Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மைக் குற்றவாளி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைக் குற்றவாளியைப் பாதுகாக்கும் காங்கிரசு பாசக அரசுகளும், ஹிந்திய காவிப் பத்திரிக்கைகளும்.

 

ராஜீவ் கொலையாளி சு.சாமியிடம் நடந்த ஜெயின் கமிஷன் விசாரணை :

நீதிபதி கேள்விகளை கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது.
“எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?”
[ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.”
“தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?”
என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.”
சாமிக்கு ஏதோ ஒரு 200 எம்.பி.க்கள் இருப்பதைப் போலவும் கட்சிக்குப் பல செயலர்களை வைத்திருப்பதை போலவும் ஒரு நினைப்பு. அலட்சியம்.
நீதிபதி தொடர்ந்தார்.
“சரி, உங்கள் கட்சி சார்பாக நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா, சொல்லமுடியுமா?”
“எனக்கு அதுவெல்லாம் நினைவில்லை.”
“உங்கள் கட்சி அலுவலகத்தில் சுற்றுப்பயண விவரம் இருக்குமே. அதைப்பார்த்து சொல்லலாமே?”
“இந்த கேள்வியை கேட்டவுடன் ஏதோ சாமர்த்தியமாக சொல்வதாக நினைத்து வகையாக மாட்டினார் சாமி.
“அந்தத் தேர்தல் சுற்றுப்பயண விவரம் எல்லாம் கட்சி அலுவலகத்தில் இருந்தது தான். இதோ இருக்கிறாரே வேலுச்சாமி, இவர் கட்சியைவிட்டு போகும்போது அந்த பைலை எல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிட்டார்” என்று கூறியதும் நீதிபதிக்கு முகம் சுருங்கியது.
“என்ன மிஸ்டர். இப்போதுதானே அந்த வேலுச்சாமியை யார் என்றே தெரியாது என்றீர்கள். உடனே எப்படி அவர்தான் அந்த பைலை திருடிக்கொண்டார் என்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள். [வேலுச்சாமியை] அவரை உங்களுக்கு தெரியுமா தெரியாதா?’’ என்றார் முறைத்துப் பார்த்தபடி.
அப்போதுதான் சாமிக்கு தான் மாட்டிகொண்டோம் என்பது தெரிந்தது. அப்படியே முழித்தார்.
“சரியாக சொல்லுங்கள் மிஸ்டர். இது நீதிமன்றம். நீங்கள் விளையாடுவதற்கான இடம் இல்லை. அவரை உங்களுக்கு முன்னமே தெரியுமா? தெரியாதா?” என்றார். சுப்ரமணியசாமியிடமிருந்து பதிலேதும் இல்லை. திணறினார். அதன் பிறகு கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிக நிதானமாக யோசித்து நினைவில்லை தெரியாது என்றபடியே பதிலளிக்கத் தொடங்கினார்.
“சரி மே மாதம் 21ம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு எப்படி வந்தீர்கள். விமானத்திலா, ரயிலிலா?”
இந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தபடியே நின்றார் சாமி.
“21ம் தேதி காலையிலிருந்து மாலைவரை நீங்கள் டெல்லியில் இல்லை. வேறு எங்கோ ரகசியமாக இருந்தீர்கள் என்பதற்கு என்ன பதில்?”
“இல்லை நான் டெல்லியில் தான் இருந்தேன்.”
“சரி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம். மத்திய அமைச்சர்களின் மூவ்மென்ட் ரிப்போர்ட் பைல் இருக்குமே. இருக்கிறதா?” என்ற கேள்விக்கு “அது தொலைந்துபோய்விட்டதாக மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது” என்றார் அரசு தரப்பு வழக்கறிஞர்.
அடுத்து சாமியை பார்த்து “நீங்கள் 21ம் தேதி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?” என்றார்.
