Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்சந்தர்ப்பத்தில் புலிகள் பலவீனப்பட்டார்கள், தோற்றார்கள் என்று பஞ்சப்பாட்டுப் பாடத்தேவையில்லை. ஒருவனின் கையைக் கட்டிவிட்டு, மற்றவனை அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு, "ஆகா அவன் நல்லா அடிக்கிறான் இவன் நல்லா அடிவாங்கிறான், இவனின்ர கதை இதோட சரி" என்று சொல்வதுதான் இப்போது நடக்கிறது.

(பின்வாங்குவதாக முடிவெடுத்தபின்பும்) சம்பூரைக் கைவிடமாட்டோமென்று புலிகள் சொன்னதுகூடத் தவறில்லை. பின்வாங்கயதும் தவறில்லை.

ஆனால் இப்பின்வாங்கலை எப்படி அரசியலாக்கி இந்தச் சமாதானப்பொறியிலிருந்து வெளிவருகிறார்கள் என்பதுதான் முக்கியம். இதுவரை காட்டமான ஓர் அரசியல் நகர்வு சம்பூரை வைத்து நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

இராணுவம் பிரதேசங்களைக் கைப்பற்றுவதைச் சரியாகப் பயன்படுத்தி இப்பொறியிலிருந்து விடுபடுவதுதான் தந்திரமென்றால் மாவிலாறு விடுபட்டதை வைத்து எதைச் சாதித்தோம்?

  • Replies 131
  • Views 17.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிலாறைப் பிரச்சினையாக்கி வெற்றிவெற முடியாதநாம் சம்பூரைப் பிரச்சினையாக்கி பொறியிலிருந்து விடுபடுவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பது நம்பிக்கை அளிக்கவில்லை. நோர்வே என்ன செய்கிறது என்று எழிலன் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது அரசியல் நகர்வு அன்று.

இராணுவத்தைப் பின்வாங்கச் சொல்லி நோர்வேயைக் கொண்டு ஒரு காலக்கெடுவை விதிப்பதுதான் நகர்வு. அதற்கு ஒருபோதும் சிங்களப்பேரினவாதம் உடன்படப்போவதில்லை. அதைச் சாட்டாகவைத்து சிங்கள அரசின்மேல் பழியைப்போட்டு நோர்வே சாதுரியமாக நடுவர் பணியிலிருந்து விலகவேண்டும்.

அதைச் செய்வது புலிகளின் கையில்தான் இருக்கிறது.

அப்படி ஏதும் நடக்காத பட்சத்தில் பின்வாங்கல் என்பது இயலாமையின் வெளிப்பாடே என்ற முடிபுதான் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்வாங்கிய இடங்களை மீண்டும் பிடிக்கலாம் என்று ஓரளவுக்குமேல் நியாயம் கற்பிக்க முடியாது. அதற்கு ஜெயசிக்குறுவையும் ஓயாதஅலைகள் -3 ஐயும் உதாரணம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அதுவேறு இதுவேறு.

அன்று ஜெயசிக்குறு இராணுவத்தை வெல்ல விட்டது, புலிகளுக்கு முறியடிக்க முடிந்த நிலையில் அன்று. அதாவது முறியடிக்க முடிந்தும் வேண்டுமென்றே எதிரியை முன்னேற விட்டார்கள் என்ற கதையை ஜெயசிக்குறுவுக்குப் பொருத்தமுடியாது. அது உண்மையில் முடியாமலேயே முன்னேற விடப்பட்டது. பின் தக்க சமயத்தில் இடங்கள் மீளக் கைப்பற்றப்பட்டன.

முன்னேற்ற காலத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் வீரச்சாவு. மீளக்கைப்பற்றும்போது முன்னூறுக்கும் குறைவான போராளிகள் வீரச்சாவு.

