Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 ஆசிய கோப்பை போட்டிக்கான செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Well done SL.

  • Replies 57
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Screenshot39_zps7e5c45ab.png

  • தொடங்கியவர்

ஆசியாவின் சாம்பியனானது இலங்கை
1
Submitted by ceditor on Sat, 03/08/2014 - 21:24
ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் திரிமான மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் வெற்றி பெற்ற இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனானது.
பங்களாதேஷில் இடம்பெற்ற 12ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில்
5 அணிகள் பங்கேற்றன. இந்தியா (2 வெற்றி, 2 தோல்வி), பங்காளதேஷ் (4 தோல்வி), ஆப்கானிஸ்தான் (ஒரு வெற்றி, 3 தோல்வி) ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

லீக் சுற்றில் தோல்வியையே சந்தித்திராத இலங்கை அணி பாகிஸ்தானை 12 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 129 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடையச் செய்தது.

இலங்கையுடன் மாத்திரம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை 72 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கொண்டிருந்தது. இதனையடுத்து இலங்கையும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதிய இறுதி ஆட்டம்  மிர்பூரில் இன்று சனிக்கிழமை அரங்கேறியது.  இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அந்தவகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சார்ஜில் கான் 8, அகமட் செய்சாட் 5 என சொற்ப ஓட்டங்களுடன் மாலிங்க பந்து வீச்சில் ஆட்டமிழக்க அடுத்த களமிறங்கிய ஹாபிசும் 3 ஓட்டங்களுடன் மாலிங்க பந்து வீச்சில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.

18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் ஆரம்பமே தடுமாறிய போது மிஸ்பா உல் ஹக்குடன் பவாட் ஆலம் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியை வலுப்பெற செய்தனர்.

இருவரும் இணைப்பாட்டமாக 122 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மிஸ்பா உல் ஹக் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களத்தில் இருந்த பவாட் ஆலத்துடன் உமர் அக்மால் இணைந்தார். உமர் அக்மால் அதிரடியாக துடுப்பெடுத்தாட பவாட் ஆலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது சதத்தை கடந்து 114 ஓட்டங்களை கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்தார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய உமர் அக்மால் பவாட் ஆலத்துடன் இணைப்பாட்டமாக 115 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்து 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியில் சுரங்க லக்மால், சேனாநாயக, திசர பெரேரா மற்றும் மெத்யூஸ் ஆகியோர் பந்து வீச்சை மேற்கொண்டிருந்த போதும் மாலிங்க மாத்திரமே 10 ஓவர்கள் வீசி 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதன் பின்னர் 261 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக திரிமனேவுடன் குசேல் ஜனித் பெரேரா களமிறங்கியனார்.

இதன்போது குசேல் ஜனித் பெரேர அதிரடியாக துடுப்பெடுத்தாடி 37 பந்துகளில் 6 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர் முழுதும் இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் பக்கபலமாக இருந்த குமார் சங்கக்கார இப்போட்டியில் வந்த வேகத்திலேயே அரங்கு திரும்பி ஏமாற்றமளித்தார். அவர் சயிட் அஜ்மால் பந்தில் எவ்வித ஓட்டமும் பெறாது எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களத்தில் இருந்த திரிமானவுடன் கைகோர்த்தார் மஹேல ஜயவர்தன. கடந்த தொடர்களில் பிரகாசிக்காத மஹேல இன்றைய போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடினால். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த திரமான அரைச் சதத்தை கடக்க சற்று நேரத்தில் மஹேல ஜயவர்தனவும் அரைச்சதத்தை கடந்தார்.


இருவரும் 3ஆவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 156 ஓட்டங்களை பெற்றிருந்த போது மஹேல ஜயவர்தன 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து திரிமானவுடன் அசான் பிரியன்ஜன் இணைந்தார். இதன் போது லஹிரு திரிமான சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 3ஆவது சதத்தை கடந்தார். அவர் 106 பந்துகளில் 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 100 ஓட்டங்களை பெற்றார்.

பிரியன்ஜன் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சதத்தை கடந்த திரிமான 101 ஓட்டங்களுடன் அஜ்மால் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 16 ஓட்டங்களை பெற்று அணி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

 

http://www.virakesari.lk/?q=node/361994

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவிலேயே இலங்கை அணி கள தடுப்பில் சிறந்தது. ஆனால் இன்றைய போட்டியில் அவ்வளவாக களத்தடுப்பு செய்யவில்லை, செய்திருந்தால் 220 குள் பாகிஸ்தான் துவண்டிருக்கும். 5 விகெட்டுகளையும் மலிங்கா கைப்பற்றினார். மற்றைய பந்து வீச்சுக்களும் திறமையாக இருந்தது. மஹெல தக்க நேரத்தில் கை கொடுத்தார்.

  • தொடங்கியவர்

D0d0d20d_zps2ece12ed.jpg

 

 

 

d0d20d20d_zps2753b70a.jpg

 

 

1779721_10151971901167555_1540842922_n_z

  • தொடங்கியவர்

கோப்பை வென்றது இலங்கை : மலிங்காவிடம் பாக்., சரண்டர்
மார்ச் 08, 2014.