“ஓ இருக்கிறதே” என்ற சாமி ஆங்கில நாளேட்டில் வந்திருந்த இரண்டு துண்டு செய்தியை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த நீதிபதி ஜெயினுக்கு முகம் சுருங்கியது. சாமி சரியாகத்தான் சொல்கிறார். நாங்கள்தான் ஏதோதவறாக புகர் செய்திருக்கிறோம் என்பதாக அது பட்டது. உடனே அதை கொடுக்கும்படி நான் கேட்டேன். எனது வழக்கறிஞரிடம் அதைக் கொடுத்தார். அதைப் பார்த்த எனது வழக்கறிஞர் “ஆமாம் வேலுசாமி, சாமி சரியாகத்தான் சொல்கிறார். அன்றைய தினம் பகல் முழுக்க அவர் டெல்லியிலேதான் இருந்திருக்கிறார்” என்றார். அவருக்கும் பிடிப்பு விட்டுப்போனது. எனக்கு பெரியகுழப்பம். அந்த செய்தித்தாள் பகுதியை கொடுங்கள் என்று வாங்கிப்பார்த்தேன். அன்றைய தினம் சாமி டெல்லியில் செய்தியாளர்களைப் பார்த்து ஒரு செய்தி கொடுத்திருப்பதாக பதிவாகியிருந்தது. எனக்கும் குழப்பம். அதிர்ச்சி. ஒன்றும் புரியாமல் இது எப்படி சாத்தியம் என்று பார்க்கிறேன். அப்படியே நீதிபதியையும் பார்த்தேன். நாங்கள் எதோ தவறான புகாரை கொடுத்த நபர்கள். சாமி சரியானவர்தான் என்ற பார்வை தெரிந்தது. இதையெல்லாம் கவனித்தபடி இருந்த பிரியங்கா காந்தி முகத்திலும் குழப்பம்.
நான் மீண்டும் அந்த செய்தித்தாள் பத்திகளைப் பார்த்தேன். சிங்கள் கால செய்தி, அதன் கீழே கடைசியாக பி.டி.ஐ., பி.டி.ஐ என்று இரண்டிலுமே இருந்தன. இருந்துகொண்டிருந்த என் முகத்தில் மின்னல் வெளிச்சம். உடனே நீதிபதியைப் பார்த்து “இது போய், சாமி திட்டமிட்டு நீதிமன்றத்தை ஏமாற்றியிருந்தார். அவரது ஏமாற்று புத்தியை இங்கேயும் காட்டியிருக்கிறார்.” என்றேன். அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் குழப்பம். நீதிபதி என்னைப்பார்த்ஹ்டு “எப்படிக் கூறுகிறீர்கள்?” என்றார்.
“சார், சுப்ரமணியசாமி கொடுத்த அந்த இரண்டு செய்திகளின் கிழேயும் பி.டி.ஐ என்றிருக்கிறது. இவர் நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருந்தால் அப்படி வந்திருக்காது. பி.டி.ஐ என்பது ஒரு செய்தி நிறுவனம். ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பி.டி.ஐ நிருவனத்தில் உள்ள ஒருவரைப் பிடித்து செய்தியைக் கொடுக்கலாம். சாமியும் அப்படித்தான் கொடுத்திருக்கிறார். அதனால்தான் செய்தியின் கிலே பி.டி.ஐ என்று போட்டிருக்கிறார்கள். பொய்யான ஆவணங்களைக் காட்டி நீதிமன்ற விசாரணையை திசைதிருப்புகிறார் சாமி. அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தால் எங்கே சந்தித்தார். அதில் யாராவது ஒரு செய்தியாளரை அடையாளம் கூற முடியுமா?” என்று கேட்டதும் நீதிபதிக்கு மட்டுமல்ல பிரியங்காவின் முகத்திலும் ஒரு திருப்பம்.
நீதிபதியும் சாமியைப் பார்த்து என் கேள்விக்கு பதில் என்ன என்று கேட்கிறார். சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. அவருக்கு வியர்க்கத் தொடங்கியது. தடுமாறுகிறார் என்பதும் புரிந்தது. எல்லோரும் இதைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார்கள்.
அடுத்த கேள்வி. “மே மாதம் 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் உங்களுக்கு மதுரையிலும் திருச்சியிலும் பொதுக்கூட்டநிகழ்ச்சி இருந்தது. கட்சியின் தேர்தல் பிரச்சாரம். தெரியுமா?”
திணறினார். யோசித்தார். “தெரியவில்லை. சரியாக நினைவில்லை” என்றார்.
“யோசித்து சரியாக கூறுங்கள்?” என்றார் நீதிபதி.
“இல்லை, எமக்கு அப்படி ஒரு நிகழ்ச்சி இருந்ததாக நினைவில்லை” என்றார்.
அப்போதுதான் நான் வைத்திருந்த 1991 மே மாதம் 21ம் தேதி வந்திருந்த மாலைமலர், மதுரைமணி ஆகிய இரண்டு மாலை நாளேட்டை எடுத்தேன். இரண்டும் மதுரை பதிப்பு. அந்த இரண்டு நாளேட்டிலும் சுப்ரமணியசாமி 22ம் தேதி மாலை மதுரையில் பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்ற விளம்பரமும் செய்தியும் வந்திருந்தது. அதில் சுப்ரமணிய சாமியோடு நானும் மதுரை மாவட்ட ஜனதா கட்சி தலைவரும் கலந்துகொள்வதாக இருந்தது. கட்சி சார்பான விளம்பரம் செய்தி அறிக்கைதான் அது. அதை சாமியிடம் காட்டினேன். இப்போதாவது நினைவிருக்கிறதா, தெரிகிறதா என்றேன். அதை வாங்கிப் பார்த்தவர் ஒன்றும் சொள்ளமுடியாதவராக ஒரு மாதிரியாக தலயாட்டி பிறகு ஆமாம் நினைவிருக்கிறது என்றார்.
