Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குக்கூ -விமர்சனம் அல்ல படிதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குக்கூ -விமர்சனம் அல்ல படிதல்

 
cokuu-movie-still-18220214.jpg

மொழி இன ஒடுக்குதலை அறிந்ததாக சொல்லி போராடுபவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடாமல் அமைதி காக்கும் பொழுது உண்மையில் அவர்கள் போராளிகளை போன்று நடிப்பவர்கள் எனப் புரிந்து கொள்வோம்..

அதே நேரம் சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டிக்க துணிந்து வருபவனை நோக்கி நீ அந்த சாதி ..அதனால் வராதே என்பவனையும் போராளிகளாக சொல்லப்படுவதை மறுப்போம்..

மேலே சொல்லப்பட்ட கோபத்திற்கான பதிலை குக்கூவில் தேட வேண்டாம்..குக்கூ வேறு ஒன்று...

குக்கூ போன்ற படங்களை விமர்சிப்பது பிரச்சனை இல்லை...ஆனால் எந்த சூழலில் என்பதைக் கூட புரியாத பதர்களின் மேட்டிமைத்தனமான அறிவு சீவி நிலையை மேலே சொன்ன கோபங்களோடு பொருத்தி பார்க்கவும்...

” படம் நல்லாருக்கு..ஆனா செகண்ட் ஆஃப் கொஞ்சம் லேகா இருக்கு..” என்றான் ஒருவன்

“நாம சொன்னா நீ செய்து காட்டு என்பார்கள்..அதனால் கொஞ்சம் போகட்டும்” என்கிறார் மற்றொருவர்

“பரவாயில்லை..ஒரு தரம் பார்க்கலாம்” என்கிறார் தப்பிய பதில் சொல்லியதாக எண்ணிய மூன்றாமவர்..

இப்படி கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருக்கலாம் தான்...

ஆனால் குக்கூ என்பது ஒரு வாழ்க்கை..ஒருவன் இன்னொருவனை கண்டடைந்த வாழ்க்கை..அதை பலரின் துணைக் கொண்டு காட்சிப் படுத்திய ஒரு வாழ்க்கை...மொத்தத்தில் ”குக்கூ”ஒளிச் சிதறல்களால் கட்டமைக்கப் பட்ட கவிதை.

09-malavika-nair-600.jpg

ஒட்டு மொத்தமாக அகம் நிரம்பி வழிகிற மனிதர்களின் பல்வேறு நிகழ்வுகளே குக்கூ..

சுதந்திர கொடிக்கும்,தமிழுக்குமான நேசம் தொடங்கும் எள்ளல்களின் மொழி அவ்வளவு அடர்த்தியாய் கிளைத்து,அது பரவி நிற்கும் அடங்கா வெளிதான் ராஜு முருகன் சொல்ல நினைத்ததும்,அதை அழுத்தமாக சொல்லியதும்..

அன்பை கண்டது தகப்பனிடம் தான் அந்த தகப்பனின் அன்பு சுதந்திரக் கொடியின் நேரம் காட்டியில் குரலாக பொதிந்திருக்கிறது..ரோசி டீச்சரின் தாயன்பு தமிழை தடவிக் காட்டுவதில் இருக்கிறது..இரண்டு மனிதர்களுக்கும் இடையே இருக்கிற இந்த பிடிமானம் வெறும் ஒரு நேரம் காட்டி,ஒரு தடவல்...

அவ்வளவுதான்...

இந்த இரு மனிதர்களும் பார்வையற்றவர்கள்..ஒளிபடைத்தவர்கள்..அவர்களை சுற்றிப் பின்னப்பட்ட குபேர சந்திரபாபுவிலிருந்து அனைத்து கதாபாத்திரமுமே ஒளிபடைத்தவைதான்...

ஒரு..காதல்..ஒரு முடிச்சு...ஒரு அவிழ்ப்புதான் கதை...ஆனால் கதை அதுவல்ல...இந்த சமூகம்..

_MG_1574.jpg

ஒரு காவல் அதிகாரி பணத்தை தருகிறார் என்றதும் உயர்ந்த மகிழ்ச்சியில் உங்கள பார்க்கவா சார்..என தமிழ் கட்டிப் பிடிக்கிறான்..பார்வையற்றவனின் உணர்தல் கட்டிப் பிடித்தல் ..அவன்..பிடிக்கும் பொழுது அவர் முகம் மாறுகிறது..அவர் அவனை நடுசாலையில் விட்டு விட்டுக் கிளம்புகிறார்..அவன் தனது பணத்தை எண்ணீப் பார்க்கும் பொழுது 3 ஆயிரம் குறைகிறது...அவன் அவரிடம் கெஞ்சுகிறான்..அவர் போய்க் கொண்டே இருக்கிறார்..

