Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின் இறுதியில் புலிகள் எவருமே படையினரிடம் சரணடையவில்லை – என்கிறது சிறிலங்கா அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sri-Lankan-troops-crush-T-007.jpg

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, அத்தகைய சம்பவங்கள் இடம்பெற்ற சூழல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை ஆரம்பமாகியுள்ளது. 

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து, சிறிலங்காப் படையினரிடம் சரணடந்தனர். 

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அவர்கள் சரணடைந்ததை பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடியாகக் கண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது, எங்கே வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை என சரணடைந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

காணாமல்போனவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் சிலர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் 14 ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். 

அவற்றில் முதல் ஐந்து வழக்குகள் தொடர்பான நிகழ்வுகள் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. 

முதலாவது வழக்கின் நிகழ்வு பற்றிய விசாரணையில் சாட்சியமளித்த பெண் ஒருவர், தனது மகளும் மருமகனும் அவர்களின் 4 மற்றும் 6 வயதான இரண்டு பிள்ளைகளும் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த பின்னர், அவர்கள் அனைவரும் இப்போது காணாமல் போயிருப்பதாக கூறியுள்ளார். 

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக போர் முடிவடைந்து ஒரு ஆண்டுக்குப் பின்னரே, 2010 ஆம் ஆண்டிலேயே பதிவாகியுள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், போரின் முடிவில் எவரும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக தகவல்கள் இல்லை என்றும் அரச தரப்பினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, நீதிமன்றில் சாட்சியமளித்த குறித்த பெண், இறுதிப் போரின் போது தான் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தேவிபுரம் வைத்தியசாலை எறிகணை தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும், பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்த போது போர் முடிவுக்கு வந்ததாகவும் கூறினார். 

அப்போது, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சட்ட ரீதியான மன்னிப்பும் வழங்கப்படும் என்றும் உத்தரவாதமளித்து, அவர்களை சரணடையுமாறு ஒலிபெருக்கிகளில் அறிவிக்கப்பட்டதையடுத்தே, தனது மகளின் குடும்பம் முழுமையாக சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தாகவும் குறிப்பிட்டார். 

அவர்கள் சரணடைந்ததைத் தான் நேரில் கண்டதாகவும், அதேபோன்று தனக்குத் தெரிந்த பலர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்ததையடுத்து, அவர்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார். 

அத்துடன் போர் முடிவடைந்த பின்னர், காணாமல் போனவர்கள் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழு, காவல்துறை உள்ளிட்ட பல தரப்பினரிடமும் தாம் முறையிட்டிருந்ததாகவும், வட்டுவாகலில் இருந்து ஏனைய இடம்பெயர்ந்த மக்களுடன் தான் செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் ஒரு ஆண்டு தங்கவைக்கப்பட்டிருந்த படியால், காணாமல்போனவர்கள் பற்றி உடனடியாக முறையிட முடியவில்லை என்றும் அவர் சாட்சியமளித்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை மே மாதம் 7ம், 8 ம் திகதிகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் எம்.கணேசராஜா ஒத்திவைத்துள்ளார். 

மனுதரார்கள் சார்பில் கே.எஸ்.ரட்னவேல், அன்டன் புனிதநாயகம், பரஞ்சோதி ஆகியோர் வாதிட்டனர். 

வழிமூலம் - பிபிசி

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140403110259

  • கருத்துக்கள உறவுகள்
கணவனை ஒப்படைத்த அனந்தி அக்கா தொடக்கம் இன்னும் பலர் சாட்சிகளாக உள்ளனரே!!!
அண்மையில் 4 மாடிக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்மணி மற்றுமொரு சாட்சி.இப்படி பல சாட்சிகளை மூடி மறைக்க மகிந்த அரசால் முடியுமா?
  • கருத்துக்கள உறவுகள்
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக போர் முடிவடைந்து ஒரு ஆண்டுக்குப் பின்னரே, 2010 ஆம் ஆண்டிலேயே பதிவாகியுள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், போரின் முடிவில் எவரும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக தகவல்கள் இல்லை என்றும் அரச தரப்பினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

 

 

இப்படி நேர்மையற்றவர்கள் கூட்டமைப்பை அடிக்கடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பதன் நோக்கமும் ஒரு சுத்துமாத்தே.

இவர்கள் புணர்வாழ்வளித்தது யாருக்கு..... சரணடைந்தவர்களுக்கு தானே....

