழவுகள் எப்படி உருவாக்கப்பட்டதோ அப்படியே இந்து கிறிஸ்தவ பிழவுகள் வேகமாக உருவாக்கப்படுகின்றது. இதற்கு ஒத்து ஊதி தூபம் போடும் போக்கையே இந்தமத வெறியர்கள் இங்கு செய்து வருகின்றனர்.

 

தங்கள் மததில் உள்ள குறைகளை சரிசெய்ய முடியாத வக்கற்ற கூட்டம் அடுத்த மதங்களின் குறைகளை தூக்கிப்பிடிக்கின்றது. இவ்வாறு தூக்கிப்பிடிப்பவர்களுக்கு நன்கு தெரியும் இப்படித் தூக்கிப்பிடித்தால் மத முரண்பாடும் விரோதமும் நன்கு வளரும் இனம் மேலும் சிதையும் என்று. இந்தியா என்ற தேசத்தில் யுவன் என்ற ஒருவர் மதம் மாறினாலும் சரி ராஜந்தர் மாறினாலும் சரி அதை இழுத்துவந்து ஈழத்தில் செருகி இங்கு பிழவுகளை ஏற்படுத்தும் சிங்களப்பேரினவதத்துக்கு பக்கபலமாய் நிற்கின்றனர். பிரதேச வாதத்தை அடிப்படையாக வைத்து இனத்தை சிதைத்த  கருணா போன்றவர்களை விட மதவாதத்தை கிழறிவிட்டு இனத்தை சிதைப்பவர்கள் மோசமான துரோகிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மேலே உள்ள செய்தியில் மதவாதத்தை கடந்து ஈழத்தில் மக்கள் இருக்க முற்படுவது இங்குள்ள இந்து மத வெறியர்கள் மற்றும் மோடிக்கு சொம்பு தூக்குபவர்களுக்கு எரிச்சலை கொடுக்கலாம். அவர்களைப் பார்த்தென்றாலும் இவர்கள் கருத்து மாறட்டும்.

 

வேற்றுமதத்தில் குறைகாணும்  இந்துமதவெறியர்களுக்கு இந்துமதத்தின் வண்டவாளங்களை கிண்ட வெளிக்கிட்டால் நாத்தம் தாங்க முடியாது என்பது நன்கு தெரியும். இங்கே என்னும் பல திரிகள் அது சார்ந்து உள்ளது. 

 

இந்து மதத்தைப் பற்றி நீங்கள் அசிங்கமாக எழுதும்போது இந்த நியாய தர்மம் எங்கே போய்விட்டது. இதைப் பற்றிக் கதைப்பதற்கு ஒரு அடிப்படை யோக்கியம் கூட உங்களுக்குக் கிடையாது. ஏன் என்றால் உங்களின் வரலாறு, அங்கிருந்து தான் ஆரம்பிக்கப்படுகின்றது.

இங்கே எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியம் என்பதற்கும் , பைபிள் பற்றிய விமர்சனத்துக்கும் சம்பந்தமே கிடையாது. அதனால் தான் பைபிளில் உள்ள வசனங்களே நேரடியாகவே மேற்கோள் காட்டி எழுதினேன்.  இங்கே இவ்வாறு வங்குரோத்துத் தன்மை கிளறப்படும்போது மறைப்பதற்கு முயற்சி எடுக்கின்றார்கள்.

தங்களுடைய மதவியாபாரத்துக்கு இப்படியான வெளிப்படு்தல்கள் தடையாக இருக்கும் என அஞ்சுகின்றார்கள்.

நான் இப்படி எழுத இவர்கள் தான் அடிஎடுத்துக் கொடுத்தார்கள்.

இங்கே இத்திரி எக்காரணத்தினாலும் முடக்கப்படுமாயின் அது என் தடை வரைக்கும் இவ்வாறே என்னை எழுதத் துாண்டும். தவிர, முன்பு பகிரப்பட்ட மதங்கள் தொடர்பான திரிகளுக்கும் நிர்வாகம் பதில் சொல்ல வேண்டி வரும். அவை மீண்டும் ஆராய வேண்டும்.