“ஆக 22ம் தேதி மதுரையிலும் 23ம் தேதி திருச்சியிலும் நீங்கள் பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருந்தீர்கள். சரிதானே? அடுத்த கேள்வி.
யோசித்தபடியே “ஆமாம்” என்றார்.
“அது தேர்தல் பிரச்சார காலகட்டம். 22ம் தேதி மதுரை பொதுகூட்டத்திற்கு நீங்கள் முன்கூட்டியே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையா? அப்படியென்றால் அந்த விமான டிக்கெட் எங்கே?” என்ற கேள்வியை கேட்டதும் சாமிக்கு மேலும் வியர்வை கொட்டத்தொடங்கியது.
“22ம் தேதி மதுரைக்கு செல்லவேண்டும் என்றால் நீங்கள் அன்றைய தினம் காலை டெல்லியில் இருந்து 6 மணி விமானத்திற்குதான் புறப்பட்டுச் செல்லவேண்டும். அதற்கு நேராக பேருந்துக்குச் சென்று டிக்கெட்டை வாங்குவதுப் போல் வாங்கமுடியாது. ஆக முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். எங்கே அந்தப் பயணச்சீட்டு?” மீண்டும் எனது கேள்வி.
சாமியிடம் இருந்து பதில் இல்லை. முழித்தார். ஏதோ சொல்லவருகிறார். ஆனால் முடியவில்லை. நீதிபதியும் எங்கே அந்தப் பயணச்சீட்டு விவரம் என்ற கேள்வியை கேட்கிறார்.
பட்டென்ற பதில் இல்லை. நன்றாக முழித்துவிட்டு கடைசியாக “நான் அந்த புரோகிராமை கேன்சல் செய்துவிட்டேன். அதனால் டிக்கெட்டையும் கேன்சல் செய்துவிட்டேன்” என்றார். அப்படி சொன்னதும் அங்கே இருந்த மொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்கிறார்கள். அவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள். மெத்த படித்தவர்கள். ஒரு நிமிடம் மௌனமாக செல்கிறது நேரம்.
“சரி டிக்கெட்டை கேன்சல் செய்தீர்கள் என்றால் அதற்க்கான படிவம், அத்தாட்சி எங்கே?” என்றேன். இந்த நேரத்தில் சாமிக்கு மேலும் வியர்த்தபடி இருந்தது. கிட்டத்தட்ட சட்டை முழுவதும் நனைந்திருந்தது.
பிறகு மிக தயங்கித் தயங்கி “நான் விமான டிக்கெட்டே எடுக்கவில்லை” என்றார்.
“முதலில் விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டேன் என்றீர்கள். பிறகு டிக்கெட்டே எடுக்கவில்லை என்கிறீர்கள். சரி, ஏன் எடுக்கவில்லை? அதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கவேண்டுமில்லையா? அது என்ன காரணம்? கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரத்தையே கேன்சல் செய்துவிடும் அளவிற்கு என்ன முக்கிய வேலை. என்ன காரணத்திற்க்காக மதுரை பயணத்தை உறுதி செய்யவில்லை? கேன்சல் செய்தீர்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விக்கு சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. நிற்க தடுமாறினார். நிற்கமுடியாமல் விசாரணை கூண்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டார். உடல் முழுவதும் நனைந்துவிட்டது.
அப்போதுதான் நான் என் வழக்கறிஞர் பாலகிருஷ்ணனிடம் அதை மெதுவாக சொன்னேன். அதை கேட்ட அவர் புத்துணர்ச்சி பெற்றவராக சத்தம் போட்டு “எஸ் மை லாட், த ஹோல் வேல்ட் சேஞச் தேர் ப்ரோக்ராம் ஆப்டர் த அசாசினேசன் ஒன்லி, பட் அவர் ஜென்டில்மேன் டாக்டர் சாமி சேஞச் is ப்ரோக்ராம் பிபோர் த அசசினேசன் [மொத்த உலகமும் இந்த ராஜீவ்காந்தி படுகொளைக்க்ப் பிறகுதான் தமது திட்டத்தை மாற்றிகொண்டது. ஆனால் சுப்ரமணியசாமி மட்டுமே படுகொலைக்கு முன்பாக தனது பயணத்திட்டத்தை மாற்றியிருக்கிறார். அது ஏன்? முக்கியமாக தேர்தல் பிரச்சாரத்தைவிட்டு எங்கோ ரகசியமாக தங்கியிருக்க காரணம் என்ன?” என்று கேட்டபோது
