Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் ஆட்சிக்கு வந்தாலும், இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாறாது! – அடித்துச் சொல்கிறார் த இந்து ஆசிரியர் என்.ராம்.

Featured Replies

இந்தியாவில் எந்த அரசாங்கம் வந்தாலும் இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கையில் மாற்றங்கள் வரப்போவதில்லை. நட்பு நாடு என்ற வகையில் அதிகாரப் பரவலாக்கலுக்காக அழுத்தங்களை முன்னெடுக்குமே தவிர வேறு எதனையும் முன்னெடுக்காது என்று, இந்தியாவிலிருந்து வெளியாகும் த இந்து ஆங்கில நாளிதழின் ஆசிரியர் என். ராம் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள என்.ராம் கொழும்பில் இனத்துவ கற்ககைளுக்கான சர்வதேச நிலையம் நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது- இந்தியா ஒரு காலத்தில் இலங்கை விடயத்தில் ஆழமாக ஈடுபட்டு வந்தது. எனினும் 1991ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் இந்தியா சிறந்த பாடங்களை கற்றுக்கொண்டது. அதன் பின்னர் இலங்கை விடயத்தில் இந்தியா நட்பு நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது. எனினும் அதிகாரப் பரவலாக்கல் குறித்து அழுத்தங்களை முன்னெடுப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதாவது 1991ம் ஆண்டின் பின்னர் இலங்கை குறித்த இந்திய. வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. அந்தவகையில் தற்போதும் லோக்சபா தேர்தல் நடைபெறுகின்றது. அந்தத் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கையில் மாற்றங்கள் வரப்போவதில்லை. நரேந்திர மோடி பிரதமராக வந்தாலும் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் ஏற்படாது.நட்பு நாடு என்ற வகையில் அதிகாரப் பரவலாக்கலுக்காக அழுத்தங்களை இந்தியா முன்னெடுக்கும். இவற்றைத் தாண்டி இந்தியா எதனையும் செய்யும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கவும் முடியாது. மேலும் சீனாவுடன் இந்தியா தற்போது பாரிய பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார வர்த்தக பெறுமதி அதிகரித்து வருகின்றது. எனவே இந்தியாவின் எந்த அரசாங்கமாக இருந்தாலும் சீனாவை புறக்கணித்து செயற்பட முடியாது. தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் சீனாவுடனான உறவு குறித்து விமர்சித்தாலும் பதவிக்கு வந்த பின்னர் சீனா தவிர்க்கப்பட முடியாத நாடாகவே உள்ளது.அத்துடன் இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பில் யாரும் கவலை கொள்ளவேண்டியதில்லை. குறிப்பாக இந்தியா இந்த விடயத்தில் கவலை கொள்ளவேண்டியதில்லை. சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்குவது போன்று இந்தி-யாவும் இலங்கைக்கு உதவிகளை வழங்க முடியும். உலகில் மிகப்பெரிய வர்த்தக சந்தையாக சீனா உருவெடுத்து விட்டது. எனவே இலங்கையில் அதிகளவில் சீனா முதலீடு செய்வதும் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவதும் சிறப்பான விடயமாகும். அதனை வரவேற்க வேண்டும். நான் வரவேற்கின்றேன்.இலங்கை இரண்டு பெரிய நாடுகளுடன் சிறந்த முறையில் உறவுகளை பேணுகின்றமை குறிப்பி-டத்தக்க விடயமாகும். இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு விடயங்களில் சீனா பாரிய உதவிகளை வழங்கிவருகின்றது. மேலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவும் மிகவும் முக்கியமானதாகும். இதேவேளை இலங்கையில் தற்போது யுத்தம் முடிவடைந்து உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் மேலும் முன்னோக்கிய செயற்பாடுகள் அவசியமாகும். குறிப்பாக வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டமை பாராட்டத்தக்க விடயமாகும். சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகமும் உள்ளது. இது சிறந்த விடயமாகும். முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் போன்ற ஒருவரை வட மாகாண சபையின் முதலமைச்சராக கொண்டுவந்தமை கூட்டமைப்பு மேற்கொண்ட முக்கிய விடயமாகும். வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை நான் கடந்த ஞாயிறு கொழும்பில் சந்தித்து பேச்சு நடத்தினேன். அத்துடன் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி. ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடினேன். மிகவும் பயன்மிக்க சந்திப்பாக அது அமைந்தது. உண்மையில் வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகம் இருக்கின்றமை சிறந்ததாகும். அதேநேரம் வட மாகாண சபைக்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்பதுடன் வட மாகாண பிரதம செயலாளரையும் மாற்றவேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நான் இங்கு முன்வைக்கவில்லை. மாறாக நடைபெறவேண்டியவற்றை குறிப்பிடுகின்றேன். இந்தியாவானது இலங்கையின் தமிழ் மக்களின் நலனில் மட்டும் அக்கறை கொண்ட நாடாக இருக்காது. மாறாக முழு நாட்டின் அனைத்து இன மக்களினதும் நலனுக்காக இந்தியா முன்னிற்கும். இதனை இலங்கைக்கான இந்திய தூதுவரும் வலியுறுத்தியுள்ளார். அந்தவகையில் அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுத்து சிறந்த எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு இலங்கைக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=104404&category=TamilNews&language=tamil

இவர் சொல்வதைப்பார்த்தால் இலங்கைக்கான ஆலோசகர் போலவல்லோ தெரிகிறது? ஆக மோடி மற்றும் ஜெயலலிதா வெறும் அடிமட்ட அரசியல்தான் செய்கிறார்களா?