இப்போதும் இடங்களை விடுவதொன்றும் பிரச்சினையில்லை, அவற்றை மீளக் கைப்பற்றலாம் என்று சொல்லிக்கொண்டிருக் கமுடியாது. விடுவதற்குக் கொடுக்கும் விலையும், மீளக் கைப்பற்றக் கொடுக்கும் விலையும் என்ன வானத்திலிருந்தா கொட்டுகிறது?

இப்போது சம்பூரைத்தாண்டி இராணுவம் முன்னேறுவதை எப்படியும் தடுக்க வேண்டிய தேவையுள்ளது. இப்போதைய நிலையிலிருந்தால் ஓரிருநாளில் சம்பூரை மீளக் கைப்பற்றமுடியும். அதைத்தாண்டி நீண்டதூரம் தொடர்ந்து முன்னேற விட்டால் பெரியவிலை கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பூர் மீண்டும் புலிகளின் கைகளுக்கு வருவது முக்கியம். அதில்தான் போராட்டத்தின் தொடர்ச்சி தங்கியிருக்கிறது. இல்லாவிட்டால் எம் போராட்டப்பாதையில் நாங்கள் சற்றுக்காலம் பின்னோக்கிப் போவோம் என்பதை மறுக்க முடியாது.

நண்பர் ஒருவரோடு கதைத்தபோது இது நிலவுக்காலமென்றும் இன்னும் இரண்டுகிழமையில் இருட்டுக்காலம் வந்துவிடுமென்றும் அப்போதுதான் புலிகள் தமது தாக்குதலைத் தொடங்குவார்களென்றும் சொன்னார்.

இது எவ்வளவுதூரம் சாத்தியமென்று தெரியவில்லை. அந்தக்காலத்தைப் போராட்டம் தாண்டிவிட்டதென்று நினைக்கிறேன். ஆனையிறவு முற்றுகையின்போதான முக்கியதாக்குதல்கள் பகல்நேரத்தில் நடத்தப்பட்டன. இப்போதும் அதைக்காரணம் சொல்வது சரியாகத் தெரியவில்லை.

ஆனால் இரகசிய நகர்வொன்று கட்டாயம் தேவைப்படுமென்றால் இருட்டுக்காலத்த்துக்குக் காத்திருக்கவேண்டியதுதான்.

அதுவும் நடந்தாச்சா...! அப்ப எனிப் பேச்சுக்குப் போகலாம்..அங்க அடிமாட்டு..விலைல...மக்களை...???!

இழப்புக்கள் தான்..மிச்சமா..??! எங்க எழிலன்..அரையடியும் விடமென்றார்..இப்ப இராஜதந்திரமா..தந்திரோபாயமா... பின்வாங்கினது என்பார்..அவங்கள்...புலிகள் பலவீனம் என்பாங்கள்..மக்கள் தினமும் உயிரை விட்டிட்டு இருக்க வேண்டியான்..! நீங்கள் என்னவும் செய்யுங்கோ..மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கோ...?! :idea:

உங்கலுக்கு நக்கல் கூட எங்களுக்கு மட்டும் கவலை இல்லையா உங்கள் கருத்துக்களால் சந்தோசப்படப் போவது மதி அன் கோ தான் தோல்வி என்றது சகஜம் ஆனால் நக்கல் அடித்து அவர்களின் உயிர்தியாகங்களை கொச்சைபடுத்தவேண்டாம்.அவ்வாற

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி இளந்திரையன் சொல்றார் பேச்சு வார்த்தையில் இருந்து வெளியேற போறம்னு ஆனால் இரக்கிற இடத்தையெல்லாம் விட்டு கொண்டு இருக்கினம்..இப்ப பாத்தால் ஜே.வி.பி சொல்லுது கிழக்கில இருந்த முற்றாக புலியல வெளியேற்வேண்டும் எண்டு..அது நடந்தாலும் ஆச்சரியம் இல்ல ஏண் என்டா உலக நாடுகள் இருவரைக்கும் இலங்கைய கண்டிக்கல..இணியும் உலக நாடுகள் கண்டிக்கனும் இல்ல நோர்வே எண்ண சென்சிட்டு இருக்னெண்டு கேக்கிறதுல பிரியோசனம் இல்ல.. இப்பிடியே எல்லா இடத்தையும் விட்டுட்டு வாறது எண்டால் எதுக்கு இந்த உயிர் இழப்புக்கள் எல்லாம்?