யாரிடமும் எந்த சத்தமும் இல்லை. “இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் மிஸ்டர்” என்றார் நீதிபதி. சாமியிடம் இருந்து பதில் இல்லாதஹ்டு மட்டுமல்ல, தலைகுனிந்தபடி நிற்கிறார். இப்போது நனைந்த உடலில் இருந்து வியர்வை அவரது கைவிரல் வழியாக சொட்டியபடியே இருக்கிறது. எல்லோரும் அந்தக் கோலத்தைப் பார்க்கிறார்கள். எனக்கு எஹ்டோ இனம்புரியாத இன்ப அதிர்ச்சி உடலுக்குள்ளாக பாய்கிறது. யார் குற்றவாளி என்பது அம்பலபட்டதாக திருப்தி. எனக்கே இப்படி இருக்கிறது என்றால் தந்தை ராஜீவ்காந்தியை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள் பிரியங்காவிற்கு எப்படி இருக்கும் என்று அவரைப் பார்க்கிறேன். அவரது முகம்... ஆத்திரத்திலும் கோபத்திலும் அப்படியே தீ ஜ்வாலையாக முகமெல்லாம் சிவந்து கண்கள் சுப்ரமணிசாமியின் மீது ஆவேசப் பார்வையோடு நிலைகுத்தி நின்றிருந்தது. அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. கோவலனை பறிகொடுத்த கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவை மண்டபத்திற்குள் தலைவிரி கோலமாக நுழைந்ததை இளங்கோவடிகள் கூறுவதை படித்த ஞாபகம்தான் சட்டென்று நினைவுக்கு வந்தஹ்டு. தலைகுனிந்தபடியே நின்ற சாமி எந்தப் பக்கமும் திரும்பவில்லை. நீதிபதி ஜெயினோ சுப்ரமணியசாமியை உற்றுப் பார்த்தவர் அப்படியே பார்த்தபடியே இருக்கிறார். பார்வையாளர்கள் மத்தியிலும் ஒரே நிசப்தம். அடுத்து நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் ஜெயின் கன்னத்தில் கைவைத்தபடியே சாமியை பார்த்தபடியே இருக்கிறார். இரண்டு நிமிடங்கள் அப்படியே ஓடுகிறது. பேனாவை மூடி மேஜை மேல் வைத்தார். பிறகு கண்ணாடியை கழற்றி மேசைமீது வைத்தபடி அப்படியே எழுந்தார். வழக்கமாக “கோர்ட் is அட்ஜர்ன்ட்” என்று சொல்வதைக்கூட மறந்து சாமியை மேலும் முறைத்தப் பார்த்தபடியே அவரது அறைக்குள் சென்றார். பிறகு சாமியும் விசாரணைக் கூண்டிலிருந்து இறங்கினார். பார்வையாளர்களும் எழுந்து அங்குமிங்கும் நகர்ந்தார்கள். சாமி பிரியங்காவை கடக்கும் போது பாடியே தலைகுனிந்து நடந்தார். அந்த நேரத்தில் நான் பிரியங்காவை பார்க்கரின். சுப்ரமணியசாமியை அப்படியே சுட்டெரித்துவிடுவதைப் போல் பார்க்கிறார். முகத்தில் ஆதங்கம். ஆத்திரம் எல்லாம் ஒன்றுகூட கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. ‘நீதானா அந்தக் குற்றவாளி?’ என்ற முறைப்பு அது. அப்படியே என்னையும் பார்க்கிறார். ஒருவித ஏக்கம், இயலாமை எல்லாம் கலந்த சாந்தமான பார்வையோடு தலைசாய்த்து இமைமூடினார். அதை நன்றி என் எடுத்துகொள்வதா? தெரியவில்லை. அடுத்த நொடி அங்கிருந்து வேக வேகமாக வெளஎரினார்.
அவர் சென்றவுடனேயே அங்கு இருந்த மூத்த வழக்கறிஞரான தத்தா ஓடிவந்து என் கைகளைப் பற்றினார். “இந்த வழக்கு இவ்வளவு நாளும் இருட்டில் இருந்தது. இன்றுதான் அதன்மீது ஒரு வெளிச்சக்கீற்று மின்னலாய் பாய்ந்திருக்கிறது. இவ்வளவு நாளும் திக்குத் தெரியாத நிலையில் இருந்தது. மிகவும் நன்றி” என்று தட்டிகொடுத்தார். அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞரான மிட்டலும் ஓடிவந்து கட்டிபிடித்துக்கொண்டார். “என்னால் எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை. சாமி அந்த இரண்டு பத்திரிக்கை செய்திகளையும் காட்டியபோது இத்தோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்துவிட்டேன். ஆனால் நீங்கள்..? வாய்மை வென்றிருக்கிறது. பரவாயில்லை” என்றார். அது என் கடமை என்பதால் பாராட்டக எடுத்துகொள்ள முடியவில்லை.