 

 

மிர்புர்: ஆசிய கோப்பையை இலங்கை அணி கைப்பற்றியது. நேற்று நடந்த பைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கை அணிக்கு திரிமான்னே(101), மலிங்கா(5 விக்கெட்) கைகொடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் பவாத் ஆலம் சதம் வீணானது.

வங்கதேசத்தில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. மிர்புரில் நேற்று நடந்த பைனலில், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

திணறல் துவக்கம்:

மலிங்கா போட்டுத்தாக்க, பாகிஸ்தான் அணி துவக்கத்திலயே ஆட்டம் கண்டது. இவரது ‘வேகத்தில்’ ஷார்ஜீல் கான் (8), அகமது ஷேசாத் (5), முகமது ஹபீஸ் (3) சொற்ப ரன்னில் வெளியேறினர். பாகிஸ்தான் அணி 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

மிஸ்பா அரைசதம்:

பின் இணைந்த கேப்டன் மிஸ்பா, பவாத் ஆலம் ஜோடி மந்தமாக ஆட, ஸ்கோர் விரைவாக உயர வாய்ப்பு இல்லாமல் போனது. மிஸ்பா, ஒருநாள் அரங்கில் தனது 37வது அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த போது, மலிங்கா பந்தில் மிஸ்பா (65) அவுட்டானார்.

பவாத் சதம்:

உமர் அக்மலுடன் இணைந்த பவாத் ஆலம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். திசாரா பெரேரா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட பவாத், ஒருநாள் அரங்கில் தனது முதல் சதம் அடித்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய உமர் அக்மல், பவுண்டரிகளாக விளாசினார். இவர், ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது 19வது அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த போது, 42 பந்தில் 59 ரன்கள் எடுத்த உமர் அக்மல், மலிங்காவிடம் சரணடைந்தார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. பவாத் ஆலம் (114), அப்ரிதி (0) அவுட்டாகாமல்  இருந்தனர். இலங்கை சார்பில் மலிங்கா 5 விக்கெட் கைப்பற்றினார்.

‘ஹாட்ரிக்’ நழுவல்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா, திரிமான்னே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த போது, சயீத் அஜ்மல் ‘சுழலில்’ குசால் பெரேரா (42) ‘ஸ்டெம்பிங்’ ஆனார். அடுத்த பந்தில் சங்ககரா ‘டக்–அவுட்’டாக, போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. மூன்றாவது பந்தை மகிளா ஜெயவர்தனா தடுத்து ஆட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது.

திரிமான்னே அசத்தல்:

பின் திரிமான்னே, மகிளா ஜெயவர்தனா ஜோடி அசத்தியது. பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த  இவர்கள், சீராக ரன் சேர்த்தனர். உமர் குல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜெயவர்தனா, தனது 71வது அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்த போது ஜெயவர்தனா (75) அவுட்டானார். பவுண்டரிகளாக விளாசிய திரிமான்னே, ஒருநாள் அரங்கில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்தார். பிரியன்ஜன் (13) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய திரிமான்னே 108 பந்தில் 101 ரன்கள் (13 பவுண்டரி) எடுத்த போது அஜ்மல் ‘சுழலில்’ போல்டானார்.

பின் இணைந்த கேப்டன் மாத்யூஸ், டி சில்வா ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இலங்கை அணி 46.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மாத்யூஸ் (16), டி சில்வா (6) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் அஜ்மல் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை இலங்கையின் மலிங்கா வென்றார். தொடர் நாயகன் விருதை இலங்கையின் திரிமான்னே தட்டிச்சென்றார்.

ஐந்தாவது முறை:

இந்த வெற்றியின் மூலம், ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி ஐந்தாவது முறையாக (1986, 1997, 2004, 2008, 2014) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் அதிக முறை ஆசிய கோப்பை வென்ற அணிகள் வரிசையில் முதலிடத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது. இந்திய அணி ஐந்து முறை (1984, 1988, 1990–91, 1995, 2010) கோப்பை வென்றது. பாகிஸ்தான் அணி இரண்டு முறை (2000, 2012) பட்டம் வென்றது.

அப்ரிதி பரிதாபம்

‘அதிரடி’ அப்ரிதியை நேற்று கடைசி கட்டத்தில் களமிறக்கி வீணாக்கியது பெரும் ஆச்சரியம் அளித்தது. இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 18 பந்தில் 34 ரன்கள் எடுத்த இவர், வங்கதேசத்துக்கு எதிராக 18 பந்தில் அதிவேக அரைசதம் அடித்து பாகிஸ்தானை பைனலுக்கு அழைத்து சென்றார். ‘மேட்ச் வின்னரான’ இவர், நேற்றைய பைனலில் கடைசியில் தான் வந்தார். ஒரு பந்தை கூட சந்திக்க முடியாமல் திரும்பினார். உமர் அக்மலுக்கு முன் இவரை களமிறக்கியிருந்தால், வலுவான இலக்கை பெற்றுத் தந்திருப்பார். காயத்தால் (இடுப்பு) அவதிப்பட்டதால், பின்வரிசையில் வந்தாரா எனத் தெரியவில்லை. பவுலிங்கிலும் (6 ஓவரில் 35 ரன்கள்) சோபிக்க தவறினார்.