மக்களின் உணர்வுகளையும் புரின்ஞ்சு நடக்கனும் இப்பிடி சொன்னதுக்காக நாங்கள் ஏதோ போராட்டத்துக்கு எதிரானவங்க..அது இதுனு சொல்லற நிறுத்துங்க..மக்களின் எண்ண ஒட்டங்களையும் கொன்ஞம் நாடி பிடிச்ச பாருங்க...மக்கள பொறுத்த வரைக்கும் இனியும் புலிகள் பொறுமை காப்பத ஏற்று கொள்ளுறாங்ங இல்ல..மக்களுக்கு தேவை அவசரமான அவசியமான ஒரு வெற்றி

கொன்ஞ கள உறவுகள் இருக்கினம் இப்பிடி சொன்னால் நாங்கள ஆதரவாளர்கள் இல்ல போறாட்டத்தக் எதிராணவங்கனு கள உறவுகளே கொன்ஞம் விமர்சணங்களையும் ஏற்று கொள்ள பழகுங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூருக்கு அப்பாலும்

அரசுப் படைகள் நகர்வு

திருகோணமலையில் சர்ச்சைக்குரிய சம் பூர் கிராமத்தை கைப்பற்றும் நோக்கில் முன் னேறிய படையினர் நேற்றுப் பிற்பகல் சம் பூரையும் தாண்டி வடக்கே பவுல் முனைபகுதி வரை நகர்ந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.

அரசுப் படைகள் பவுல் முனைப் பகுதி யில் உள்ள வெளிச்சவீடுவரை முன்னேறிச் சென்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

பவுல்முனை வெளிச்சவீடு பகுதியில் துருப் பினர் நிலைகொண்டிருக்கும் படங்களைப் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகம் வெளியிட்டிருக்கிறது.

இதேவேளை சண்டை நடைபெறும் பகுதிகளில் விமா னத் தாக்குதல்களை நடத்துவதற்காக நேற் றுக்காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட "கிபிர்' விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக ஓடு பாதையை விட்டு விலகியது என்று தெரிவிக் கப்படுகிறது. எனினும்இ விமானத்துக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Thanks;Uthayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்..... இன்னும் கொஞ்சம் பொறுப்போம் ....

மேகம் கறுக்க வேண்டும்!

பேய்க் காற்று அடிக்க வேண்டும்!!

கடல் கொந்தழிக்க வேண்டும்!!!

ஊரெல்லாம் வெள்ளம் வர வேண்டும்!!!!

.... இவைகளுக்காக மழை வர வேண்டும்!!!!!!!!!!!!!!!

அதுவரை பொறுப்போம்!!!!!!!!!!!

"பொறுத்தார், பூமியாழ்வார்"!!!! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய எழிலனின் பேட்டியில் சம்பூர் 2 கி.மீற்றர் சுற்றளவு கொண்ட கிராமம். இராணுவம் 3 கி.மீற்றர் உள்நுழைந்ததாகச் சொன்னார்.

இளந்திரையன் சம்பூரை இராணுவம் கைப்பற்றவில்லை. ஆனால் நகரப்பகுதியில் சண்டை நடப்பதாகச் சொன்னார்.

இப்படியான முரன்பாடான பேட்டிகளினாலேயே குளப்பங்கள் வருகின்றன. எனவே பொதுவாக ஒருவரே செய்தித் தொடர்பாளராக பேட்டியைக் கொடுத்தால் குளப்பங்கள் குறையும்.

தப்பான புரிதல் வசம்பு!