அதேபோன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரானா விடியல் சேகர் ஓடிவந்து “அண்ணே இந்த நாளை வாழ்கையில் மறக்க முடியாதண்ணே. உங்கள் மூலமாக இன்னைக்கு இந்த வழக்கில் ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறதண்னே” என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், எனக்கு பரிச்சயமில்லை என்றாலும் விடியல் சேகரோடு சேர்ந்து கைகொடுத்துப் பாராட்டினார். இதேல்லாம் சொல்ல காரணம் இருக்கிறது.
இப்படி வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத பலரும் என்னை அங்கே அங்கீகரித்தார்கள், பாராட்டினார்கள். கட்டிபிடித்து உருகினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் என்னை கோபமாக முறைத்தது முறைத்தபடியே இருந்தார். என்னை வெறுப்பாக பார்த்தபடி எழுந்து விறுவிறுவென வெளியேறினார். அவர்தான் சி,பி,ஐ சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான கார்த்திகேயன். பரவாயில்லை நாங்கள் புலனாய்வு செய்யாததைக்கூட நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்ட வேண்டாம்.
ஹலோ என்று ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாம். ஆனால் இல்லை. ஏதோ அவரை விசாரணைக் கூண்டில் நிறுத்தி அவர்தான் இந்தப் படுகொலையின் சூத்ரதாரி என் நான் வாதடியதைப் போன்று முறைத்துக்கொண்டே சென்றார். அது தான் வேடிக்கையாக இருந்தது.
சரி போகட்டும். அதன் பிறகு நான் வழக்கறிஞரோடு அவரது அளிவலகம் சென்று மற்ற வேலைகளை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக விமானம் ஏறினேன். அந்த விமானத்தில் வலதுபக்கம் மூன்று இருக்கைகள். இடது பக்கம் இரண்டு இருக்கைகள். நுழைவு வாசல் ஓரத்தில் இருந்த மூன்று இருக்கையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியும், அவரது நண்பர் வழக்கறிஞர் வீரசேகரனும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன். என்னைப் பார்த்த கி.வீரமணி “வாழ்த்துகள் வேலுச்சாமி. இன்னைக்கு பிரமாதமாக ஆர்க்யுமென்ட் செயதீர்கலாமே. நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன். பரவாயில்லை சதிகாரர்கள் யார் என்பது ஓரளவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது” என்று பாராட்டினார். நானும் சிரித்தபடியே “ஆமாம்” என்றேன். இதற்குள் விமானம் புறப்படத் தயார் நிலைக்கு வந்தது. அந்த கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஒருவர் உள்ளே நுழைந்தார். என்னை கண்டதும் நெருப்பை மிதித்திவிட்டதைப் போன்று முகம் மாறினார். அப்படியே முகத்தை திருப்பிக்கொண்டு எனக்குப் பக்கத்தில் இரண்டுபேர் அமரக்கூடிய இருக்கையில், என்பக்கமாக உட்கார்ந்தார். சும்மா அப்படி திரும்பினாலே என்முகத்தைப் பார்த்துவிடலாம். அப்படியிருந்தும் டெல்லி முதல் சென்னைவரை சுமார் இரண்டரை மணிநேரம் அந்த முகத்தை என்பக்கம் திருப்பவே இல்லை. கழுத்தில் சுளுக்கு விழுந்தவரை போன்று அந்தபக்கமே முகத்தை திருப்பிகொண்டார். யார் அந்த பெரிய மனிதர் என்று திரும்பவும் கேட்டுவிடாதீர்கள். சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனே தான். அவருக்கு ஏன் என்மீது இவ்வளவு காழ்புணர்ச்சி என்று யோசிக்கும்போதே அவர் புலன்விசாரணை செய்த கோணமும் லட்சணமும் நினைவுக்கு வந்து தொலைத்தது. அதிகாரம் வைத்திருப்பவர்கள் சொல்வதே தீர்ப்பாகிவிடுகிறது என்ன செய்வது,
“தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்”
என்ற குரலை கார்த்திகேயன் படித்திருக்க மாட்டாரோ?