‘பீல்டிங்’ சொதப்பல்

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு சொதப்பலான ‘பீல்டிங்கும்’ முக்கிய காரணம். ஜுனைடு கான் ஓவரில் குசல் பெரேரா அடித்த பந்தை ஷர்ஜீல் தட்டுத்தடுமாறி பிடித்தார். அப்போது எல்லைக் கோட்டில் காலை வைக்க, அது சிக்சராக மாறியது. பின் ஜெயவர்தனா 42 ரன்களில் இருந்த போது, உமர் குல் பந்தில் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை ஹபீஸ் கோட்டை விட்டார். தவிர, பவுண்டரிக்கு பந்து செல்வதை துடிப்பாக தடுக்க தவறியதால், இலங்கை அணி சுலப வெற்றி பெற்றது.

வார்த்தை போர்

ஆட்டத்தின் 32வது ஓவரை பாகிஸ்தானின் உமர் குல் வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த இலங்கையின் திரிமான்னே, 4வது பந்தை தடுத்தாடினார். பந்தை எடுத்த குல், திரிமான்னே பகுதியில் இருந்த ஸ்டெம்சை நோக்கி எறிய முயன்றார். அப்போது திரிமான்னே, உமர் குல் இருவரும் வார்த்தை போரில் மோதிக் கொண்டனர். மறுமுனையில் இருந்த மகிளா ஜெயவர்தனா உடனடியாக இருவரையும் விலக்கிவிட பிரச்னை முடிவுக்கு வந்தது.

சிறந்த ‘சேஸ்’

நேற்று பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 261 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டிய இலங்கை அணி, ஆசிய கோப்பை பைனல் வரலாற்றில் சிறந்த ‘சேஸிங்கை’ பதிவு செய்தது. முன்னதாக 1997ல் நடந்த பைனலில், இந்திய அணி நிர்ணயித்த 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, இலங்கை அணி எட்டியதே சிறந்த ‘சேஸிங்காக’ இருந்தது. ஆசிய கோப்பை பைனலில், முதன்முறையாக 250 அல்லது அதற்கு மேல் எடுத்த ரன்கள் ‘சேஸ்’ செய்யப்பட்டது.

பரிசு எவ்வளவு
ஆசிய கோப்பை பைனலில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு கோப்பையுடன் ரூ. 37 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ. 18.5 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது.

100 சதவீத வெற்றி

இம்முறை இலங்கை அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், 100 சதவீத வெற்றியுடன் சாம்பியன் பட்டம் வென்றது. லீக் சுற்றில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்திய இலங்கை அணி, பைனலில் மீண்டும் பாகிஸ்தானனை தோற்கடித்து கோப்பை வென்றது.

 

Box11_zps3a8b7d55.jpg

 

http://sports.dinamalar.com/2014/03/1394300504/malingasrilankacup.html

 

  • கருத்துக்கள உறவுகள்

மகன்: அம்மா.. என்னை ஏன் திட்டுறீங்க.. நான் அவனை விட 2 மார்க்ஸ் கூட எடுத்திருக்கனில்ல..

 

அம்மா: அவனுக்கு எத்தினைடா..

 

மகன்: பூச்சியம்.

 

ஆசியக் கோப்பையும் இந்த வகையினது தான். உருப்படியா விளையாட முடியாத 4 முட்டாள்களிடையே நடந்த போட்டி. அதில சொறீலங்கா நல்லா சொறிஞ்சுகிட்டுதாக்கும். :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு

 

12 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை  அணிக்கு இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொழும்பு பேலியகொடை பாலத்திலிருந்து விசேட பஸ்சில் வீதி இருமரங்கிலும் சூழ்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வானைப் பிளக்கும் பலத்த கரகோசத்துக்கு மத்தியிலும் வாத்தியக் கலைஞர்களின் இசை முழுக்கங்களிற்கு மத்தியிலும் இலங்கை கிரிக்கெட் சபை வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.
12 ஆவது ஆசிய கிண்ணத் தொடர் பங்களதாதேஷில் நடைபெற்றது. இதில் லீக் போட்டி அனைத்தையும் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணி, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி 5 ஆவது முறையாக ஆசிய சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையிலேயே 5 ஆவது முறையாக இலங்கைக்கு ஆசிய கிண்ணத்தை வென்று கொடுத்த இலங்கை அணியினருக்கு இன்று பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

The-Sri-Lanka-team-on-an-open-top-bus-to
 

IMG_0389_zps56182758.jpg

 

IMG_0309_zps7c014bd1.jpg

IMG_0384_zps226336a2.jpg

 

IMG_0355_zps7e9cd565.jpg

 

 

IMG_0381_zps4fc8616b.jpg

 

0000003_zpsbc220eb2.jpg

 

http://www.virakesari.lk/?q=node/362010

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.