சம்புூர் என்பது, 2கிலோ மீற்றர் சுற்றளவு கொண்டது என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், இராணுவம் 3கிலோ மீட்டர், அவர்களின் எல்லைகளில் இருந்து உள்நுழைந்து, சம்புூர் வரை வந்திருக்கின்றார்கள் என்பதே கருத்து. நீங்கள் புரிந்து கொண்டதில் தப்பிருந்தால் அவர்கள் என்ன செய்வது!

முக்கியமாக இராணுவமும் சொன்னது. கட்டைபறிச்சான் வந்து தான் வந்ததாக!

பொறுத்திருங்கள் இன்னும் ஒரிரு வாரங்கள்.

பொறுமையின் எல்லையில் என்று நிற்கிறோம் என்று சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கும் அந்த எல்லை இன்னும் ஒரிருவாரத்தில் முடிந்துவிடும்.

போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்து விட்டதா? என கண்காணிப்புக் குழுவிடம் எழிலன் கேட்கும் கேள்விக்கு கண்காணிப்புக் குழு சொல்கிறதோ இல்லையோ ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்ற பதில் இந்த ஒரிரு வாரத்தில் கிடைக்கும்.

தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் புலிகள் கடைப்பிடிக்கிறார்கள் எனக் கூறிய புலித்தேவன் அவர்கள் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி போரில் குதித்து விட்டார்கள் என இன்னும் ஒரிருவாரத்தில் கூறுவார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடுமென இன்று எச்சரிக்கை விடுத்துள்ள இளந்திரையன் விரைவில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற வலிந்த தாக்குதல்களால் கிடைக்கும் வெற்றிகளை ஊடகங்களுடாக உங்களிற்கு வழங்குவார்.

தமிழர் தரப்பு போர் நிறுத்தத்திலிருந்து விலகி தமிழர் தாயகப் பகுதிகளை சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து மீட்டு தமிழீழ தனியரசை அமைப்பதற்கான எமது இலட்சியத்தை அடைவற்கான வாசலைத் திறக்கப்போவது கடந்த திங்கட்கிழமை எதிரியிடம் தமிழர் தரப்பினால் விட்டுக்கொடுக்கப்பட்ட சம்புூர்தான்.

எனவே அதுவரை பொறுத்திருப்போம். ஒரு சில மணிநேரத்தில் மூது}ரில் அமைந்துள்ள படைத்தளங்களைத் தகர்த்து பல சதுர மைல் நிலப்பரப்பை கைப்பற்றிக் காட்டிய தமிழர் தரப்பிற்கு சம்புூரை தக்க வைப்பதோ அல்லது மீளக் கைப்பற்றுவதோ ஒரு பொருட்டல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறு செய்ய வேண்டுமென்றில்லை மின்னல்! சில விடயங்கள் அரசியல்ரீதியாகவும் பார்க்க வேண்டும். போரில் குதிப்பது என்பது வெளியுலகத்திற்கு அவப்பெயரை மீண்டும் உண்டு பண்ணும். அதற்காகத் தான் சிறிலங்கா அரசும் முயற்சி செய்கின்றது.

சம்புூரை விடமுடியுமா என்று கேட்டு, சிறிலங்கா அரசு மறுத்து, ஏதாவது காரணம் சொன்னால், அதே காரணத்தை நாமும் பிரயோகிக்கின்ற அனுமதி உண்டு. அவ்வாறு தான் முயல்வார்கள் என நினைக்கின்றேன்.

**இது என் தனிப்பட்ட கருத்து ஆகும்!

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் கூறியுள்ளதாவது:

சம்பூர் பிரதேசத்தை முழுமையாக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக சிறிலங்கா இராணுவத்தால் கூற முடியாது. கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய நிலைமைகள் நீடித்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் விலகிக் கொள்வோம் என்றார் இளந்திரையன்.