  • தொடங்கியவர்

தமிழர்களை நசுக்குவதற்கு ஆரியம் கூட்டாக சேர்ந்துள்ளது.. அத்துடன் இந்தியாவின் முக்கியமான புள்ளிகள் இலங்கை கைக்குள் வைத்துள்ளது...(கவனிக்க வேண்டிய விடையங்களை கவனித்து) சுப்புரமணி சுவாமி, ராம் சில உதாரணங்கள்..பெரிய பட்டியலே போடலாம்.. இவர்கள் நிரந்தரமாக இலங்கைக்கு சார்பாக இந்திய கொள்கை வகுப்பை தக்க வைப்பவர்கள்.. இவர்கள் இருக்குமட்டும் இந்தியா தமிழ் நாட்டைக்கூட மதியாது...

இந்து ராம் குடும்ப விளம்பர பத்திரிகையை திரும்ப பறித்து வைத்து என்ன தான் கொங்கிரசுக்கு தாளம் போட்டாலும் மோடி வந்தால் இவருக்கு நெருக்கடி வரும்.

இதுதான் இந்தியாவில் பிரச்சினை கண்டவன் எல்லாம் வெளியுறவு கொள்கை வகுக்கிறான்.

இந்த ஜந்து இன்னும் உலகம் 1991 இல் தான் நிற்பதாகக் காட்டுகிறது. "சிறிலங்கா ரத்னா" விருது வாங்கிய விசுவாசம்!!
 
சிறிலங்கா, ஏன் இந்தப் பிராந்தியமே சீனாவின் வளர்ச்சியால் தனித்துவத்தை இழந்து உலக வல்லரசுகளின் கவனிப்பில் வந்துள்ளது.
 
ராம் சொல்வது போல் இந்தியா சிறிலங்காவின் சீன உறவுகளை கண்டும் காணமல் இருக்கப்போவதாக சொல்வது இவர் சிறிலங்காவிற்கு நல்ல பிள்ளையாக‌ நடிப்பதற்கு உதவலாம்.
 
ஆனால், இனிவரும் தசாப்தங்களில் இந்தப் பிராந்தியத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை அரசியல் தந்திரோபாய ஆய்வு மையங்களின் அறிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
 
முக்கியமாக மேற்கு நாட்டு அணிகள் இப்பிராந்தியத்தில் செலுத்தப் போகும் அழுத்தங்கள்... இந்த அணி சார்பாக இந்தியா எடுக்கப் போகும் திசை...
 
உலக நிலைப்பாட்டில் தொடர்ந்து இந்தியா மதில் மேல் பூனை நிலையில் இருக்க முடியாத இறுக்கமான சூழ்நிலை... 
 
வெளிநாட்டு கொள்கையில் பா.ஜ.கவும் காங்கிரசும் ஒரே கொள்கை கொண்டவை என்பதும் பொய்..
 
தமிழ்நாட்டு அரசியல் அழுத்தங்கள்...
 
 
சிறிலங்கா சீனாவோடும் இந்தியாவோடும் சிறந்த முறையில் உறவுகளைப் பேணுகின்றது என்பதைவிட சிறிலங்காவில் இந்தியாவின் சந்தை சீனாவால் அகற்றப்படுகின்றது என்பதே உண்மை. இந்திய ஏற்றுமதியாளர்களின் புள்ளிவிபரங்கள் இதையே காட்டுகின்றது.
 
சீனா கொடுத்துள்ள பல கடன்கள் சிறிலங்கா ஆட்சியாளர்களை சீனாவில் தங்க வைத்துள்ளது. சீன இராணுவத் தொடர்புகளும் பலமாக உள்ளது.
 
இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பின்னும் இந்தியா, சீன சிறிலங்கா உறவுகளைக் கண்டு கொள்ளாது என்றால் அது படு பொய்யாகத் தான் இருக்கும்.
 
ராம், ஒன்றில் இந்திய உள்நாட்டு அரசியல் பற்றி சிங்களவர்கள் தெளிவற்றவர்கள் என்று நினைத்திருக்க வேண்டும். அல்லது நல்ல பிள்ளையாக நடித்து இன்னும் ஏதாவது வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்திருக்க வேண்டும்.
 
 
 
 
China's new dream: How will Australia and the world cope with the re-emergence of China as a great power

Wednesday, 12 February 2014

By: David D Hale

Australian Strategic Policy Institute
 
 

எவ்வளவோ இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. தொடர்ந்தும் மாற்றங்கள் ஏற்படத்தான் போகிறது. இந்து ராமும் மாறத்தான் வேண்டும். இந்தியாவும் மாறத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. தொடர்ந்தும் மாற்றங்கள் ஏற்படத்தான் போகிறது. இந்து ராமும் மாறத்தான் வேண்டும். இந்தியாவும் மாறத்தான் வேண்டும்.

 

இந்து ராம் முஸ்லிம் ரஹ்மான் ஆக மாறலாம்...இந்தியா சில சமயம் இஸ்லாமிஸ்தான் ஆகவும்மாறலாம்.... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.