நியானி: "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த மதம் என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஏன் ஏன் இந்துமதம் சாராத ஒரு நபராக இருக்க முடியாது. நான் என் அடையாளத்தைத் தெளிவாக்க காட்டுகின்றேன். ஒரு காலத்தில் பைபிள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அப்படிப் படித்ததால் தான் பைபிளில் ஞாபகமாக உள்ள விடயங்கள் வெளிப்படுத்த முடிகின்றது. அது ஒரு அசிங்கம் பிடித்த நுால் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகின்றது...

 

 இப்படி குறித்த மதத்தைப் பற்றிக் குறித்தவர் தான் கதைக்கலாம் என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு இணைப்புப் போட்டு அசிங்கமான கருத்தாடலைக் கொண்டு வந்தது நீங்கள். ஒரு கிறிஸ்தவன் தான் கிறிஸ்தவம் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இப்போதே மதம் மாறித் தோலுரிக்கலாமா? இங்கே மதம் என்பது என் பிரச்சனையே கிடையாது.

 

 

நியானி: "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
12 பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது; ஒரு பெண், சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்; அவளது பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது, அவளது தலையில் பன்னிரண்டு நட்சத்திரங்கள் கிரீடமாகச் சூட்டப்பட்டிருந்தன. 2 அவள் கர்ப்பிணியாக இருந்தாள்; பிரசவ வேதனைப்பட்டு, வலியில் கதறிக்கொண்டிருந்தாள்.

3 பரலோகத்தில் மற்றொரு அடையாளம் தோன்றியது; இதோ! சிவப்புநிற ராட்சதப் பாம்பு காணப்பட்டது; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் தலைகளில் மொத்தம் ஏழு மகுடங்கள் இருந்தன; 4 அதன் வால், வானத்து நட்சத்திரங்களில் மூன்றிலொரு பகுதியை இழுத்து பூமியின் மீது போட்டது. அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தவுடன் அதை விழுங்குவதற்காக அந்த ராட்சதப் பாம்பு அவள்முன் நின்றுகொண்டே இருந்தது.
5 எல்லாத் தேசங்களையும் இரும்புக் கோலால் நொறுக்கப்போகிற * ஓர் ஆண் குழந்தையை, ஓர் ஆண்மகனை, அவள் பெற்றெடுத்தாள். கடவுளிடமும் அவரது சிம்மாசனத்திடமும் அவளுடைய குழந்தை எடுத்துக்கொள்ளப்பட்டது. 6 அந்தப் பெண் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் அவளுக்கு உணவளிக்கப்படும்படி ஓர் இடத்தைக் கடவுள் ஏற்பாடு செய்திருந்தார்.
7 பரலோகத்தில் போர் மூண்டது; மிகாவேலும் அவருடைய தூதர்களும் ராட்சதப் பாம்போடு போர் செய்தார்கள்; அந்த ராட்சதப் பாம்பும் அதனுடைய தூதர்களும் எதிர்த்துப் போரிட்டார்கள்; 8 ஆனால் வெற்றி பெறவில்லை; அதன்பின் பரலோகத்தில் அவர்களுக்கு இடமில்லாமல்போனது. 9 உலகம் முழுவதையும் மோசம்போக்குகிற பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான்; அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடுகூட அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். 10 அப்போது, பரலோகத்தில் ஓர் உரத்த குரல்,“இதோ! நம் கடவுளிடமிருந்து மீட்பு வந்துவிட்டது! அவருடைய வல்லமைக்கு வெற்றி கிடைத்துவிட்டது! அவருடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது! அவருடைய கிறிஸ்துவின் அரசாட்சி துவங்கிவிட்டது! நம் கடவுளுக்குமுன் இரவும் பகலும் நம்முடைய சகோதரர்கள்மீது குற்றம் சுமத்துகிறவன் கீழே தள்ளப்பட்டுவிட்டான்! 