"சம்பூர் ஆக்கிரமிப்பு தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களது முடிவுக்குப் பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும்" என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்தார்.

"அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் எதுவித பதிலும் தரவில்லை. கண்காணிப்புக் குழுவினர் ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான பதில் கிடைத்த பின்னர் முடிவெடுக்கப்படும்" என்றும் தயா மாஸ்டர் கூறினார்.

http://www.eelampage.com/?cn=28677

பொறுத்திருங்கள் இன்னும் ஒரிரு வாரங்கள்.

பொறுமையின் எல்லையில் என்று நிற்கிறோம் என்று சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கும் அந்த எல்லை இன்னும் ஒரிருவாரத்தில் முடிந்துவிடும்.

போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்து விட்டதா? என கண்காணிப்புக் குழுவிடம் எழிலன் கேட்கும் கேள்விக்கு கண்காணிப்புக் குழு சொல்கிறதோ இல்லையோ ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்ற பதில் இந்த ஒரிரு வாரத்தில் கிடைக்கும்.

தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் புலிகள் கடைப்பிடிக்கிறார்கள் எனக் கூறிய புலித்தேவன் அவர்கள் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி போரில் குதித்து விட்டார்கள் என இன்னும் ஒரிருவாரத்தில் கூறுவார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடுமென இன்று எச்சரிக்கை விடுத்துள்ள இளந்திரையன் விரைவில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற வலிந்த தாக்குதல்களால் கிடைக்கும் வெற்றிகளை ஊடகங்களுடாக உங்களிற்கு வழங்குவார்.

தமிழர் தரப்பு போர் நிறுத்தத்திலிருந்து விலகி தமிழர் தாயகப் பகுதிகளை சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து மீட்டு தமிழீழ தனியரசை அமைப்பதற்கான எமது இலட்சியத்தை அடைவற்கான வாசலைத் திறக்கப்போவது கடந்த திங்கட்கிழமை எதிரியிடம் தமிழர் தரப்பினால் விட்டுக்கொடுக்கப்பட்ட சம்புூர்தான்.

எனவே அதுவரை பொறுத்திருப்போம். ஒரு சில மணிநேரத்தில் மூது}ரில் அமைந்துள்ள படைத்தளங்களைத் தகர்த்து பல சதுர மைல் நிலப்பரப்பை கைப்பற்றிக் காட்டிய தமிழர் தரப்பிற்கு சம்புூரை தக்க வைப்பதோ அல்லது மீளக் கைப்பற்றுவதோ ஒரு பொருட்டல்ல.

யுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் அமுலில் - போர்நிறுத்த கண்காணிப்பு குழு எழிலனிடம் தெரிவித்தார்.

முழு அளவிலான யுத்தம் ஆரம்பமாகியுள்ளது என திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.எழிலன் தம்மிடம் விளக்கம் கேட்பதாக போர்நிறுத்த கண்காணிப்புக் குழு பேச்சாளர் தொட்பினூர் ஒமர்சன் தெரிவித்தார்.

எனினும் முழு அளவிலான யுத்தம் தொடர்பாக தற்போது உள்ள நிலையில் கூற முடியாது என தொர்பினூர் ஒமர்சன் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் எழிலனிடம் தெரிவித்தார்.

எனினும் இருதரப்பினரும் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லையென ஒமர்சன் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

என்ன நடக்குது :?: :?: :?:

படையினரின் எறிகணை வீச்சுக்கு பொதுமக்கள் பலர் பலி. பலர் காயம் சம்பூரில்

http://img88.imageshack.us/img88/2868/2006...06090605uk4.jpg

படம் நீக்கப்பட்டு இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் கோரமானது. பார்க்க விரும்பாதவர்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். - மோகன்