Cookoo_Cine_invite_nsamayalaraiyil_worki
சுதந்திரக் கொடியின் அண்ணனும் அண்ணியும் தாணியில் அமர்ந்து அவளை கல்யாணம் ஜிலாக்கிக்கு கல்யானம் செய்து கொடுத்து விடலாம் என்பதும் அதன் மூலம் அவள் வேலைக்கு போகும் பணம் நமக்கு வரும் என்று சொல்லி விட்டு அவளை கட்டிப் பிடிக்கும் பொழுது..பின்னால் இருக்கும் ஒரு சிறுவன் ஒண்ணுக்கு அடித்தபடி நிற்கிறான்..

p28d.jpg
அன்னா ஹசாரேக்களை உயர்த்தி பிடிப்பது போல,அவர்கள் வேடத்தை கலைத்து, பட்டென போட்டு உடைத்து விட்டு காட்சியை கடந்து செல்லும் அசாத்தியம் படத்தின் பலம்..

இப்படி படம் நெடுக தான் விரும்பியதை சமூகம் கண்டுணர வேண்டியதை காட்சி படிமனாக,பல்வேறு நிலைகலில் அசாத்தியமாக கதை சொல்லிப் போகிறார் ராஜி முருகன்..

images.jpg

பார்வையற்ற மனிதர்களின் ,கோபம்,அயற்சி,இயலாமை,கானாமை,பேசாமை என அனைத்தையும் பேசி விட எத்தனிக்கிறது..

நிறைய கூறுகள் இருக்கின்றன..இதன் பார்வை கலகம் இதழில் விரிவாக வர இருக்கிறது...அதற்குள் படம் முடங்கிப் போகக் கூடாதென தான் இந்த சிறு முன் ஒத்திகை...

இதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் கலகம் கொண்டாடுகிறது...

kukku2_jpg_1639356g.jpg

குக்கூ...சிற்பம்

இது உலக சினிமா அல்ல..தமிழ் சினிமா கலகத்தின் மதிப்பெண் 

100/100

 

 

http://kalakam1987.blogspot.in/2014/03/blog-post_21.html

படம் இன்னும் முழுவதும் பார்க்கவில்லை. ஆனாலும் பார்த்த சில காட்சிகள் மனதை நெருடிவிட்டுச் செல்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சுபேஸ்...!

 

இப்போது விஜய்  டிவியில்  டி டி யோடு குக்கூ படக்குழு  பேட்டி நடக்கின்றது...! :)

மனசை சூறையிடும் இந்தப் பாடலை உங்கள் காது மடல்களில் தவழ விடுங்கள்...

    கண் காணாத கவியுலகில் சஞ்சரியுங்கள்.......

 

மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம்
ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்

ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே
கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே
எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வான் ஒலி பாடுதே

மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோரூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

 

மாறிடும் யாவுமென்று சொல்லும் வார்த்தையில் நெசமுமில்லை
உண்மைக் காதலை பொருத்தவரை எந்த மாற்றமும் நிகழ்வதில்லை ..

ஆசைகள் தீருமட்டும் கொள்ளும் அன்பினில் அழகு இல்லை
வெந்து போகிற வேளையிலும் அன்புத் தீயென்றும் அணைவதில்லை..(-- குக்கூ)

படத்தை பார்த்துவிட்டு அது குறித்து சரிபிழை சொல்லாமல் அல்லது உணராமல் ஒரு சூழல். காட்சியின் தாக்கம் மனதின் ஏதோ ஒரு மூலையில் தொடர்ந்துகொண்டிருக்கும்.

  • 4 months later...

நினைவை விட்டகழாத நல்லதொரு படம்......குக்கூ

 

http://www.youtube.com/watch?v=Mss5s9xgraQ

 

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையும் காணாத இவதான்
கண்ணீர பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உழக

உன்னால பாத்தேனே

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்

 

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்

 

ஊரு கண்ணே படும்படி
உறவாடும் கனவே தொடருதே
நெனவாகும் கனவே அருகிலே
உன்னை தூக்கி சுமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வரங்களே
தமிழே தமிழே வருவேனே உன் கரமா
கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா

 

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்

 

காம்ப தேடும் குழந்தையா
உன்னை தேடும் உசிரு பசியில
கோடி பேரில் உன்னை மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல
அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்

 

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறுகடல் நான் பாக்குறேன்

 

கண்ணால எதையும் காணாத இவதான்
கண்ணீர பாத்தேனே
இனி என்னோட அழக
பொன்னான உழக
உன்னால பாத்தேனே

படம்: குக்கூ

வரிகள்: யுகபாரதி

இசை: சந்தோஷ் நாரயணன்

குரல்: கல்யாணி, பிரதீப்

ஊரு கண்ணே படும்படி

உறவாடும் கனவே தொடருதே

நெனவாகும் கனவே அருகிலே

உன்னை தூக்கி சுமப்பேன் கருவிலே

மடிவாசம் போதும் உறங்கவே

 

 

காம்ப தேடும் குழந்தையா

உன்னை தேடும் உசிரு பசியில..

கோடி பேரில் உன்னை மட்டும்

அறிவேனே தொடுகிற மொழியில

பேரன்பு போல ஏதுமில்ல

 

 

 

பேரன்பும் ஒரு போதை  தான் ...  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.