என்ன ஆச்சு என்றால் கர்த்தருக்கும், சாத்தானுக்குமிடையில்( ராட்சதபாம்பு) சண்டை வந்து சாத்தானைக் கடவுள் பூமிக்குத் தள்ளி ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வார். அப்படி ஒரு சம்பவத்தில் நம்மிடம் வந்தவர் தான் சாத்தான். இது தான் இந்த வசனத்தில் நான் புரிந்து கொண்ட அர்த்தம். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சாத்தனைக் கடவுள் பூமிக்குத் தள்ளி விட்டுள்ளார் என்று நினைக்கின்றேன். புரிந்தவர்கள் சரியான பதிலைச் சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் 

 

நீங்கள் இணைத்திருக்கும் அத்தனை வேதாகம வரிகளுக்கும் எனக்கு பதில் சொல்ல முடியும் 
ஆனால் அதனை உங்களுக்கு புரியுமாறு சொல்லவதானால் உங்கள் மதத்தையும் கூட்டிற்கு இழுக்கவேண்டிவரும் 

 

உங்களுக்கு பதில் சொல்வதை விட உங்கள் மதத்தை நோகடிப்பதை நான் வன்மையாக மறுக்கிறேன் 

நான் படித்து ரசித்த கதை 
 ஒரு தடவை மகாத்மா காந்தியும் அவரது நண்பரும் அரிச்சந்திர புராணம் பார்க்கப் போயிருந்தார்கள்

நாடகம் முடிந்ததும் ஒரு பத்திரிக்கையாளர் காந்தியிடம் கேட்டார் நாடகத்திலிருந்து என்ன விளங்கிக்கொண்டீர்கள் என்று

அதற்க்கு காந்தி சொன்னார் வாழ்க்கையில் இனிமேல் பொய்யே சொல்வதில்லை என்று பின் பத்திரிகையாளர் நண்பரிடம் கேட்டார்

நீங்கள் என்ன விளங்கி கொண்டீர்கள்...? என்று அதற்க்கு அவர் கூறினார் ஆத்திரத்திற்கு பொண்டாட்டிய அடகு வைக்கலாம் என்று

 

இருவரும் ஒரே நாடகத்தை தான் பார்த்தார்கள் இருவரின் கருத்துக்களுக்கிடையில் உள்ள வித்தியாசம் ...?

தப்பான பார்வை உடையவர்களுக்கு எதனை பார்த்தாலும் தப்பாக தான் தெரியும் 

 

 

 

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சாத்தனைக் கடவுள் பூமிக்குத் தள்ளி விட்டுள்ளார் என்று நினைக்கின்றேன். புரிந்தவர்கள் சரியான பதிலைச் சொல்லுங்கள்

 எல்லாவற்றையும் உங்களுக்கு விளங்கப்படுத்தி என்னை கேவலப்படுத்தவும் நான் விரும்பவில்லை உங்கள் மதத்தை கேவலபடுத்தவும் விரும்பவில்லை 

 

நீங்கள் உங்கள் வேலையை தடையின்றி தொடருங்கள்  :)

Edited by Atonk

இந்தியாவில் நிலவும் மனுதர்ம கொடுமைகள் மற்றும் தீண்டாமை பிரச்சனைகள் சார்ந்து பெரியாரில் அம்பேத்காரில் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர்களின் முன்னெடுப்புகனை கொண்டுவந்து ஈழத்தில் உள்ள ஆன்மீகப்பிரச்சனைகளை தீர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேபோல் ஈழத்தில் உள்ள ஆன்மீக வழிமுறைகளை அது சார்ந்த அனைத்துதரப்பு மக்களின் அசைவியக்கங்களையும் கொண்டுபோய் இந்துதுவத்துடன் ஒப்பிட்டு பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நான் நாத்திகவாதி இல்லை. அதே நேரம் இந்துதுவம் என்ற மதம் சார்ந்தவனும் இல்லை. எனக்கென்று ஒரு ஆன்மீகவழியில் பயணிக்க விரும்புகின்றவன். தியானத்தில் ஈடுபாடு உள்ளவன். நான் தியானத்தில் கண்களை மூடும்போது நரேந்திரமோடியின் உருவம் கண்ணுக்குள் வருவதோ அல்லது மனுதர்ம கொடுமைகள் கண்ணுக்குள் வருவதையோ வெறுப்பவன். அவ்வாறு ஒரு மார்க்கத்தை ஆன்மீகம் போதிக்க எந்த நியாயமும் இல்லை என்பதில் எனக்கு தெளிவுண்டு.