அடிக்கடி இளந்திரையன் சொல்றார் பேச்சு வார்த்தையில் இருந்து வெளியேற போறம்னு ஆனால் இரக்கிற இடத்தையெல்லாம் விட்டு கொண்டு இருக்கினம்..இப்ப பாத்தால் ஜே.வி.பி சொல்லுது கிழக்கில இருந்த முற்றாக புலியல வெளியேற்வேண்டும் எண்டு..அது நடந்தாலும் ஆச்சரியம் இல்ல ஏண் என்டா உலக நாடுகள் இருவரைக்கும் இலங்கைய கண்டிக்கல..இணியும் உலக நாடுகள் கண்டிக்கனும் இல்ல நோர்வே எண்ண சென்சிட்டு இருக்னெண்டு கேக்கிறதுல பிரியோசனம் இல்ல.. இப்பிடியே எல்லா இடத்தையும் விட்டுட்டு வாறது எண்டால் எதுக்கு இந்த உயிர் இழப்புக்கள் எல்லாம்?

மக்களின் உணர்வுகளையும் புரின்ஞ்சு நடக்கனும் இப்பிடி சொன்னதுக்காக நாங்கள் ஏதோ போராட்டத்துக்கு எதிரானவங்க..அது இதுனு சொல்லற நிறுத்துங்க..மக்களின் எண்ண ஒட்டங்களையும் கொன்ஞம் நாடி பிடிச்ச பாருங்க...மக்கள பொறுத்த வரைக்கும் இனியும் புலிகள் பொறுமை காப்பத ஏற்று கொள்ளுறாங்ங இல்ல..மக்களுக்கு தேவை அவசரமான அவசியமான ஒரு வெற்றி

கொன்ஞ கள உறவுகள் இருக்கினம் இப்பிடி சொன்னால் நாங்கள ஆதரவாளர்கள் இல்ல போறாட்டத்தக் எதிராணவங்கனு கள உறவுகளே கொன்ஞம் விமர்சணங்களையும் ஏற்று கொள்ள பழகுங்கப்பா

என்ன சுண்டல் விக்கப் போன இடத்தில றோவட்ட காசு வேண்டிட்டீங்களோ...?! சிலவேளை மதித்தாத்தாவைச் சந்திச்சிட்டிங்களோ..??! அப்படியெல்லாம் சந்தேகம் கிளப்ப என்று சிலர் இருக்கினம்..அவை தாங்களும் குழம்பி..மற்றவையையும் குழப்புறதுதான் இங்க வைக்கிற கருத்தாடல்..!

தாயகத்தில்...நேரடியாக போர் சூழலில் வாழும் மக்கள்..இராணுவக் கட்டிப்பாட்டில் வாழும் மக்கள்..புலிகளின் கட்டுப்பாட்டில் வாழும் மக்கள்...வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் மக்கள் என்று மக்கள் அவரவர் வாழும் சூழலில் சந்திக்கும் பிரச்சனைகளின் அடிப்படையிலேயே இந்தச் சூழலை நோக்குவார்கள்..! அவர்கள் இராஜதந்திரம் எல்லாம் பற்றி சிந்திக்க அவகாசமே இல்லாமல் இருப்பார்கள். அந்த வகையில் அந்த மக்களின் நிலைகளில் இருந்து அவர்களின் மனவோட்டங்களை நேரடியாக வெளிக்கொணரக் கூடிய நிலை இல்லாத இடத்தில்...அவர்களின் நிலையை கடந்த கால அனுபவங்களை அடிப்படையாக வைத்தே சில துன்பியல் நிலைக்கான சிந்தனை ஓட்டங்களை சொல்ல வேண்டி இருக்கிறது.

சுண்டல் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..விடுதலைப் புலிகள் மக்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்..! நேற்றைய கவியழகனுடனான பேட்டியில் பேட்டியாளர்..மக்கள் என்னென்ன கேட்க நினைப்பார்களோ..அதையெல்லாம் கேட்டு அசத்தினார்..! அவரே அதே கேள்விகளை இங்க கேட்டிருந்தால்..துரோகி ஆகியிருப்பார்..திட்டும் வாங்கி இருப்பார்..! :wink: :idea:

புலிகள் மக்களை சிந்திக்கத்தான் சொல்கிறார்கள்... ஆனாக் கேணைத்தனமாக அல்ல...!