------ திருச்சி வேலுச்சாமி, “ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்” என்ற நூலில் இருந்து...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்திகள் ஆங்கிலத்தில் வரவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், டேவிட்! :lol:

 

காலம் கடந்த நீதியானது ' அநீதிக்குச்' சமமானது! :o

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தப்பித்த சில பேர்கள் … புதிய தகவல்கள்….

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்

தப்பித்த சில பேர்கள் …

புதிய தகவல்கள்….

rajiv-gandhi-photo.jpg?w=640

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியின் சார்பாக

வழக்காடிய, 1970 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில்

வழக்கறிஞராகப் பணியாற்றி வரும், 69 வயதாகும்,

திரு  எஸ்.துரைசாமி அவர்கள் எழுதி, விரைவில் 

வெளிவரவிருக்கும் ஒரு புத்தகம் தொடர்பாக -

டெஹல்கா ஆங்கில இதழில் அவருடன் ஒரு பேட்டி 

காணப்பட்டு, அதன் மூலம் இந்த வழக்கு பற்றிய 

பல புதிய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

“Mysteries and Secrets Behind

the Rajiv Gandhi Murder”

என்று தற்காலிகமாகப் பெரிடப்பட்டுள்ள

இந்த புத்தகத்தில் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

பற்றி விவரிக்கப்பட்டு இருக்கின்றன என்கிறது டெஹல்கா.

அந்த பேட்டியில் வெளிவந்துள்ள சில விஷயங்களை 

கீழே சுருக்கமாகத் தருகிறேன்.(இதில் வெளிவந்துள்ள

தகவல்களின் உண்மைததன்மைக்கு தான் பொறுப்பேற்க

முடியாது என்று டெஹல்கா கூறி இருக்கிறது )

கொலையில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய சில பேர்

விசாரணை வட்டத்திற்குள்ளேயே கொண்டு 

வரப்படவிலை என்பதே 

இந்த புத்தகத்தின் அடிப்படை. ராஜீவின் கொலைக்கு

காரணமானவர்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளே தான்

இருந்தார்கள்/இருக்கிறார்கள் – அவர்கள் பக்கம்

சட்டத்தின் பார்வை போகவே இல்லை என்பதே

முக்கிய கருத்து !

இந்த வழக்கு சிபிஐ டைரக்டர் கார்த்திகேயன் அவர்களின்

தலைமையில் – 4 டிஐஜி, 8 எஸ்.பி., 14 டிஎஸ்பி,

44 இன்ஸ்பெக்டர்கள், 55 சப் இன்ஸ்பெக்டர்கள்

மற்றும் கான்ஸ்டபிள்கள் அடங்கிய ஒரு எஸ் ஐ டி

என்று சொல்லப்பட்ட விசேஷ விசாரணைக் குழுவால்

கையாளப்பட்டது. ராஜீவ் மரணமடைந்தது 21 மே,1991

அன்று. 24 மே, 1991 அன்று விசாரணையைத்

துவக்கிய சிபிஐ  20 மே, 1992 அன்று குற்றப்

பத்திரிகையை தாக்கல் செய்தது.

கிட்டத்தட்ட ஒரு வருட புலனாய்வுக்குப் பிறகு,

சிபிஐ, மொத்தம் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்திருந்தது. இதில் 19 பேர்கள் சுப்ரீம் கோர்ட்டால்

விடுவிக்கப்பட்டு விட்டார்கள். மீதி 7 பேர் -

அநேகமாக அவர்கள் எஸ்.ஐ.டி.யின் வசம் இருந்தபோது

கொடுத்திருந்த ஒப்புதல் வாக்குமூலங்களின்

அடிப்படையிலேயே தண்டிக்கப்பட்டனர்.

ராஜீவ் காந்தி மே 21ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் திருமதி

மரகதம் சந்திரசேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்வது

என்கிற விஷயம் மே 18ந்தேதி தான் டெல்லியில்

காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் மே 17ந்தேதியே “தினத்தந்தி” செய்தித்தாளில்

ராஜீவ் காந்தி 21ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில்

பேசப்போகிறார் என்கிற செய்தி வெளி வந்து 

விட்டது – எப்படி ? தமிழ்நாட்டில்

காங்கிரஸ் தலைவர்களுக்கே தெரியாத விஷயம்

தினத்தந்தி நிருபருக்கு தெரிந்தது எப்படி ?

19ந்தேதி விஷயம் தெரிந்த பிறகு, தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இந்த

கூட்டம் கூடாது என்று ஆட்சேபித்திருக்கிறார்.

அதையும் மீறி, மரகதம் சந்திரசேகரின் செல்வாக்கில்

இந்த கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று 

உயர்மட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிறகு  உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள்

இந்த கூட்டத்தை ஸ்ரீபெரும்புதூர் உயர்நிலைப்பள்ளி

மைதானத்தில் நடத்த போலீசிடம் அனுமதி

வாங்கினார்கள்.  ஆனால் மரகதம் சந்திரசேகர்

இந்த கூட்டம் நடைபெறும் இடத்தை பள்ளிக்கூடத்திற்கு

பதிலாக, கோவில் மைதானம் என்று மாற்றி விட்டார்-

அது ஏனோ ?

இடம் மாற்றப்பட்ட விஷயம் போலீசிடம் சொல்லி

புதிய் அனுமதி பெறப்படவில்லை. அந்த மைதானத்திற்கு

சரியான பாதுகாப்பும்  போடப்படவில்லை.