சைவசமயம் சார்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நான் மதம் சாரா ஆன்மீக வழியில் செல்பவன் என்பதை ஏழு வருடங்களுக்கு முன்னர் எப்படி சொன்னேனோ அப்படியேதான் இன்றய எனது நிலையும் இருக்கின்றது. இந்துத்துவம் ஈழத்துக்கு சாவு மணி என்பதில் எக்காலத்திலும் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32725&page=2

 

நீங்கள் எந்த மதம் என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஏன் ஏன் இந்துமதம் சாராத ஒரு நபராக இருக்க முடியாது

 

 

இதே கேள்வி உங்களிடமும் எனக்கு கனகாலமாக உண்டு. ஈழத்துள் மத விரேதத்தை வளர்த்து இனத்தை சிதைக்க முற்படும் நீங்கள் ஏன் ஒரு பௌத்த பேரினவாதியாக இருக்கக் கூடாது ?

 

மையவாதமும் பேரினவாதமும் கூட்டாளிகள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இனத்தை சிதைக்கும் பேரினவாதத்தின் விருப்பத்தை மையவாதம் எப்போதும் தனது மதவாதம் பிரதேசவாதம் போன்றவற்றால் செய்துவருகின்றது. அந்தவகையில் உங்கள் செயற்பாடுகள் சிங்களப்பேரினவாதம் சார்ந்தது வெளிப்படையான உண்மை.

 

புலிகள் சார்ந்த சமுதாயத்தில் உள்ள மதவெறிதான் இஸ்லாமியத்தமிழர்களையும் ஏனையவர்களையும் பிரித்து இனத்தை பிழந்தது. இவை புலிகள் மூலம் நடந்தது. இதனால் பெருலாம் அடைந்தது சிங்களப்பேரினவாதம். அதே போல் இப்போது கிறீஸ்தவம் இந்து. இதனால் பெருலாம் அடையப்போவதும் சிங்களப்பேரினவாதம்தான். பேரினவாதக் கனவை காலாலாகம் நிறைவேற்றுபவர்கள் மையவாதிகள் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை.

 

 

 

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சார்ந்த சமுதாயத்தில் உள்ள மதவெறிதான் இஸ்லாமியத்தமிழர்களையும் ஏனையவர்களையும் பிரித்து இனத்தை பிழந்தது. இவை புலிகள் மூலம் நடந்தது. இதனால் பெருலாம் அடைந்தது சிங்களப்பேரினவாதம். அதே போல் இப்போது கிறீஸ்தவம் இந்து. இதனால் பெருலாம் அடையப்போவதும் சிங்களப்பேரினவாதம்தான். பேரினவாதக் கனவை காலாலாகம் நிறைவேற்றுபவர்கள் மையவாதிகள் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை.

 

பெரியவரே! இது எப்படி நடந்தது என்று விளக்கம் தரமுடியுமா? இஸ்லாமியருக்கும் எமக்கும் எப்படிபிரச்சனை ஆனது என்றது, அஸ்ரப் தொடக்கவைத்த சில துர்நடவடிக்கைகள் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்தது. ஆனால் இதற்குள் புலிகள் மீது மதவெறி போன்ற நயவஞ்சகக் கருத்தின் மறைமுகத்தன்மை அறிய வேண்டியுள்ளது. புலிகள் எப்போது எச் சந்தர்ப்பத்தில் மதவெறி கொண்டார்கள்...

 

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.