பாமர குடிமகனுக்கே தெரிந்த விளக்கமுள்ள விடயங்களை இங்கை கிளறி கொட்டும் கோழியின் குணம் கொண்டவர்களுக்கு அது வேற மாதிரி விளங்கீட்டுது....!

மக்கள் அழிவுகளைக் காட்டி புகலிடமெங்கும் போராடிச்சினம்..இப்ப தமிழீழத்தின்ர பகுதியை எதிரி மக்கள இடம்பெயர வைச்சு..தரைமட்டமாக்கி..கைப்பற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளே TBC இன் கவலைகளை ஏன் இங்கேகொண்டுவந்து கொட்டுறீர்கள் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை எச்சில் இலைக்கு மாரடிக்கின்ற ஊடகங்களும், எதிரியின் காலை நக்கும் ஊடகங்களும், எமக்கு சொல்லித்தரவேண்டாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனா ஒன்டு

அதாவது புலிகள் விமானத்தில போய் பலாலில குண்டு போடேக்க ஆமிக்காரன் ஒளிச்சானோ இல்லையோ இங்க இருக்கிற சில நாயள் 2-3 மூன்டு நாள் இங்கால் பக்கமே வரேலை.

இப்ப என்னமோ தாங்கள் தான் பெரிய அறிவாளியள் மாதிரியும் தாங்கள் சொல்லுறதை புலிகள் கேட்டால் நல்ல முடிவு வரும் என்ட மாதிரியும் எழுதிக் கொண்டிருக்கினம். கேட்டால் மக்களை பற்றி கவலைப்படுகினமாம்?!?! இவையள் இப்ப ஒரு கொஞ்ச நாள்ள மறுபடியும் காணமல் போவினம். அப்ப "யாழ் களத்தில் காணாமல் போனோர்" என்டு ஒரு தலைப்பு தொடங்கி இவையளை தேடலாம்.

ஆனா இரண்டு

அப்பப்ப நீர் காணாமல் போய் இடைக்கிடை வந்து வெடிவேலுவாகிறதைச் சொல்லுறியளோ??? :) :P :D :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்து எழுதப்படாத ஒரு நாளை சொல்லும் பார்ப்போம்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனா இரண்டு

அப்பப்ப நீர் காணாமல் போய் இடைக்கிடை வந்து வெடிவேலுவாகிறதைச் சொல்லுறியளோ??? :) :P :D :P

நீரே சொல்லிவிட்டு நீரே சிரிப்பது நகைச்சுவையல்ல. உமக்கு மேல் மாடி தட்டிவிட்டது என்பதை குறிக்கிறது.

வடிவேலுவின் புலம்பல்:

எனது கருத்து எழுதப்படாத ஒரு நாளை சொல்லும் பார்ப்போம்!!!

நீர் ஒன்று கேட்டீர் நான் 3 தாரன். போதுமா??

Aug20, Aug27, Sep3

சிரிப்பதால் மேல் மாடி காலியா??

சத்தியமாய் 23ம் புலிகேசி உம்மைவிட பறுவாயில்லை :roll: :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் வெளிப்படையாக விடும் அறிக்கைகளை மட்டும் தான் உங்களுக்க தெரியும். ஆனால் ராஜதந்திர ரீதியாக பல நாடுகளுடன் புலிகள் அரசியல் நடத்திகொண்டிருப்பது இங்கே புலம்புவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை

பார்த்தீரா பரணி உங்களிடம் சொல்லிவிட்டு அவர்கள் இராஜதந்திர ரீதியாக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போல் புலம்பிறவர்களிடமும் சொல்லிவிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்களும் புலம்பமாட்டினமில்லோ!!!! :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.