அந்த கூட்டத்தில்  டெரில் பீட்டர் என்கிற பிஸினஸ்மேன்

ஒருவரும் வெடிவிபத்தில் சிக்கி இறந்து போனார்.

அந்த ஆள் உண்மையில் எப்படி, ஏன் அங்கு வந்தார் ?

அவர் மே 30தேதி அமெரிக்கா போவதற்காக அவரது

பெயரில் விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது.

அவரது மனைவி மத்திய பொதுப்பணித் துறையில்

பணி புரிந்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்திற்குப் 

பிறகு அவர் அமெரிக்கா போய் செட்டில் ஆகி விட்டார் !

இந்த சம்பவத்தில் அவர் எந்த அளவிற்கு, எப்படி

சம்பந்தப்பட்டிருந்தார் ?

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, விசாரணையில்

சரியாக ஒத்துழைக்கவில்லை. ஒரிஜினல் டூர்

ப்ரொக்ராமை அவர்கள் விசாரணையின்போது கொடுக்கவே

இல்லை. பின்னர் திரும்ப திரும்ப நினைவூட்டப்பட்ட

பிறகு நவம்பர் 28ந்தேதி - 6 மாதங்கள் கழித்து தான் -

அதுவும் திருத்தப்பட்டதைத் தான் கொடுத்தார்கள்.

அது ஏன் ?

தனுவுடன் பக்கத்தில் ராஜீவுக்கு மாலை போடுபவர்க்ளுடன்

நின்றிருந்த லதா கண்ணனின் கணவர் கண்ணன் 

4வது கிரேடில் பணிபுரியும் ஒரு சாதாரண தொழிலாளி.

கொலை நடந்த சில மாதங்களுக்குப் பின்னர் அவர் 

சொந்தமாக ஒரு லாரி வாங்கினார். அவருக்கு அவ்வளவு

பணம் கிடைத்தது எப்படி ?

இதை விசாரிக்காமல் விட்டது எப்படி ?

டிஐஜி ஸ்ரீகுமார் விசாரணைக்காக லண்டன் சென்று

வந்தார். அவர் அங்கு விசாரணையில் கண்டுபிடித்தது

என்ன என்று ரிப்போர்ட் எதுவும் கொடுக்கவில்லை.

அவர் விசாரணைக்கு அழைக்கப்படவும் இல்லை.

அவர் லண்டனில் இருந்தபோது முக்கியமான ஆவணங்கள்

அடங்கிய ஒரு சூட்கேஸ் காணாமல் போனது. ஆனால் -

இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை !

ஐபி டைரக்டர் எம்.கே.நாராயணன் அந்த நிகழ்ச்சியின்

போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தம்மிடம் இருப்பதாக

கேபினட் செயலாளருக்கு எழுதி இருக்கிறார். ஆனால் -

இந்த வீடியோ – ஆவணமாக கோர்ட்டில் சேர்க்கப்படவில்லை.

எஸ் ஐ டி கஸ்டடியில்  இருந்தபோது, ஷண்முகம் என்கிற

சிறுவகைக் குற்றவாளி மர்மமான முறையில் இறந்தார்.

அதற்கான காரணங்கள் இன்னும் வெளி வரவில்லை.

மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகருக்கு

ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக, 

தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாக சிவராஜன்

தன் டைரியில் எழுதி வைத்துள்ளார்.இந்த தகவலை,

திரு ரகோத்தமன் (ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த்

முக்கிய சிபிஐ விசாரணை அதிகாரி)

அண்மையில் வெளியிடப்பட்ட தன் புத்தகத்தில் எழுதி

இருக்கிறார்.

ஆனால், கொலை வழக்கு விசாரணை நடந்தபோது, 

கோர்ட்டில் அவர் இந்த விவரத்தை தெரிவிக்கவில்லை.

சிவராஜனின் டைரியையும் ஆவணமாக

ஒப்படைக்கவில்லை !

சிவராஜன் லலித்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுததன்

பின்னணியைப் பற்றி, சிபிஐ விசாரிக்காதது ஏன் ?

தனுவும், சிவராஜனும் மரகதம் சந்திரசேகர்

குடும்பத்திற்கு எப்படி அறிமுகம் ஆனார்கள் என்பதை

சிபிஐ எங்கும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும்

லலித் சந்திரசேகரின் மனைவி ஒரு இலங்கைத் 

தமிழர் வேறு !

சிவராஜனின் டைரியில் ராஜீவ் காந்தி

விசாகப்பட்டினத்திலிருந்து கிளம்பும் நேரமும், சென்னை

வந்து சேரும் நேரமும் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது.

பின்னர், விசாகப்பட்டினத்தில் ராஜீவ் விமானம் 

யந்திரக் கோளாறு காரணமாக புறப்படத் தாமதம்

ஆன விஷயம் கூட சென்னையில் இருந்த சிவராஜனுக்கு

யாராலோ தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதலில் இருந்தே கண்ணுக்குத் தெரியாத “கை” ஒன்று

இதில் தொடர்பு கொண்டு இருக்கிறது.