ஒரே கொன்ப்யுசன்

சரணடைய ஒலிபெருக்கிமூலம் அறிவித்ததும், பெருமளவான தமிழ் இளைஞர்களை,  பிள்ளைகளை ஒப்படத்து விட்டு சரணடந்தோர்களுக்கு இப்போது என்ன நட‌ந்தது என்று அறியாது துடிக்கும் பெற்றோர்கள், உறவுகளின் நிலைம மிகவும் வேதனக்குரியது.

 

தற்போது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு. நீதிபதியால் என்ன செயமுடியும்? உயர்நீதிமன்ற நீதிபதியே மகிந்த சொற்படிதான் நடக்க வேண்டும். இது போன்ற சட்ட சிக்கல்களை கையாளும் முகமாக, சரணடந்தோர் விபரங்கள் திட்டமிட்டே சிங்களம் மறைத்தது ஒரு கிரிமினல் மாஸ்ரர் பிலான். ஆரம்பத்தில் உண்மைத்தரவுகளை மறைத்தது சிங்களவனுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது.

நேற்று சரணடந்தோர் பற்றி youtubeஇல் இருந்தவைகளும் தற்போது அழிக்கப்படுகின்றன. 

 

http://www.youtube.com/watch?v=xp-vYNMnHik

 

http://www.youtube.com/watch?v=5kSSs9Ady1k


 
இதில் மக்கள் பிரதிநிதிகள் TNA சரணடந்தோர் பற்றிய சரியான எண்ணிக்கையை ஆதாரபூர்வமாக ஆரம்பத்திலிலேயே அறிய போதிய கவனம் செலுத்தவில்லை என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். பொதுத் தேர்தல் முடிவடைந்த காலத்தில் கோத்தபாய TNAஇக்கு இது பற்றிய விபரங்கள் வெளியிட இருந்ததாகவும், இறுதி நேரத்தில் அந்த கூட்டம் நடை பெறாமல் போய்விட்டதாகவும் அந்நேரத்தில் செய்தி பரவியிருந்தது. 
 
அப்படியாயின் அப்போதே இதுபற்றி பாராளுமன்றத்தில் இதற்க்கு பொறுப்பான அமைச்சரிடம் சரணடந்தோர், தடுத்துவைக்கப்பட்டோர், புனர்வாழ்வளிக்கப்பட்டோர் பற்றி TNA கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அந்த புள்ளிவிபரங்களை சரிபார்த்துக்கொள்ள தடுத்துவைக்கப்பட்டோர் பற்றிய விபரங்களை கையாள TNA, பொறுப்பு வாய்ந்த  MP பதவியில் உள்ள ஒருவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

LTTE leaders tried to surrender through Basil, says Norway

An evaluation report by Norway of its peace efforts in Sri Lanka between 1997 and 2009 has named presidential advisor and Minister Basil Rajapaksa as the person through whom the LTTE leadership tried to negotiate a last-minute surrender deal before the entire hierarchy of the group was killed in May, 2009.

“In the night between May 17 and 18, Nadesan (head of the LTTE Political Wing) and Pulidevan (head of the LTTE Peace Secretariat) contacted the Norwegians as well as the UK and US embassies, the ICRC, and Chandra Nehru (a Tamil politician in Colombo) indicating their last-minute willingness to surrender. Following hasty negotiations with presidential advisor and Minister Basil Rajapaksa, they were told to walk across the frontline with a white flag. The last phone conversation was held shortly before their departure. Hours later they were reported shot. Government troops moved into the last LTTE stronghold and killed LTTE chief Prabhakaran and the remaining LTTE leaders including Soosai (Sea Tigers) and Pottu Amman (intelligence),” the report says.

 

http://www.sundaytimes.lk/111113/News/nws_03.html

 

  • Sri Lankan government killed surrendering Tamil Tigers, says general
    Sacked commander running for president says three rebel leaders were machine-gunned on minister's orders
  •  
  • The Guardian,  Monday 14 December 2009 19.02 GMT
A-Sri-Lankan-army-photogr-001.jpg
A photograph released by the Sri Lankan army said to show civilians who escaped the Tamil Tiger-held coastline in Mullaittivu district last May. Photograph: Handout/AFP/Getty Images

Three Tamil Tiger rebel leaders who tried to surrender during the bloody climax of Sri Lanka's civil war in May were shot and killed on the orders of the country's defence minister and a senior adviser to President Mahinda Rajapaksa, the army commander at the time has claimed.

http://www.theguardian.com/world/2009/dec/14/srilanka-tamil-leaders-surrender-shot

 

Edited by Small Point

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.