Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று சிவராத்திரி:இலங்கை வாழ் இந்துக்களுக்கு ஜனாதிபதி மகிந்த வாழ்த்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இன்று சிவராத்திரி:இலங்கை வாழ் இந்துக்களுக்கு ஜனாதிபதி மகிந்த வாழ்த்து! 
[Thursday, 2014-02-27 08:31:15]
mahinda-270214-150.jpg

முழுமுதற் கடவுளான சிவபெருமானை பூஜித்து கொண்டாடப்படும் பிரதான விரதங்களில் மிகவும் சிறப்பான விரதமாக கருதி மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று மகா சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இப்புனித தினத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை வாழ் சகல இந்து மக்களுக்கும் வாழ்த்துச் செய்துயொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

  

இன்றைய தினம் மகா சிவராத்திரி இலங்கை வாழ் இந்துக்கள் உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இணைந்து கொள்கின்றனர். இப்பண்டிகையுடன் தொடர்புடைய பல்வேறு கிரியைகளில் விரதம் அனுஷ்டித்தல், கோவிலில் இரவில் விழித்திருந்து நான்கு ஜாமப்பூஜைகளில் கலந்து கொண்டு , தானம் வழங்குதல், விளக்கேற்றல், சிவபெருமானைப் புகழ்த்து தோத்திரம் பாடுதல் போன்றவையும் அடங்குகின்றன. இப்பண்டிகையின் முக்கிய அம்சமான திருவிளக்கேற்றும் வைபவம் அறியாமையை அகற்றி ஞானத்தைத் தேடும் மானிட சமூகத்தின் உறுதியான முயற்சிகளையும் தமது வாழ்விலும் சமூகத்திலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் அடைந்து கொள்வதையும் குறித்து நிற்கிறது.

இலங்கைவாழ் இந்துக்கள் எமது சமூகத்தில் உள்ள ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்களுடன் பல நூற்றாண்டுகளாக சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த முக்கியமான பண்டிகையை உண்மையான ஐக்கிய உணர்வுடனும் புரிந்துணர்வுடனும் சுதந்திரமாகக் கொண்டாடுவதற்கேற்ற சமாதானச் சூழல் தற்போது நாடெங்கிலும் காணப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.என்று கூறியுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104524&category=TamilNews&language=tamil

 

சக்கரவர்த்திக்கும் கொஞ்ச நாளா நித்திரை இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்சநாளாக மகிந்தருக்கு சிவராத்திரிதான்.

 

கண்ணை மூடினால் ஐநா, ஜெனிவா, நவநீதம்பிள்ளை, புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் போராட்டம் என்று வந்து போகுது  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்று சிவராத்திரி:இலங்கை வாழ் இந்துக்களுக்கு ஜனாதிபதி மகிந்த வாழ்த்து!

 

இலங்கை ஜனாதிபதி ரொம்ப நல்லவர்....மனிதநேயம் இவரிட்டை எக்கச்சக்கம்....

இன்று சிவராத்திரி:இலங்கை வாழ் இந்துக்களுக்கு ஜனாதிபதி மகிந்த வாழ்த்து!

இலங்கை ஜனாதிபதி ரொம்ப நல்லவர்....மனிதநேயம் இவரிட்டை எக்கச்சக்கம்....

அப்ப அவருக்கும் சேர்த்து ஒரு அருச்சினை செய்தால் போச்சு.:)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவருக்கும் சேர்த்து ஒரு அருச்சினை செய்தால் போச்சு.:)

 

ஒம் மகிந்த நமக.....நட்சத்திரம் பிளிஸ்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் மகிந்த நமக.....நட்சத்திரம் பிளிஸ்.....

 

ஆக்சுவலி ..'புனர்பூசம்'...நாலாம் பாதம் ! :icon_mrgreen:

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.