எஸ் ஐ டி இந்த கோணங்களில் விசாரிக்காதது ஏன் ?

சிவராஜனின் டைரிகளில் ஒன்றில் – சிவராஜன்

போபாலுக்குச்(மத்திய பிரதேசம்) சென்றதும்,

TAGக்கு ஒரு கோடியே எழுபத்திஆறு லட்சம் ரூபாய்

கொடுத்ததும் 13 மார்ச் 1991 தேதியிட்டு எழுதப்பட்டு

உள்ளது. இநத TAG யார் என்றும் எதற்காக இந்த

பணப்பரிமாற்றம் நடந்தது என்றும் எஸ் ஐ டி தீவிரமாக

விசாரிக்கவில்லை.  இதைத் தீவிரமாக

விசாரித்திருந்தால், உண்மையான குற்றவாளிகளின்

முகம் தெரிய வந்திருக்கும்.

இந்த பணம் செக்காக கொடுக்கப்படவில்லை.

மொத்த பணமும் ரொக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 8, 1991 தேதியிட்ட டைரி குறிப்பு -

இது குறித்து மத்திய பிரதேசம், குணா மாவட்டத்தில்

உள்ள ஒரு விலாசத்தையும் கொண்டிருக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக

சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆதிரை என்கிற பெண்

செப்டம்பர் 25, 1992 அன்று சென்னை உயர்நீதி

மன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தமாக தான்

சில விவரங்கள் கூற விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

அதை  யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

மேலும், ஜூலை 29ந்தேதியன்று, பங்களூர் போலீஸ்,

சிவராஜனும் அவரது கூட்டாளிகளும், இந்திரா நகரில்

ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்கிற தகவலை

எஸ்.ஐ.டி க்கு தெரிவித்தது. அன்றே அந்த வீட்டை

கமாண்டோ படை வளைத்திருந்தால், சிவராஜன் உட்ப்ட

அத்தனை பேரையும் உயிருடன் பிடித்திருக்கலாம்.

ஆனால் எஸ்.ஐ.டி. இதற்கு 4 நாட்கள் எடுத்துக் 

கொண்டது. விளைவு – யாரும் உயிருடன் சிக்கவில்லை.

சிவராஜன் உடல் கிடந்த இடத்தில், ஒரு  AK-47

ரைபிளும், ஒரு 9mm பிஸ்டலும் இருந்தது. அவை 

எப்படி அங்கே வந்தன என்பதற்கு இன்று வரை சரியான

விளக்கம் இல்லை.

வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, ஹரிபாபுவின்

காமிராவை போலீஸ் கைப்பற்றி இருந்தது. அதிலிருந்த

பிலிம் சுருளை 5 மணி நேரத்திற்குள்ளாக ப்ராசஸ்

செய்து புகைப்படங்களை எடுத்திருக்கலாம்.

குற்றவாளிகளின் புகைப்படங்கள் கிடைத்து, தேடுதலை

துவக்கி இருக்கலாம். அது நடக்கவில்லை.

ஆனால் – இந்த புகைப்படங்கள் 25ந்தேதி திடீரென்று

“இந்து” பத்திரிகையில் வெளிவந்தன. போலீஸ் வசம்

இருந்த பிலிம் சுருளின் புகைப்படங்கள்

இந்து பத்திரிகைக்கு கிடைத்தது எப்படி ? இதை

யாரும் விசாரிக்கவில்லை.

சம்பவம் நடந்த இடத்தில் 3 வீடியோ

புகைப்படக்காரர்கள் எடுத்த வீடியோக்கள் சிதைக்கப்பட்டும்,

சில் இடங்களில் அழிக்கப்பட்டும் இருந்தன.

அவற்றை கையாளும்போது தவறுதலாக இவை 

நிகழ்ந்து விட்டன என்று போலீஸ் தரப்பு பின்னர் கூறிய

காரணங்கள்  ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.

கடைசியாக – பேட்டி முடியும்போது,

புத்தக ஆசிரியர் கூறுகிறார் “ராஜீவ் காந்தி மரணம்

துரதிருஷ்டவசமானது. அரசியல் விரோதம் காரணமாக

ஒரு உயிரைப் பறிப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

நான் இவ்வளவு ஆண்டுகள் கழித்து 

இது குறித்து இவ்வளவு விவரங்களை வெளியிடுவதற்கு

காரணம் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை 

சரிவர நடைபெறவில்லை என்பதை இந்த புத்தகத்தின்

மூலம்  உலகிற்கு தெரிவிப்பதற்காகத் தான்”.

http://vimarisanam.wordpress.com/2012/01/19/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.